ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

View previous topic View next topic Go down

ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Post by ayyasamy ram on Mon Oct 10, 2016 7:16 am

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள 3 கால்
சென்டர்களைச் சேர்ந்த ஊழியர்கள் அமெரிக்க வருமான
வரித் துறையினர் போல் நடித்து ரூ.500 கோடி மோசடி
செய்துள்ளனர்.

இதையடுத்து ஏற்கெனவே அந்த கால் சென்டர்களில்
சோதனை நடத்தியுள்ள போலீஸார், மேலும் 4 கால்
சென்டர்களில் அதிரடிச் சோதனை நடத்தி ஒருவரைக்
கைது செய்தனர்.

தாணேவில் செயல்பட்டு வந்த 3 கால் சென்டர்களில்
பணிபுரிந்த ஊழியர்களுக்கு அமெரிக்கர்களின்
உச்சரிப்பில் ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்பட்டிருந்து.

அவர்கள் தாணேவில் இருந்தபடி அமெரிக்கர்களைத்
தொடர்பு கொண்டு, தங்களை அமெரிக்க நாட்டு வருமான
வரித் துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வது
வழக்கம். அதைத் தொடர்ந்து,

"நீங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள். உங்களைப் பிடிப்பதற்கு
அமெரிக்க அரசு அதிகாரிகள் வந்து கொண்டிருக்கின்றனர்'
என்று கூறுவர்.

இதை உண்மை என்று நம்பி, பீதியடையும் அமெரிக்கர்களிடம்
குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில்
செலுத்தினால் கைது நடவடிக்கையைத் தவிர்க்கலாம் என்றும்
இந்த கால் சென்டர் ஊழியர்கள் கூறுவர். இதை நம்பிய பல
அமெரிக்கர்கள், கோடிக்கணக்கிலான பணத்தை, ஊழியர்கள்
அந்த வங்கிக் கணக்குக்கு செலுத்துவர்.

இவ்வாறு அமெரிக்கர்கள் ரூ. 500 கோடி வரை பணம்
செலுத்தியுள்ளனர். இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததைத்
தொடர்ந்து, தாணேவில் உள்ள சம்பந்தப்பட்ட 3 கால்
சென்டர்களிலும் போலீஸார் கடந்த வாரம் அதிரடிச்
சோதனைகளை நடத்தினர்.

இந்த மோசடி தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 630 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த மோசடி
நடைபெற்றது தெரியவந்தது.

இந்நிலையில், மீரா சாலையில் உள்ள மேலும் 4 கால்
சென்டர்களில் சனிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரைப் பற்றிய
விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-
இந்த கால் சென்டர்களின் உரிமையாளர்கள் யாரும் இதுவரை
கைது செய்யப்படவில்லை. எனினும், 250-க்கும் மேற்பட்ட
கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றுள் 100 கணினிகளில் ஹார்டு டிஸ்க் எனப்படும்
தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி காணப்படவில்லை.
-
--------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Post by T.N.Balasubramanian on Mon Oct 10, 2016 1:53 pm

இது மாதிரி போலி (hoax calls ) அழைப்புகள் US இல் வருவது  சகஜம் .
அவர்கள் முக்கியமாக இந்திய பெயர் கொண்டவர்களை , வட்டம் கட்டுவது சகஜம் .
நான் அங்கு இருந்த சமயத்தில் , ஒரு நாள் காலை 11 மணி சுமாருக்கு ஒரு அழைப்பு .
( எனது முதல் பெயர் , மகனின் கடைசி பெயரும் ஒன்றே )
பேசுவது  B ........யா ,என்று கேட்டு விட்டு ,
FBI இல் இருந்து பேசுவதாகவும் , இந்திய வருமான துறையில் இருந்து ,
பணப்பரிவர்த்தனை / நில ஆர்ஜிதம் சம்பந்தமாக , கேஸ் இருப்பதாகவும் ,
அது விஷயமாக என்கொயரி பண்ணவேண்டும் என்றான் .
அப்பிடியா என்றேன் ?
பிறகு நீங்கள் விசாரிக்க வேண்டியது B ...N ஆ ? அல்லது A .....B ? கேட்டேன்
சிறிது வினாடிகளுக்கு பிறகு , A .....B ..என்றான் .
ஓ , அது என் மகன் , அவசரம் என்றால் அவனது செல் க்கு பண்ணவும் இல்லையென்றால் உங்கள் நம்பரை கொடுக்கவும் என்றேன்.  (இன்டர்நெட் மூலம் வரும் அழைப்புகளுக்கு நம்பர்கள், 00xxxx   ஒரு மாதிரி  இருக்கும் ) அவர்களே பேசுவதாக கூறினார்கள் .
மாலையில்  பையன் வந்ததும்,நடந்ததை கூறினேன் .
அப்பிடியா , என்றவன் சிரித்தான் . என்னடா என்றால் , பிறகு சொல்கிறேன் என்றான் .
2/3 நாட்களுக்கு பிறகு , மாலை நேரத்தில் ,இதே போன்ற போன் .
பையன்தான் எடுத்தான் .
பெயர் கேட்டு ,சரி பார்த்தவுடன் , என்னிடம் பேசிய பழைய டையலாக்.
பையன் :  நீங்கள் சொல்லுவது புரியவில்லை .தெளிவாக சொல்லவும் .
அவர்கள் : இந்திய அரசு ,உங்களை பற்றி விஜாரித்து , தகுந்த நடவடிக்கை எடுக்க கூறியுள்ளனர் .
அவசியமெனில் ,உங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப  சொல்கின்றனர் .
பையன் : நல்லது , நீங்கள் எந்த ஸ்டேட் HQ வில் இருந்து பேசுகிறீர்கள்
அவர்கள் : உங்கள் ஸ்டேட் /லோக்கல் FBI தான் .
பையன்  : ஓ ,அப்பிடியா ? ........நான் 5/6 இடத்தில் லேண்ட் ( அட பாவி  எனக்கே தெரியாதே ) வாங்கியுள்ளேன் . எந்த இடம் என்று ஸ்பெசிபிக் ஆ கூறமுடியுமா ? என்னுடைய டீலிங்ஸ் எல்லாம் ஸ்ட்ரெய்ட் .  
அவர்கள் : நீங்கள் எங்கேயெல்லாம் வாங்கி உள்ளீர் ?
பையன் : இந்திய அரசு அந்த தகவல்கள் எல்லாம் தரவில்லையா ?
அவர்கள் : அது சீல்டு கவரில் உள்ளது . உங்கள் எதிரே பிரிக்கப் படும் . பிரித்தால் உடனே எக்ஷன் எடுக்கவேண்டும் . நீங்கள் நாடு கடத்தப்படும் சந்தர்பம் வரும் .
பையன் : அப்பிடியா ?? வேறு சொல்யூஷன் இருக்கிறதா ? நான் மிகவும் நேர்மையானவன் . இதை தவிர்க்க முடியாதா ?
அவர்கள் : நீங்கள் பேசுவதைப் பார்த்தால் உண்மை பேசுபவர் போல் தெரிகிறது . நமக்குள் ஒரு டீலிங் வைத்துக்கொள்ளலாம் ......
பையன் : அதெப்பிடி என்னை காக்க முடியும் .
அவர்கள் : நாங்கள் கவரை பிரிக்காமலேயே , குறிப்பிட்ட நபர் இல்லை ,தவறான செய்தி என்று திருப்பி அனுப்பித்து விடுவோம் . அதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டி இருக்கும் .
பையன் : ரொம்ப சரி, இந்த டீலிங்ஸ் எல்லாம் எங்கள் லாயர் மூலமாகவே நடக்கட்டும் . அவர் நம்முடைய சம்பாஷணைகளை, எக்ஸ்டெங்ஷனில்   ரெக்கார்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார் ,,ஆகவே ........   ஹலோ ஹலோ ........
போன் டிஸ்கனெக்ட் ஆகிறது .

முழித்துக் கொண்டு இருந்த எங்களுக்கு , பையன் மேலும் விளக்கினான் .
2 மாதத்திற்கு முன் எதிர் வீட்டு , இந்திய வம்சாவளி லேடிக்கு இது மாதிரி கால் வந்துள்ளது . குறிப்பிட்ட டாலரை ,சொல்லுகின்ற A /c ட்ரான்ஸ்ஃபர் பண்ணினால், அவள் தப்பிக்கலாம் என்று கூறி உள்ளனர் .   அவள் அலறி அடித்துக் கொண்டு ,மகன் வீட்டிற்கு வர , அவன் அவர்கள் வீட்டிற்கு சென்று போன் கால்சை , பார்த்தால் , ஹோக்ஸ் கால் என்று தெரிந்து விட்டது . எதற்கும் அவர்களுடைய இன்கம்டெக்ஸ் லாயரை அணுகி   இது விஷயம் சொன்னதும், அவர் இதெல்லாம் தில்லுமுல்லு. FBI அவர்கள் அணுகுமுறை இப்பிடி எல்லாம் இருக்காது. இது மாதிரி அழைப்புகள் என்னுடைய இந்திய கஸ்டமர்களுக்கு வருவது உண்டு .
அவசியம் என்றால் தன்னுடைய நம்பரை கொடுத்து என்னை அணுக சொல்லுங்கள் என்றுள்ளார் .

இது மாதிரி  போனில் எல்லாம் FBI விசாரிக்க மாட்டார்கள். இதெல்லாம் தெரிந்துதான் அவன் கிட்டே அப்பிடி பேசினேன் . உங்களுக்கு தெரியாமல் லேண்டு நான் எங்கே வாங்கி போடறது என்றான் எந்த மகன்

ரமணியன்  .


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Post by T.N.Balasubramanian on Mon Oct 10, 2016 8:02 pm

இதன் தொடர்ச்சியாக தட்ஸ்தமிழ் மாலை 6.18 வந்த செய்தியை பதிவிடுகிறேன்

மும்பையின் முக்கிய வர்த்தக பகுதியான தானே பகுதியில் செயல்படும் சில கால் சென்டர்கள், உள் வருவாய் சேவைகள் துறையில் இருந்து அழைப்பதாக கூறி 6,000த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்களிடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான பணத்தை பரித்துள்ளனர். இந்த மோசடி, தற்போது ஏமாற்று வேலைகளில் ஈடுப்பட்டு வரும் கால் சென்டர்களில் பணிபுரிந்து வரும் ரகசிய ஊழியர் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி அனைத்திருக்கும் மூளையாக செயல்பட்டது 23 வயது இளைஞர் என்பது தான் அதிர்ச்சியான செய்தி. வருவாய் சேவை துறை தானே பகுதியில் மிரா சாலையில் உள்ள கால் சென்டரில் இருந்துக்கொண்டு அமெரிக்காவில் பல குடிமக்களை வருவாய் சேவை அதிகாரி என தோற்றத்தில் தொடர்பு கொண்டு வரி செலுத்தாதமைக்காக மிரட்டியுள்ளனர். இவர்கள் வலையில் சிக்குவோர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 500 டாலர் முதல் 60,000 டாலர் வரையிலான தொகையை பெற்றுள்ளனர் இந்த மோசடி மன்னர்கள். குறிப்பிட்ட தொகையை கொடுக்க மறுக்கும் நபர்களிடம், நீங்கள் பணத்தை செலுத்தவில்லை என்றால் 30 நிமிடத்தில் உங்களை கைது செய்யவும், உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளனர்.   புகார் ஆனால் இத்தகையை மிரட்டல் குறித்து எந்த ஒரு அமெரிக்கரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. காரணம் அவர்களிடம் இருக்கும் கருப்பு பணம். பரிமாற்றம் மேலும் இந்த கால் சென்டர்கள் பண பறிமாற்றம் அனைத்தையும் கிப்ட் கார்டு, ஐடியூன் கிப்ட் கார்டு வாயிலாக பெற்றுள்ளனர். இப்படி தினமும் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து வருகிறது இந்த மோசடி கும்பல். 700 பேர் இந்த மோசடியில் சுமார் 700 பேர் ஈடுப்பட்டுள்ளனர், அதில் 70 பேரை மட்டுமே தானே போலீல் கமிஷனர் பரம் பீர் சிங் தலைமையிலான குழு கைது செய்துள்ளது. கால் சென்டர்கள் இந்த மோசடி குறித்து தானே பகுதியில் ஐசர்வ் பிபிஒ பிரைவேட் லிமிடெட், லோரெக்ஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், மேக் அவுட்சோர்சிங் சேவைகள், டெக் சொல்யூஷன்ஸ் மற்றும் கால்-டெக் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களில் விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மோசடிக்கு தொடர்புடைய சுமார் 9 கால் சென்டர்கள் போலீசாரால் மூடப்பட்டுள்ளது.   எப்படி..? மோசடியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அமெரிக்க மொழி வழக்கில் சிறப்பாக பேசுபவர்கள் இவர்களின் உதவியுடன் VOIP என்ற இணைய வசதிகள் மூலம் அமெரிக்காவில் உள்ள மக்களை ஏமாற்றியுள்ளனர். VOIP மூலம் ஒருவரின் மொபைல் எண் அல்லது தொலைபேசியில் அழைக்கும்போது அவர்களுக்கு Random எண் தான் வரும், இதனால் இதனை கொண்டு யார் எங்கு இருந்து அழைக்கிறார்கள் என கண்டுப்பது கடினம். அப்படி கண்டுப்பிடிக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீஸிடம் புகார் அழித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   சமுக வலைதளம் இந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்   அனைவரும் சமுக வலைதளங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டு நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோசடி கும்பல் தானே போலீஸார் அளித்த தகவல் படி இந்த மோசடியில் ஹைதர் அளி (24), ஹம்சா போலேஸார் (34), கபீர் வர்தன் (26), அர்ஜூன் வாசுதேவ் (24), அப்துல் ஜாரிவாலா (22), ஜான்சன் டான்டோஸா (24), கோவிந்த தாகூர் (28) மற்றும் அன்கித் குப்தா (19) ஆகியோர் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மூளையாக செயல்பட்டது 23 வயதுடைய ஷேகி எனப்படும் சாகர் தாக்கர் தான் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது அவருடன் தபஸ் என்பவரும் ஈடுப்பட்டுள்ளார்.   தகவல் விற்பனை இந்த கால் சென்டர்கள் அமெரிக்க கருப்பு சந்தையில் இருந்து தொலைபேசி எண்கள் மற்றும் அவரது விபரங்களை வாங்கியுள்ளனர். 10,000 தொலைப்பேசி எண்கள் 1 லட்சம் ரூபாய் என்ற விலையில் தகவல்களை வாங்கியுள்ளனர்.    

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Post by Ramalingam K on Tue Oct 11, 2016 12:53 pm

ஐயா இதில் இன்னும் ஒரு கூடுதல் தகவல் இன்றைய தினமலர் புதுவைப் பதிப்பு 9 ஆம் பக்கத்தில் :

கைது செய்யப்பட்ட 70 பேர்களிடம் விசாரணை நடத்தியபோது, " நாங்கள் இந்தியர்களை ஏமாற்றவில்லை; அமெ ரிக்கர்களைத்தானே ஏமாற்றினோம். இதில் என்ன தவறு?" என்று தம் தரப்பு நியாயத்தையும் சொல்லி விசாரணை அதிகாரிக்ளை அதிர்ச்சிக்கு ஆளாக்கினராம்.

உண்மைதானே ! பெரிய அண்ணா ( Big Brother )வையே ஏமாற்றிய பெருந்தகையாளர்களுக்குப் பெரிய விருது அல்லவா கொடுக்க வேண்டும் !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Post by T.N.Balasubramanian on Tue Oct 11, 2016 1:06 pm

அது தவறான தகவல்களாக இருக்க சாதிய கூறுகள் உண்டு .
ஏமாற்றப்பட்டவர்கள் லிஸ்டை பார்த்தால் அநேக இந்தியர்கள்
இருப்பதும் தெரியவரும் .
அமெரிக்கர்களை தான் ஏமாற்றினோம் ,தவறில்லை என்பது
சப்பை கட்டு நியாயப்படுத்தல் . தவறான முன்னுதாரணம் .
தண்டிக்கப்பட வேண்டியவர்களே .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Post by Ramalingam K on Tue Oct 11, 2016 2:49 pm

அடியன் என்னவோ அவைகளைச் சூரர்கள் என்று எண்ணிவிட்டேன்.

தவறு யாரிடம் செய்யப்பாட்டலும் த்ண்டிக்கவேண்டும்தான்.

அமெரிக்கனும் ஏமாந்தான் என்னும்போது உள்ளுக்குள் ஒரு அற்ப பெருமிதம் இருந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால் நம்மாளுக்கும் அல்லவா இந்த தீரர்கள் அல்வா கொடுத்துள்ளர்கள் பாரபட்சம் இல்லாமல் ஏமாற்றியுள்ளார்கள் போல.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum