புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
Rutu
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் 2016 மாத பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:19 am

மேஷம்

தள்ளி நின்று வேடிக்கை பார்க்காமல் தவறுகளை திருத்துபவர்களே! 14-ந் தேதி வரை சூரியன் 2-ல் அமர்ந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். ஆனால் லேசாக கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும்.

14-ந் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டப் ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ல் தொடர்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால் 19-ந் தேதி முதல் செவ்வாய் வக்ரமாகி ராசிக்கு 7-ல் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும்.

ஆனால் மனைவிக்கு சின்ன சின்ன மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். 8-ல் சனி தொடர்வதால் யூரினரி இன்பெக்ஷன், நெஞ்சு வலி, ஒருவித படபடப்பு வந்துப் போகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். உங்களின் தனாதிபதியான சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் வந்து சேரும். வாகனத்தையும் சரி செய்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

லாப வீட்டில் கேதுவும், 5-ல் குருவும் தொடர்வதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஷேர் லாபம் தரும். வேற்றுமதம், மாற்று மொழியிரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 5-ல் ராகு தொடர்வதால் தூக்கமின்மை, மனஇறுக்கம் வந்துச் செல்லும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். மகளுக்கு வரன் பார்ப்பதில் அவசரம் வேண்டாம். நன்கு விசாரி முடிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:20 am

ரிஷபம்

பெரிய குறிக்கோளுடன் வாழ்பவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பல மாதங்களால் அரைக்குறையாக பாதியிலேயே நின்ற வேலைகள் முடிவடையும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும். தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால் இந்த மாதம் முழுக்க சுகாதிபதி சூரியன் சாதகமாக இல்லாததால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி, முன்கோபம், காரியத் தாமதமெல்லாம் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

18-ந் தேதி வரை சப்தமாதிபதி செவ்வாயும் 7-ம் வீட்டிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ரசனைக் கேற்ற இடமும் அமையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் சனியும் 7-ல் நிற்பதால் மனைவியுடன் சின்ன சின்ன மோதல்கள் வந்துப் போகும்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசுவது நல்லது. மனைவிக்கு முதுகுத் தண்டில் வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில், விரும்பி நிறுவனத்தில் கொஞ்சம் செலவு செய்து, அலைந்து சேர்க்க வேண்டி வரும். 4-ல் ராகுவும், குருவும் நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல் வரும்.

நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! சிலருக்கு வேற்றுமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். காதல் கசந்து இனிக்கும்.

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு பெரிய முதலீடுகளை போடாதீர்கள். உத்யோகத்தில் அலைச்சலும், இடமாற்றமும், வேலைச்சுமையும் ஒருபக்கம் இருந்தாலும் பழைய அதிகாரி உதவிகரமாக இருப்பார். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் மக்கள் மத்தியில் பாராட்டிப் பேசப்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் மாதமிது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:21 am

மிதுனம்

சலனப்படாமல் சங்கடங்களை எதிர்கொள்பவர்களே! 6-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமாக இல்லாததால் திட்டமிடாத பயணங்கள் இருக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். ராகு 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தந்திரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வெகு நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் வீட்டில் அடுத்தடுத்து நடந்தேறும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் விலை உயர்ந்த ஆபரணம், செல்போன் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் பொறுப்பாக நடந்துக் கொள்வார். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். 18-ந் தேதி வரை செவ்வாய் 6-வது வீட்டிலேயே ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால் குரு 3-ம் வீட்டிலும், கேது 9-ம் இடத்திலும் தொடர்வதால் புதிய முயற்சிகள் தாமதமாகும். தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி வந்துப் போகும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். உண்மையான நண்பர்களை உணர்ந்துக் கொள்வீர்கள். வியாபாரம் தழைக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும்.

சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவதுடன் சாதித்துக் காட்டும் மாதமிது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:21 am

கடகம்

பிறர் சுதந்திரத்தில் தலையிடாதவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் வீட்டு கிரகப்பிரவேசம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடிக்கடி விருந்தினர், உறவினர் வருகையால் வீடு களைக்கட்டும். குரு 2-ல் தொடர்வதால் வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கடைக்கும்.

நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலக் கோவில்களுக்கு சென்று வருவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். 18-ந் தேதி வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிய யோசனைகள் மனதில் உதயமாகும். அறிவுப்பூர்வமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக சில காரியங்களில் ஈடுபடுவீர்கள். இடைத்தரகர்களை நம்பி ஏமாறக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தள்ளிப் போன வழக்கு சாதகமாகும்.

வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். 14-ந் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். 15-ந் தேதி முதல் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், வீண் விரையங்கள் வந்துச் செல்லும்.

உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8-ல் கேதுவும் நிற்பதால் மூட்டு வலி, முதுகு வலியால், நரம்புச் சுளுக்கு, கை, கால் மரத்துப் போகுதல் வந்துப் போகும். பேச்சில் கடுமை காட்ட வேண்டாம். சேமிப்புகள் கரையும். கன்னிப்பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்யடைவீர்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள்.

பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். பழைய பெரிய கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:22 am

சிம்மம்

உண்மையை உரக்கச் சொல்பவர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி உங்களுடைய முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். இளைய சகோதரிக்கு திருமணம் கூடி வரும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜை மாற்றி புது வாங்குவீர்கள். சமையலறையை புதுப்பிப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். சகோதரங்கள் தேடி வருவார்கள்.

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். புது வீடு மாறுவீர்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி நல்ல விதத்தில் முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் ஏற்பாடாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. புது வேலைக் கிடைக்கும். வி.ஐ.பிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உங்கள் ராசியிலேயே குருவும், ராகுவும் தொடர்வதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். மனதிலே சின்ன சின்ன சஞ்சலங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை, ஆர்வமின்மை வந்துப் போகும். எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.

அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் எதிலும் ஒருவித வெறுமையை உணருவீர்கள். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்துப் போகும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும்.

அண்டைமாநிலம், அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கூடி வரும். நெருக்கடிகளும் இருக்கும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். அதிகாரிகளுடன் அநாவசியப் பேச்சுகள் வேண்டாம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:23 am

கன்னி

மன்னிக்கும் குணம் உள்ளவர்களே! 3-ம் வீட்டில் சனி வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய காலி மனையை விற்று சிலர் புதிதாக வீடு வாங்குவீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்கத்தால் ஓரளவு ஆதரவு உண்டு.

ஆனால் தந்தைக்கு சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். அவருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். 6-ல் கேது வலுவாக அமர்ந்திருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்துவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 12-ல் ராகுவும், குருவும் மறைந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும்.

தூக்கம் குறையும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். கன்னிப் பெண்ளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். வேலையாட்களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த சில நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினரே! அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும். சமயோஜித புத்தியாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:23 am

துலாம்

நாசூக்காக பேசத் தெரிந்தவர்களே! லாப வீட்டில் குருவும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது, கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பது நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்லது நடக்கும். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி நேர்த்திக் கடனையெல்லாம் முடிப்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணப்பற்றாக்குறை தீரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை வரும். புறநகரில் ஒருகிரவுண்டு இடம் வாங்குவதற்கான முயற்சிகள் பலிதமாகும். 18-ந் தேதி வரை செவ்வாய் ஆட்சிப் பெற்று 2-ல் அமர்ந்திருப்பதால் சகோதரங்களால் மகிழ்ச்சி உண்டு. சொத்துப் பிரச்னை, பாகப்பிரிவினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. 19-ந் தேதி முதல் செவ்வாய் வக்ரமாகி ராசிக்குள் அமர்வதால் சகோதர வகையில் பிரச்னைகள், மனைவிக்கு அடிவயிற்றில் வலி, வீண் செலவுகள் வந்துப் போகும். ஏழரைச் சனியும் நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சில் நிதானம் அவசியம். சூரியன் சாதகமாக இல்லாததால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். கன்னிப் பெண்களே! உங்களுடைய புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். நேர்முகத் தேர்வு முடிந்தும் வேலைக் கிடைக்காமல் இருந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். போட்டிகள் குறையும். புதுக் கிளைகள் தொடங்கும் முயற்சியும் பலிதமாகும். வேலையாட்கள் மதிப்பார்கள்.

உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பால் மூத்த அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். நிம்மதியும், வசதி, வாய்ப்பும் கூடும் மாதமிது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:24 am

விருச்சிகம்

விடாமுயற்சியும், விவேகமும் அதிகமுள்ளவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும்.

சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் ஜென்ம ராசியிலேயே சனியும் தொடர்வதால் நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, வயிற்று வலி, வாய்ப் புண் வந்துப் போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வழக்கால் நிம்மதி குறையும். சூரியன் சாதகமாக இல்லாததால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி, தொண்டைப் புகைச்சல் வந்துப் போகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, இரத்த அழுத்தம் வரக்கூடும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனஇறுக்கங்கள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். உறவினர், நண்பர்களின் பலம் பலவீனம் தெரிந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

குருவும், ராகுவும் 10-ல் தொடர்வதால் மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். பழைய பிரச்னைகள் போல் மீண்டும் ஏதேனும் சிக்கல்கள் வருமோ என்ற அச்சம் மனதில் தோன்றும். மற்றவர்களுக்காக வாக்குறுதிகள் தந்து விட்டு அதை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று அலுத்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் மாதமிது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:25 am

தனுசு

தன்னலம் இல்லாமல் உதவி வாழ்பவர்களே! உங்கள் ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் தொடர்வதால் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்துவது, வர்ணம் பூசுவது, இடித்துக் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். செவ்வாய் சாதகமான வீடுகளில் பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள். 14-ந் தேதி வரை உங்களின் பாக்யாதிபதியான சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசால் அனுகூலம் உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். அவருடனான மனவருத்தங்கள் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். ஏழரைச் சனி தொடர்வதால் எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகரிக்கும். 12-ந் தேதி வரை சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். 13-ந் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். 3-ம் வீட்டிலேயே கேது நீடிப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள்.

காதல் கசந்து இனிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று பார்த்து அதை சரி செய்வீர்கள். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். அலுவலகத்தில் சில சூட்சுமங்களை அறிந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். அக்கம்-பக்கம் பார்த்து செயல்பட வேண்டிய மாதமிது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:25 am

மகரம்

கலகலப்பாக பேசி காரியம் சாதிப்பவர்களே! செவ்வாயும், சனியும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ரியல் எஸ்டேட், ஷேர் மூலம் பணம் வரும். 14-ந் தேதி வரை சூரியன் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்கள் எதிர்பார்த்த கல்விப் பிரிவில், கல்வி நிறுவனத்தில் சேர்க்க போராடி அட்மிஷன் வாங்க வேண்டி வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். 15-ந் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால் அரசு காரியங்கள் உடனே முடியும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும்.

ராகு 8-ம் இடத்திலும், கேது 2-ம் வீட்டிலும் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். முக்கிய காரியங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். குரு 8-ல் மறைந்திருப்பதால் சிறு சிறு அவமானங்கள், வீண் பழிகள் வந்து நீங்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களின் நட்பை தவிர்த்துவிடுவது நல்லது.

19-ந் தேதி வரை புதன் சாதகமாக இருப்பதால் அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். 13-ந் தேதி முதல் சுக்ரனும், 20-ந் தேதி முதல் புதனும் 6-ல் மறைவதால் தலைச்சுற்றல், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், உறவினர்களுடன் வீண் விவாதங்கள், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகளெல்லாம் வந்துப் போகும்.

கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபக்கம் இருக்கும் என்றாலும் மதிப்பு, மரியாதையும் குறையாது. கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும். வளைந்துக் கொடுக்க வேண்டிய மாதமிது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக