ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

View previous topic View next topic Go down

சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by ayyasamy ram on Sun Sep 04, 2016 1:01 pm

இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன்
மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்
தற்கொலை செய்ததாக கூறப்படும் நாகப்பனின்
மகள் ராதிகா இன்று புகார் கொடுத்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது:
என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும்,
ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த
இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். என்னுடைய
தந்தைக்கும், தாய் அம்பிகாவுக்கும் இடையே கருத்து
வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்தனர்.
நான் வாரம் ஒரு முறை என் தந்தையை சந்திப்பேன்.

இந்நிலையில் என்னுடைய அம்மா அம்பிகாவின் தங்கையான
ரேணுகா, சொத்து பிரச்னை தொடர்பாக நாகப்பனை சந்தித்து
பேசினார்.

அதற்கு உதவி செய்ய முடியாது என்று நாகப்பன் சொல்லி
ரேணுகாவை திரும்ப அனுப்பி விட்டார். இதனால் நாகப்பன்
மீது ரேணுகா, ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம்
உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம்
புகார் செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 5.8.2016ல் ரேணுகாவின் மகள்களுக்கு உதவி தொகை
வழங்கப்போவதாகவும் அதற்கு கையெழுத்திட வேண்டும் என்று
நாகப்பனை ரேணுகா ஜி தமிழ் தொலைக்காட்சிக்கு அழைத்து
சென்றுள்ளார்.

இதன்பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நிர்வாகிகள்
என்னையும், என்னுடைய அம்மா அம்பிகாவையும் அங்கு
அழைத்தனர். அப்போது என்னுடைய தந்தை மற்றும் எங்களிடமிருந்த
செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர்கள் வாங்கி
கொண்டு தனி அறையில் அடைத்து வைத்தனர்.

மேலும், ரேணுகா மற்றும் என் தந்தைக்கிடையே உள்ள குடும்ப
பிரச்னையை சுமூகமான முறையில் தீர்த்து கொள்ள நாங்கள்
உங்களுக்கு கவுன்சலிங் தருவதாக கூறி நாகப்பனிடம் விசாரித்தனர்.
அதை அவருக்கே தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

தன்னுடைய மகள்களுக்கு நாகப்பன் பாலியல் தொந்தரவு
கொடுத்ததாக ரேணுகா புகார் கொடுத்ததாக கூறி
லட்சுமிராமகிருஷ்ணன் அவரிடம் விசாரித்துள்ளார். அந்த பொய்
புகாரை நாகப்பன் மறுத்தார். அப்போது சட்டத்துக்கு புறம்பான
விசாரணையில் நாகப்பனை லட்சுமிராமகிருஷ்ணன் கடுமையான
மனம் வருந்ததக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அதை அவர், என்னிடம் சொல்லி அழுதார். அவருக்கு நான் ஆறுதல்
கூறினேன். இந்நிலையில் 22.8.2016ல் அந்த நிகழ்ச்சியை
ஒளிப்பரப்பினார்கள். உடனடியாக ஜி தமிழ் தொலைக்காட்சியை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதை ஒளிப்பரப்ப வேண்டாம்
என்று கூறினோம்.

ஆனால் மீண்டும் 23.8.2016ல் மதியம் ஒளிபரப்பினார்கள். இதனால்
என் தந்தையை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கேவலமாக பார்த்தனர்.
அவமானத்தினால் மனஉளைச்சல் ஏற்பட்டு 23.8.2016ல்
இரவு 8 மணிக்கு நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக என்னுடைய பாட்டி நாகம்மாள் பள்ளிகரனை போலீஸ்
நிலையத்தில் 23.8.2016ல் புகார் கொடுத்தார்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய
தந்தை நாகப்பன் தற்கொலைக்கு காரணமான ரேணுகா, மற்றும்
அவருடைய மகள்கள், சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்திய
லட்சுமிராமகிருஷ்ணன், மற்றும் உதவி மற்றும் ஒளிபரப்பு செய்த
ஜி தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by T.N.Balasubramanian on Sun Sep 04, 2016 1:45 pm

அரசாங்கத்தின் நான்கு தூண்கள்
மக்கள் சபை , நீதித்துறை ,நிர்வாகம் ,செய்தி ஊடகம் ,
ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக மதிக்கப்படுகின்றன .
அவர்கள் நேர்மையாக செயல்பட சட்டதிட்டங்கள் வழி வகுக்கப்பட்டுள்ளன .
அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை மற்றவர்கள் கையில் எடுத்துக் கொண்டால் ,
விளைவுகள் விபரீதமாகவே முடியும் .
ஒரு விதத்தில் இவைகள் கங்காரு கோர்ட் எனப்படும் கட்டப் பஞ்சாயத்துதான் .
இவர் உபயோகப்படுத்திய "இப்பிடி பண்ணறீங்களே அம்மா " பாட்டாக உபயோகப்படுத்தியதற்கு
சட்ட ரீதியாக கடும் எதிர்ப்பு தெரிவித்த இவர்,
தான் நடத்தும் ப்ரோக்ராமில் இவர் சமாதானப்படுத்தியதாக கூறுகின்றவை , சட்டரீதியாக ,ஒத்துக் கொள்ளக் கூடியவை அல்ல , என்பது இவர் அறியாமலா இருப்பார் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by M.Jagadeesan on Sun Sep 04, 2016 2:33 pm

நீதி மன்றங்களில் உடனடியாக நீதி கிடைக்காது ;வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டு போவார்கள் . ஆனால் கட்டப் பஞ்சாயத்தில் உடனடியாக நீதி கிடைக்கும். வாய்தா என்பதெல்லாம் கிடையாது . நீதிமன்றங்களில் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் ; ஆனால் கட்டப் பஞ்சாயத்தில் அவ்வாறு செய்ய இயலாது .நீதிமன்றங்களில் வக்கீல்கள் வாதாடவேண்டும் ; ஆனால் கட்டப் பஞ்சாயத்தில் பாதிக்கப் பட்டவர்களே வாதாடமுடியும் .

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பஞ்சாயத்துகள் எல்லாமே ஜோடிக்கப்பட்டவைதான் . யாரும் தங்கள் குடும்பப் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டமாட்டார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by T.N.Balasubramanian on Sun Sep 04, 2016 3:12 pm

கட்டப் பஞ்சாயத்துகளில் உடனே நீதி கிடைக்கலாம் ஆனால் அப்பழுக்கு அற்ற தீர்ப்பென கூறமுடியாதே.
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை அல்ல . நீதி வழங்கும் நாட்டாமையும் , நீதி வழங்க தகுதியானவரா போன்ற சந்தேகம் எழக்கூடிய காலகட்டம் இக்காலம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by M.Jagadeesan on Mon Sep 05, 2016 7:35 am

அப்பழுக்கற்ற தீர்ப்பு , சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட தீர்ப்பு இப்போது நீதிமன்றங்களில் வழங்கப்படுகிறதா ?
எல்லா நீதிபதிகளும் காசுக்கு விலை போகாதவர்களா ?

அந்தக்காலத்தில் , சிறுவயதிலேயே ,முதுமைக்கோலம் தரித்து ,இரு முதியவர்களின் வழக்கிலே தீர்ப்பு சொன்ன கரிகால் பெருவளத்தான் தீர்ப்பு தவறென்று சொல்லமுடியுமா ?

பாண்டியன் நெடுஞ்செழியன் , தான் சொன்ன தீர்ப்பு தவறென்று தெரிந்த உடனேயே உயிர் துறந்தான் . இப்போது கீழ்கோர்ட்டிலே சொன்ன தீர்ப்பு , தவறென்று மேல்கோர்ட்டிலே நிரூபிக்கப்பட்டால் , கீழ்க்கோர்ட் நீதிபதி உயிர் துறப்பாரா ? அல்லது குறைந்த பட்சம் தன் பதவியை ராஜினாமாவாவது செய்வாரா ?

மனுநீதி சோழன் அளித்த தீர்ப்பு தவறென்று சொல்லமுடியுமா ?
பசுவின் கன்றைக் கொன்றவனுக்கு மரண தண்டனை அன்று .
மானைக் கொன்றவனுக்கு மரியாதை செய்து ,விடுதலை இன்று .

படித்துப் பட்டம் பெற்ற நீதிபதிகள் எல்லோரும் யோக்கியமானவர்கள் அல்ல !
படிக்காத நாட்டாமைகளில் பாண்டியன் நெடுஞ்செழியன்களும் உண்டு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by T.N.Balasubramanian on Mon Sep 05, 2016 8:18 am

ஆம் அய்யா , உங்கள் பதிலில் 50% நான் ஒத்துப் போகிறேன் .

நேரு காலத்தில் , அனந்த சயனம் அய்யங்கார் என்பவர் ,லோக் சபா ,சபாநாயகராக இருந்தார்.
அந்த காலத்தில் சபாநாயகர் பாரபட்ஷமின்றி சபையை நடத்துவார்கள் .

ஒரு காலகட்டத்தில் , இவர் சபையில் கூறிய தீர்ப்பு , ஒரு உறுப்பினரால் ,ஏற்றுக்கொள்ளமுடியாதவாறு இருந்தது . சட்டரீதியாக , இதை அலசினால் , உங்கள் தீர்ப்பு தவறு எனத் தெரியவரும் என்று அவர் கூற ,

அனந்தசயனம் அய்யங்கார் ," எனது தீர்ப்பு உங்களை பொறுத்த அளவில் , தவறாக இருக்கலாம் . ஆனால் நான் கூறியதுதான் முடிவானது .மாற்றம் இல்லை.தலையாயது " என்றார் ( I may be wrong but my decision is final )

ரமணியன்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by M.Jagadeesan on Mon Sep 05, 2016 9:17 am

ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நியமித்தால் , அவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் நடந்துகொள்வார். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை , சபாநாயகராக ஆக்கலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான் சட்டசபை ஒழுங்காகவும் ,நேர்மையாகவும் நடக்கும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by T.N.Balasubramanian on Mon Sep 05, 2016 2:06 pm

அய்யா நீதிபதிகள்தான் சரியாக நீதி சொல்வதில்லை ,
அதற்காக நாட்டாமை தீர்ப்பு வேண்டும் என்றீரே .

வேண்டுமானால் ,நாட்டாமையை சபாநாயகராக போட்டு விடலாமா ????? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by M.Jagadeesan on Mon Sep 05, 2016 2:16 pm

நீங்கள் சரத்தைச் சொல்கிறீர்களா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by T.N.Balasubramanian on Mon Sep 05, 2016 2:34 pm

@M.Jagadeesan wrote:நீங்கள் சரத்தைச் சொல்கிறீர்களா ?
மேற்கோள் செய்த பதிவு: 1221013

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by M.Jagadeesan on Mon Sep 05, 2016 3:53 pm

சரத் இருப்பதற்கு தனபாலே மேல் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by T.N.Balasubramanian on Mon Sep 05, 2016 5:27 pm

புன்னகை புன்னகை
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum