உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

request அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Thu Sep 15, 2016 4:41 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

 “தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
                                      ஆத்திச்சூடி
                           (ஔவையார் அருளியது)


01. அறஞ் செய விரும்பு.


பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.

தெளிவுரை -
  கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down


request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Wed Oct 05, 2016 5:55 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

19. இணக்கமறிந் திணங்கு.

பதப்பொருள்:

இணக்கம் – பொருத்தம்; உடன்பாடு.
அறிதல் - உறுதிசெய்தல்.
இணங்குதல் – சம்மதித்தல்; ஏற்றதாதல்

தெளிவுரை:

1. எவர் ஒருவரிடமும் நட்பு மற்றும் உறவு கொண்டாட விரும்பினால் அவருடைய செயல்பாடுகள் மற்றும் குணநலன்களோடு தம்முடைய செய்கைகளும் குணநலன்களும் உடன்பட்டு ஒத்துப்போகக் கூடியனவா என்பதை முதலில் உறுதி செய்துகொண்டு பின்புதான் அவர் நட்பு கொள்ள ஏற்றவராகில் அவருடன் நட்பு கொள்ளவேண்டும்.

2. தாம் ஆற்றவேண்டிய எந்த ஒரு செயலாக்கமும் தம்முடைய அறநெறியிலாகும் ஒழுகலாறுகளுக்கு மாறாது உடன்படுவதாகிறதா என்று உறுதி செய்துகொண்ட பின்பே அச்செயலைச் செய்தல் வேண்டும்.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Thu Oct 06, 2016 9:04 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

20. தந்தைதாய்ப் பேண்.

பதப்பொருள்:

தந்தை - தன் பிறவிக்குக் காரணமான தகப்பனார், தம்முன் பிறந்த தமையன் (அண்ணன்), நாட்டின் அரசன், கல்வி கற்பிக்கும் ஆசான் மற்றும் கல்விகற்க வழிகாட்டியவர் ஆகிய ஐவரும் ஐங்குரவர் எனப்படும் தந்தையர் ஆவர். மற்றும் உயிரோடு வாழ்ந்து வரும் அன்னவர்களின் மூதாதையர்களும் தந்தை எனப்படுகின்றனர்.
தாய் - தன்னைப் பெற்றெடுத்தத் தாய், தன் மனைவியின் தாயார், நாட்டின் அரசி, குருவின் மனைவி , தன் அண்ணனின் மனைவி(அண்ணி) ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தாயாராவர்.
பேணுதல் – மதித்தல்; போற்றுதல்

தெளிவுரை:

தகப்பனாகும் ஐவரையும், தாயாராகும் ஐவரையும் மதித்து நடக்கவேண்டும்.
[ஐங்குரவர் எனப்படும் தன் பிறவிக்குக் காரணமான தகப்பனார், தம்முன் பிறந்த தமையன் (அண்ணன்), நாட்டின் அரசன், கல்வி கற்பிக்கும் ஆசான் மற்றும் கல்விகற்க வழிகாட்டியவர் ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தந்தையாகிறார்கள். மற்றும் உயிரோடு வாழ்ந்து வரும் அன்னவர்களின் மூதாதையர்களும் தந்தைக்கு ஒப்பானவர்கள்.

தன்னைப் பெற்றெடுத்தத் தாய், தன் மனைவியின் தாயார், நாட்டின் அரசி, குருவின் மனைவி மற்றும் தன் அண்ணனின் மனைவி ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தாயாகிறார்கள்].
ஆக தகப்பனாகும் ஐவரையும், தாயாராகும் ஐவரையும் மதித்து நடக்கவேண்டும் என்பது கருத்து.

தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்
பன்னி அரசன் பயில் தேவி-தன் மனையைப்
பெற்றாள் இவரைவர் பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Fri Oct 07, 2016 7:35 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

21. நன்றி மறவேல்.

பதப்பொருள்:

நன்றி : செய்நன்றி ; நியாய முறை; பழுதற்ற முயற்சி.
மறத்தல்- அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்.

தெளிவுரை:

1. பிறர் தமக்குச் செய்வித்த உதவியை என்றும் நினைவில் வைத்து அவர்களைப் போற்றுதல் வேண்டும்.
2. வாழ்வில் எங்கேயும் எப்போதும் எல்லோரிடமும் நேர்மையுடனும் நியாயமான முறையிலும் நடந்துகொள்ள மறக்கக் கூடாது.
3. வாழ்நாளில் எப்போதும் எங்கேயும் பழுதற்ற உண்மையானதாகிய யாவருக்கும் நன்மைதரும் முயற்சியை மேற்கொள்ள மறக்கக்கூடாது.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sat Oct 08, 2016 8:13 am

#20
Reply with quote
Report post to moderator or admin
Lock post for new reports
request
Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
Post by Ramalingam K on Fri Sep 30, 2016 8:03 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

என்ற தலைப்பில் அன்றாடம் பதப்பொருளோடு கூடிய புதிய சிந்தனைகளுடனான தெளிவுரைப் பதிவுகள் 01.10.2016 முதல் நமது தமிழ் களஞ்சியத்தில் காணவில்லை. இவை எங்கு பறக்கின்றன என்பதும் தெரியவில்லை. இது என்ன மாயம் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sun Oct 09, 2016 3:21 pm

ஆஹா !

கிடைத்துவிட்டன பதிவுகள் மீண்டும்.

தேடித்தந்த தமிழ் களஞ்சிய நிர்வாகக் குழுவிற்கு நன்றி.

இனி பதிவுகளைத் தொடரலாம்.

ஆமாம் அவை எங்கே போயினவோ!

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sun Oct 09, 2016 3:23 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

22. பருவத்தே பயிர்செய்.

பதப்பொருள் :

பருவம் – பயிரிடுதற்குறியகாலம்; பக்குவம்
பயிர் – உபயோகிக்கத்தகும் செடிகள்; உழும் உழவு,
செய்தல் –இயற்றுதல்;அமைத்தல்.

தெளிவுரை:

1. பயிரிடுதற்குரிய காலத்தில் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரத்தக்க செடிவகைகளை விளைவிக்கவேண்டும்.
2. உணவுதானிய மிகு உற்பத்திக்கு நிலத்தை உழும் உழவு, விவசாயம் செய்யப்படும் தானியத்திற்கு ஏற்ற வகையில் பக்குவமாக அமையவேண்டும்.

தெளிவுரை:

கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம்,பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஒவ்வொரு வருடமும் ஆறு பருவங்களாகத் தட்பவெப்ப நிலைக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அந்தந்த காலத்திற்கு ஏற்ற பயிர்ச்செடிகளை விளைவிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் விளைச்சல் நன்றாக அமைந்து மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

விவசாயத்திற்கு மிக முக்கிய அம்சம் நிலத்தை உழுதல். இந்த உழவு, ஒவ்வொரு விளைபயிருக்கும் ஒவ்வொரு வகையாக இருக்கவேண்டும். உழவின் தன்மை விளைபொருள் நன்கு விளைவதற்கு ஏற்றவகையில் இருந்தால் விளைச்சல் நிறைவானதாகி உழவனுக்கு மகிழ்ச்சியைத்தரும் வகையில் பலன் அதிகமாக இருக்கும். இது வெளிப்பொருள்.

அதுபோலவே மனித வாழ்வின் எந்த ஒரு செயலும், அதைத் தொடங்கும் முன் அதற்கான முறையான அடிப்படை ஆயத்த ஏற்பாடுகள் அச்செயலுக்கு ஏற்றதாக அமையவேண்டும் என்பது உட்பொருள்.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Fri Oct 28, 2016 5:12 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

23. மன்றுபறித் துண்ணேல்.

பதப் பொருள்:

மன்று - தரகு (commission)
பறித்தல் - பிடுங்குதல்
உண்ணல் – உண்டு வாழ்தல்

தெளிவுரை:

ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில், அக்காரியம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, தரகை வலியப் பிடுங்கி அத்தகைய வருமானத்தில் உண்டு உயிர் வாழாதே.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sun Oct 30, 2016 7:39 am

பதிவிடும் ஆத்திச்சூடியின் புதிய பொருளாழ்ந்த தெளிவுரைப் பதிவுகள்
தினம் தினம் மாயமாகின்றனவே ! இது என்ன விந்தையோ.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை