ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

View previous topic View next topic Go down

முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Post by ayyasamy ram on Sun Jun 12, 2016 4:04 pm


-


‘விசாரணை’ படத்துக்குப் பிறகு தினேஷ் நடிப்பில்
வெளியாகும் படம், பெண்களை மையப்படுத்திய மற்றொரு
படம், படத்தின் ட்ரெய்லர் தந்த நம்பிக்கை, ஆரம்பத்திலிருந்து
படத்துக்குக் கிடைத்த முன்னோட்டங்கள் என்ற இந்த
காரணங்களே ஒரு நாள் கூத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை
ஏற்படுத்தின.
-
அந்த எதிர்பார்ப்புகளை ‘ஒரு நாள் கூத்து’ நிறைவேற்றும்
என்ற பாசிட்டிவ் எண்ணத்தோடு தியேட்டருக்குள் நுழைந்தோம்.
-
கதை:
-
மூன்று பெண்கள் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த காத்திருப்பில் சங்கடம், பிரச்சினை, குழப்பம், தயக்கம்,
தாமதம் என்ற பல்வேறு சூழல்கள் எட்டிப்பார்க்கின்றன. அதற்குப்
பிறகு அந்த மூவரும் என்ன ஆகிறார்கள்? திருமணம் ஆகிறதா?
யாருக்கு எப்படி ஆகிறது? என்பது மீதிக் கதை.
-
திருமணம் என்பது ‘ஒரு நாள் கூத்து’ என்று சொல்லப்படுவதுண்டு.
ஆனால், அந்த ஒரு நாள் கூத்துக்கு முன்னதாக நடைபெறும்
பரபரப்புகள்,நடைமுறை சிக்கல்கள், அதனால் ஏற்படும்
அழுத்தங்களை, வலிகளை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர்
நெல்சன் வெங்கடேசனை தமிழ் சினிமா வாழ்த்தி வரவேற்கிறது.
-
---------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Post by ayyasamy ram on Sun Jun 12, 2016 4:05 pm


-
கூச்ச சுபாவத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட குணம்
படைத்த கதாபாத்திரத்துக்கு தினேஷ் சரியாகப் பொருந்துகிறார்.
‘கோவணம் கூட கட்டத் தெரியாத என் அப்பாவை உன் அப்பா,
மாமா முன்னாடி நிற்க வெச்சு அசிங்கப்பட சொல்றியா?
-
நான் பேசுனாலும், பேசலைன்னாலும் அதோட அர்த்தம் உனக்கு
தெரியாதா?’ என காதலியிடம் தன்னிலை விளக்கம் கொடுக்கும்
போது தினேஷின் நடிப்பு கிளாஸ். முக பாவனைகளில் இன்னும்
நடிப்பைக் கொண்டு வாங்க நண்பா!
-
இன்னமும் முந்தைய படங்களின் பாதிப்பில் இருந்து வெளியே
வராமல் இருந்தால் எப்படி?
-
காதல், அழுகை, ஏமாற்றம், துயரம் என எல்லா உணர்வுகளையும்
சரியாக பிரதிபலிக்கிறார் அறிமுக நடிகை நிவேதா பெத்துராஜ்.
இயல்பான நடிப்பில் ஈர்க்கும் இவருக்கு தமிழ் சினிமாவில்
வாய்ப்புகள் வரிசை கட்டலாம்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Post by ayyasamy ram on Sun Jun 12, 2016 4:06 pm


-
மைக் முன்னாடி பேசும் ரித்விகா,

-
அதற்குப் பிறகு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன்
கெஞ்சும் தொனியில் முதிர்ச்சியான நடிப்பை
வழங்கியிருக்கிறார். தொண்டையை அடைக்கும் துயரத்திலும்,
தத்துவம் சொல்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்
ரித்விகாவின் நடிப்பு மெச்சத்தக்கது.

வசனங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், பார்வையால் தன்
பிரச்சினையை, சோகத்தை வெளிப்படுத்தும் மியா ஜார்ஜின்
நடிப்பு கவனிக்கத்தக்கது. அவரின் கதாபாத்திரம் சில
உண்மைகளை இடித்துச் சொல்கிறது.
-
ஆர்.ஜே.வாக ரமேஷ் திலக்கும், பொறுப்பான அண்ணனாக
கருணாகரனும், திருமணம் ஆகாத பேச்சுலர் கதாபாத்திரத்தில்
சார்லியும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
-
இனி கருணாகரனை காமெடி நடிகராக மட்டும் பார்க்காமல்
தொடர்ச்சியாக உறுதுணை நடிகராகவும் பார்க்கும் அளவுக்கு
நிறைவான நடிப்பை நல்கியிருக்கிறார்.
-
பாலசரவணனின் நகைச்சுவைக்கு சில இடங்களில் ரசிகர்கள்
கரவொலி எழுப்பினர்.
-
கோகுல் பினோய் தன் கேமராவால் எல்லா அழகையும் அள்ளி
வந்திருக்கிறார். ஐடி உலகம், பண்பலை அலுவலக சூழல்,
கிராமத்துப் பின்புலம், நகர்ப்புற வாழ்க்கை என எல்லாவற்றையும்
அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.
-
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்துக்கு கூடுதல் பலம்.
அடியே அழகே, எப்போ வருவாரோ பாடல்களில் மனதை
அள்ளுகிறார். பின்னணி இசையில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
பாட்ட போடுங்க ஜி பாடலை மட்டும் தூக்கி தூர போட்டிருக்கலாம்.
திரைக்கதை ஓட்டத்தில் அந்தப் பாடல் துருத்தி நிற்கிறது.
-

_________________


Last edited by ayyasamy ram on Sun Jun 12, 2016 4:08 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Post by ayyasamy ram on Sun Jun 12, 2016 4:07 pm


-
எல்லோருடைய வாழ்வும் திருமணத்தை நோக்கியே நகர்கிறது
என்ற ஒற்றைப் புள்ளியை வைத்துக்கொண்டு இயக்குநர்
வடிவமைத்த திரைக்கதை புத்திசாலித்தனமாக பின்னப்பட்டுள்ளது.
அதில் இருக்கும் சிக்கல்கள், கேள்விகள், பிரச்சினைகள்
எல்லாவற்றையும் அடுக்கடுக்காக அலசியும் இருக்கிறார்.
அதில் தான் சில முன் பின் நகர்த்தல்கள் தேவையாக உள்ளது.
-
தினேஷ் ஏன் தன் குடும்ப சூழல் விவரம் உள்ளிட்ட தன்னிலை
விளக்கத்தை மிக மிக தாமதமாக காதலியிடம் தெரிவிக்க வேண்டும்?
அந்த மழை நாளை ஏன் கண்ணியமாகக் காட்டாமல், இச்சையைக்
கூட்டுவது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?
-
‘இதுக்குதானே இவ்வளவு’ என அசால்ட்டாகப் பேசும் ரித்விகா
ஏன் மீண்டும் மனம் வெதும்பி, ‘நாம எடுக்கிற முடிவு எல்லா நேரத்திலும்
சரியாக இருக்காது’ என தத்துவம் பேசி தன்னைத் தானே சமாதானம்
செய்துகொள்ள வேண்டும்?
-
சம்பந்தமே இல்லாமல் ஏன் அந்த திருமண ட்விஸ்ட்?
அது இடைச் செருகலாகவே தெரிகிறதே? இப்படி சில கேள்விகள்
எழுகின்றன.
-
இவற்றை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால், திருமணத்தை எதிர்நோக்கும்
பெண்களின் அவஸ்தைகளை சொல்லி ஆண்களுக்கு ஆலோசனை
சொல்லிய விதத்தில் ‘ஒரு நாள் கூத்து’ மதிப்புக்குரிய முயற்சி என்பதால்
வரவேற்கலாம்.

---------------------------------------------------
தமிழ் தி இந்து காம்



_________________

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Post by krishnaamma on Mon Jun 13, 2016 1:27 am

ம்ம்...படம் டவுன்லோட் செய்து விட்டேன் இனிதான் பார்க்கணும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Post by krishnaamma on Tue Jun 14, 2016 1:21 am

எதிர்ப்பாராத அதிர்ச்சி  கல்யாணம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum