உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிட்டு பஜாரு! - சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 6:14 pm

» வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி
by ayyasamy ram Today at 6:12 pm

» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
by ayyasamy ram Today at 5:44 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

Admins Online

முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன்

முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன் Empty முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன்

Post by ayyasamy ram on Fri Oct 07, 2016 6:34 pm

நாடக நடிகனின் கெட்டப் மாற்றம் தரும் காதல் வாய்ப்பும், சினிமா வாய்ப்புமே 'ரெமொ'.
முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன் UWAgVxTJTQ2mu3EK3WZb+07CP_Remo_2961638f_3037474f
-

நாடகத்தில் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ ஆகவேண்டுமென்று விரும்புகிறார். சினிமா ஆடிஷனில் தன் திறமையை நிரூபிக்க நினைப்பவருக்கு சறுக்கல் ஏற்படுகிறது. எப்படியாவது இயக்குநரைக் கவர வேண்டும் என்று பெண் கெட்டப் போடுகிறார். அந்த கெட்டப் ஏன்? அதனால் என்ன ஆனது? காதல் பூத்த தருணம் எது? சிவகார்த்திகேயனின் முயற்சிகளுக்கு விடை கிடைத்ததா என்ற கேள்விகளின் பதில்களே திரைக்கதை.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா கதைதான். அதில் காமெடி, எமோஷன் என்று கலந்துகட்டி கொடுத்த விதத்தில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கவனிக்க வைக்கிறார்.

லவ்வர் பாய், நர்ஸ் என இரு வேறு கெட்டப்களில் சிவகார்த்திகேயன் சரியாகப் பொருந்துகிறார். நர்ஸ் வேடத்தில் அந்த நெற்றி முடியை ஊதி ஸ்டைல் காட்டுவது சுவாரஸ்யம். காதலிக்க திட்டமிடுவது, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காதலியிடம் பேசுவது, அம்மாவிடம் காதலிக்காக கெஞ்சுவது என வழக்கமான சிவாவைப் பார்க்க முடிகிறது.

காமெடி, மிமிக்ரி, இமிடேட் செய்தல், கவுன்டர் கொடுத்தல், நன்றாக நடனம் ஆடுதல் என்று சிவாவின் திறமைகள் படத்துக்குப் பயன்படுகின்றன. ஆனால், அந்த கதாபாத்திரத்துக்கு அதுமட்டும் போதவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு காதலனாக மனதில் பதியவில்லை. கண்களில் எந்த ஜீவனும், காதலும் இல்லாமல் வெறுமனே சிவாவின் உதடுகள் மட்டுமே காதல் வசனம் பேசுகின்றன. கீர்த்தி சுரேஷிடம் புரபோஸ் செய்யும் அந்தக் காட்சியில் எந்த ஈர்ப்பும் வரவில்லை.

''காதலிக்கிற பொண்ணு கிடைக்கணும்னு முயற்சி பண்ணாதவன், அந்த பொண்ணு கிடைக்கலைன்னு வருத்தப்படறதுக்கு தகுதியே இல்லாதவன்'' என வசனம் பேசும் சிவகார்த்திகேயன், ''என்னை மாதிரி சாதாரண பசங்களுக்கெல்லாம் எல்லா வாய்ப்பும் கிடைக்காது காவ்யா...நாங்கதான் ஏற்படுத்திக்கணும்'' என தொண்டை வலிக்கப் பேசுவது இன்னும் எத்தனை படங்களுக்கு நீடிக்கும்?

கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்துக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார். எமோஷன் காட்சிகள், காதல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

''பசங்களை அழ வைக்குறதுதான் பொண்ணுங்களோட ஃபுல்டைம் ஜாப்''. ''மேய்க்கிறது எருமை அதுல என்ன பெருமை'' சதீஷின் ஒன் லைனர் வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் பலமாக விழுகின்றன.''கேப் விட்டுப் பேசு. புரியமாட்டேங்குது'' என 'நான் கடவுள்' ராஜேந்திரனை கலாய்த்துப் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது.

பையனின் காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்னையே பைத்தியம் என்று சொல்லிக்கொள்ளும் வழக்கமான அப்பாவி அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், நர்ஸைக் காதலிக்கும் யோகி பாபு, கீர்த்தி சுரேஷ் பெற்றோராக வரும் நரேன் - கல்யாணி நட்ராஜன், இயக்குநராகவே வரும் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

பி.சி.ஸ்ரீராம் சென்னையின் பல்வேறு இடங்களை அழகியலுடன் கேமராவில் கடத்தி இருக்கிறார். ஃபிரேம் வைத்திருக்கும் விதம் அபாரம். அனிருத்தின் இசையில் ரெமோ, சிரிக்காதே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஒத்திசைவாக பொருந்திப் போகிறது.

ரூபன் காவ்யா பாடலை யோசனையே செய்யாமல் கத்தரி போட்டிருக்கலாம். ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு காதலன் சிவா, நர்ஸ் சிவா குரல்களை நேர்த்தியாக வேறுபடுத்திக் காட்டுகிறது.

''இந்த உலகத்துலயே கலப்படம் இல்லாதது பசங்க மனசு.'', ''எல்லாப்பசங்களையும் குத்தம் சொல்லாதீங்க.லவ்வுக்காக உயிரைக்கொடுக்கற பசங்களும் இருக்காங்க. உயிரைக்கொடுத்து லவ் பண்ற பசங்களும் இருக்காங்க'' என்ற வசனங்கள் ஆண்களை உயர்த்திப் பிடிக்கின்றன.

''பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றதுதான் கஷ்டம். கன்ஃபியூஸ் பண்றது ஈஸி.'', '' ஆம்பளைங்க அழக்கூடாதுதான். ஆனா, அவங்களை அழ வைக்கக்கூடாதுன்னு பொண்ணுங்ககிட்ட சொல்லுங்க'', ''பார்த்தா லூஸு மாதிரி தெரியலை. ஆனா, பேசினா தெரியுது'' என பெண்களை நோக்கி வீசப்படும் வசன அம்புகளுக்கு கடும் கண்டனங்கள்.

கதையில் பெரிதாக மெனக்கெடாத இயக்குநர் திரைக்கதையில் நகைச்சுவையை ஆங்காங்கே தூவி ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறார். ஆனால், காதல் படத்துகான ஆதாரம் எதுவும் ரெமோவில் பலமாக இல்லை என்பதால் வலுவிழக்கிறது. நடிகன் ஆக நினைக்கும் சிவா கெட்டப் மாற்றத்துக்குப் பிறகு அதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல், காதலை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகிறார். அதிலும் காதல் வருவதற்கான காரணங்களோ, பின்புலமோ, காதலிப்பதற்கான வலுவான அம்சங்களையோ காட்சிப்படுத்தவில்லை.

கீர்த்தி சுரேஷின் பாத்திர வடிவமைப்பில் நம்பகத்தன்மை இல்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல், பல நாட்கள் ஆன பிறகும் பெயர் கூட தெரியாமல் காதலில் விழுவதாகக் காட்சிப்படுத்தி இருப்பது நம்பும்படி இல்லை. வேலையே இல்லாத நர்ஸ், பிறகு ஸ்கூட்டியில் வருகிறார். ஆனால், ஒரு டாக்டர் எப்போதும் பேருந்திலேயே பயணிக்கிறார்.

நர்ஸ் வேலையே செய்யத் தெரியாமல் ஓ.பி. அடிப்பது இன்னொரு நர்ஸுக்குத் தெரிந்த பின்னும், அதே வேலையில் அந்த நர்ஸ் எப்படி தொடர்ந்து இருக்க முடியும்?

எந்த காரணமும் இல்லாமல் ஒரு நர்ஸ் சொல்வதை எப்படி ஒரு டாக்டர் எப்படி பரிபூரணமாக கேட்டுக்கொண்டு ஆமாம் சாமியாக செயல்படுவார்? சுய சிந்தனையே இல்லாமல் ஒரு டாக்டர் இயங்குவதாகக் காட்டியிருப்பதும் நம்பமுடியவில்லை...இல்லை...

மொத்தத்தில் சிரிப்புக்கு மட்டுமே உத்தரவாதம் தருவதால் 'ரெமோ' சிரிப்புக் காதலன்.
-
தமிழ் தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54132
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன் Empty Re: முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன்

Post by T.N.Balasubramanian on Sat Oct 08, 2016 7:50 pm

முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன் 7ccODQlTTKOWMPUVoO7e+14495451_661641580676706_1066352119047176157_n

நன்றி முகநூல்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26158
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை