ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

View previous topic View next topic Go down

மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Oct 08, 2016 8:57 am

-
இன்றய வைஃபை சூழ் வையகத்தில் இப்போதும் மாறாமல் இருப்பது இசை ரசனைதான். இன்னமும் இவர் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை’ பாடலும், ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’யும் நம் மனதில் தோரணம் கட்டிக்கொண்டே இருக்கின்றன. தமிழ்ப் பின்னணிப் பாடகிகளில் கர்னாடக இசையும் ஹிந்துஸ்தானியும் கஜலும் அறிந்தவர் இவர் ஒருவர்தான். 19 மொழிகளில் பாடியிருப்பவர். பெரும்பாலும் அங்காடிக் கூச்சல்களாகவும், வாகன ஹாரன் ஒலிகளாகவும் திரையிசை மாறிவிட்ட சூழலில், சந்தோஷங்களின் குரலாக இருக்கும் வாணி ஜெயராம் அவர்களுடன் ஓர் உரையாடல்:

பல நுண்கலைகளில் முதன்மையானது இசைக் கலை.
இதில் நீங்களும் ஒரு பங்களிப்பாளர் என்பதில் உங்களுக்குள்ள
உணர்வு என்ன?

`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று நமது அவ்வைப் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இப்படி அரிதாகக் கிடைத்திருக்கிற இந்த மனிதப் பிறவியில் மனிதநேயத்தோடு வாழ்வதுதான் மிக உன்னதமான விஷயம். சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவராக வாழ்கிற வாழ்க்கையைத்தான் நம் முன்னோர்கள் ‘இசைபட வாழ்தல்’ என்றழைத்தார்கள். இசை என்பது சமூகத்தை இணைக்கிற நல்லதொரு பாலம். அத்தகைய இசைத் துறையில் நானும் ஒரு பங்களிப்பாளராக, பார்வையாளராக இருப்பதை எண்ணி கர்வப்படவில்லை. பெருமைப்படுகிறேன். பெருமைப்படலாம்; கர்வப்படக் கூடாது.

உங்கள் இசை ஆற்றலின் ஆரம்பப் பல்லவி…

எனது இசையின் தொட்டில், அகரம், பல்லவி எல்லாமே என் குடும்பம்தான். இசையால் ஆனது என் வீடு. என் தாயார் பத்மாவதி வீணை இசைக் கலைஞர். ரங்கராமனுஜ அய்யங்காருடைய சிஷ்யை என் தாயார். ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றலாம் என்பார்கள் அல்லவா? அது போல என் அம்மாவிடம் இருந்துதான் எனக்கும் அந்த ஒளி கடத்தப்பட்டது. மூன்று வயதிலேயே எனக்கு இசை நாட்டம் வந்துவிட்டதாகப் பின்னாட்களில் என் தாய் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது ஐந்தாவது வயதில் வேலூரில் முறைப்படி இசை கற்க ஆரம்பித்தேன். அந்த ஒலி ஊர்வலம் இன்னமும் தொடர்கிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் ஹிந்துஸ்தானியை முறைப்படி கற்றுக்கொண்டேன். கஜலும் அத்துப்படியானது. இவை எல்லாம் எனக்கு வெவ்வேறு பரிமாணங்களில் பயணிக்கப் பெரிதும் பயன்பட்டன.

செவ்விசை அறிந்தவர் நீங்கள். நாட்டார் பாடல்களைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

இசையின் பல பரிமாணங்களில் ஒன்று நாட்டார் பாடல்கள். மக்கள் இசை அது. எனக்கும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் திரையிசைக்கு மிக நெருக்கமாக கிராமியப் பாடலும் இருக்க வேண்டும். பிரபல இசையமைப்பாளர் நவுஸத் உத்தரப் பிரதேச கிராமியப் பாடல்களையும், எஸ்.டி.பர்மன் வங்காள மொழி கிராமியப் பாடல்களையும் எடுத்துத் திரையிசையில் கலந்திருக்கிறார்கள். நம் தமிழ்த் திரையிசையிலும் நாட்டார் பாடல்கள் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Oct 08, 2016 8:58 am

அங்கீகாரத்தின் அடையாளம்தான் விருதுகள்.
இந்த விருதுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

குழந்தைக்குக்கூடப் பாராட்டுவது பிடிக்கும். விருதுகள் இன்னும் இன்னும் உற்சாகத்தைக் கூட்டும். 1977-ல் `அபூர்வ ராகங்கள்’ படத்தில் எம்.எஸ்.வி. சார் இசையில் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ பாடலுக்கு தேசிய விருது தொடங்கி ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறேன். சமீபக் காலங்களில் 2014-ல் ‘1983’ என்ற மலையாளப் படத்தில் நான் பாடிய ‘நலன் ஞாலி குருவி’ என்ற பாடலுக்கும் இந்த வருஷத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பீஜு’ என்ற நிவின் பாலி நடித்த படத்தில் நான் பாடிய ‘பூக்கள் பன்னீர் பூக்கள்’ பாடலுக்கும் விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். இந்த அங்கீகாரங்கள், தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான டானிக். இதில் இன்னொரு விஷயம் விருது நம்மைத் தேடி வரணும். நாம் தேடிப் போகக் கூடாது.

ஞாபக அலமாரியில் பத்திரமாக இருக்கும் உங்கள் முதல் திரையிசைப் பயணம்?

1970-ல் ‘குட்டி’ என்ற இந்திப் படத்தில் என்னை முதன்முதலாக வசந்த் தேசாய் பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார். தமிழில் 1973-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அந்தப் படம் வெளிவரவே இல்லை. அதே வருஷத்தில் சங்கர்-கணேஷ் இசையில் `வீட்டுக்கு வந்த மருமகள்’ படத்தில் ‘ஓரிடம்…’ என்ற ஒரு டூயட் பாடலை டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடினேன். அதே வருஷத்தில் எம்.எஸ்.வி. சார் இசையில், எனக்குப் பெரிய பேர் வாங்கித் தந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடினேன். என்னை உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது அந்தப் பாடல்.

ஹிந்துஸ்தானியும், கஜலும் நீங்கள், இத்தகைய இசைப் படிமங்களைக் கொண்ட ‘மேகமே மேகமே’, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ போன்ற ஒரு சில பாடல்களை மட்டுமே தந்திருக்கிறீர்கள்…

நீங்கள் தமிழில் மட்டும் விரல் விட்டு எண்ணுகிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் இத்தகைய நுட்பங்களைக் கொண்ட பாடல்களைப் பாடியிருக்கிறேன்.

உங்களுக்கே உங்களுக்கென்று பிடித்த ராகம்?

‘த்விஜாவந்தி’ என்ற ராகம் ரொம்பப் பிடிக்கும். ஒரு பாட்டு சொல்றேன். உங்களுக்கும் பிடிக்கும். இந்த ராகத்தின் அடிப்படையை வைத்துக்கொண்டு எம்.எஸ்.வி. சார் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் ‘அமுதத் தமிழில் கவிதை எழுதும் புதுமைப் புலவன் நீ’ என ஒரு பாடல் போட்டிருப்பார். உண்மையிலேயே இசையும் தமிழும் அமுதம்தான்.

மானா பாஸ்கரன்
நன்றி- தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by T.N.Balasubramanian on Sat Oct 08, 2016 11:13 am

நானறிந்த ஒருவரின் உறவினர் இவர்.
பழக இனிமையானவர் .
ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் ego காய்ச்சலில்
அல்லாடிக் கொண்டு இருக்கும் இவ்வுலகில் ,
பல பெருமைகளுக்கு உரிய ,
ஜெயராம் அவர்களும் வாணி அவர்களும்,
ஒரு விதிவிலக்கு .

நல்ல பதிவு .நன்றி ayyasami ram அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by T.N.Balasubramanian on Sat Oct 08, 2016 11:28 am

‘அமுதத் தமிழில் கவிதை எழுதும் புதுமைப் புலவன் நீ’ --
த்விஜாவந்தி ராகத்தில் வாணி ஜெய்ராம் அவர்கள் பாடிய பாடல் ,
MSV அவர்கள் இசை . பாடல் புலமைப்பித்தன்
ஈகரை உறவுகளுக்காக .  
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Oct 08, 2016 11:35 am; edited 1 time in total (Reason for editing : addition)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Oct 08, 2016 1:25 pm

பாடல்- வாலி
பாடியவர்: வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்

-

அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ
அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ - புவி
அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ
-
இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை லயமும் நீ
இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை லயமும் நீ - பிறை
இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும் விளக்க உரையும் நீ
விளக்க உரையும் நீ
-
நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன?
நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன?
உன்னை ஒரு கணமும் என்னை மறு கணமும் மேலும் நினைப்பதென்ன?
மேலும் நினைப்பதென்ன?
-
நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன?
நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன?
ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழியிரண்டில் வண்ணம் சிவப்பதென்ன
வண்ணம் சிவப்பதென்ன?
-
எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ மறு கை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே
இன்பம் தேடட்டுமே
-
வைகை அணை திறந்து வைகை அடை மதுரை வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை பெருகுவது நீந்திக் கரை காணவே
நீந்திக் கரை காணவே
-
அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ புவி
அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ
-
---------------------------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by T.N.Balasubramanian on Sat Oct 08, 2016 4:17 pm

பாடல் புலமைபித்தனா அல்லது வாலியா ?
நான் படித்தது புலமைப்பித்தன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by மூர்த்தி on Sun Oct 09, 2016 12:29 am

அந்தப் பாடலை எழுதியது புலவர் புலமைப்பித்தன். வாலி அல்ல.

வாணி ஜெயராமின் வளர்சசிக்கு தடையாக இருந்தவர் ஒரு பிரபலமான வட நாட்டு இந்திப் பாடகி.
இந்தப் பாடகி சில வருடங்களுக்கு முன்னர் காமன்வெல்த் தொடக்கப் பாடலை இசை அமைத்து உருவாக்கிய ஏ.ஆர் ரகுமானை கடுமையாக விமர்சித்திருந்தார். தொடக்கப் பாடல் ரகுமானுக்கு சரிவை தந்து விட்டது என்றும் தனக்கு அந்த இசை பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர்களிடையே போட்டி இருக்கலாம். பொறாமை கூடாது.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by T.N.Balasubramanian on Sun Oct 09, 2016 7:01 am

@மூர்த்தி wrote:அந்தப் பாடலை எழுதியது புலவர் புலமைப்பித்தன். வாலி அல்ல.

வாணி ஜெயராமின் வளர்சசிக்கு தடையாக இருந்தவர் ஒரு பிரபலமான வட நாட்டு இந்திப் பாடகி.
இந்தப் பாடகி சில வருடங்களுக்கு முன்னர் காமன்வெல்த் தொடக்கப் பாடலை இசை அமைத்து உருவாக்கிய ஏ.ஆர் ரகுமானை கடுமையாக விமர்சித்திருந்தார். தொடக்கப் பாடல் ரகுமானுக்கு சரிவை தந்து விட்டது என்றும் தனக்கு அந்த இசை பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர்களிடையே போட்டி இருக்கலாம். பொறாமை கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1223879

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by Ramalingam K on Sun Oct 09, 2016 1:35 pm

@மூர்த்தி wrote:

கலைஞர்களிடையே போட்டி இருக்கலாம். பொறாமை கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1223879

ஆராய்ந்து பார்த்தால் போட்டிக்கு ஆதாரமே பொறாமையாகத்தான் இருக்கும்.
பொறாமையே உபாதான காரணமாகும்போது போட்டி எப்படி பொறாமை இல்லாமல் !
ஆனால் இந்த பொறாமை பகைமைக்கு வித்தாகாமல் பார்த்துக் கொண்டால் ஆனந்தம்தான்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by T.N.Balasubramanian on Sun Oct 09, 2016 7:51 pm

போட்டியில் முன்னோடியாக இருப்பவர்களை கண்டு ,
மற்றவர்கள் பொறாமை படுவது ,நடைமுறை .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum