ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

View previous topic View next topic Go down

சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Post by ayyasamy ram on Tue Jun 28, 2016 11:00 pmஆந்திர மாநிலம் போன்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.இந்த நிகழ்வை அடுத்து பொது இடங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் என்ன? என்பது தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பி தலைமை நீதிபதி எஸ்.கே.கெளலுக்கு கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனுவை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவி்ல் கூறியிருப்பதாவது:உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 15 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதன்படி, அறிவியல் வளர்ச்சியில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களைக்கூட பொருத்தாதது ஏன்?.ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள், நவீன ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதியை ஒதுக்காதது ஏன்?.

இதுவரை எத்தனை இடங்களில், ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இன்னும் எத்தனை இடங்களில், இந்த கேமிராக்களை பொருத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில், முக்கியஇடங்களில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தவும், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும், இன்னும் எவ்வளவு காலஅவகாசம் தேவை.நாளுக்கு நாள் கொலைக்குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்.

பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவல் நிலையங்கள் மற்றும் கண்காணி்ப்பு கேமிராக்களுடன் இணைந்த, 24 மணி நேரமும் செயல்படும் நவீன கட்டுபாட்டு மையங்களை ஏன்? நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏன் உருவாக்கக்கூடாது.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள், விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணி்ப்பு கேமிராக்களை பொருத்த மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

நள்ளிரவு நேரங்களிலும், பொது இடங்களை கண்காணித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பயன்தரும் இந்த திட்டங்களை செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐடி கம்பெனிகளின் பங்களி்ப்பை ஏன் மாநில அரசு நாடக்கூடாது.

ஆந்திராவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசு தனியார் பங்களிப்புடன் -ஆந்திர பிரதேசம் பொதுமக்களுக்கான பாதுகாப்புச் சட்டம்-2013 –ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றோ அல்லது இந்த சட்டத்தை ஏன் மத்திய அரசே இயற்றக்கூடாது?

பெண் சுவாதி கொலை சம்பவம் நம்மை கூனிக்குறுகி தலைகுனிய வைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அவ்வப்போது ஆண்களால் இதுபோல பலியாகி வருகின்றனர்.பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து பள்ளியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.ஏன்

அரசு பள்ளிகளில் மாணவருடைய மனோபாவத்தை அளவிடும் பணிகளை செய்யக்கூடாது? பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கத்தைக் கற்றுத்தரும், குறிப்பாக பெண்களுக்கு மதிப்பளிக்கும் புதிய கல்வியை ஏன் தொடங்கக்கூடாது?சுவாதி படுகொலை நிகழ்வுக்கு பொறுப்பேற்றும், அவருக்கு பாதுகாப்பு வழங்க தவறியதற்கும், உடலை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைமேடையிலேயே போட்டதற்கும் இழப்பீடாக ரயி்ல்வே நிர்வாகம் ஏன் சுவாதி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கூடாது?

ரயில்வே போலீஸில் பெண் போலீஸாரின் எண்ணிக்கையை ஏன் அதிகப்படுத்தக்கூடாது?அரசு இது தொடர்பாக ஏன் துண்டுபிரசுரங்களை வெளியிட்டு பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது?

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும், இந்த 15 கேள்விகளுக்கும் மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக முதன்மைச் செயலாளர், உள்துறை தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்டு 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Post by விமந்தனி on Wed Jun 29, 2016 5:23 pm

கேள்விகளை பரிசீலித்தால் நன்றாகத்தான் இருக்கும்.


Last edited by விமந்தனி on Thu Jun 30, 2016 7:42 pm; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Post by சிவனாசான் on Wed Jun 29, 2016 9:25 pm

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் தண்டனையே கூடாது .இருந்தால் எதிர்பும் போராட்டமுமே நிலவும். பின்ன எப்படிங்க >>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3001
மதிப்பீடுகள் : 1031

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Post by krishnaamma on Thu Jun 30, 2016 12:26 am

பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து பள்ளியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

முதலில் வீட்டில் சொல்லவேண்டும்........அம்மாதான் சொல்கிறா, 'அவன் ஆண் பிள்ளை எப்படி வேண்டு மானாலும் நடப்பான்" என்று...முதலில் அதை சொல்லாமல் இருக்கணும், ............'பெண்களை மதித்து நடக்கணும்' என்று முதலில் வீட்டில் சொல்லித்தரணும்......,அதுக்கு வீட்டில் இருப்பவர்கள் பெண்களை மதிக்கணும் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum