ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

View previous topic View next topic Go down

அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by singai on Sat Sep 03, 2016 8:52 pm

அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

இந்த இரண்டு காணொளிகளையும் பாருங்கள். எப்படி ஒரே திசையில் தொடருகின்றன?

பள்ளியில் படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

இவை மெட்ரொனோம்கள்(Metronome)- காலஅளவிகள் - ஆகும். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம்-metronome - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். மேற்கத்தைய இசை மட்டுமல்லாது தமிழிசை-கர்நாடக இசையிலும் நவீன முறையில் டிஜிட்டல் மெட்ரொனோம்கள் லயத்திற்காக பாவிக்கப்படுகின்றன.

முதல் காணொளியில் சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட மெட்ரொனோம்கள்-காலஅளவிகள்- வேறுபட்ட நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. அப்படியே மேசையில் மேல் இருக்கும் அசைகின்ற உருளையின் மேல் வைக்கும் போது, தொடர்ந்து ஒரே திசையில் அசையத் தொடங்குகிறது.

இரண்டாவது காணொளியில்,பல வர்ணங்களில் அமைந்த 32 காலஅளவிகள், வெவ்வேறு நேரத்தில் தொடக்கி விடப்படுகிறது. இறுதியில் எல்லாம் ஒருமித்து ஒத்திசைத்து ஆடத் தொடங்குகிறது.

காணொளியில் காணப்படும் மெட்ரோனொம்கள் ஒத்திசைவில் செயல்படுகின்றன.இந்த ஒத்திசைவு -sync. - Synchronization எனப்படுகிறது.
ஏன் இப்படி நடக்கிறது?
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by singai on Sat Sep 03, 2016 8:56 pm

காலஅளவி, முன்னும் பின்னும் என மாறி மாறி அசையும் விசையினால் உண்டாகும் சக்தி (energy) அலைகள், அந்த மேசையை தாக்குகிறது. காலஅளவியின் அசைவை, இந்த மேசை உள்வாங்கிக் கொள்வதால், அதுவும் சேர்ந்து ஆடத் தொடங்குகிறது. காலஅளவி ஆட, அதனோடு மேசையும் ஆட மொத்தமாக இசையின் ஐக்கியம் தோன்றுகிறது. மேசையின் வழியே, காலஅளவியும் ஆடத்தொடங்கி,எல்லாமே ஒரே திசையில் அசைகின்றன.

ஒரு மெட்ரோனோம் அசைந்து தொடக்க இடத்திற்கு வந்து மீண்டும் எதிர்திசைக்கு செல்கிறது. இந்த அசைவு தொடரும் போது ஏற்படும் சக்தி நிற்கும் மேடைக்கு மாற்றப்படுகிறது.மீண்டும் மேடையில் இருந்து மற்ற மெட்ரோனோம்களுக்கு தொடராக மாற்றம் பெறுகிறது.இப்படி எல்லா மெட்ரொனோம்களும் சக்தியை வெளியிடுவதும், மேடைக்கு மாற்றுவதுமாக தொடர் செயல் நடக்கிறது.இப்படி நடக்கும் போது நேர்-எதிர் அலைகள் மூலம் சக்தி பரப்பபட்டு ஒத்திசைவாக சம நிலைக்கு மெட்ரோனோம்கள் வரும்வரை செயல்பாடுகள் தொடருகிறது.

அதேசமயம் உருளையில் இருக்கும் மேடை தன்னிசைவு மூலம் சக்தியை இழுத்து மெட்ரோனொம்களுக்கு பரப்புவதுடன் மேலதிக சக்தியினால் தானே ஆட ஆரம்பிக்கிறது.
இந்த ஒத்திசைவு அறிவியலை அடிக்கடி இடிந்து விழும் சென்னை விமான நிலைய கூரைக்கு பயன்படுத்தலாமே!.இந்த அலைவு-OSCILLATION- அமைப்பினால் பல உச்சகட்ட பிரச்சனைகளை பாலங்களில் ஏற்படும் போக்குவரத்தின் போதும்,சில சமயம் கட்டிடங்களிலும் ஏற்படுத்துகிறது.

இந்த மெட்ரொனோம் ஒன்பதாம் நூற்றாண்டில் இசை இசைக்கும் போது நேரஅளவைக் கண்காணிக்க Abbas ibn Firnas என்பவரால் உருவாக்கப்பட்டாலும்,1815 இல் ஜொகான் மெல்செல் என்பவர்  இசைக்கலைஞர்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த காப்புரிமை பெற்றார்.

இசைக்கலைஞர்கள் முக்கியமாக ட்ரம்மெர்,கிட்டார் பயிற்சி செய்யும் பொதும் ,கச்சேரி செய்யும் போதும் பயன்படுத்துகிறார்கள்.தொடக்கத்தில் குறைந்த வேகமும் படிப்படியாக நேரத்தை (BPM) கூட்டி பயிற்சி செய்கிறார்கள்.முள்ளின் நடுவே இருக்கும் நகர்த்தியை அசைப்பதன் மூலம் நேர அளவை (beats-per-minute -BPM) மாற்றிக் கொள்ளலாம். இதை அடிப்படையாக வைத்து கலீலியோ கலிலி பெண்டுலம்(pendulum ) கண்டுபிடித்தார்.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by singai on Sat Sep 03, 2016 8:58 pm

கர்நாடக இசையில் ஏழிசை(சுருதி) சரிசெய்ய தம்புரா (இது வெளி நாட்டில் உருவானதால் அகில இந்திய வானொலி முன்னர் ஒருமுறை தடை செய்தது), ஹார்மோனியம்-சுருதிப்பெட்டி- இலத்திரனியல் சுருதிப்பெட்டி என பாவிக்கப்படுகிறது.புதியவர்கள் பழகும் போது கீழ் சுருதி மேல்சுருதி என வைத்து பழகிக் கொள்கிறார்கள்.மேலதிகமாக தாளம் பங்கேற்கிறது.தாளத்திற்கு கைகளையும் பாவிக்கிறார்கள்.தம்புரா சுருதியாகவும்,டிஜிட்டல் மெட்ரொனோம் லயமாகவும் செயல்படுகிறது எனலாம்.(Melody-pitch- is the Mother and Rhythm-time- is the Father) கைபேசியிலும் இப்படியான app கிடைக்கிறது.

கர்நாடக இசையில் பாவிக்கும்  மெட்ரோனோம் கருவி இது......பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
-நாமக்கல் கவி-
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by T.N.Balasubramanian on Sat Sep 03, 2016 9:19 pm

நன்றி ,நல்ல பகிர்வு .

முதல் வீடியோ தெரியவில்லை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by Hari Prasath on Sat Sep 03, 2016 10:02 pm

நல்ல தகவல்...
மிக உயரமான கட்டிடங்களின் பேற்பகுதியில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by T.N.Balasubramanian on Sun Sep 04, 2016 8:46 am

@T.N.Balasubramanian wrote:நன்றி ,நல்ல பகிர்வு .

முதல் வீடியோ தெரியவில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220859

முதல் வீடியோ இன்று பார்க்க முடிந்தது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by singai on Sun Sep 04, 2016 9:09 pm

உயரமான கட்டிடங்களின் மேற்பகுதியில் மெட்ரொனோம்கள் பொருத்தப்படுவதில்லை. இடிதாங்கி,மாஸ் டேம்பேர் பெண்டுலம் பாவிக்கப்படுகிறது.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 04, 2016 9:54 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by Hari Prasath on Mon Sep 05, 2016 12:27 pm

@singai wrote:உயரமான கட்டிடங்களின் மேற்பகுதியில் மெட்ரொனோம்கள் பொருத்தப்படுவதில்லை. இடிதாங்கி,மாஸ் டேம்பேர் பெண்டுலம்  பாவிக்கப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1220952
தவறாக புரிந்து கொண்டேன்...இரண்டிற்கும் உள்ள வேறுபாடு?
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by singai on Mon Sep 05, 2016 8:37 pm

தனியாகப் பதிவிடுகிறேன்.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum