உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by SK Today at 8:58 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by சிவனாசான் Today at 8:49 pm

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by சிவனாசான் Today at 8:43 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Today at 8:39 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 8:31 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Today at 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Today at 7:37 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Today at 7:26 pm

» இந்திய வானம் எஸ்.ரா
by Monumonu Today at 6:44 pm

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by ayyasamy ram Today at 6:20 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Today at 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Today at 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Today at 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 6:13 am

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by i6appar Today at 4:55 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:17 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Today at 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Today at 3:56 am

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Today at 3:47 am

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by சக்தி18 Yesterday at 11:27 pm

» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by சக்தி18 Yesterday at 10:28 pm

» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:45 pm

» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
by சக்தி18 Yesterday at 2:38 pm

» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» புத்தகங்கள் தேவை !
by Guest Yesterday at 12:34 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 am

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 am

» ரூ.28 ஆயிரத்து 500 கோடியில்தாராவியை ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் சீரமைக்கிறதுவிரைவில் பூமி பூஜை
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 7:07 am

» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:05 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by சக்தி18 Mon Feb 18, 2019 10:32 pm

» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
by ayyasamy ram Mon Feb 18, 2019 9:59 pm

» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by T.N.Balasubramanian Mon Feb 18, 2019 6:34 pm

» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்
by gans Mon Feb 18, 2019 6:18 pm

» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்
by ayyasamy ram Mon Feb 18, 2019 5:33 pm

Admins Online

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by muthupandian82 on Mon Sep 19, 2016 7:39 pm

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.

முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்..!


      குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.நான் அதை அறிந்து கொண்டேன்,நீங்கள் அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான். இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.


அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான். வெளிச்சத்தை தொடமுடியாது,ருசிக்க முடியாது.நுகரவும் முடியாது.கேட்கவும் முடியாது.ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான். ஆகவே அவன் வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.

புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார்.அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம்.இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க முடியும்.எனவே இவனை என் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். என்று கூறினார். ஆறு மாத காலத்தில் புத்தருடைய மருத்துவர் அவனை குணப்படுத்தினார். அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.

நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.ஆனால் வெளிச்சம் உள்ளது.இப்போது நான் அதை அறிகிறேன்.என்று கூறினான். இப்போது புத்தர் நீ அதை நிருபிக்க முடியுமா?வெளிச்சம் எங்கே உள்ளது?நான் அதை ருசிக்க வேண்டும்.அதை தொட வேண்டும்.நுகர வேண்டும். என்று கேட்டார். உடனே அந்த முன்னாள் குருடன்.அது முடியாத காரியம் அதை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.அதை அடைவதற்கு வேறு வழி இல்லை.என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது.

muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by Ramalingam K on Mon Sep 19, 2016 8:44 pm

இந்தக் கதை உண்மையாக இருக்குமேயாயின், நாம் நம் ஓஷோவைப் பற்றிப் பரிதாபப்பட வேண்டியதுதான் நியாயம்.

கைப்புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடியின்  தேவை எதற்கு !

தானே ஆத்மன் என்பதை அவர் எப்படி அறியாமல் போனார் ! இவ்வளவு பேரும் புகழும் பின் ஏன் அவருக்கு!

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடினார்கள் போலும் இத்தனைக் காலமும் . அடப் பாவமே !

ஆத்திகன் தோல்வி அடையலாம்- அவன் அஞ்ஞானி. அது சரியானதே.
யோகி ஆன்மீகவாதி –  தோல்வி என்பது அவன்  அறியாதது- ஏனெனில் அவன் மெய்ஞ்ஞானி.

ஆஸ்திகம் என்பது வேறு – ஆன்மீகம் என்பது வேறு. இது கூடவா அந்த மகானுக்குப் புரியவில்லை.

புத்தர், பிறவிக்குருடனைக் குருடனாகவே வைத்துப் பரம்பொருளை அவனுக்கு நிரூபித்திருக்கலாம்.  அதன் பின்பு அந்த அகங்கார அந்தகனின் குருட்டை நீக்கி இருக்கலாம். ஏனோ அச்செயலை அவர் செய்யவில்லை. காரணம் அதான் புத்தர் !!

பாவம் நம் ஓஷோ !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by ChitraGanesan on Tue Sep 20, 2016 10:30 am

கட உள் கடவுள்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by சிவனாசான் on Tue Sep 20, 2016 8:08 pm

நல்ல சோதனை. விளக்கம் விவேக செயல் அருமையான கதை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3881
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by prajai on Wed Sep 21, 2016 6:45 pm

@Ramalingam K wrote:இந்தக் கதை உண்மையாக இருக்குமேயாயின், நாம் நம் ஓஷோவைப் பற்றிப் பரிதாபப்பட வேண்டியதுதான் நியாயம்.

கைப்புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடியின்  தேவை எதற்கு !

தானே ஆத்மன் என்பதை அவர் எப்படி அறியாமல் போனார் ! இவ்வளவு பேரும் புகழும் பின் ஏன் அவருக்கு!

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடினார்கள் போலும் இத்தனைக் காலமும் . அடப் பாவமே !

ஆத்திகன் தோல்வி அடையலாம்- அவன் அஞ்ஞானி. அது சரியானதே.
யோகி ஆன்மீகவாதி –  தோல்வி என்பது அவன்  அறியாதது- ஏனெனில் அவன் மெய்ஞ்ஞானி.

ஆஸ்திகம் என்பது வேறு – ஆன்மீகம் என்பது வேறு. இது கூடவா அந்த மகானுக்குப் புரியவில்லை.

புத்தர், பிறவிக்குருடனைக் குருடனாகவே வைத்துப் பரம்பொருளை அவனுக்கு நிரூபித்திருக்கலாம்.  அதன் பின்பு அந்த அகங்கார அந்தகனின் குருட்டை நீக்கி இருக்கலாம். ஏனோ அச்செயலை அவர் செய்யவில்லை. காரணம் அதான் புத்தர் !!

பாவம் நம் ஓஷோ !
மேற்கோள் செய்த பதிவு: 1222132

ராமலிங்கம் ஐயா, இதைத் தரவிறக்கிப் படித்துப்பாருங்கள்.

zippyshare.com/v/qbzyb7np/file.html
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 80

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by Ramalingam K on Wed Sep 21, 2016 9:13 pm


ஐயா !

தங்களின் ஆலோசனைப்படி அடியன் " நான் ஒரு வாசல் " -ஓஷோ என்னும் நூலைத் தரவிறக்கம் செய்து படிக்க முற்பட்டேன் .

121 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் முழுமையாகப் படிக்க மனம் ஏனோ ஈடுபாடுகொள்ளவில்லை.

நம்முடைய கருத்தே- கீழ்க்கண்ட பத்தியில் கூறப்பட்டது பற்றியதே:

"ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது".


ஆத்திகன் ஒருவேளை கடவுளின் இருப்பை நிரூபிக்கத் தவறலாம். ஏனெனில் ஆத்திகம் என்பது ஒரு நம்பிக்கை.

ஆனால் ஆன்மீகம் என்பது அறிவு பூர்வமான ஆய்வு. ஆன்மாவின் இருப்பை நிரூபிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

ஆன்மாவின் இருப்பை நிரூபிக்க இயலாது என்பது நம் ஓஷோவின் அறியாமை என்பதில் அடியனுக்குச் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

தங்களுக்கு அடியனின் கருத்தில் மாறுபாடும் நம் ஓஷோவின் ஆன்மா பற்றிய இந்த கருத்தில் ஏற்பும் இருக்குமானால், தங்களின் எப்படிப்பட்ட சந்தேகத்தையும் எம் ஸ்ரீகுருதேவர் அடியனுக்குப் போதித்த ஞான போதனையின் வழிகாட்டுதலின் துணையோடு தங்களுக்கு விளக்கம் அளிக்கக் காத்திருகின்றேன்.

அடியனது இந்த சமர்ப்பணத்தைத் தற்செறுக்கு என்றோ ஆணவம் என்றோ கருதவேண்டாம். தெளிவான ஞானம் கற்பிக்கப்பட்டதால் வரும் உண்மையானத் துணிவு என்றே கொள்ளவேண்டுமென்று விழைகிறேன்.

கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்ட ஸ்ரீராமரே தாம்பாலத்தில் இருந்த தண்ணீரில் காணப்பட்ட அந்த நிலாவின் பிம்பத்தை நிலா என்றே அறியாமையால் குழைந்தைப்பருவத்தில் பிடிக்க முயன்றபோது, நமக்கும் - நம் ஓஷோவுக்கும் அறியாமை இருக்கலாமே. அறிவுடைமையைப் போல் அறியாமையும் அனைவருக்கும் பொதுவுடைமை.

ஞானியோ, பண்டிதரோ எவராகிலும் யாவருக்கும் அறியாமை ஒருசில இடங்களில் பொதுமையாகலாம்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by prajai on Wed Sep 21, 2016 10:40 pm

நல்லது ஐயா, விளக்கம் அளிக்க முன்வந்ததற்கு மிக்க நன்றி!

"ஆஸ்திகம் என்பது வேறு – ஆன்மீகம் என்பது வேறு. இது கூடவா அந்த மகானுக்குப் புரியவில்லை. " என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். அஷ்டவக்ரரின் மஹாகீதை பற்றிய அவரது ஹிந்தி பேச்சைக் கேட்டிருந்ததால், இது அவருக்கு நன்றாகத் தெரியும் என்று எனக்குத் தோன்றிற்று. அது தமிழில் கிடைகாததால், கிடைத்ததைக் கொடுத்தேன்.

எனக்கு "ஆன்மீக" விஷயங்களில் ஞானமும் இல்லை, அதுபற்றி விவாதிப்பதில் ஆர்வமும் இல்லை.

நன்றி ஐயா.
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 80

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by Ramalingam K on Thu Sep 22, 2016 8:30 am

வணக்கம்    ஐயா !

கண்டிப்பாக நம் ஓஷோ அவர்களுக்கு ஆன்மீகம் தெரியாது என்றால் அது அவ்வாறு சொல்பவரின் அறியாமையாகத்தான் இருக்கவேண்டும்.

1. பொதுவாக ஒன்றைத் தெரிந்திருப்பது வேறு.
2. தெரிந்ததைப்பற்றித்  தெரிந்தவர்கள் பிறருக்குத் தெரிவிப்பது வேறு.

இதில் நம் ஓஷோ அவர்களை இக்கருத்தைப் பொறுத்தவரை  2வது நிலையில்தான் எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கின்றது. மனித சுபாவம் இத்தகையது.

“இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே” என்று திருமந்திரம் கூறுகிறது.  இதனைப் பக்தர்கள்  இரவும் பகலும் இல்லாத இடத்தில் திருமூலர் இருந்தார் என்பதைத்தான் இவ்வாறு தெரிவிக்கின்றார் என்பார்கள்.   ‘இரவும் பகலும் – அதாவது இருளும் வெளிச்சமும்’  இல்லாத இடம் என்று உலகத்தில் – பிரபஞ்சத்தில் ஒன்று இருக்கவே முடியாது. அவ்வாறு சொல்பவர்களுக்கே இந்த உண்மை நன்றாகத் தெரியும். ஆனாலும் சொல்வார்கள்.

இங்கே இரவு என்றால், இருள் > அஞ்ஞானம் > அறியாமை என்றும் , பகல் என்றால் வெளிச்சம்> மெய்ஞ்ஞானம்> அறிவுடைமை என்றும் பொருள்கொண்டு, திருமூலர் சொல்வது ‘ஞானமும் அஞ்ஞானமும் அற்ற நிலையில் நான் என்னை இருத்திக் கொண்டுள்ளேன் - அதாவது நான் சுத்த ஆத்மாவாகிறேன்’  என்றே சொல்கின்றார் என்று சொன்னால் அதனைப் பக்தி மார்க்கத்தில் இருக்கும் பெரும்பாலான பண்டிதர்கள்  அது ஏற்புடையதே என்றாலும் ஏற்கமாட்டார்கள். காரணம் அதுதான் மனித இயல்புக்குணம்.

இன்று கடவுளாக நாம் வழிபடும் பெரும்பாலும் எல்லாருமே நம்மைப்போலவே  பெற்றோர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள் என்றே சொல்லப்படுகின்றார்கள். ஆக மனிதன்தான் , தன் நற்குண இயல்புகளால், கடவுள்( மேலான்) நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.

ஜீவாத்மா > மகாத்மா> பரமாத்மா . இதில் நம்மில் பெரும்பாலோர் ஜீவாத்ம நிலையிலேயே தங்கிவிடுகிறோம். நாம் தெரிந்து கொண்ட வகையில்,  உலகிலேயே நமது தேசத் தந்தை ஒருவர் மட்டுமே மகாத்மா  என்ற நிலையை எட்டியவர்.  எஞ்சி இருக்கும் அனைவரும் பரமாத்ம நிலையை – கடவுள் நிலையை அடைந்தவர்கள்.

ஆன்மா என்பது ஒரு ஆற்றல்- சக்தி – அதாவது energy . ஆகையால் ஆத்மாவிற்கு அறிவு என்பது இல்லை. ஏனென்றால் ஆன்மா அறிவே வடிவானது.  அறிவே வடிவான ஒன்றிற்குத் தனியே அறிவு என்று எப்படி இருக்க முடியும் !

நெருப்பிற்குச்  சூடு என்று ஒன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை – நெருப்பே சூடாகியதால்.

நீரால் நீரை நனைக்கமுடியாது – நீரே நனைதல் ஆவதால்.
நெருப்பைச்  சுடவே முடியாது  - நெருப்பே சூடு ஆவதால்.
காற்றை உலர வைக்க முடியாது – உலர்தலும் உலர்த்தலும் காற்றே ஆவதால்.
ஆகாயத்தை  வேறு இடத்திற்குப் பெயர்த்து வைக்கமுடியாது – ஆகாயமேஅனைத்து இடமும் ஆவதால்.
இனிப்பிற்கு இனிப்பு என்றால் என்ன என்று தெரியாது – அதுவே இனிப்பாவதால்.

இவ்வாறாகும் ஆற்றல்தான் ஆத்மா என்கின்றன வேதாந்தங்கள். இனி இதனை விட்டு விலகி ,  நம் அமுதத் தமிழை சுவைத்து மகிழலாம். ஆன்மா இருந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ இன்றைய  நமது  மனதின்   நிம்மதிக்கு அந்த  ஆராய்ச்சியால் எந்த பயனும் இருக்க வாய்ப்பில்லை.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by prajai on Thu Sep 22, 2016 12:31 pm

நல்லது ஐயா, விளக்கத்திற்கு மிக்க நன்றி!
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 80

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by SRINIVASAN GOVINDASWAMY on Thu Sep 22, 2016 3:20 pm

அன்புள்ள  ஐயா

ஜீவாத்மா > மகாத்மா> பரமாத்மா

மகாத்மாவை பற்றி  சற்று புரியவையுங்கள்

மகாத்மா என்பது ஒரு இடைச்சேர்க்கை. மகாத்மா  என்பதற்கு அறுதிட்ட விளக்கம் இருந்தால் எடுத்துக்காட்டுடன் கூறவும். சிறந்த செயல்களை , தியாகங்களை செய்தவர்களை மிகைபடுத்தி காட்ட மகாத்மா என அழைக்கலாம்.

மகா + ஆத்ம = மகாத்மா    (உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்)

மகாத்மா என்று அழைக்கப்படுவர்களை  அனைவருக்கும்  மகாத்மா என்று கருதவேண்டிய நிர்பந்தம் இல்லை. இடத்திற்கு இடம் , காலத்திற்கு காலம் மாறுபடலாம். வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் இல்லை.

ஆனால்   பரமாத்மா  அண்டமாகவும் , ஜீவாத்மா பிண்டமாகவும் கணக்கிடப்படுகிறது. (ஜீவாத்மா)  பிண்டமானது பக்குவப்பட்டு சமாதி அடையும்போது பரமாத்மா உடன் கலப்பதாகவும் (அல்லது) பரமாத்மாவின் தன்மை பெற்றுவிட்டதாகவும் கருதலாம். இதுவே கீதையில் உள்ள விளக்கம்.

பரமாத்மாவின்  சொரூபத்தை அறிய   துறவியாக மட்டுமே   இருக்க நிர்பந்தம் இல்லை அல்லது புலனடக்கம் மட்டுமே தகுதி இல்லை.

மகாத்மாவை  கடந்துதான் பரமாத்மாவை அடைய/அறிய முடியும் என்றால்  சீதையின் தந்தை ஜனகரை பற்றி விளக்கவும்.

சம்சாரத்துடன் பிறந்த நாம் சம்சாரத்தில் உழன்று அலைபாயும் ஆசா பாசங்களுக்கு  அடிமையானவனே ஜீவாத்மா. இருந்தும் இல்லாமலும் , சேர்ந்தும் ஆனால் ஒட்டாமல்  சமாதி  அடைந்த நிலையே ஞானி, அவனே  பரமாத்மாவாக   உணரப்படும்.

வணக்கம்
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by Ramalingam K on Thu Sep 22, 2016 8:09 pm

ஐயா !

தங்களின் கருத்திற்கு அடியனேனின் விளக்கம். இது எம் ஸ்ரீகுருதேவர் எமக்குப் போதித்தவை; சரியே என்று என் மனத்தால் அராய்ந்து தெளிந்து ஏற்றுக் கொண்ட தீர்மான்மாகிய ஞானம். இவை தங்களுக்கு ஏற்புடையதாகலாம்  அல்லது ஏற்புடைமை அல்லாமலும் ஆகலாம்.

1. {பரமாத்மா  அண்டமாகவும் , ஜீவாத்மா பிண்டமாகவும் கணக்கிடப்படுகிறது. (ஜீவாத்மா)  பிண்டமானது பக்குவப்பட்டு சமாதி அடையும்போது பரமாத்மா உடன் கலப்பதாகவும் (அல்லது) பரமாத்மாவின் தன்மை பெற்றுவிட்டதாகவும் கருதலாம். இதுவே கீதையில் உள்ள விளக்கம்}.
- இது கீதையின் எந்த அத்தியாயத்தில் உள்ள  எந்த பாடலின் (ஸ்லோகம்) விளக்கம் என்பது விளங்கவில்லை. எடுத்துக்காட்டை அளித்தால் அனைவருக்கும் பயனாக அமையலாம்.

2. {பரமாத்மாவின்  சொரூபத்தை அறிய   துறவியாக மட்டுமே   இருக்க நிர்பந்தம் இல்லை அல்லது புலனடக்கம் மட்டுமே தகுதி இல்லை}.
- பரமாத்மாவை அறிய ஞானமும் பயிற்சியும் போதும். உடல் துறவு அவசியமற்றது- மனத்துறவு அவசியமானது. புலன்களை நெறிப்படுத்தி வாழ்தல்  பரமாத்ம ஞானம் பெற அடிப்படைத்தகுதி. கட்டடம் கட்டும் முன்பு மனையைச் சுத்தப்படுத்தாமல் கட்டடத்திற்கான  கால்கோள்வதில்லை.

3. {மகாத்மாவை  கடந்துதான் பரமாத்மாவை அடைய/அறிய முடியும் என்றால்  சீதையின் தந்தை ஜனகரை பற்றி விளக்கவும்}.
- ஜனகரைப்பற்றிய தங்கள் கருத்து என்னவோ – அவர் ஒரு மகாத்மா. அதாவது புத்தியால் தர்ம –அதர்ம நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தாலும்  இராஜஸ குணவான்; புலன்களை நெறிப்படுத்தி உலகப் பற்றுக்களை விலக்கியவர் – இவரது அறிவு மூதறிவு -இவர் ஒரு கதாப்பாத்திரம் –வால்மீகியின் படைப்பு. இராமாயணம் கதை அல்ல- உண்மை என்பது அவரவர் முடிவு. ஒருவருடைய இந்த முடிவில் பிறர் மாற்றுக் கருத்தோடு தலையிடுதல் அறியாமை.

சம்சாரம்   என்பது உலக சுகபோகங்களில் பற்று வைத்துப் பாவ புண்ணிய விளைவுகளோடு கூடிய செயல்களில் ஈடுபட்டு வாழ்தல்.

சம்ஸ்காரம் என்பது பாவ புண்ணியப் பதிவுகளாகும் விதி என்பது.

ஜீவாத்மா ஆசா பாசங்களுக்கு அடிமை என்பது பொருத்தமானதாகாது.  அது ஆசாபாசங்களின் அரசன். சுகத்தை அனுபவிக்கவே பிறவி எடுத்து அதற்காகவே துடித்து, முடிவில் பல சமயங்களில் தன் வினையாலேயே துக்கத்தையும் தவிர்க்க இயலாமல் ஏற்றுத் தவிக்கும் ஒரு மாயையில் வாழ்பவன்.

சமாதி என்பது, “இருந்தும் இல்லாமலும் , சேர்ந்தும் ஆனால் ஒட்டாமலும்” இருக்கும் நிலை அல்ல. அது  
மெய்ஞ்ஞானமாகிய ஒளி – அஞ்ஞானமக்கிய இருள் ஆகிய இரண்டையும் கடந்த , “சும்மா இருக்கும் சுகம்” . அதிலும் பீஜ சமாதி- நிர்பீஜ சமாதி என்ற இரு நிலைகள் உள்ளன. இதனை முறையே சம்ப்ரக்ஞாத சமாதி- அசம்ப்ரக்ஞாத சமாதி என்றும் சொல்வதுண்டு.

இனி,

1.ஜீவாத்மா – மனத்தால் வாழும் மனிதன் –  தாமஸ குணவான்; சுகதுக்கங்களில் வாழ்பவன்- இவனது அறிவு சிற்றறிவு.

2. (1) மகாத்மா -  புத்தியால் வாழும் புத்தன் – இராஜஸ குணவான்; தர்ம-அதர்மத்தைக் கைக் கொண்டு நியாயமான உலகப் பற்றுக்களில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்பவன் – இவனது அறிவு பேரறிவு.

2. (2) மகாத்மா எனப்படும் ஞானி – இவனும் புத்தியால் தர்ம –அதர்ம நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தாலும்  இராஜஸ குணவான்; புலன்களை நெறிப்படுத்தி உலகப் பற்றுக்களை விலக்கியவன் – இவனது அறிவு மூதறிவு.

3.பரமாத்மா  எனப்படும் யோகி – இவன் சத்வ குணவான்; ஒவ்வொரு செயலிலும் சுக-துக்கங்கள், தர்ம-அதர்மங்களைக் கடந்து பாவ-புண்ணியங்களையே காண்பவன்; இவனைச் சித்தன் என்றும் சொல்வதுண்டு. இவன் மனத்தை மனத்தால் வென்று , புலன்களைக் கடந்து வாழும் பேரருளாளன்- இவனது அறிவு  வாலறிவு. இவன் உலகில் வாழும் காலத்தில் ஜீவன் முக்தி அடைந்த ஜீவன்முக்தன்; வாழ்விற்குப் பிறகு இவனே விதேக முக்தன். இவன் உலகில் மீண்டும் பிறப்பதில்லை - மீண்டும் பிறப்பதில்லை- மீண்டும் பிறப்பதில்லை.

நன்றி , வணக்கம்.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by சிவனாசான் on Thu Sep 22, 2016 8:29 pm

நாட்டில் நடக்கும் மனசாட்சிக்கு பயப்படாமல் செய்யப்படும் மாக்களின் செயல்பாட்டை பார்க்காமல் மறைவில் ஒளிந்துக்கொண்டு உள்ளார் அன்பரே>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3881
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by Ramalingam K on Thu Sep 22, 2016 9:01 pm

ஐயா !

விதைக்கப்படும் பாவ மற்றும் அதர்ம விதைகள், விளைந்து அறுவடைக்கு வரும்போது பரம்பொருள் வெளிப்படுவதை தற்போது விதைப்பவர்கள்  பட்டவர்த்தனமாக அறிவார்கள் அல்லவா !
கால நேரம் கூடும்போது காரியங்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம்.

விதை :
1. பாவம் ஆகுமானால்  > துயரம் பன்மடங்காக.
2. புண்ணியம் ஆகுமானால் > சுகம் பன்மடங்காக

இராவணனின் விதை 10 மாதங்களில் அறுவடையானது.
துரியோதனின் விதை முதிர 13 ஆண்டுகள் ஆகின.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை