ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?

View previous topic View next topic Go down

கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?

Post by பாலாஜி on Tue Jul 26, 2016 4:50 pmஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் ரூ.61,176 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 9.56 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியைக் கடனாக பெற்று இருக்கின்றனர். இவற்றில் ரூ.1,875.56 கோடி வாராக் கடனாக மாறியிருக்கிறது.

இதில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் வழங்கப்பட்ட கடனில் வாராக் கடனாக மாறிய தொகை ரூ.847 கோடி. இந்த வாராக் கடனை 45 சதவிகித தொகைக்கு அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் அஸெட் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியிடம் (RARC) விற்பனை செய்திருக்கிறது.

வாராக் கடன்களை வசூலிக்கும் வேலையில் இறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், இப்போது சாட்டையை சுழற்றத் தொடங்கி இருக்கிறது. ரிலையன்ஸின் எச்சரிக்கைக்கு உள்ளான சில மாணவர்களிடம் பேசினோம்.

போனில் மிரட்டுகிறார்கள்..!

“இன்ஜினீயரிங் படிக்க ரூ.1 லட்சம் கடன் வாங் கினேன்; இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 லட்ச மாக உள்ளது. சமீபத்தில் ஒரு பெண்மணி எனக்கு போன் செய்து, இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை செலுத்தவில்லை எனில், கலெக்‌ஷன் டீமுக்கு அனுப்பி விடுவோம். அவர்கள் எப்படி வேண்டு மானாலும் பணத்தை வசூலிப்பார்கள்; கோர்ட்டில் கேஸ் போடுவார்கள் என்று மிரட்டினார்” என்றார் சேலத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்.

வில்லிப்புத்தூரைச் சேர்ந்த நாகூர் மைதீன், ‘‘நான் கல்விக் கடனாக ரூ.1.21 லட்சம் வாங்கினேன். நீங்கள் கடனை உடனே திருப்பிச் செலுத்தவில்லை எனில், எந்த ஒரு அரசு வேலைக்கும் உங்களால் விண்ணப்பிக்க முடியாது என பயமுறுத்தினார்” என்றார். ஆத்தூரைச் சேர்ந்த ராம்குமார், “நான் எம்சிஏ படிப்பதற்காக ரூ.1.70 லட்சம் கடன் வாங்கினேன். ஒரு வருடத்திலேயே வட்டியும், அசலும் சேர்த்து ரூ.2.48 லட்சம் போட்டுள்ளனர். நீங்கள் ஒரு வாரத்தில் பணத்தை திருப்பி அனுப்ப வேண்டும். இல்லை எனில் எதிர்காலத்தில் நீங்கள் எந்தக் கடனையும் வாங்க முடியாது என எஸ்பிஐ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்படி அனுப்பிய நோட்டீஸுக்கு ரூ.250 என் கணக்கில் சேர்த்துள்ளது’’ என்றார்.

வாராக் கடனும், வசூல் நடவடிக்கைகளும்!

கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் வேலை கிடைத்த உடனோ அல்லது படிப்பை முடித்த ஓராண்டிலேயோ கல்விக் கடன் தொகையை செலுத்தத் தொடங்க வேண்டும். இந்த கெடுவைத் தாண்டி மூன்று மாதங்கள் வரை கடன் தவணை செலுத்தப்படவில்லை என்றால் அது வாராக்கடனாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. கடந்த ஆண்டு திருவாங் கூர் ஸ்டேட் வங்கியின் கல்விக் கடனை இதே விதமாக விலைக்கு வாங்கிய ரிலையன்ஸ் சாட்டையை சுழற்ற ஆரம்பித்தது. இதற்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இப்போது உருவாகத் தொடங்கி உள்ளது.

என்ன தீர்வு..?

இந்தப் பிரச்னை குறித்தும், தீர்வு குறித்தும் வழக்கறிஞர் என்.ரமேஷிடம் பேசினோம். அவர் விளக்கமாகச் சொன்னார்.

“பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் தமிழக மாணவர் களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் ரூ.847 கோடி. இந்த வாராக் கடனை 45% தொகைக்கு, அதாவது, ரூ.381 கோடிக்கு ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்திடம் விற்பனை செய்திருக்கிறது. இதில் ரூ.54.24 கோடியை மட்டுமே இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கி யுள்ளது. மீதமுள்ள தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படி யாக வழங்க உள்ளது. ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனம் ரூ.847 கோடியை வட்டியுடன் மாணவர்களிடம் இருந்து வசூல் செய்துகொள்ளலாம். இது என்ன நியாயம்? மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் பொதுத் துறை வங்கிகள், மக்களின் பணத்தை தனியார் நிறுவனங்கள் அனுபவிக்க அனுமதிப்பது எப்படி சரியாகும்?

கடன் பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்தத் தேவையில்லை என யாரும் வாதாடவில்லை. வங்கியிலிருந்து வாங்கிய கடனை திரும்பக் கட்டியாக வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தக் கடனை முறைப் படி வசூலிக்க நடவடிக்கை எடுப்பதே சரி.
இது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன். வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு திரும்ப செலுத்தலாம் எனச் சலுகையோடு வழங்கப்பட்ட கடன். கடன் பெற்ற பெரும்பாலானவர்கள் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் கள். பொறியியல் படிப்பை படித்தவர்கள். படிப்பை முடித்த ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப் பின்றி இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கடனை திருப்பிச் செலுத்த வசதியின்றி இருப்பவரைக் கடன் செலுத்து மாறு லாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனம் மிரட்டினால் அவரால் என்ன செய்ய முடியும்?.

நான்கு கேள்விகள்..!

வாராக் கடனை ‘சட்டப்படி’ வசூல் செய்யும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ளது சில கேள்விகளை எழுப்புகிறது. 1. ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்துக்கு வழங்கிய 55% தள்ளுபடியை ஏன் கடன் பெற்ற மாணவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கக் கூடாது? மீதமுள்ள 45% கடன் தொகையை திரும்ப செலுத்த அதே 15 ஆண்டு கால அவகாசத்தை மாணவர்களுக்கு தரக்கூடாது?

2. வாராக் கல்விக் கடனை வசூல் செய்ய, பாரத ஸ்டேட் வங்கியே ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது? பாரத ஸ்டேட் வங்கிக்குள்ளேயே, கடன் வசூலிக்கும் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள லாமே! ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்தால், வாராக் கடனை சட்டப்படி வசூல் செய்ய முடியுமெனில், ஏன் அதை பாரத ஸ்டேட் வங்கியே செய்யக்கூடாது?

3. பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்குபவர், அந்த வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அந்தக் கடன் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்துக்கு விற்கும் முன்பு, கடன் பெற்றவரிடம் ஆட்சேபனை உள்ளதா என கேட்க வாய்ப்பு தராதது ஏன்?

4. கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கியானது நீதிமன்றத்தின் மூலமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். வங்கிக்குள்ள அந்த உரிமைதான், கடன் வசூல் நிறுவனத்துக்கும் உள்ளது. எனவே, கடனை விலைக்கு வாங்கும் நிறுவனமும், சட்ட முறைப்படி நீதிமன்றம் மூலமே கடனை வசூல் செய்ய வேண்டும் என வங்கிகள் நிபந்தனை விதிக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி இப்படி நிபந்தனை விதித்திருக்கி றதா?என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, கடன் வாங்கியவர்கள், கடன் வசூலிக்க வருபவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

1. வசூல் ஏஜென்டைத் தவிர்க்க வேண்டாம். வசூல் செய்யவரும் ஏஜென்டின் அடையாள அட்டை மற்றும் வங்கி அல்லது கடன் வசூல் நிறுவனத்தின் கடிதம் ஆகியவற்றை சரி பார்க்கவும். தொலைபேசியில் பேசினால், எண்ணையும் பெயரையும் குறித்து வைக்கவும். அத்துமீறும்போது புகார் செய்ய உதவும்.

2. கடன் தொடர்பாக பேச, குறிப்பிட்ட இடத்தையும், நேரத்தையும் நீங்களே குறிப்பிட்டு சொல்லலாம்.

3. உங்களைப் பற்றிய விவரங்கள் எதையும் தர வேண்டாம்.

4. ஒவ்வொரு முறை பேசும் போதும் ஒலிப்பதிவு செய்தோ அல்லது குறித்து வைத்தோ கொள்ளுங்கள்.

5. கடன் தொகை கணக்கில் தவறிருந்தால், ஸ்டேட்மென்ட் கேட்கலாம். கடன் செலுத்த முடியாமல் இருந்தால், பொய்யாக கால அவகாசம் கேட்க வேண்டாம். பணம் செலுத்தினால் காசோலை மூலம் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்வது அவசியம்.

6. உங்களிடம் அத்துமீறி பேசினால், உடனே நீங்கள் பேசுவதை நிறுத்திவிடுங்கள். பேச விருப்பமில்லை என்றும் சட்டப்படி நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவியுங்கள்.

7.அதன் பின்னும் தொடர்ந்தால், ஏஜென்ட் மீதும் வசூல் நிறுவனத்தின் மீதும் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.

8. வசூல் நிறுவனம் மீது ரிசர்வ் வங்கியில் புகார் செய்யலாம்.

இதுபோன்ற தவறான கடன் வசூல் முறைகளை தடுக்க அமெரிக்காவில் Consumer Credit Protection Act என்ற சட்டம் உள்ளது. இந்தியாவில் அப்படி சட்டம் இதுவரை இல்லை’’ என்று முடித்தார் வழக்கறிஞர் ரமேஷ்.

இது தொடர்பாக எஸ்பிஐ வங்கியுடனும் ரிலையன்ஸ் அஸெட் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டபோது சரியான பதில் தரவில்லை. அவர்கள் இது குறித்து விளக்கமளித்தால், அதை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

கல்விக் கடனோ, தொழில் கடனோ அதை எந்த வங்கியில் வாங்கி இருந்தாலும் திரும்பக் கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கடனை திரும்பக் கட்ட முடியாத போது, வங்கியானது கடன் தந்தவரிடம் நேரடியாகப் பேசி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சரியான அணுகுமுறை!

ந.விகடன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக அரசு கவனிக்குமா?

தமிழகத்திலிருந்து மட்டும் கிட்டதட்ட 10 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியை கடனாக பெற்றிருக்கின்றனர். இவற்றில் ரூ.1,875.56 கோடி மட்டும் வாராக் கடனாக மாறியிருக்கிறது. இதை தமிழக அரசே செலுத்தித் தள்ளுபடி செய்யலாமே என்று வேண்டுகோள் விடுக்கத் தொடங்கி இருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். தமிழக அரசு இதை கவனிக்குமா?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

லெனின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

Post by பாலாஜி on Wed Jul 27, 2016 12:14 pmபாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாததால் 23 வயது இளைஞன் தற்கொலை செய்துகொண்டான் என்ற செய்தி கேட்டவுடன் மனம் பதைபதைத்தது. எப்படி இவ்வாறெல்லாம் நடக்க முடியும் என்ற பலத்த சிந்தனை மனதுக்குள் மீண்டும் மீண்டும் எழுந்தது. நேரிலேயே சென்று அவர்களைப் பார்த்துவிடுவோம் என்று நண்பர்கள் சாமுவேல்ராஜ், க.சாமிநாதன், ஆர்.கிருஷ்ணன் ஆகியோருடன் புறப்பட்டேன்.

போகும் வழியில் இதே பிரச்சினைக்காக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். மதுரை ராஜாஜி நகர், அனுப்பானடி பகுதியில் வசிக்கும் லெனின் வீட்டைக் கண்டுபிடித்துச் செல்லும்போது இருட்டிவிட்டது. வீட்டில் ஏராளமான உறவினர்கள் துக்கம் விசாரிக்கக் குழுமியிருந்தனர்.

ரிலையன்ஸின் மிரட்டல்

லெனினின் தந்தை கதிரேசன் சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு எங்களிடம் நடந்ததை விவரித்தார். “கடந்த ரெண்டு மாசமா விடாம போன் மேல போன் வந்துகிட்டே இருந்துது. நீங்க லெனினின் அப்பா வான்னு கேட்டாங்க. ஆமான்னதும், உங்க பையன் பேங்க்ல கடன் வாங்கியிருக்காரு. அந்தக் கடன நீங்க உடனே அசலும் வட்டியுமா கட்டணும்னு சொன்னாங்க. எனக்கு என்ன ஏதுன்னு வெவரம் புரியல. பேசறது யாருன்னு கேட்டா, நாங்க ரிலையன்ஸ் கம்பெனில இருந்து பேசறோம்னு சொன்னாங்க. எனக்குத் தலயும் புரியல.. வாலும் புரியல. நாம ஸ்டேட் பேங்க்லதான கடன் வாங்குனோம். வேற யாரோ கடன திருப்பிக் கட்டச் சொல்லிக் கேக்கறாங்களே அப்படீன்னு எனக்கு நானே யோசிச்சிட்டிருந்தேன்.

திரும்பத் திரும்ப போன் மேல போன் போட்டு மிரட்டர தொனியில தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னால நெருக்கடியைத் தாங்க முடியல. சரி, பையன்கிட்ட எப்படியும் சொல்லிதான ஆகணும்னு போன வாரம் அவன்கிட்ட சொன்னேன். அவன் ஒருமாதிரி ஆயிட்டான். பொலம்ப ஆரம்பிச்சிட்டான். ‘அப்பா நான் படிச்சி ஒண்ணும் பிரயோஜனம் இல்லப்பா.. என்னாலதான உங்களுக்கு இந்தக் கஷ்டம். எந்த வேலையும் கெடைக்க மாட்டேங்குது. நான் உங்களுக்கு ரொம்பப் பாரமா ஆயிட்டேம்ப்பா’ன்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தான்.

ஸ்டேட் பேங்க்கால் போன வாழ்க்கை

அன்னைக்கு ராத்திரி ரொம்பப் புலம்பினான். நானும் அவங்கம்மாவும் அவன கவலப்படாதன்னு தட்டிக் குடுத்தோம். மறுநாள் காலைல நான் எப்பவும்போல காலையிலயே வேலைக்குப் போயிட்டேன். ஒரு ஒம்பது மணி இருக்கும். அவங்க அம்மாகிட்டயிருந்து போன் வந்துது. ‘என்னங்க… பையன் எவ்வளவு தட்னாலும் கதவத் தெறக்க மாட்டேங்கறான். நீங்க செத்த வந்துட்டுப் போங்க’ன்னாங்க. நானும் பதறியடிச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். கதவ தட்டித் தட்டிப் பாத்தோம். கதவே தெறக்கல. அதுக்குள்ள பக்கத்து வீட்ல இருக்கவங்க எல்லாம் வந்துட்டாங்க. கதவ ஒடச்சிப் பாத்தா பையன் தூக்குல தொங்கிக்கிட்டிருக்கான்’’- கதறி அழுதார் கதிரேசன்.

போன எங்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே புரியவில்லை. ஒரு மகனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி 23 வயதில் பலி கொடுப்பது சாதாரண இழப்பில்லை. பெரும் கொடுமை!

லெனினுடைய தாய்மாமன் எங்களைப் பார்த்து ஆவேசமாகக் கேட்டார், “எங்க பையன் ஸ்டேட் பேங்க்ல தானங்க கடன் வாங்கினான். அத வசூல் பண்றதுக்கு ரெளடி மாதிரி ரிலையன்ஸ் எப்படி வருவாங்க? யாரு அவங்களுக்கு அந்த அதிகாரத்தக் குடுத்தாங்க?”

ஒரே தவணையில் போன உயிர்

லெனின் 2010-ல் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில், சிவில் இன்ஜினீயரிங் சேர்ந்து படிப்பதற்காக மதுரை ஸ்டேட் வங்கிக் கிளையில் கல்விக் கடன் பெற்றார். 2014-ல் படிப்பை முடிக்கும் வரையில் அவர் வாங்கிய கடன் ரூ. 1,90,000. ஆனால், ரிலையன்ஸ் கம்பெனி அவருக்கு மே மாதம் 6-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் 15 நாட்களுக்குள் அன்றைய தேதி வரையிலான வட்டியுடன் ரூ. 2,48,623-ம் அதற்குப் பிறகு வரும் நாட்களுக்கான வட்டியும் மற்ற செலவுகளையும் சேர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

லெனினின் தந்தை கதிரேசன், தினக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தனார். லெனினுடைய தாயார் எந்தப் பணிக்கும் செல்லாத குடும்பத் தலைவி. அவர்களுடைய ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூபாய் 2.50 லட்சத்துக்கு மேல் இல்லை. பெற்றோர்களின் கூட்டு வருமானம் வருடத்துக்கு ரூ. 4.50 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், படிப்புக் காலத்துக்கும் அதன் பிறகு வேலை கிடைக்காவிட்டால், ஒரு வருடத்துக்கும் வட்டி எதுவும் கிடையாது. இந்த வட்டியை மத்திய அரசாங்கமே ஏற்கும். அப்படியானால், 2015 ஜூன் மாதம் வரை அவருடைய கடனுக்கு வட்டி கேட்கக் கூடாது. அதன் பிறகு, ஒரு வருடத்துக்கு 11.25% வட்டி. அசலும் வட்டியுமாகச் சேர்த்தாலும் ரூ. 2,11,000 தாண்ட வழியில்லை. அப்படி இருக்கும்போது, ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் ரூ. 2,48,623 திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கேட்கிறது? கல்விக் கடனை 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்த கால அவகாசம் இருக்கும்போது, இந்த ஏழை மாணவனை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கேட்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

சீரழிக்கும் சதி

கடன் வாங்கும்போதே படிப்பு முடிந்து ஒரு வருடம் கழித்து மாதம் ரூ. 4,155 மட்டும்தான் மாதத் தவணையாக 60 மாதம் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது மொத்தக் கடனையும் ஒரே தவணையாகக் கேட்டதால்தான் அந்த ஏழைக் குடும்பம் பயந்துவிட்டது. அதுதான் அந்த மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டியது. இப்படி ஒரு நிலைப்பாட்டை ரிலையன்ஸ் கம்பெனி எப்படி எடுக்க முடியும்? அதன் பின்புலம் என்ன?

ஸ்டேட் வங்கி, கல்விக் கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்கும்போது 55% தள்ளுபடிசெய்து 45% மட்டுமே கொடுத்தால் போதும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி ரிலையன்ஸ் கொடுக்க வேண்டிய தொகையிலும் 15% முதலில் கட்டினால் போதும். மீதமுள்ள 85% தொகையை 15 வருட காலத்தில் செலுத்தலாம் என்று சலுகை அளித்துள்ளதாம். ரிலையன்ஸ் கம்பெனிக்குக் காட்டும் சலுகையைக்கூட ஓர் ஏழை மாணவனுக்குக் காட்ட ஸ்டேட் வங்கி நிர்வாகம் தயாராக இல்லை. இது பொதுத் துறையை உள்ளிருந்து சீரழிக்கும் சதிதானே?

ரிலையன்ஸ் நிறுவனமே பல வங்கிகளுக்கு ரூ.1,25,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கும்போது, அந்நிறுவனத்திடம் இந்தக் கடனை வசூல் செய்யும் வேலையை ஸ்டேட் வங்கி போன்ற பொதுத் துறை வங்கி எப்படிக் கொடுக்க முடியும்?

கடனை வசூலிக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலும், பல நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன. அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, ஓர் ஏழை மாணவனிடம் எப்படி இத்தகைய கெடுபிடியை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள முடியும்?

லெனின் மரணத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியும், ரிலையன்ஸ் நிறுவனமும், இதற்கு வழிவகுத்த ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும்தானே பொறுப்பு. அந்தப் பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க முடியுமா?

-சி.பி.கிருஷ்ணன், பொதுச்செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு.
தி இந்து


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?

Post by M.Jagadeesan on Wed Jul 27, 2016 12:54 pm

நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன ? ஒரு தற்கொலை நடந்தபின்னும் பேசாமல் இருக்கலாமா ? நீதிமன்றங்கள் தாமாகவே முன்வந்து , இதை வழக்காகப் பதிவுசெய்து விசாரிக்கவேண்டும் . ஒரு பேட்டை ரவுடி போல , ரிலையன்ஸ் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum