ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!
 T.N.Balasubramanian

இந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா?-வீடியோ
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 மூர்த்தி

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 மூர்த்தி

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 abr272008

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 abr272008

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

சின்ன கண்ணன் அழைக்கிறான்
 T.N.Balasubramanian

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!
 T.N.Balasubramanian

காலை முதல் மாலை வரை
 T.N.Balasubramanian

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 Dr.S.Soundarapandian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Dr.S.Soundarapandian

நீ யாராகி
 Dr.S.Soundarapandian

அடிபணிந்து கிடக்காதே
 Dr.S.Soundarapandian

அறிமுகம் நாகராஜன்
 Dr.S.Soundarapandian

தாயே−கட்டுரை
 Dr.S.Soundarapandian

தண்ணீர்
 Dr.S.Soundarapandian

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
 Dr.S.Soundarapandian

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
 Dr.S.Soundarapandian

வணக்கம்
 Dr.S.Soundarapandian

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
 Dr.S.Soundarapandian

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
 Dr.S.Soundarapandian

6174 புத்தகம் தேவை
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

மின்நூல்
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 ajaydreams

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்
 sakkthi

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிறந்த பிறந்த நாள் பாடல்

View previous topic View next topic Go down

சிறந்த பிறந்த நாள் பாடல்

Post by singai on Mon Aug 01, 2016 11:49 pm

avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: சிறந்த பிறந்த நாள் பாடல்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Aug 02, 2016 3:46 pm

சூப்பரான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல், இறக்குமதி செய்துக் கொண்டேன். இதை பலருக்கும் பகிர்கிறேன். பாடலை தந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

Re: சிறந்த பிறந்த நாள் பாடல்

Post by ayyasamy ram on Tue Aug 02, 2016 3:54 pm


-

-
அருள் கரோலி, உன்னி கிருஷ்ணன், உத்ரா, அறிவுமதி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: சிறந்த பிறந்த நாள் பாடல்

Post by ayyasamy ram on Tue Aug 02, 2016 4:03 pm


-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே ‘ஹாப்பி பர்த்டே டூ யூ’னு
ஆங்கிலத்தில்தான் பாடணுமா?

-
இனி கொஞ்சும் தமிழில் பாடலாமே என்கிறது ‘நீண்ட நீண்ட காலம்,
நீடு வாழ வேண்டும்’ பாடல். ஐந்து வருடங்களுக்கு முன்பே தான்
எழுதிய இந்தப் பாடலை நண்பர்கள் உறவினர்களின் பிறந்த நாள்
கொண்டாட்டங்களுக்குச் செல்லும்போதெல்லாம் பாடியிருக்கிறார்
பாடலாசிரியர் அறிவுமதி.
-
அப்போது சிலருடைய காதுகளையும் மனதையும் மட்டுமே வருடிய
இந்தப் பாடல் இப்போது வீடியோ பாடலாக இணையதளத்தில்
வைரலாகியுள்ளது.
-
குழந்தைத் தமிழ் எளிய இசை
-
“குழந்தைகளுக்கான கதைகளோ பாடல்களோ தமிழ்ச் சூழலில்
முற்போக்காக இல்லை என்கிற கவலை எனக்கு எப்போதுமே
இருந்திருக்கிறது. ஐந்து வருடங்களாக அமெரிக்கா செல்லும்
போதெல்லாம் அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் இந்தப் பாடலைப்
பாடுவேன்.
-
ஒரு கட்டத்தில் வாஷிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் பரிவிளாகம்
ச. பார்த்தசாரதி ‘நாம் ஏன் இந்தப் பாடலை இசையமைத்துத் தயாரிக்கக்
கூடாது?’ என என்னிடம் கேட்டார். உடனடியாக இசையமைப்பாளர்
அருள் கரோலியோடு இணைந்து குழந்தைத் தமிழில் எளிமையான
இசை வடிவில், ‘தமிழ் பிறந்தநாள் பாடல்’யை உருவாக்கினோம்”
என உற்சாகமாகப் பேசுகிறார் கவிஞர் அறிவுமதி.
-
பிசாசு படத்தில் ‘நதி போகும் கூழாங்கல்’ என்கிற ஆத்மார்த்தமான
பாடலை உத்ரா உன்னி கிருஷ்ணனின் தேன் சொட்டும் குரலில்
வார்த்தவர் அருள் கரோலி. மீண்டும் அதே மாயாஜாலத்தை இந்தப்
பாடலிலும் கொண்டுவந்திருக்கிறார். “குழந்தைகளுக்கான பாடல்
என்பதாலேயே ரொம்பவும் யோசிக்கலை. வாயைத் திறந்தவுடன்
பாடுற மாதிரி இருக்கணும்னு எடுத்த எடுப்பில் மனதில் உதித்த மெட்டைப்
போட்டேன்” என்கிறார் அருள் கரோலி.
-
பொதுவாக நம் ஊரிலேயே வாழ்பவர்களைவிட வெளிநாட்டில்
குடியேறியவர்கள் தமிழ் மீதும் தமிழர் பண்பாடு மீதும் அதிகமான பற்றுடன்
இருப்பதாகத் தனக்குத் தோன்றும் எனச் சொன்ன அருள், இந்த இசை
ஆல்பத்தைத் தயாரித்ததன் மூலம் பார்த்தசாரதி அதை நிரூபித்துவிட்டார்
எனப் பாராட்டுகிறார்.
-
உலகத் தமிழ்க் குழந்தைகளுக்குப் பரிசு

-
கடந்த ஆண்டே பதிவு செய்யப்பட்டுவிட்டது ‘தமிழில் பிறந்தநாள்’
பாடல். ஆனால் ஜூலை 3 அன்றுதான் அமெரிக்காவின் நியூஜெர்சி
மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில்
வெளியிடப்பட்டது. வலைத்தமிழ்.காம் இணையதளத்திலும் அன்றே
வெளியானது.
-
பல மாதங்களுக்கு முன்பே இசைப் பதிவு செய்துவிட்டதால் இணையதளத்தில்
வெளியான இந்த வீடியோ பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் முதலில்
பார்க்கவில்லை. பாடல் வைரலாகி நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அதைப்
பகிர்ந்த பிறகு தன்னுடைய 50-வது பிறந்தநாளான ஜூலை 9 அன்று
பார்த்ததாகச் சொல்கிறார்.
-
“என்னுடைய பிறந்தநாளில் அந்த வீடியோவைப் பார்த்தபோது என்னுடைய
குழந்தை எனக்காகவே பாடியதுபோல உணர்ந்து நெகிழ்ந்துபோனேன்”
என்கிறார் உன்னி கிருஷ்ணன்.
-
உத்ராவின் குழந்தைத்தனம் மாறாத குரல் இப்பாடலுக்குக் கச்சிதமாகப்
பொருந்தியிருக்கிறது. அதிலும் அவர் பாடுவதை வீடியோவில் பார்த்து
ரசிக்காமல் இருக்க முடியாது.
-
இதில் இன்னொரு சிறப்பு கோபிசெட்டிபாளையம் தாய்த்தமிழ் பள்ளி காலை
வணக்கத்தின்போது அத்தனை மாணவர்களும் இந்தப் பாடலைப் பாடும்
காட்சியாகும். எல்லோரும் பார்த்துக் கேட்டு ரசிக்கும்படியாக வீடியோ பதிவை
உருவாக்கிய ஒளிப்பதிவாளர் தமிழ்தம்பி, தொகுப்பாளர் எம்.சந்தீப்பும்
பாராட்டுக்குரியவர்கள்.
-
மொத்தத்தில், உலகத் தமிழ்க் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கும் பிறந்தநாள்
பரிசு இந்தப் பிறந்தநாள் பாடல்.
-
---------------------------
தமிழ் தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: சிறந்த பிறந்த நாள் பாடல்

Post by ayyasamy ram on Tue Aug 02, 2016 4:17 pm



-

-

-
ட்ரென்டன் (யு.எஸ்): வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை
(ஃபெட்னா) 2016 தமிழ் விழாவில்,
கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப்
பாடல் வெளியிடப்பட்டது.

பேராசிரியர் டாக்டர் கோ அன்பு கணபதி, பாலச்சந்திரன்
ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட
ப்ரெண்டா பெக், டாக்டர் சுபாஷிணி பெற்றுக்கொண்டனர்.
-
--------------------------------
தமிழ் ஒன் இந்தியா

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum