உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

. திருமந்திரம் என்னும் தேன்

request . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Fri Sep 16, 2016 4:08 pm

First topic message reminder :

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்)

ஓர் அறிமுகம்:

திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, “தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்” என்னும்  ஈகரை தமிழ் களஞ்சியப் பதிவு.  

திருமந்திரம் – ஒரு யோகமும் ஞானமும் நவிலும் நற்றமிழ் காவியம் என்பதே நமது நோக்கம். இந்நோக்கம் சைவ பக்திக்கு   மாறானதோ   அல்லது எதிரானதோ அல்ல. திருமந்திரம் பக்தி மார்க்கத்தைக் கூறுவது என்பது ஒருவழி – அதுவே ஞானமும் யோகமும் ஆகிறது என்பது  நமது இன்னுமொரு பார்வைப் பரிமாணமாகும்  பிறிதொரு வழி என்றே கொள்ளவேண்டும். இதனை நவில்தொரும் நூல் நயம் என்றும் கொள்ளலாம். தோண்டச் சுரக்கும் மணற்கேணிதான் நம் உலகப் பொதுமறை திருமந்திரம்- தமிழ்மறை
திருக்குறள் போலவே.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரம் உபநிஷதங்கள் எனப்படும் வேதாந்தம். உபநிஷத்களின் சாரம் பிரம்ம சூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரம்( வியாசர் அருளியது) . பிரம்ம சூத்திரத்தின் சாரம் ஸ்ரீமத் பகவத் கீதை ( இதுவும் வியாசர் அருளியது) . பகவத் கீதையின் சாரம்தான் திருமந்திரம் என்னும் தேன் என்பது யோகியர் வாக்கு. இது மானுடத்திற்கு ஞானமும் யோகமும் புகட்டி மேன்மைப் படுத்தும் ஓர் அற்புதம்.


சைவ சமயத்திற்குத் திருமந்திரம் பக்தி நூலாக இருந்து சைவபக்தியை ஊட்டி வளர்க்கட்டும். கூடவே உலக மக்கள் யாவருக்கும் - ஜாதி, மதம், மொழி, இனம், நாடு மற்றும் கலாச்சரம் ஆகியனவற்றை எல்லாம் கடந்த -  அவரவர் உடம்பு, உயிர், மனம் மற்றும் ஆன்மாவை மேம்படுத்தும் யோக நூலாகவும் இருக்கட்டுமே. உலக மக்கள் யாவருக்கும் பயனளிப்பது நன்மை தானே!

உலக மானுடம் யாவையும் பிறப்பு, இறப்பு, உடம்பு, உயிர், மனம் ஆகிய ஐந்தாலும் ஒன்று படுகின்றது. அதுவே நாடு, மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய ஐந்தாலும் வேறுபட்டு வீணாகிறது. நாம் இந்த பதிவின் மூலம்  ஒன்றுபடும் ஐந்தையும் அறிந்துகொண்டு, அவற்றை மேன்மைப்படுத்தும் நெறியையும் திருமந்திரத்தில் கிடைக்கக் கண்டு , அவற்றை முயன்றுப் பயின்று - பழகி மேன்மையை  அடைவோம். அதன்  விளைவாக “வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பிறகும் இன்பம்” பெறுவோம்.

மானுட உலகம் , ஒற்றுமை நீங்கி தாழ்ச்சியை அடையாமல், திருமந்திரம் புகட்டும் மானுட ஞானத்தால்- யோகத்தால், யாவரும்  ஒன்றுபடுவோம் – உயர்வடைவோம். ஆத்மஞானம் அறிந்து அனைவரும் அமரனாக ஆகுவோம்.


பரம்பொருளே ! உலக மானுடத்தை:

“ அழிவிலிருந்து அழியாமைக்கு அழைத்துச் செல் . . .

அஞ்ஞானமாகிய இருளில் இருந்து அறிவுடைமை என்னும் ஒளியைநோக்கி அழைத்துச் செல் . . .

மாயை என்னும்   மயக்கத்திலிருந்து  உண்மை  என்னும்     தெளிவிற்கு அழைத்துச் செல்  . . .”
- சாந்தோக்கிய உபநிஷத் .
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down


request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Wed Oct 05, 2016 7:39 pm


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – இயமம் – திருமந்திரம் 553.

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே"

பதப்பொருள் :

எழுதல் – மிகுதல்.
நீர் – மழைநீர்; வெள்ளம்> பிரளயம்> அழிவு.
பெய்தல் – பொழிதல்.
எட்டு திசை - எல்லாதிசைகளிலும்.
கொழுந்தன் – அன்புமிக்கவன்; அளியன்.
பவளம் – செம்மை ; சூரியன்.
குளிர் – குளுமை; சந்திரன்.
சடை – கடவுள்.
அழுத்துதல் – சேர்ந்திருத்தல்.
நால்வர் - நந்தியடிகளின் சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகமாமுனி , திருமூலர் ஆகியோர்.

அடிதோறும் பொருளுரை:

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
- எல்லாப் பக்கங்களிலும் இருந்தும் அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

செழுந்தண் நியமங்கள் செய்மிந் என்று அண்ணல்
- நன்மைதரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவர்;

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
- மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொடுப்பவரும் பரம்பொருளே ஆகுபவருமானவருடன்;

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே
- சேர்ந்து இருந்து ஞானபோதனையைக் கற்ற சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.

தெளிவுரை:

எல்லாப் பக்கங்களிலும் இருந்து பல்வகையான இன்னல்களுடன் கூடிய அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

நன்மையைத் தரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவராகிய நந்தியடிகள்;

அனைவரிடமும் மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொண்டவரும் பரம்பொருளேஆகுபவராகும் அவர் தன்னுடன்;

சேர்ந்து இருந்த சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.

விளக்கவுரை :

எத்துணை இடர் வரினும் இராஜயோகம் என்னும் ஆத்ம வித்யா தொடர்ந்து பழகப்பட வேண்டிய ஓர் அற்புத ஞானம் என்று குருதேவராகிய நந்தியடிகள் அவரது மலரடி பணிந்து எந்நாளும் உடனேயே இருந்து ஞானம் பயின்ற சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகமாமுனி , திருமூலர் ஆகிய நால்வருக்கும் தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார் என்பது பொருள்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Thu Oct 06, 2016 9:26 am

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – சிவவேடம் – திருமந்திரம் 552

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே

பதப்பொருள் :

1.இயமம்- தீயன மனத்தால் சிந்தியாமை;

2.நியமம் – தீயன சொல்லாலும், செயலாலும் செய்யாமை;

3.ஆதனம் > ஆசனம் – உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் (இருப்பில்) குறிப்பிட்ட நேரம் வைத்திருத்தல்;

4,பிராணாயாமம்- சுவாசங்களை உள்ளிழுத்தல், வெளித்தள்ளுதல், உள்ளும் புறமும் நிறுத்திவைத்தலின் நெறிமுறை;

5.பிரத்தியாகரம் – ஏதாவது ஓர் உருவப் பொருளின் மீது மனதை நிலைநிறுத்த முயற்சித்தல்;

6.தாரணை - அதே பொருளை மட்டுமே மனதில் 12 நொடிப்பொழுது நிறுத்தி நிலைபெறச்செய்தல்;

7.தியானம் – தாரணைக்காலத்தில் மனதில் நிறுத்திய அதே பொருளை 12 தாரணைக்காலம்  தொடர்ந்து
மனதில்   நிலைக்கவைத்தல் (அதாவது   12 x 12  நொடிகள் = 2 நிமிடம், 24 நொடி நேரம்)

8.சமாதி – தியான காலத்தில் மனதில் நிறுத்திய அதே பொருளை 12 தியான காலம்  தொடர்ந்து மனதில்
  நிலைக்கவைத்தல் (அதாவது   12 x 12 x 12 நொடிகள் =  28நிமிடம், 48நொடி நேரம்)

நயம் - இன்பம்; மேன்மை; போற்றுகை;   நற்பயன்.
சயம் – வெற்றி.
அயம் – நல்வினை.
அட்டாங்கம் – எட்டுநிலைக் கல்வி, இராஜயோகக் கல்வி

அடிதோறும் பொருளுரை :

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
- இயம நியமம் என்னும் அடிபடை ஒழுகலாறுகளோடு கணக்கில் அடங்காத ஆசனநிலைகள்;

நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
- நன்மையைத் தரக்கூடிய  பிராணாயாமம், பிரத்தியாகாரம் போன்றவைகள்;

சயமிகு தாரணை தியானஞ் சமாதி
- ஆத்ம முன்னேற்றத்தில் வெற்றியைத் தரக்கூடிய  தாரணை, தியானம், மற்றும் சமாதி சாதகம்  ஆகையவைகள் கூடிய எட்டு நிலைகளும்

அயமுறும் அட்டாங்க மாவது மாமே
- நற்செய்கை என்னும் அஷ்டாங்க யோகம்  எனப்படுவன.

தெளிவுரை :

இயமம் நியமம் என்னும் அடிபடை ஒழுகலாறுகளோடு கணக்கில் அடங்காத ஆசனநிலைகள்;
நன்மையைத் தரக்கூடிய  பிராணாயாமம், பிரத்தியாகாரம் போன்றவைகள்;
ஆத்மமுன்னேற்றத்தில் வெற்றியைத் தரக்கூடிய  தாரணை, தியானம், மற்றும் சமாதி சாதகம்  ஆகையவைகள் கூடிய எட்டு நிலைகளும் நற்செய்கை என்னும் அஷ்டாங்க யோகம்  எனப்படுவன.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Mon Oct 10, 2016 7:05 am

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – இயமம் – திருமந்திரம் 553.

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே"

பதப்பொருள் :
எழுதல் – மிகுதல்.
நீர் – மழைநீர்; வெள்ளம்> பிரளயம்> அழிவு.
பெய்தல் – பொழிதல்.
எட்டு திசை - எல்லாதிசைகளிலும்.
கொழுந்தன் – அன்புமிக்கவன்; அளியன்.
பவளம் – செம்மை ; சூரியன்.
குளிர் – குளுமை; சந்திரன்.
சடை – கடவுள்.
அழுத்துதல் – சேர்ந்திருத்தல்.
நால்வர் - நந்தியடிகளின் சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகமாமுனி , திருமூலர் ஆகியோர்.

அடிதோறும் பொருளுரை:

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
- எல்லாப் பக்கங்களிலும் இருந்தும் அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

செழுந்தண் நியமங்கள் செய்மிந் என்று அண்ணல்
- நன்மைதரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவர்;

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
- மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொடுப்பவரும் பரம்பொருளே ஆகுபவருமானவருடன்;

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே
- சேர்ந்து இருந்து ஞானபோதனையைக் கற்ற சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.

தெளிவுரை:

எல்லாப் பக்கங்களிலும் இருந்து பல்வகையான இன்னல்களுடன் கூடிய அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

நன்மையைத் தரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவராகிய நந்தியடிகள்;

அனைவரிடமும் மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொண்டவரும் பரம்பொருளேஆகுபவராகும் அவர் தன்னுடன்;
சேர்ந்து இருந்த சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Fri Oct 14, 2016 5:40 pm

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 716.

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே

பதப்பொருள் :

இருத்தல் – உயிர்வாழ்தல்.
காலம் -வாழ்நாள்
ஏதும் - எதுவும் .
அறிதல் –உணர்தல்; தெரிதல்.
பெருக்கல் –விரிவாக்கல்; மிகுதியாக்கல்.
பெருமை –மட்சிமை; அருமை; வல்லமை; பெருமை; மிகுதி
ஒருத்தல் –அழித்தல்.
வாயு – சுவாசக் காற்று.
நிற்றல்- நிலைத்திருத்தல்; பின்பற்றுதல்; ஒழுகுதல்.
தருக்கு – வலிமை; களிப்பு.
ஒன்றுதல்- சார்ந்திருத்தல்.
சாதகன் – பயிலுவோன்.

அடிதோறும் பொருளுரை :

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
- அஞ்ஞானிகளாகிய மனிதர்கள் தாம் இவ்வுலகில் உயிர்வாழும் காலத்தில் தம் ஆத்ம முன்னேற்றத்திற்கான வழிவகைகள் எதனையும் அறிந்து தெரிந்து கொள்ள மாட்டார்கள்.

பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
- வாழ்நாளை அதிகரித்து நீட்டித்துக் கொள்ளும் உயர்வான வழியையே மனதில் குறிக்கோளாகக் கொண்டு ;
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
- வாழ்நாளைக் குறைக்கச் செய்யும் சுவாசங்களைப் பிராணாயாம சாதகத்தால் சிறப்புறும் வகையில் வளர்த்துப் பிரகாசிக்கச் செய்தலால்;

தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே
- வாழ்நாளைக் கூட்டுவதற்கான வல்லமையும் அதனால் விளையும் மகிழ்ச்சியையும் அந்த பிராணாயாம சாதகன் பெற்று நீடித்த ஆயுளில் நிலைபெறுகிறான்.

தெளிவுரை:

அஞ்ஞானிகளாகிய மனிதர்கள், தாம் இவ்வுலகில் உயிர்வாழும் காலத்தில் தம் ஆத்ம முன்னேற்றத்திற்கான வழிவகைகள் எதனையும் அறிந்து தெரிந்து கொள்ள மாட்டார்கள். வாழ்நாளை அதிகரித்து நீட்டித்துக் கொள்ளும் உயர்வான வழியையே மனதில் குறிக்கோளாகக் கொண்டு , வாழ்நாளைக் குறைக்கச் செய்யும் சுவாசங்களைப் பிராணாயாம சாதகத்தால் சிறப்புறும் வகையில் வளர்த்துப் பிரகாசிக்கச் செய்தலால், வாழ்நாளைக் கூட்டுவதற்கான வல்லமையும் அதனால் விளையும் மகிழ்ச்சியையும் அந்த பிராணாயாம சாதகன் பெற்று நீடித்த ஆயுளில் நிலைபெறுகிறான்.

விளக்கவுரை:

மானுட வாழ்வில் இயல்பாக நடைபெறும் சுவாசங்களால் மானுட வழ்நாள் குறையும் தன்மைக்கு உட்படுகிறது. ஆனால் முறையான பிராணாயாம சாதகத்தால், அந்த பிராணாயாம சாதகன் நீட்டித்த ஆயுளைப் பெறுகிறான் என்பது கருத்து.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Tue Oct 18, 2016 8:06 am


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 712.

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்கலு மாமே.


பதப்பொருள் :

காதல் – அன்பு;பக்தி; ஆசை; விருப்பம்.
வழி – நெறி; ஒழுக்கம்;முறைமை; கழுவாய்.
கண்-அறிவு; ஆன்மா.
நுதல் – நெற்றி; தலை;மேலிடம்.
அண்ணல் –பெருமை; பெருமையுடையவர்; குரு; பரம்பொருள்.
உற –கிடைக்க; கிட்ட.
நோக்குதல் –அருளுதல்; பாதுகாத்தல்.
கங்கை – பற்று; ஆசை.
தருதல் –கொடுத்தல்; கொடை.
காத்தல் –பாதுகாத்தல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.
ஆமே – ஆகுமே.

அடிதோறும் பொருளுரை:

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலை
- ஆத்ம வித்யா என்னும் அமரவித்தையின்பால் விருப்பம் ஏற்படும் வகையில் அடியனுக்கு அருள்செய்து அதன் விளைவாய் ஆத்மனை அடையாளம் காண்பித்த மேன்மைமிகு ஸ்ரீ குருதேவரை;
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
- அவர்பால் பக்தி செலுத்தி மெய்யறிவால் மிகக்கவனமுடனும் பொறுப்புடனும் வணங்கி வழிபட்டால்;
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
- ஸ்ரீகுருதேவரும் அத்தகைய தம் சீடன்பால் தனக்கு ஏற்படும் அன்புப் பெருக்கால் அவனது உலகப் பொருட்களின்மீது உண்டாகும் ஆசைக்குக் கழுவாயாகி, ஆசைகளை வற்றவைப்பார்.
காதல் வழிசெய்து காக்கலு மாமே
- அதற்கு மேலும் தன் சீடன்பால் மிகு அன்புகொண்டு அவனைப் பிறவித் துயர்களில் இருந்து காப்பாற்றி அவரே ஆன்ம முக்தி தந்து அருள்பவருமாகிறார்.


தெளிவுரை :

ஆத்ம வித்யா என்னும் அமரவித்தையின்பால் விருப்பம் ஏற்படும் வகையில் அடியனுக்கு அருள்செய்து அதன் விளைவாய் ஆத்மனை அடையாளம் காண்பித்த மேன்மைமிகு ஸ்ரீ குருதேவரை,
அவர்பால் பக்தி செலுத்தி மெய்யறிவால் மிகக்கவனமுடனும் பொறுப்புடனும் வணங்கி வழிபட்டால், ஸ்ரீகுருதேவரும் அத்தகைய தம் சீடன்பால் தனக்கு ஏற்படும் அன்புப் பெருக்கால் அவனது உலகப் பொருட்களின்மீது உண்டாகும் ஆசைக்கு கழுவாயாகி ஆசைகளை வற்றவைப்பார். அதற்கு மேலும் தன் சீடன்பால் மிகு அன்புகொண்டு அவனைப் பிறவிதுயர்களில் இருந்து காப்பாற்றி அவரே ஆன்ம முக்தி தந்து அருள்பவருமாகிறார்.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Wed Oct 19, 2016 8:00 pm


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – சந்திரயோகம் - திருமந்திரம் – 856

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே

பதப்பொருள் :

தரணி – பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் நிலம்; பூமி.
சலம் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் நீர்.
கனல் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் நெருப்பு.
கால் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் காற்று.
தக்க வானம் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகத் தகுதி பொருந்திய ஆகாயம்.
அரணம் – பாதுகாப்பு.
பானு – சூரியன்.
அருந்திங்கள் – நன்மை அளிக்கும் சந்திரன்.
அங்கி –நெருப்பிற்கு அணியாகும் வெப்பம்
முரணுதல் – அதிக அளவில் பெருகிக் காணப்படுதல்.
தாரகை – நட்சத்திரங்கள்.
முன்னுதல் –முற்படுதல் .
ஒன்பான் – ஒன்பதும்.
பிரணவம் –சுத்த மாயை எனப்படும் பரம்பொருள்.
பெருநெறி - பெருமை மிக்க நன்மை பயத்தல்.

அடிதொறும் பொருளுரை:

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்கள்.

அரணிய பானு அருந்திங்கள்
- உலக உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சூரியன், நன்மை அளிக்கும் சந்திரன்,
முரணிய தாரகை அங்கி முன்னிய ஒன்பான்

- எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் மற்றும் இவை அனைத்தையும் முதலாகக் கொண்டு உண்டாகும் வெப்பம் ஆகியன.

பிரணவ மாகும் பெருநெறி தானே
- பெருமை மிக்க நன்மை பயக்கும் சுத்த மாயை எனப்படும் பரம்பொருள்.

தெளிவுரை

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்கள், உலக உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சூரியன், நன்மை அளிக்கும் சந்திரன், எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் மற்றும் இவை அனைத்தையும் முதலாகக் கொண்டு உண்டாகும் வெப்பம் ஆகியன அனைத்தும் கூடியதே பெருமை மிக்க நன்மை பயக்கும் சுத்த மாயை எனப்படும் பரம்பொருளின் தன்மைகளாவன.

விளக்கவுரை :

ஓம் என்னும் ஒரெழுத்தொரு மொழியைப் பிரணவம் என்பர் ஆன்றோர். அது ஓர் ஆதார ஒலி - சப்தம். இந்த ஒலி பிரபஞ்சத்தில் இயங்கும் அனைத்து வகையான கோள்களின் இயக்கத்தால் உண்டாவது. பிரபஞ்சம் தோன்றிய காலம் முதற்கொண்டே இவ்வொலி மாறாமல் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. இந்த ஒலியானது தோற்றம், மாற்றம் , முடிவு ஆகிய அசத் தன்மையை எப்போதும் ஏற்பதில்லை.

பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளுக்கும் தோற்றம், மாற்றம், மற்றும் முடிவு என்பதில்லை. ஆகவே இந்த ஓம் என்னும் ஒலியைப் பரம்பொருள் என்றனர். இந்த ஒலிக்கு உருவம் இல்லாததால் இதுவே பரம்பொருளின் அருவநிலை எனவும் கொள்ளப்படுகிறது.

உருவாயும், அருவாயும் இருப்பதுதானே பரம்பொருள் . ஒலியாய் அருவமாக விளங்கும் பரம்பொருள், பஞ்சபூதங்களாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் அவைதரும் வெப்பம் ஆகிய உருவங்களை ஏற்று கண்களுக்குக் காட்சியாவதாக இத்திருமந்திரம் பேசுகிறது.

சமணம் போன்ற சமயங்கள் ஆகாயத்தை ஒரு பூதமாகக் கொள்வதில்லை. ஆகையால், ‘தக்க வானம்’ - அதாவது பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கருதப்பட அனைத்துத் தகுதிகளும் உடைய வானம் என்று அழுத்தம் கொடுத்துக் கூறுகிறார்.

அரணிய பானு, அருந்திங்கள் என்பன உலக உயிர்களுக்கு நாள் முழுமைக்கும் ஒளியைத் தருவதால் அரணுதல், அருமை போன்ற பெயர் உரிச்சொற்கள் அவைகளை அலங்கரிக்கக் கையாளப்பட்டுள்ளன.
பிரணவம் என்பது ‘உயர்வான ஒன்பது’ எனவும் மற்றும் ‘உயர்வாகும் என்றும் மாறாத புதுமை’ எனவும் கூட பொருள் கொள்ளத்தகும்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Namasivayam Mu on Fri Oct 21, 2016 9:47 am

[You must be registered and logged in to see this link.] wrote:தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .

ஏழாம் தந்திரம் – இதோபதேசம் (ஹித உபதேசம்)- திருமந்திரம்-2104.
         
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே   -    


பதப்பொருள் :

ஒன்று –ஒப்பற்றது; தனித்தன்மை வய்ந்தது
குலம் -  சாதி ;  இனம்> மானுட இனம்.
தேவன் - வழிநடத்துபவன் ;
நன்று   வாழ்வின்நோக்கம்; துறக்கம் > அவாவின்மை
நமன் - யமன் > இறப்பு > மயக்கம்.
நாணம் - வெட்கம் >அறிவு.
ஆமே – ஆகுமே.
கதி -  போக்கு>   வழி >  சாதனம்> புகலிடம்.
சித்தம் -மனம் ; முடிவான மனக்கொள்கை ; திண்ணம் ;  
நிற்றல் – நிற்கை
நிலை -  உறுதி ; பூமி ;
உய்தல் – உயிர்வாழ்தல்; ஈடேறுதல்;.

பதவுரை :

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
- மனித குலம் ஒப்பற்ற உயர்வானது;  அதனை  வழிநடத்துபவர்  ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார்.

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
- வாழ்வின் நோக்கமாக  பேராசை இல்லாமையை நினைவில் கொள்ளுங்கள்; அவ்வாறாகில் வாழ்வில் அறியாமையாகிய  உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கம் ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவாகும் .

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
- அத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே!

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
- தான் இந்த உடம்பு என்பதல்ல  , ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும்   பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்ற கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று பழகி  உயிர்வாழ்ந்துகொண்டு  ஈடேற்றம் பெறுங்கள்.

தெளிவுரை:
மனித குலம் ஒப்பற்ற உயர்வானது. அதனை  வழிநடத்துபவர்  ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார்.  வாழ்வின் நோக்கமாக  பேராசையைத் தவிர்க்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவ்வாறாகில், வாழ்வில்  உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கமாகிய அறியாமை உங்களுக்கு  ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவு என்பதாகும் .

அத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து அவர் போதிக்கும் ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே!

தான் இந்த உடம்பு என்பதல்ல என்றும், ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும்   பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்னும்  கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று,அதனை அனுதினமும்  பழகி  உயிர்வாழ்ந்துகொண்டு   ஆன்மவிடுதலையாகிய ஈடேற்றம் எனப்படும் மீண்டும்பிறவா நிலையைப் பெறுங்கள்.

விளக்கவுரை:

வாழ்வில் பேராசையைத் தவிர்த்து, ஸ்ரீகுருதேவரைப் புகலிடமாகக் கொண்டு, அவர் கற்பிக்கும் ஆத்மவித்யா எனப்படும் உடம்பு, உயிர், மனம் ஆகியனவற்றை மேன்மைப்படுத்தி, மீண்டும் பிறவாமை என்னும் அமரநிலையை ஒப்பற்றதாகிய மனித குலம் அடையவேண்டும் என்பது திருமூலரின் கருத்து.
யோகசனங்களால் நோயற்ற ஆரோக்கியமான நிலையான உடல் நலமும்;
பிராணாயாமங்களால் நீடித்த  ஆயுளும் (உயிர் வளமும்);
தியான சாதகத்தால் நிறைவான மனதின் நிம்மதியையும்;
கொடுக்க வல்லது இராஜயோகம் என்னும் ஆத்ம வித்யாவே. இந்த அமர ஞானத்தை ஸ்ரீகுருதேவரிடம் ஒவ்வொரு மனிதனும் பயின்று பழகி வாழ்வில் மேன்மை அடையவேண்டும் என்பது பொருள்.
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Thu Oct 27, 2016 10:53 am

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – பிராணாயாமம் – திருமந்திரம் 569.

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே

பதப்பொருள் :

வளி- சுவாசக் காற்று.
வாங்குதல் – உள்ளிழுத்தல்.
வயம் – விரும்புதல்.
அடக்குதல் – நிறுத்துதல்.
பளிங்கு – பளபளப்பாக இருத்தல்.
காயம் – உடம்பு.
பழுத்தல் – வயது முதிர்தல்.
பிஞ்சு – இளமை.
வேட்டல் –விரும்புதல்

அடிதோறும் பொருளுரை :

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
- சுவாசக்காற்றை நன்கு உள்ளிழுத்து விரும்பும் அளவிற்கு உள்நிறுத்தினால்;

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
- அழகிய பளிங்கு போன்ற உடம்பு வயது முதிர்ச்சியானாலும் இளமையாகவே தோற்றம் அளிக்கும்;

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
- மேலும் ஸ்ரீகுருதேவரிடம் ஆத்ம ஞானம் என்னும் மெய்ஞ்ஞானக் கல்வியை அவரது திருவருளோடு கற்பிக்கப்பெற்றால்;

வளியினும் வேட்டு வளியனு மாமே
- காற்றைப்போல் உடம்பும் மனமும் இலேசாகி எங்கும் எளிதில் சென்று திரும்பலாம்.

தெளிவுரை:

சுவாசக்காற்றை நன்கு உள்ளிழுத்து விரும்பும் அளவிற்கு உள்நிறுத்தினால்,
அழகிய பளிங்கு போன்ற உடம்பு, வயது முதிர்ச்சியானாலும் இளமையாகவே தோற்றம் அளிக்கும்.மேலும் ஸ்ரீகுருதேவரிடம் ஆத்ம ஞானம் என்னும் மெய்ஞ்ஞானக் கல்வியை அவரது திருவருளோடு கற்பிக்கவும் பெற்றால், காற்றைப்போல் உடம்பும் மனமும் இலேசாகி எங்கும் எளிதில் சென்று திரும்பலாம்.

விளக்கவுரை :

முறையான பிராணாயாமமும், ஆத்மஞானமும் ஸ்ரீகுருதேவரின் அருளால் கற்பிக்கப்பெற்றால் வயது முதிர்ந்தபோதும், இளமை மாறாத உடல் அழகோடும் சுறு சுறுப்போடும், இன்மையாக வாழலாம். சோர்வின்றி எங்கும் சுலபமாகச் சென்று வரலாம். தியானம் மற்றும் சமாதி சாதகத்தில் மனத்தால் பிரபஞ்சம் முழுவதும் சென்று திரும்பலாம் என்பதும் கருத்து.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Ramalingam K on Fri Oct 28, 2016 4:59 am


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – பிராணாயாமம் – திருமந்திரம் 570.

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே

பதப்பொருள் :

பூரி – பூரகம்(பிராணாயாமம்) செய்.
ஆக்கை-உடம்பு
சங்கு - மலை
குறித்தல் – பாவித்தல்; செயல்படுத்துதல்
தலைவன் – சிறந்தவன்; உயர்ந்தவன்.

அடிதோறும் பொருளுரை :
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
- காலந்தவறாமல், எந்த இடத்தில் இருந்தாலும் பிரணாயாமத்தைத் தவறாமல் பழகு.

அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
- அவ்வாறு இடம் முதலியனவற்றைப் பொருட்படுத்தாமல் பிராணாயாமம் குறித்த காலத்தில் தினமும் பழகப்படுமானால், நீண்ட ஆயுளைப் பெற்று வாழலாம்.

அங்கே பிடித்தது விட்டளவும் செல்லச்
- அத்தகைய பிராணாயாம சாதகத்தின்போது சுவாசத்தை உள்ளிழுத்தல் மற்றும்
வெளிவிடுதல் ஆகியன காலகதியுடன் மாறுபடாமல் பழகப்படுமானால்;

சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே
- மலையைப்போல் நிலைத்து மேலான சிறப்பையுடைய உயர்ந்தவனாகலாம்.


தெளிவுரை:

உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் காலந்தவறாமல், பிரணாயாமத்தைப் பழகவேண்டும்.
அவ்வாறு இடம் முதலியனவற்றைப் பொருட்படுத்தாமல் குறித்த காலத்தில் தினமும் பிராணாயாமம் பழகப்படுமானால், நீண்ட ஆயுளைப் பெற்று வாழலாம். அத்தகைய பிராணாயாம சாதகத்தின்போது சுவாசத்தை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல் ஆகியன சரியான காலகதியுடன் மாறுபடாமல் பழகப்படுமானல், மலையைப்போல் நிலைத்து மேலான சிறப்பையுடைய உயர்ந்தவனாகலாம்.


விளக்கவுரை :

காலந்தவறாதப் பிராணாயாம சாதகத்தால், மேன்மை அடையலாம் என்பது கருத்து.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: . திருமந்திரம் என்னும் தேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை