உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிவ கீதை புத்தகம்
by lakshmi palani Today at 12:59 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Today at 12:13 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by dharanidharan Today at 12:12 pm

» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by aeroboy2000 Today at 11:15 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by dharanidharan Today at 10:50 am

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by ayyasamy ram Today at 7:13 am

» கஞ்சிக்குழிக்கு, 'சபாஷ்'
by ayyasamy ram Today at 7:09 am

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by ayyasamy ram Today at 7:05 am

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 12:38 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by ayyasamy ram Yesterday at 11:58 am

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» ஆனந்த விகடன் பொக்கிஷம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:37 am

» கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:31 am

» புத்தக தேவைக்கு...
by dharanidharan Yesterday at 11:26 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by புத்தகப்பிாியன் Yesterday at 11:22 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 01
by புத்தகப்பிாியன் Yesterday at 11:21 am

» ஆன்மிக சிந்தனை – நபிகள் நாயகம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:35 pm

» அழகு ரசிப்பதற்கே, அறிவு கொடுப்பதற்கே
by ayyasamy ram Sat May 18, 2019 11:25 pm

» அழகே அழகே எதுவும் அழகே
by ayyasamy ram Sat May 18, 2019 11:19 pm

» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

» ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி… வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Sat May 18, 2019 11:11 pm

» பீட்ரூட் அசோகா அல்வா
by ayyasamy ram Sat May 18, 2019 11:09 pm

» லூசிபர் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:06 pm

» பெயரை மறந்த இயக்குநர் – மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா
by ayyasamy ram Sat May 18, 2019 11:01 pm

» எந்தப் பூச்சிக்குக் குளிரவே குளிராது?”- கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 18, 2019 10:54 pm

» உலகில் மிகவும் தைரியமான மனிதன்..!!
by ayyasamy ram Sat May 18, 2019 10:50 pm

» தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…
by ayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

» சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’திரை விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 10:42 pm

» கேன்ஸ் திரைப்பட விழா - மேக்கப் மற்றும் உடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நடிகைகள்
by ayyasamy ram Sat May 18, 2019 10:36 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by சக்தி18 Sat May 18, 2019 9:52 pm

» ஜெயமோகனின் வெண்முரசு நாவல்கள்
by புத்தகப்பிாியன் Sat May 18, 2019 9:22 pm

Admins Online

மலேசிய செய்திகள்

மலேசிய செய்திகள் - Page 2 Empty மலேசிய செய்திகள்

Post by சிவா on Tue Aug 16, 2016 7:42 pm

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Mon Oct 01, 2018 8:35 am


பேஸ்புக் நிறுவனத்தின் 50 மில்லியன் கணக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை களவாடும் செயல் நடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பதை அடுத்து, பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் மலேசியர்கள் தங்களின் கணக்குகளில் ஊடுருவல் நிகழ்ந்திருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

உங்களின் பேஸ்புக் கணக்குகள் முறைகேடாக ஊடுருவப்பட்டுள்ளதா? ‘லோக்கின்’ கட்டமைப்பு சரியாக இருக்கிறதா? என்கிற பாதுகாப்பு அம்சங்களை சோதித்துக் கொள்ளும்படி மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மலேசிய பேஸ்புக் பயனாளிகள் அது குறித்து எம்சிஎம்சி எனப்படும் தொலைத் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் 016 220 6262 என்ற எண்களிலோ அல்லது aduan@pdpd.gov.my. என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் உலக அளவில் இந்த தகவல் களவாடலில் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ள போதிலும் மலேசியர்களில் எவ்வளவு பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய பேஸ்புக் நிறுவனத்துடன் பல்லூடக ஆணையம் தொடர்பு கொண்டிருப்பதாக ஆணையத்தின் அறிக்கை கூறியது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Thu Oct 11, 2018 9:08 am


கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மரண தண்டனையை முற்றிலும் அகற்ற முடிவெடுத்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் அதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று  மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

அடுத்த நாடாளுமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்குகிறது.

மசோதாவைத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொலை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் தற்போது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்ற  பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கம் மரண தண்டனையை மறுஆய்வு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Thu Oct 11, 2018 9:09 amகிளந்தான்: மலாயன் புலிகள் பரவலாக காடுகளில் வேட்டையாடப்பட்டு வருகின்றன. அண்டை நாடுகளில் மலாயன் புலிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.

வெளிநாட்டு வேட்டையாளர்கள் மலாயன் புலிகளை சில மாதங்களுக்கு முன்னர் வேட்டையாடத் தொடங்கியதாகவும் ஒவ்வொரு புலியையும் 6,600 வெள்ளிக்கு விற்றதாகவும் குவா மூஸாங் கிராமவாசிகள் கூறினர்.

மலாயன் புலிகளைத் தவிர அரிய வகை எறும்புதின்னி, பாம்பு ஆகிய விலங்குகளை வெளிநாட்டினர் வேட்டையாடி வருவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

அரிய வகை விலங்குகள் மருத்துவ குணங்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.

ஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மலாயன் புலிகள், அதனால் அழியும் அபாயம் உள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Fri Oct 12, 2018 6:30 pmமலேசியா கடந்த ஆண்டு தடுத்து வைத்த தாய்லாந்திலிருந்து தப்பியோடி வந்த உய்கோர் முஸ்லிம்கள் 11 பேரை விடுவித்து துருக்கிக்கு அனுப்பி வைத்ததாக அவர்களின் வழக்குரைஞர் நேற்றுத் தெரிவித்தார். அவர்களை பெய்ஜிங் அனுப்பி வைக்குமாறு சீனா கேட்டுக்கொண்டதை மலேசியா பொருட்படுத்தவில்லை.

இதனால் சீனாவுடனான உறவுகள் நலிவடையலாம். சீன -மலேசிய உறவுகள் டாக்டர் மகாதிர் முகம்மட் சீன நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த யுஎஸ்$20 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள குத்தகைகளை இரத்துச் செய்ததிலிருந்து அவ்வளவு நன்றாக இல்லை.

மலேசியா உய்கோர் தடுப்புக் கைதிகள்மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டதை அடுத்து அவர்கள் செவ்வாய்க்கிழமை கோலாலும்பூரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை துருக்கி சென்றடைந்தனர் என அவர்களின் வழக்குரைஞர் ஃபாஹ்மி மொய்ன் கூறினார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Fri Oct 12, 2018 6:34 pmமலேசியாவின் போர்ட்டிக் சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இத்தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். போர்ட்டிக்சன் தொகுதியில் மொத்தம் 75,000 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் தமிழர்கள் உட்பட 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் சினிமா பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன. தமிழகத்தில் புதிதாக மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

வீடியோ மூலமாக அன்வாருக்கு கமல்ஹாசன் ஆதரவை கோரியிருக்கிறார். அந்த வீடியோவில், அன்வர் இப்ராஹிமிக்கு அநியாயமான சிறைவாசத்தில் இருந்து விடுதலை கிடைத்திருப்பது, அவருக்கு சேர வேண்டிய புகழ் மீண்டும் அவரை வந்தடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் எழுச்சி எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அன்வரின் இந்த மறு எழுச்சி பெரிய நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.

வருகின்ற சனிக்கிழமை போர்ட்டிக்சனில் நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மலேசியா எழுத இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் சகோதரர் அன்வர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலேசிய அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படும் என நான் நம்புகிறேன். மலேசிய இந்திய உறவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய தமிழக உறவும் கண்டிப்பாய் வலுவடையும் என நான் நம்புகிறேன்.

மலேசிய மக்களின் இந்த புதிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த வீடியோ மலேசிய இந்தியர்களிடையே வைரலாக பரவி வருகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by SK on Fri Oct 12, 2018 6:52 pm

பல செய்தி குறிப்பு பகிர்ந்தமைக்கு நன்றி தல


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by ayyasamy ram on Mon Oct 15, 2018 12:54 pm

மலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு
-
அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.

இந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்ற பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

மலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்
கூறுகையில்

‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க
ஆலோசித்து வருகிறோம்.
இதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை
உறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல்
அளித்துள்ளது’’
எனக் கூறியுள்ளார்.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45131
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Mon Oct 15, 2018 1:12 pm

@ayyasamy ram wrote:மலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு
-
அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.

இந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்ற பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

மலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்
கூறுகையில்

‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க
ஆலோசித்து வருகிறோம்.
இதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை
உறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல்
அளித்துள்ளது’’
எனக் கூறியுள்ளார்.
-
தி இந்து
மேற்கோள் செய்த பதிவு: 1281802

மலேசியாவில் ஆதார் அட்டையை விட மிக நவீன முறையிலான அடையாள அட்டை அனைவருக்கும் உள்ளது.

ஒரு மலேசியரின் வாழ்க்கை, நடவடிக்கைகள் அனைத்தையும் அந்த அட்டையை ஸ்கேன் செய்தால் வெளிவந்துவிடும். அந்த அட்டை இல்லாமல் வீட்டை விட்டு ஒருவர் சென்று போலீசாரிடம் சிக்கினால் அவருக்கு சிறைத்தண்டனை உண்டு.\

எனவே இது ஒரு பொய்யான செய்தி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 15, 2018 5:41 pm

ஆதர் விடாது துரத்தும் கருப்பு
மலேசியாவிலும் தொடர்கிறது
நன்றி தலைவா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவனாசான் on Tue Oct 16, 2018 8:43 pm

கே .ஒய். சி. ... ....  அடையாள அட்டை அவசியம்தான் ஓர் மனிதனுக்கு நல்லதே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4186
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Tue Oct 23, 2018 4:01 amஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் பாயா தெருபோங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) நிகழ்ந்த நிலச் சரிவில் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில் இன்று 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்தோனிசியரான சுபேரி என்ற 34 வயது நபர்தான் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 8-வது நபர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

நிலச்சரிவினால் ஏற்பட்ட குப்பை கூளங்களை இராட்சத இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் படையினர் அகற்ற முற்பட்டபோது சுபேரியின் சடலம் காணப்பட்டது. அவரது மனைவி நோராசிசா என்ற 24 வயது கம்போடியப் பெண்மணி இந்த நிலச்சரிவில் காயமடைந்திருந்தார். பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுபேரியின் சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

நோராசிசா அந்த நிலச் சரிவில் இடுப்பு வரையில் புதையுண்டார். அவரது கணவர் சுபேரி நோராசிசா கண்முன்னே மண்ணில் புதையுண்டார்.

இன்று பிற்பகல் 2.00 மணிவரையில் 8 சடலங்கள் மீட்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூவர் இந்தோனிசியர், நால்வர் வங்காளதேசத்தினர், ஒருவர் மியான்மார் பெண்மணியாவார்.

மேலும் வங்காளதேசிகள் என நம்பப்படும் இருவர் இன்னும் புதையுண்டிருக்கின்றனர் என அஞ்சப்படுகிறது.

நால்வர் இந்த நிலச்சரிவில் காயமடைந்தனர். ஒரு வங்காளதேசி, இரண்டு இந்தோனிசிய பெண்மணிகள் மற்றும் கம்போடியப் பெண்மணி ஒருவர் ஆகியோரே அந்த நால்வராவர். காயமடைந்த பெண்மணிகளில் ஒருவர் 4 மாத கர்ப்பிணியாவார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Tue Oct 23, 2018 4:04 amமலைப்பகுதிகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தக்கோரும் அழைப்பை வரவேற்பதாக, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

“அக்டோபர் 19-ல், 7 உயிர்களைப் பலிகொண்ட, புக்கிட் குக்குஸ், சாலை கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, மோசமான பணி பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் விளைவாக நடந்தது எனத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம் (நியோஸ்) கூறியுள்ளது.”

“ஆக, அக்கட்டுமான நிறுவனம், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஒழுங்குமுறைகளில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்பது இங்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மலேசிய செய்திகள் - Page 2 1-5

“அதுமட்டுமின்றி, வேலை நிறுத்த உத்தரவைப் பெற்ற பின்னரும் கூட, தொடர்ந்து பணியை மேற்கொண்டது, தொழிலாளர்கள் மீது அந்நிறுவனம் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டதைக் காட்டுகிறது,” என்று பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினரான இராணி இராசையா கூறினார்.

“பல கட்டுமானத் தளங்களில் ஏற்படும் இறப்புக்கள் பணியிடப் பாதுகாப்பு விதிகளை மீறுவதாலேயே ஏற்பட்டுள்ளன. ஆக, அது ஏன் தொடர்ந்து நடக்கிறது? கட்டுமானத் தொழிலாளர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?” என்று இராணி கேள்வி எழுப்பினார்.

“அனைத்து சடலங்களையும் கண்டுபிடிப்பதற்கு முன்னமே, கட்டுமான நிறுவனம், இறந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதத் தொழிலாளர்கள் என்று அறிவித்தது. இதன்வழி, இறப்புக்கள் மற்றும் காயங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிச்செல்ல அது முயல்கிறது.

மலேசிய செய்திகள் - Page 2 2-2

“நம் அரசாங்கம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொள்கைகளில் கொண்டிருக்கும் இடைவெளிகள் மற்றும் குறைபாடுகளின் காரணமாக, கட்டுமானத் துறை நிறுவனங்கள் ஆவணமற்ற தொழிலாளர்கள் மீதே அதிக ஆர்வம் கொண்டுள்ளது,” என்றார் அவர்.

“ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி, குறிப்பிட்ட ஒரு கட்டுமான நிறுவனத்தின் கீழ், பணி அனுமதி பெற்று நாட்டில் நுழைகிறார். அந்நிறுவனத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததும், அத்தொழிலாளி ஆவணமற்றவர் ஆகிறார். அதன்பிறகு, வேறொரு நிறுவனத்தில் அவர் வேலை செய்யும்போது, முறையான ஆவணமற்றவர் அல்லது சட்டவிரோதத் தொழிலாளி ஆகிறார்,” என, பி.எஸ்.எம். அந்நியத் தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான இராணி விளக்கமளித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தற்போது பல தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளைச் சேகரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

மலேசிய செய்திகள் - Page 2 4-1

“என்ன செய்ய முடியும் என்பதற்கான யோசனைகளை விட, தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்றதாக இருக்கும் தொழிலாளர் கொள்கைகளைச் சரியான முறையில், துல்லியமாக அமைக்கும் அரசியல் தைரியம் நமக்கு வேண்டும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.

“11-வது மலேசியத் திட்டம், தற்போதைய சூழ்நிலையைச் சீரமைக்க, தேவையான அடிப்படை மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. முந்தைய அரசாங்கம் அதில் சிறிதும் அக்கறை காட்டாமல், முரண்பாடான பல முடிவுகளை எடுத்தது.

ஆனால், ஹராப்பான் அரசாங்கம் அவ்வாறில்லாமல், பெறப்படும் பரிந்துரைகளில் தீவிரக் கவனம் செலுத்தி, விரைந்து செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என இராணி, அவ்வறிக்கையின் வழி கேட்டுக்கொண்டார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Tue Oct 23, 2018 4:05 amபிரதமர் டாக்டர் மகாதிருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற டெக்சி ஓட்டுனர்கள் அவர் கிரேப் வாகனச் சேவையைத் தடைசெய்ய மறுத்ததை அடுத்து வெளிநடப்புச் செய்தனர்.

இன்று காலை லங்காவியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக உத்துசான் மலேசியா கூறியது.

டெக்சிகளுக்கும் கிரேப் வாகனச் சேவைக்குமிடையிலான பிரச்னைக்கு புத்ரா ஜெயா ஒரு நியாயமான தீர்வைக் காணும் என மகாதிர் கூறியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

“இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவகாசம் கொடுங்கள். தடை செய்வது எளிதல்ல.

“எல்லாரும் பிழைக்க வேண்டும். அதற்கேற்ப தீர்வு காணத்தான் ஆசை. ஆனால், எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது”, என்று மகாதிர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்குத் தம்மைப் பிடிக்கவில்லை என்றால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறவும் தயார் என்று லங்காவி எம்பி- ஆன மகாதிர் கூறினார்.

“பிரதமராக இருப்பது என் விருப்பமல்ல. நான் ஏற்கனவே பணி ஓய்வு பெற்று விட்டேன்.

“மக்கள் விரும்பி அழைத்தார்கள். திரும்பி வந்தேன். நான் பிரதமராக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்றே பணிவிலகத் தயார்”, என்றாரவர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Thu Oct 25, 2018 3:51 amமலேசிய செய்திகள் - Page 2 Dassan-katrin-mozhi-lyrics-24102018

சென்னை – ஜோதிகா கதாநாயகியாகவும், விதார்த் நாயகனாகவும் நடிக்கும் ‘காற்றின் மொழி’ திரைப்படம் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் புதுமையான முறையில் உருவாக்க நினைத்த படக் குழுவினர் அதற்காக புதுமையான போட்டி ஒன்றை நடத்தினர்.

கவிஞர்கள் தாங்கள் எழுதிய பாடல் வரிகளைத் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி படக் குழுவினர் கேட்டுக் கொள்ள அதன்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் குவிந்திருக்கின்றன. அதிலிருந்து சிறந்த பாடல்களை எழுதிய சுமார் 60 பாடலாசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு நேரில் வரும்படி படக் குழுவினர் அழைப்பு விடுத்தனர்.

அந்த 60 பாடலாசிரியர்களில் மலேசியரான பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார். பீனிக்ஸ் தாசன் ‘செல்லியல்’ ஊடகத்தின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 60 பாடலாசிரியர்களை மீண்டும் சலித்தெடுத்து இருவரை மட்டும் பாடல் எழுத ‘காற்றின் மொழி’ படக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். அந்த இருவரில் மலேசியரான பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார்.

அவருடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த பத்மஜா ஸ்ரீராம் என்பவராவார்.

காற்றின் மொழி படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by சிவா on Thu Oct 25, 2018 3:52 amமலேசிய செய்திகள் - Page 2 Mohd-Irwan_malaysia

புத்ரா ஜெயா – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லாவின் இல்லத்தில் அந்த ஆணையத்தினர் இன்று அதிரடியாக நுழைந்து சோதனைகள் மேற்கொண்டனர்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குமூலம் வழங்க ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்த இர்வான் செரிகார் பின்னர் மாலை 4.30 மணியளவில் ஆணைய அதிகாரிகளால் புத்ரா ஜெயா பிரிசிண்ட் 8 என்ற வளாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அந்த இல்லத்திலிருந்து ஒரு பெட்டி மற்றும் இர்வானின் இரண்டு ஜோடி ‘கோட்’ ஆடைகளுடன் ஊழல் தடுப்பு ஆணையத்தினர் வெளியேறினார்கள்.

மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிதியில் முறைகேடுகள் புரிந்ததற்காக இர்வான் செரிகார் மற்றும் நஜிப் துன் ரசாக் இருவரும் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய செய்திகள் - Page 2 Empty Re: மலேசிய செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை