உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

அந்தமான் - இறுதிச்சுற்று..!

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Tue Aug 23, 2016 10:47 pm

அந்தமான் - இறுதிச்சுற்று..! PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Tue Aug 23, 2016 11:19 pm

கஸ்ட் 6 ந்தேதி மறுபடியும் எனது பயணம் அந்தமானுக்கு அடுத்த சுற்றாக துவங்கும் என்று  நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆம்! அடுத்த சுற்று தான். இறுதிச்சுற்று இல்லை. சென்ற முறை பார்க்காமல் விட்டதையெல்லாம் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் நேரிடும் என்பதும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

எதிர்பாராத நிகழ்வுகள் தானே நம்மை எப்போதும் வாழ்க்கையில் சுவாரசியம் குறையாமல் வைத்துக்கொள்ள செய்கிறது. என்னை பொருத்தவரையிலும் இந்த பயணமும் அப்படித்தான் அமைந்து விட்டது.
இந்தமுறை offer ல், சென்ற முறை வராதவர்கள் எல்லாம் போக திட்டமிட்டார்கள். உடன் வரச்சொல்லி எங்களையும் கட்டாயப்படுத்தவே நாங்கள் போவதும் ஊர்ஜிதமானது.

நாங்கள் மொத்தம் பதினான்கு பேர்கள். Offer  புக்கிங் என்பதால் ஸ்பைஸ் ஜட்டில் பத்து பேருக்கு மட்டுமே புக் செய்ய முடிந்தது. மீதமுள்ள நான்கு பேருக்கு அன்று காலை புறப்படும் ஏர் இன்டியா flight ல் புக் செய்யப்பட்டது.

இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நபர் ஒருவருக்கு ரூபாய் 2,800/- ஆகும். சென்ற வருடம் அக்டோபர் கடைசி வாரத்தில் புக் செய்தோம்.

மாதங்கள் வெகு வேகமாக ஓடி, ஒரு வழியாக கிளம்பும் நாளும் வந்தது. ஆனால், நாங்கள் கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்னரே போர்ட் ப்ளேயர் சென்ற விமானம் ஒன்று மறைந்து விட்ட தகவல் வேறு அடிவயிற்றில் பீதியை கிளப்பிக்கொண்டு இருந்தது. சுருளும் பீதியை ஓரம் கட்டிவிட்டு புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! L83PqDxSTA4tA1vz2qxG+003

நாங்கள் பத்து பேர்கள் ஒரு குரூப்பாகவும், மீதம் உள்ள நான்கு பேர்கள் ஒரு குழுவாகவும் – தனித்தனியே பயணித்து போர்ட் ப்ளேயர் வந்திறங்கினோம். ஆனால், சென்ற முறையை விட இம்முறை ஆட்கள் அதிகம் என்பதால் அமர்க்களமும் அதிகமாகவே இருந்தது. (Flight –டே சும்மா அதிர்ந்திடுச்சி இல்ல....! அதனால் தான் விமானத்தினுள் குலுக்கல்கள் அதிகம் காணப்பட்டது போல.....)

நன்றாக ஜாலியான பொழுதுகள் கழிந்தது தெரியாமல் கனவு போல பயணம் முடிந்து திரும்பி விட்டோம். மற்றுமொரு மறக்க இயலாத நினைவலைகள் மனதின் ஓரத்தில் சந்தோஷமாய் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது.

அதன் விளைவாய்.... இதோ, நீங்களும் சேர்ந்து அதில் நனைய எனது அடுத்த பயணக்கட்டுரை துவங்குகிறது. வழக்கம் போல உடன் வாருங்கள்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! HBtWMuzmSyi44dyfbbJN+castaway

Last edited by விமந்தனி on Wed Aug 24, 2016 12:10 am; edited 1 time in total

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Tue Aug 23, 2016 11:51 pm

அந்தமான் - இறுதிச்சுற்று..! 4PgMvo3pR32shdChk3vx+004

ங்களுக்கு முன்னால் வந்த நால்வரும் காலை ஒன்பது மணிக்கும், நாங்கள் மாலை மூன்று மணிக்கும் அந்தமான் வந்திறங்கினோம். இம்முறை takeoff ம், landing ம் ரொம்பவே பயமுறுத்தும் விதமாக இருந்தது.

உடன் வந்த என் நாத்தனார் take off ஆகும் போது கண்ணை இருக்க மூடியவள் தான். அந்தமானில் வந்து தான் கண்களையே திறந்தாள். அப்படி ஒரு பயம் அவளுக்கு.

நாங்கள் மேலேயே(!) சாப்பாட்டை முடித்துவிட்டிருந்தபடியால், ஹோட்டலுக்கு வந்துமே சற்றைக்கெல்லாம் சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டோம்.

காலையில் வந்தவர்கள் அங்கேயே லோக்கலில் பார்க்கக்கூடிய இடங்களான செல்லுலார் ஜெயில், அக்வாரியம் மற்றும் ஆதிவாசிகளின் அருங்காட்சியகம் என்று சுற்றிபார்த்துவிட்டு, நாங்கள் மாலை கார்பியன் பீச் சென்ற போது எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.

நாங்கள் முதலில் ஆதிவாசிகளின் அருங்காட்சியம் சென்று விட்டு பிறகு கார்பியன் பீச் வந்தோம். இரண்டுமே சென்ற முறை பார்த்தது என்றாலும் மற்றவர்களுக்காகவும், எங்கள் பொழுது போகவும் மறுமுறை ஒரு சுற்று வந்தோம்.

ஏற்கனவே இந்த இடத்தினை பற்றி நான் உங்களுக்கு சொல்லி இருப்பதாலும், சொல்லும்படியான மாற்றங்கள் ஏதும் இங்கு ஏற்படவில்லை என்பதாலும் (ஒரு வருட இடைவெளியில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது...) இங்கெடுத்த சில படங்களை மட்டும் பதிவிடுகிறேன்.

கடற்கரையில் சென்றமுறை போல் இல்லாமல் நல்ல கூட்டம் இருந்தது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! MOwgXsHSjuuHaI2aAggF+005

இந்த முறை இரண்டு பெஞ்சுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். (அதே பத்து ரூபாய் தான்)

அந்தமான் - இறுதிச்சுற்று..! UBkVmtygTtWnGMEFwdCg+006

அந்தமான் - இறுதிச்சுற்று..! 2kxBaIc6QmmOdOuHYre7+007

அந்தமான் - இறுதிச்சுற்று..! GTf3rFCSHSwGdozELjma+008

அந்தமான் - இறுதிச்சுற்று..! Nk4GY2NiRY3PO1RdBUkI+009

அந்தமான் - இறுதிச்சுற்று..! KfHdjDZuRZWkwa9SzMjF+010

கடற்கரையில் சென்றமுறைபோல் இல்லாமல் கடல் நீர் சற்றே உள்வாங்கியிருந்ததையும் கவனிக்க முடிந்தது. மாலை 5 மணிக்கே இருள் கவிய ஆரம்பித்திருந்தது. அங்கிருந்து ஐந்தரை மணிக்கெல்லாம் புறப்பட்டு தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டு டிரைவர் கிளம்பிவிட்டார். நாளை பார டாங் போகவேண்டும். சென்ற முறை விடுபட்ட பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

அந்தமான் - இறுதிச்சுற்று..! KxJDm3wRaGF9sLqkwW3e+castaway

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by ChitraGanesan on Wed Aug 24, 2016 10:34 am

தொடருங்கள்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

http://chitrafunds@gmail.com

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by ராஜா on Wed Aug 24, 2016 11:49 am

சூப்பர் அக்கா .. ஆரம்பியுங்கள் நாங்களும் இன்னொரு முறை அந்தமானுக்கு சென்று வருகிறோம் உங்கள் எழுத்துக்களின் மூலம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by ராஜா on Wed Aug 24, 2016 11:53 am

@விமந்தனி wrote:
அந்தமான் - இறுதிச்சுற்று..! PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க. சிரி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

"டேய் உன்னை மாதிரி ஆளுங்க பண்ணுற அடடாகாசத்தால் தான் , அவமானப்பட்டு கடல்அன்னை சுனாமியா பொங்கி வருகிறார் போல" சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by பாலாஜி on Wed Aug 24, 2016 1:07 pm

இந்த முறை இரண்டு பெஞ்சுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். (அதே பத்து ரூபாய் தான்) wrote:

சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் ,அதை இந்த முறை சரி செய்து வீட்டிர்கள்.

சூப்பர் ....கலக்குங்க

Last edited by பாலாஜி on Wed Aug 24, 2016 4:56 pm; edited 1 time in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by T.N.Balasubramanian on Wed Aug 24, 2016 1:23 pm

வாழ்த்துக்கள் தொடருங்கள் .
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Sat Aug 27, 2016 10:21 pm

@ChitraGanesan wrote:தொடருங்கள்
நன்றி!

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Sat Aug 27, 2016 10:22 pm

@ராஜா wrote:
@விமந்தனி wrote:
அந்தமான் - இறுதிச்சுற்று..! PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.  சிரி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
அதோ.... தூரத்துல இருக்கற அக்கா பொண்ணு தெரியலையாக்கும்....

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Sat Aug 27, 2016 10:24 pm

@பாலாஜி wrote:

சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் ,அதை  இந்த முறை சரி செய்து வீட்டிர்கள்.

சூப்பர் ....கலக்குங்க
ஆமாம், இந்த முறை ஆட்களும் அதிகமாயிற்றே... அதனால் தான்....

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Sat Aug 27, 2016 10:28 pm

@T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் தொடருங்கள் .
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!

ரமணியன்
சதுரகிரி போகும் போது தானே சொல்ல சொன்னீங்க ....?

மறுபடியும் அந்தமான் போவேன்னு நானே எதிர்பார்க்கலை.... தவிர புக்கிங் டைம் ரொம்பவும் குறைவாக இருப்பதினாலும், அதிகம் டிஸ்கஸ் செய்யவும் முடிவதில்லை. (ஆபர் அல்லவா அதனால் தான்)

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி on Sat Aug 27, 2016 10:38 pm

றுநாள் 7 ந்தேதி அன்று விடியற் காலையில் (நடு இரவு என்றால் சரியாக இருக்கும்) இரண்டு மணியளவில் அனைவரும் எழுந்து புறப்பட்டோம். மூன்று பத்துக்கெல்லாம் தயாராக இருந்தும் எங்களுக்கான வாகனம் வந்ததென்னவோ மூன்றரை மணிக்குத்தான்.

இந்த பாரடாங் தீவு போர்ட் ப்ளேயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. சரியாக இரண்டரை மணிநேரப்பயணம்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஒன்றரை மணி நேர பயண முடிவில் ஜிர்கி டாங் என்னும் இடத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. விடிகாலை மணி நான்கு ஐம்பது ஆகியிருந்தது. அந்த நேரத்திற்கே பொழுது புலர்ந்து கொண்டுவருவதை பாருங்கள். சரியாக நாலரை மணிக்கெல்லாம் இங்கே விடியத்துவங்கி விடுகிறது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! Uw9tC4qWSmeXzBroQYmf+011

வண்டிகள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டது. எங்களுக்கு முன்னால் ஏற்கனவே கணிசமான அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! PpwP0egXS2SAuveUqQri+012

இதற்கு மேல் வேறெங்கும் சாப்பிடும் வசதி இல்லாத காரணத்தினால் இங்கேயே காலை உணவை நாங்கள் அனைவரும் முடித்துக்கொண்டோம். எனக்கு நினைவு தெரிந்து அன்று தான் காலை 5 மணிக்கே நான் உணவருந்தியது. ஆனால், பசியுடன் தான் இருந்தோம். அதனால் நேரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.

இட்லி, சட்டினி, சாம்பார், வடை, பூரி, பரோட்டா என அந்நேரத்திர்க்கே எல்லாம் தயாராக தான் இருந்தது. ருசியும் நன்றாகத்தான் இருந்தது. இங்கே பூரிக்கு தொட்டுக்கொள்ள பட்டாணி போட்டு குருமா போல வைக்கிறார்கள்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! MxFfoYojTQiIbLxBLsC4+013

அது ஒரு செக் போஸ்ட். இதன் மேற்கொண்டு நாம் பயணிக்கும் பாதை ஜராவா பழன்குடிநினரின் இருப்பிடம்.

எனவே சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நம்மை அவ்வழியே போக அனுமதிக்கிறார்கள். முதல் நுழைவு காலை ஆறு மணிக்கும், அடுத்தது ஒன்பது மணி, பன்னிரண்டு மணி மற்றும் இரண்டரை மணிக்கு என்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.

மேலும் இதற்கு மேல் செல்லும் வழிகளில் தான் நாம் ஜராவா இனத்தவரை காண முடியும். பெரும்பாலும் அவர்கள் நம் கண்ணில் அகப்படுவதில்லையாம். அதுபோல அவர்களை பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகளும்  உண்டாம்.

அவர்களை பார்க்க முடிவதும், முடியாமல் போவதும் நம் அதிர்ஷ்டத்தை சார்ந்த விஷயம். இந்த ஜராவி இன மக்கள் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறார்களாம். ஆனாலும், உலகில் மிகவும் அருகி வரும் இன மக்களாக இப்பழங்குடியினரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். காரணம் இப்போதைய இவர்களது மொத்த மக்கள் தொகையே வெறும் முன்னூறிலிருந்து நானூறுக்குள்ளே தான் இருப்பதாக எங்களுடனேயே வந்த வழிக்காட்டியாக வந்தவர் சொன்னார்.

இவர்களது பூர்விக்கத்தினர் ஆப்ரிக்காவில் இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அருகி வரும் இவ்வினத்தவரை பாதுக்காக்கும் பொருட்டு, அந்தமான் அரசு இவர்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை அளித்திருக்கிறது.

இவர்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதும், அந்நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் யாரேனும் கண்ணில் பட்டால் அவ்வளவு தானாம். கிழித்து பிய்த்து எறிந்துவிடுவார்கள் என்று கேள்வி பட்டிருந்தேன். அதனாலேயே உடன் வரும் அனைவரிடமும் பாரடாங் போகும் அன்று மட்டும் சிவப்பு நிற உடை அணிய வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன்.

இதுபற்றி எங்களுடன் வந்த வழிகாட்டியை (பெயர் கார்த்திக். ஆகவே, இனி கார்த்திக் என்று அழைப்போம்) கேட்ட போது, அவர் சொன்னது, “இதற்கு முன் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், சமீப காலங்களாக அப்படி ஏதும் நடப்பதில்லை. அவர்களும், நம்மைப்போல நாகரீக வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! 7L3WtKjORyCKFviihLal+014
பட உதவி: இணையம்.

தற்போது இவர்கள் அனைவருமே ஆடை உடுத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் இருவர் தினமும் இவர்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களாம்.

அவர்கள் இருவரும் பழங்குடியினர் இருப்பிடத்திற்கு செல்ல காத்திருந்த சமயத்தில் நாங்கள் அவர்களை பார்க்க நேர்ந்தது. அப்போது தான் உடன் வந்த கார்த்திக் இவ்விஷயத்தை சொன்னார்.

வழியெங்கும் போகும் போதும், திரும்பும் போதும் என கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளை எங்களால் பார்க்க முடிந்தது. எங்கள் பார்வையில் பட்ட அனைவருமே டீ ஷர்ட், பனியன் சகிதம் இருப்பதை காண முடிந்தது.

முக்கியமான் ஒரு விஷயம் விட்டுப்போனது. நாம் வழியில் காணும் அவர்களை படம் பிடிப்பதோ அல்லது வண்டியை நிறுத்தி அவர்களுடன் பேச முயலுவதோ கூடாது.

அப்படி படம் பிடிப்பவருக்கு ரூபாய். 10,000/- அபராதம் விதிக்கப்படுகிறதாம். (நாம வண்டிக்குள்ள இருந்து படம் புடிச்சா யாருக்கு தெரியப்போவுதுன்னு நினைக்கறவங்களுக்கு – இவ்வழியாக முதலாவதாக செல்லும் வண்டிக்கு முன்னாலும், கடைசியாக வரும் வண்டிக்கு பின்னாலும் காவல் துறையினரின் வாகனம் நமக்கு காபந்தாக வரும்)

மேலும், படம் பிடித்தவரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறதாம். இதில் விந்தை என்னவென்றால், ஆதிவாசியால் நாம் தாக்கப்பட்டால் அது ஒரு போதும் குற்றம் ஆகாதாம்.

ஆக, முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழமொழிக்கு ஏற்ப அங்கு செல்பவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் செல்வது நல்லது.
அந்தமான் - இறுதிச்சுற்று..! KzwPiAOsRVi2d8Wk5iJW+castaway

அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by T.N.Balasubramanian on Sun Aug 28, 2016 12:19 pm

ஜரோவா குடியினர் சர்வதேச அளவில் Protected Tribes என்ற பிரிவில் பாதுகாத்து வரப்படுகிறார்கள் என அறிகிறேன் .
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , அந்தமான் - இறுதிச்சுற்று..! Mh80PXR8QnqOnQ2XrAqH+imagesசிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by T.N.Balasubramanian on Sun Aug 28, 2016 12:24 pm

சதுரகிரி போகும் போது தானே சொல்ல சொன்னீங்க ....?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை