புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
62 Posts - 57%
heezulia
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
104 Posts - 59%
heezulia
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_m10வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 8:08 am

குறிப்பு
--------------

கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம் ...
இந்தப் பதவிக்கு வர அந்தப் பெண் எவ்வளவு போராடி இருப்பாள்.
எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்.
எல்லாவற்றிலும் போராடி மீண்டு வரவில்லையா?
-
இந்த சிந்தனையின் விளைவாக எழுதப்பட்ட சிறந்த
கதை...
-
மனதை நெகிழ வைக்கும் ஒரு கதை...:-

-
-------------------------------
வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை! Uf07BWBWQmC1TN6BT9c6+E_1465901445
-


தனது மகன் அரவிந்தின் நடவடிக்கை கொஞ்ச நாளாகவே
வித்தியாசமாகப் பட்டது சாவித்திரிக்கு. யாருடனும் சரியாகப்
பேசுவதில்லை. அடிக்கடி அவனது அறைக்குள் நுழைந்து கதவைப்
பூட்டிக் கொள்கிறான்.
-
நேருக்கு நேர் நின்று முகம் கொடுத்துப் பேசுவதைத் தவிர்க்கிறான்.
எப்போதும், எதற்கோ பயந்து, அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்
கொள்ள ஓடி ஒளிந்து கொள்ள நினைக்கிறவனைப் போல தமது
அறைக்குள் அடைந்தே கிடக்கிறான். சாப்பிடும்போது கூட
மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது இல்லை.
-
சோகம் நிரந்தரமாக அவனது முகத்தில் குடியிருந்தது போல ஒருவித
பதற்றமான மனநிலையிலேயே இருந்தான். இப்போது தான் கல்லூரி
முதல் வருடம் சேர்ந்திருக்கிறான். காலேஜிலே எதுவும் ராக்கிங்
பிரச்னை இருக்குமோ.. அதை வெளியே சொல்ல முடியாமல்
தனக்குள்ளேயே மருகிக்கிட்டு இருக்கானோ... என்று நினைக்கும்போதே
அவளது மனதை உறுத்திக் கொண்டிருக்கும் வேறு சில விஷயங்களும்

ஞாபகத்திற்கு வந்தன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 8:09 am

-
கதவைப் பூட்டிக் கொண்டு அரவிந்த் என்ன பண்ணுகிறான் என்று தெரிந்து
கொள்ள அவனது ரூமை எட்டிப் பார்க்கலாமா? என்று அவளத தாய் மனம்
நினைத்தபொழுது 'என்னதான் பெற்றவளாக இருந்தாலும், வயது பையனின்
அறையை எட்டிப் பார்ப்பது நாகரிகமா?' என்று அவளது மனசாட்சி அவளை
அதட்டியது.
மனசாட்சியைத் தாய் மனதுதான் வென்றது.
-
'ஒரு தாயாக மகன் என்ன பண்ணுகிறான் என்பதைத் தெரிந்து கொள்வது
முறைதானே.. அவன் நல்லதுக்காகத்தானே அவனது ரூமை பார்க்கப்
போகிறோம். அவனுக்கு கெடுதல் செய்யவா பார்க்கப் போகிறோம்?' என்று
நினைத்துக் கொண்டே அவனது அறையை எட்டிப் பார்க்கும் முயற்சியில்
இறங்கினாள். ஆனால் சாவித் துவாரம் நன்கு அடைக்கப்பட்டிருந்தது.
வேறு எந்த வகையிலும் அறையைப் பார்க்க முடியவில்லை.
-
உடனே படபடவென்று அறைக் கதவை தட்ட ஆரம்பித்தாள். கதவு திறக்க
சிறிது நேரமானது.
பாதி கதவை திறந்தவாறு, அவன் என்னவென்று கேட்க, முழுக்கதவையும்
திறந்தபடி உள்ளே நுழைந்தாள்.
அவளின் நினைப்பு சரிதான் என்பதை அங்கேயிருந்த பொருள்கள்
அவளுக்கு உணர்த்தின.
-
அப்போது டியூஷன் பேயிருந்த பிள்ளைகளை கூப்பிடச் சென்ற கணவரும்,
பிள்ளைகளும் திரும்பி விட்டார்கள் என்பதை வாசலில் நின்ற பைக்கின்
ஒலி சொல்லியது.
-
பைக்கின் ஒலியைக் கேட்டதும் அரவிந்தின் முகத்தில் கலவரம் தோன்ற,
ரூமில் உள்ள பொருட்கள் எல்லாம் எடுத்து மறைத்து வைக்க ஆரம்பித்தான்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 8:10 am

-
'அரவிந்த் இப்ப இதையெல்லாம் ஒளிச்சு வச்சிருவே... ஆனா எவ்வளவு
நாள்தான் இதையெல்லாம் உன்னாலே ஒளிச்சு வைக்க முடியும்? நெருப்பை
துணி போட்டு மூட முடியுமா? என்னைக்கோ ஒருநாள் தெரியப்போறது
இன்னைக்கே தெரியட்டுமே... எப்ப இருந்தாலும் பிரச்னையை எதிர் கொள்ளத்
தானே வேண்டும்?' என்று சொல்லவும், என்ன செய்வது என்று தெரியாமல்
திகைத்து நின்றான் அரவிந்த்.
-
உள்ளே நுழைந்த சாவித்திரியின் கணவர் ஞானவேலும், இரண்டாவதாகப்
பிறந்த இரட்டையர்களான ராஜேஸ்வரியும், ராஜேஷூம், அரவிந்தனின்
அறையில் சாவித்திரி இருப்பதைப் பார்த்து அங்கேயே வந்தார்கள்.
அவர்களுக்கும் அரவிந்தனின் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி.
-
'ஏய் அரவிந்த், இதென்ன பொம்பிள வேஷம்? காலேஜ்ல ஏதாவது நாடகத்திலே
நடிக்கப் போறியா? சவுரிமுடி, கண்மை, லிப்ஸ்டிக், பாசி மணி மாலைகள் வேறு..
அய்யோ! மகத்துக்குப் பூசுற மஞ்சள் தூள் வேற இருக்கு.. சரி, மத்ததெல்லாம்
பொம்பிளை வேஷம் போடுறதுக்கு வாங்கி வச்சிருக்கே. முகத்துக்குப் பூசுற
மஞ்சள் எதுக்குடா? இந்தப் பூசனா மீசையே வளராதே...?' என்று பிள்ளைகள்
இருவரும் கோரஸாகச் சிரிக்க,
-
'இதப் பாருங்க, நான் சொல்றதைக் கேட்டு நீங்க அதிர்ச்சி அடையக்கூடாது,
பிள்ளைகளா. நீங்களும் சின்ன பிள்ளைங்க கிடையாது. உங்களுக்கும் ஓரளவு
விவரம் தெரியுற வயசுதான். இப்ப நம்ம அரவிநத் ஆம்பிள கெடையாது.
அவன் திருநங்கையா மாறிக்கிட்டு இருக்கான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 8:10 am



-
ஒருமுறை அவனது அறையை பெருக்கப் போனபோது காய்ந்த
மல்லிகைப்பூ ஒன்று கிடந்தது. அடுத்த முறை பாத்ரூமின் ஓரத்தில்
மஞ்சள் தூள் கறையாகப் படிந்தது போல இருந்தது. இவனது பாத்ரூமில்
மஞ்சள் வருவதற்கு என்ன காரணம்? மற்றொரு முறை தரையோடு
தரையாக அழகான டிசைனில் கல் பதித்த ஸ்டிக்கர் பொட்டு ஒன்று
ஒட்டிக் கொண்டிருந்தது.
-
அரவிந்தனின் அறைக்கு அவளைத் தவிர வேறு பெண்கள் வருவதற்கு
வாய்ப்பு இல்லை. அவளும் இந்த மாதிரி பொட்டைப் பயன்படுத்துவது
இல்லை. பின் எப்படி இந்தப் பொட்டு இங்கே வந்திருக்கும்?
அவனுடைய தற்போதைய மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்க
முடியும்?
-
மீன்பிடி திருவிழாவிற்குப் பிறகான குளத்தைப் போல குழம்பிக் கிடந்தது
அவளது மனம்.
-
நமக்காக என்னதான் அவன் மனசக் கட்டுப்படுத்தினாலும் அவனோட
ஹார்மோன் அவன் மனசையும் மீறி அவனை இப்படிப் பண்ண வைக்து' எனறு
சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஞானவேல் ஓடிச் சென்று அரவிந்தை அடிக்க
ஆரம்பித்தார்.
-
'ஏண்டா நாயே.. எதுக்குடா இங்க வந்து பொறந்தே..? அய்யோ நாங்க போன
ஜென்மத்திலே என்ன பாவம் பண்ணினோமா! இப்படி ஒண்ணு வந்து எங்க
வம்சத்துல பொறந்திருச்சே.. அய்யோ வெளியே தெரிஞ்சா அவமானமாச்சே..
சொந்த பந்தமெல்லாம் எம் மூஞ்சிலே காறித் துப்புவாங்களே! நான் எப்படி
வெளியே தலை காட்டுவேன்.. என் தலையிலே நெருப்பை அள்ளிப்
போடறதுக்குன்னே நீ வந்து பொறந்திருக்கியா?' என்று அவனை மாறி மாறி
அடிக்க ஆரம்பித்தார்.
-
'ஏங்க, ஒரு நிமிஷம் உங்க வெறி பிடிச்ச தாக்குதல நிப்பாட்டுறீங்களா?
அவன் என்ன தப்புப் பண்ணிட்டான்னு அவனப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க...'
-
'இவன் உயிரோடு இருந்தா தெனத்துக்கும் இவனப் பார்த்து அழ வேண்டி
இருக்கும்.... செத்துப் போயிடுடா... இல்லாட்டி கண்காணாம எங்காவது ஓடிப்
போயிடு. இனிமே இந்த வீட்டுல உனக்கு இடமில்லை..' என்று மறுபடியும் அவனை
அடிக்க கையை ஓங்க,
-
'அவன் ஏன் வீட்டை விட்டுப் போக வேண்டும்? அவன் இங்கேதான் இருப்பான்'
என்று தைரியமாக முன்னால் வந்தாள் சாவித்திரி
-

'ஏய், அறிவிருக்காடி உனக்கு? லூசா நீ..? இந்த மாதிரி நமக்கு ஒரு பிள்ளை
இருக்குன்னு தெரிஞ்சா, அது எவ்வளவு பெரிய அவமானம்கிறது உனக்குத் தெரியுமா?
ரோட்டுல தலைநிமிர்ந்து நடக்க முடியுமா? சொந்தபந்தமெல்லாம் நம்மள ஒதுக்கி
வச்சிர மாட்டாங்களா? நாளைக்கு துணிஞ்சி நம்ம குடும்பத்துக்கு யாராவது பொண்ணு
கொடுப்பாங்களா? இல்லே நம்ம வீட்டுலேருந்து பொண்ணு தான் எடுப்பாங்களா?
இவனுக்க கீழே இன்னும் ரெண்டு பிள்ளைங்க இருக்குதுக...
அதுக ஸ்கூலுக்குப் போக முடியுமா? கூடப் பிடிக்கிற பிள்ளைங்க அவங்கள கிண்டல்
பண்ண மாட்டாங்களா?
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 8:11 am

-
இவனாலே அதுக ரெண்டு பேரோட வாழ்க்கையும் வீணாயிடுமே.. இவ்வளவு பிரச்னை
இருக்கிறப்ப அவன் ஏன் வீட்டை விட்டுப் போகணும்னு பேக்குறே? அவன மாதிரி
உனக்கு புத்தி கித்தி மழுங்கிப் போச்சா?'
-
'சரி, வீட்டை விட்டு அனுப்பிடலாம். அப்படி அனுப்பிட்டா அவனோட வாழ்க்கை
என்னாகும் கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தீங்களா?'
-
'என்னமோ ஆகட்டும்... இவன மாதிரி இருக்கிறவங்க எப்படி பொழைக்கிறாங்களோ,
அதே மாதிரி இவனும் பொழைக்கட்டும்...'
-
'இவன மாதிரி இருக்கிறவங்க எப்படி பொழைக்கிறாங்கங்கிற கதை உங்களுக்குத்
தெரியுமா? தெரியாதா? ஒங்களுக்கு ஒண்ணு தெரியுமா? கொலை பண்ணுனவன்,
கொள்ளை அடிச்சவன், பிஞ்சு தளிர்களை சிதைச்சவங்களுக்குக்கூட இந்த
சமுதாயம் வாடகைக்கு வீடு கொடுத்திடும், அவங்க நம்பி வேலையும் கொடுத்திடும்.
ஆனா இவன் மாதிரி ஆட்களுக்கு வீடு கொடக்காது. வேலையும் கொடுக்காது.

ஆனா இவங்களுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே... வேளா வேளைக்குப்
பசியெடுக்குமே... யாராவது நமக்கு வேலை தருவாங்களான்னு லோ... லோ...ன்னு
அலைஞ்சுட்டு... கடைசியிலே வேலை ஒண்ணும் கிடைக்காம, அவங்க வயித்துப்
பசியைப் போக்க, மத்தவங்க உடம்புப் பசியைத் தீர்த்து வைக்கிறாங்க...
அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான்.. அப்புறம் பிச்சை எடுக்க ஆரம்பிச்சிடுறாங்க...
-
இவங்களுக்குள் எத்தனையோ டாக்டர்கள் மறைஞ்சு போய் இருக்காங்க.
அவங்க நல்லா படிச்சி, ஃபேமஸான சர்ஜனா மாறி கத்தியை எடுத்து
எத்தனையோ உயிரைக் காப்பாத்த வேண்டிய கைகள், மத்தவங்க முன்னாடி
கையைத் தட்டிப் பிச்சை கேட்க வேண்டிய அவலநிலையில் இருக்கு.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 8:12 am


இஞ்சினியரா.. கலெக்டரா... எக்ஸிகியூட்டிவா இருக்க
வேண்டியவங்க, ரோட்டுல நின்னு பாட்டுப் பாடி,
ஆட்டாம் ஆடி பிச்சை எடுக்கிறாங்க. இதெல்லாம் யாராலே...?'
-
'என்னமோ நான் மட்டும்தான் இவங்களுக்கு எதிரா இருக்கிற
மாதிரி என்னைப் பாத்து யாராலேன்னு கேக்குறே..? நான் மட்டுமா
இவங்கள ஒதுக்கி வைக்கணும்னு நெனைக்கிறேன். இந்தச்
சமுதாயமே இவங்கள ஒதுக்கி வச்சிருக்கு...'
-
'இந்த ஊரு, உலகம் அப்புறம் சமுதாயம்னு சொல்றீங்களே...
அவங்கெல்லாம் யாரு? நாமதாங்க இந்தச் சமுதாயம். நாமதான்
இந்த ஊரு, உலகம் எல்லாமே... ஒரு பிள்ளை கண்ணு தெரியாம
பொறந்திட்டா, அய்யய்யோ எம்பிள்ளை குருடா பொறந்திடான்னு
வெளியே துரத்தி விடுறோமா?
-
இல்லே வாய் பேசாமலோ, கை, கால் ஊனத்தோடு பொறந்தாலும்,
அது நம்ம பிள்ளை, அதை வளர்த்து ஆளாக்கணும்னு அதுக்குன்னு
இருக்கிற சிறப்பு ஸ்கூல்ல சேர்த்துப் படிக்க வைக்கிறோம்ல..
ஆனா இவங்கள மட்டும் ஏன் வீட்டை விட்டு விரட்டி விடணும்னு
நெனைக்கிறோம். இதுவும் ஒருவகை ஊனம்தான்..
-
பால் ஊனம். சிலவங்களுக்கு அதிகப்படியா விரல் இருக்கிற மாதிரி.
இவங்களுக்கு அதிகப்படியா ஒரு எக்ஸ் குரோமோசோம் இருக்குது.
அதனாலே அது அவங்க தப்பு இல்லே. இப்படி தப்பே
பண்ணாதவங்களுக்குத் தண்டனை கொடுப்பது என்ன நியாயம்?'
-
'நீ என்னதான் சொன்னாலும் என் மனது ஏத்துக்காது. நீ நெனைக்கிற
மாதிரி இந்தச் சமுதாயத்தை எதுத்துக்கிட்டு வாழுறது சாதாரண
விஷயமில்லே...' ஞானவேல் பேசிக் கொண்டே போக, சாவித்திரி இப்போது
பிள்ளைகளிடம் நியாயம் கேட்டாள்.
-
'பிள்ளைங்களா... உங்ககிட்டேயே நான் கேக்குறேன். நீங்க ஸ்கூல்ல
பாரதியார் கவிதை படிச்சிருப்பீங்கள்லே. அதில் 'வௌ்ளை நிறத்தில்
ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்..'னு ஒரு பாட்டு உண்டு.
அந்தப் பாட்டுல அந்தப் பூனைக்கு பாம்பு மாதிரி ஒரு குட்டி,
பால் நிறத்தில் ஒரு குட்டி, கருஞ்சாந்து நிறத்தில் ஒரு குட்டின்னு பிறக்கும்.
-
எந்த மாதிரி பிறந்தாலும் அது எல்லாமே அந்தப் பூனைக்கு ஒன்றுதான்.
அது மாதிரி நம்ம இந்தியத் தாய்க்கு எல்லாரும் ஒண்ணுங்கிற
அர்த்தத்திலே பாடியிருப்பார். அதைத்தான் இப்ப உங்களுக்கு நான்
ஞாபக்கப்படுத்துறேன்.எனக்குப் பொறந்த மூணு பிள்ளைகள்ல ஒண்ணு
ஆணு, இன்னொன்னு பொண்ணு, அடுத்தது திருநங்கை..
-
நீங்க மூணு பேருமே எனக்கு ஒண்ணுதான்.
அரவிநத் இப்ப நம்ம வீட்டுல இருக்கணுமா? இல்லே அவனை வீட்டை விட்டு
வெளியே அனுப்பணுமா? ஏன்னா உங்க அப்பா சொல்ற மாதிரி நாளைக்கு
உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. ஆனா அரவிந்தை மட்டும்
நான் தனியே அனுப்ப மாட்டேன்.
-
அரவிந்த் வீட்டை விட்டு வெளியே போகணும்னா நானும் அவன்கூட
கிளம்பிடுவேன். உங்களப் பாத்துக்க உங்க அப்பா இருக்காரு. ஆனா அவனப்
பாத்துக்க என்னை விட்டா யாரும் கெடையாது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்
போதே குறுக்கே புகுந்த ஞானவேல், 'என்னடி மிரட்டுறியா? உம் பையனோடு
நீயும் போறதா இருந்தா சந்தோஷமா போயிடு..' என்று உறுமினான்.
-
'அப்பா, ஒரு நிமிஷம்.. இன்னைக்கு அண்ணனுக்கு வந்த பிரச்னை நாளைக்கு
எங்களுக்கும் வந்தா எங்களையும் வீட்டை விட்டுப் போகத்தானே சொல்லுவீங்க...
ஸ்கூல்ல பசங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு நெனைச்சு நாங்க பயப்படல..

ஏன்னா அம்மா சொல்ற மாதிரி எந்த ஒரு மாற்றமும் வீட்டிலேயிருந்துதான்
ஆரம்பிக்கணும். யாராவது எங்ககிட்ட 'உங்க அண்ணன் ஒரு திருநங்கைதானே'ன்னு
கேட்டால், 'அதுக்கு என்ன இப்போ? அதனாலே உங்களுக்கு என்ன கஷ்டம்?'னு
பதிலடி கொடுத்தா போதும், அதுக்கு அப்புறம் நம்மகிட்ட யாரும் கேள்வி கேட்க
மாட்டாங்க?

இந்தச் சமுதாயம் நாம ஓடுனா துரத்தும், எதுத்து நின்னா பின்வாங்கி ஓடிடும்'
என்று ராஜேஸ்வரி தெளிவாகச் சொல்ல,
'ஆமாப்பா.. ராஜேஸ்வரி சொல்றது சரிதான். அரவிந்த் வீட்டை விட்டுப்
போகணும்னா.. நாங்களும் போகிறோம்...' என்று ராஜேஷூம் ஒத்துப் பாட,
சிறிதுநேரம் அமைதியாக சோபாவில் போய் உட்கார்ந்திருந்தான் ஞானவேல்.
-
பிறகு எழுந்து வீட்டிற்குள்ளேயே அங்கேயும், இங்கேயும் நடந்து கொண்டிருந்தான்.
அவன் ஒரு முடிவுக்கு வரும்வரை அவனிடம் யாரும் பேச்சுக் கொடுக்க வேண்டாம்
என்ற முடிவுடன், பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுப்பதற்காக சமையலறையை
நோக்கிச் சென்றாள் சாவித்திரி.
-
காலையில் எழுந்ததும் காபி போட்டு எடுத்தபடி, ஞானவேலிடம் வந்தாள்.
அவனது முகத்தைப் பார்க்காமல் காபியை மட்டும் நீட்டினாள். கையில்
பேப்பரை வைத்திருந்தான். முதல் பக்கத்திலேயே கல்லூரி முதல்வராக
திருநங்கை நியமனம் பற்றிய செய்தி.

இந்தப் பதவிக்கு வர அந்தப் பெண் எவ்வளவு போராடி இருப்பாள். எத்தனை
அவமானங்களைச் சந்தித்திருப்பாள். எல்லாவற்றிலும் போராடி மீண்டு வர
வில்லையா? நாமும் நமது பிள்ளைக்காக வலிகளைப் பொறுத்துக் கொள்வோம்.
நாளை இந்தச் சமுதாயத்திற்கு முன்பு அவனை(ள) நல்ல நிலைக்குக் கொண்டு
வருவோம் என நினைத்துக் கொண்டான், காபியை வாங்கியவாறு .
-
'இங்க பாரு.. சாவித்திரி.. இந்த செமஸ்டர் லீவுலே அரவிந்துக்கு மருத்துவரீதியான
அறுவை சிகிச்சை ஏற்பாடு பண்ணிடலாம். நம்ம பிள்ளைங்க சொன்ன மாதிரி
இந்தச் சமுதாயத்தை எதுத்துப் போராடலாம். இந்தச் செய்தியைப் பார். இந்த
மாதிரி அவனும் ஒருநாள் நல்லநிலைக்கு வரலாம். அதுவரை நாம எல்லோரும்
சேர்ந்து போராடலாம். இப்ப அவன நிம்மதியா இருக்க் சொல்லு' என்று சாவித்திரியிடம்
ஞானவேல் சொல்ல, சாவித்திரிக்கு ஒரு பெரிய பாரம் மனதை விட்டு இறஙகிய உணர்வு
தோன்றியது.
-
தன்னால் மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது.. அதனால் யாருக்கும் தெரியாமல்
வீட்டை விட்டு ஓடிப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது அறையை
விட்டு வெளியே வந்த அரவிந்தின் முகத்திலும் ஒரு நிம்மதி பிறந்தது.
-
-------------------------------

எஸ். செல்வசுந்தரி, திருச்சி
மங்கையர் மலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 1:44 am

மிக அருமையான கதை ராம் அண்ணா....பகிர்வுக்கு மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக