ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

View previous topic View next topic Go down

பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 8:31 pm

By என்.எஸ். நாராயணசாமி |

———————————-

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் எழுந்தருளி
அருள்பாலிக்கும் தலமான திருபாண்டிக்கொடுமுடி
ஒரு தலைசிறந்த பரிகாரத் தலம்.

முக்கியமாகப் பிதுர் தோஷம், பிதுர் சாபம் நீக்கி அருளும்
பரிகாரத் தலமாகக் கொடுமுடி விளங்குகிறது. ஜோதிடத்தில்
ஜாதகக் கட்டங்களில் அமைந்துள்ள சில கிரக அமைப்புகளை
வைத்து பிதுர் தோஷம் உள்ளவர்கள் என்று குறிப்பிடுவதுண்டு.

மேலும், தந்தை சொல் கேளாதவர், தந்தையை துன்புறுத்துவர்கள்
பிதுர் தோஷத்துக்கு ஆளாகிறார்கள். பிதுர் தோஷம் நம்மை
மட்டுமின்றி, நம் சந்ததியையும் பாதிக்கும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 8:32 pm

அத்தகைய பாதிப்பு உள்ளவர்கள், இத்தலத்தில் பரிகாரம் செய்து
பலன் பெறலாம். காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம்,
பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம்
ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும்.

காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும்,
மகாவிஷ்ணுவையும் வழிபட பிதுர் தோஷம் நீங்கும். மற்ற பிணிகளும்,
பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும்
நீங்கும். அமாவாசை நாட்களில் காவிரிக் கரையில் பித்ருக்களுக்கு
தர்ப்பணம் செய்ய பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும்.

இறைவன் பெயர் – கொடுமுடிநாதர், மகுடேஸ்வர சுவாமி

இறைவி பெயர் – வடிவுடைநாயகி, பண்மொழிநாயகி

தேவாரம் பாடிய மூவர்களாலும் பதிகம் பெற்ற தலம் கொடுமுடி.
இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்றும்,
திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும்,
திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், கரூரில் இருந்து
வடமேற்கே சுமார் 26 கி.மீ. தொலைவிலும் கொடுமுடி உள்ளது.
கொடுமுடி ரயில் நிலையம், திருச்சி – ஈரோடு ரயில் பாதையில்
இருக்கிறது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து
சுமார் 5 முதல் 10 நிமிட நடை தொலைவில் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,
கொடுமுடி,
ஈரோடு வட்டம்,
ஈரோடு மாவட்டம் – 638 151.

இக்கோயில், காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு – தொலைபேசி – 04204 – 222375
ஆலய தங்கும் விடுதி தொடர்புக்கு – தொலைபேசி – 04204 – 225375
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 8:32 pm

தல வரலாறு

ஒருமுறை, ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார்
பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி
விதிமுறைகளின்படி, மேருமலையை ஆதிசேஷன் தனது ஆயிரம்
மகுடங்களால் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன்
அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்
பட்டது.

அதன்படி, வாயுதேவன் தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க,
மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு
தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன.

ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும்
ஒரு தலமானது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 8:33 pm


-
சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும்,
மாணிக்க மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி),
மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும்,
நீலமணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும்,
வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின.

மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும்
மலைகளாகவே காட்சி தர, வைரமணிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாகக்
காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.

மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும்,
தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம்
கொண்டுள்ளார்.

கோவில் அமைப்பு

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி, கொடுமுடி சிவஸ்தலத்தில்
கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில்
கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது.

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும்,
சுமார் 484 அடி அகலமும் உடையதாக அமைந்திருக்கிறது. இக்கோவிலில்
மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி
கோபுரங்களும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன.

———————————-
-தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Post by krissrini on Wed Sep 14, 2016 11:17 pm

நன்றி
avatar
krissrini
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 105

View user profile

Back to top Go down

Re: பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Post by tamilventhan on Thu Sep 15, 2016 4:07 am

ஆன்மீக தகவலுக்கு நன்றி
avatar
tamilventhan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum