உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Balki_73 Today at 5:08 pm

» இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
by Balki_73 Today at 5:07 pm

» மு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Balki_73 Today at 5:01 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by Balki_73 Today at 5:00 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by Balki_73 Today at 4:58 pm

» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
by ஜாஹீதாபானு Today at 4:06 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ஜாஹீதாபானு Today at 3:56 pm

» காசி எக்ஸ்ப்ரஸில் சிவனுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
by சக்தி18 Today at 12:58 pm

» மலேசிய பிரதமர் ஆடிய நடனம்
by சக்தி18 Today at 12:15 pm

» செவ்வாய் கிரகணம் நாளை 18 இல்
by சக்தி18 Today at 12:12 pm

» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
by சக்தி18 Yesterday at 7:47 pm

» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
by சக்தி18 Yesterday at 7:38 pm

» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
by சக்தி18 Yesterday at 7:21 pm

» இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு
by சக்தி18 Yesterday at 2:20 pm

» 63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 2:17 pm

» மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» 500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» 23 ஆயிரம் அடி மலையேறி சென்னை பெண் சாதனை
by ayyasamy ram Yesterday at 6:46 am

» பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Yesterday at 6:40 am

» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
by ayyasamy ram Yesterday at 6:25 am

» இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:46 pm

» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
by சக்தி18 Sat Feb 15, 2020 8:35 pm

» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:25 pm

» தில்லியில் 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:22 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:08 pm

» தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்கு துல்லிய நடவடிக்கை தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:56 pm

» 'தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:52 pm

» சிந்திப்போம், செயல்படுவோம்...!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:49 pm

» ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:42 pm

» உதடும் உள்ளமும் - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:39 pm

» சிரிப்பு - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:37 pm

» பயனுள்ள செயலிகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:30 pm

» ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:10 pm

» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:07 pm

» மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:59 pm

» -அரங்கிசை பாவலர் பாராள்வோன் - கவிதைகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:53 pm

» வேலன்:-இணைய புகைப்படங்கள்.வீடியோக்களை பதிவிறக்கம செய்திட-WACKGET
by velang Sat Feb 15, 2020 12:04 pm

» ஆலிவ் குடைமிளகாய் சாலட்
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:07 am

» மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:02 am

» ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:00 am

» மாவட்டந்தோறும் முதியோா் ஆதரவு மையங்கள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:31 am

» அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:26 am

» காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:22 am

Admins Online

சினிமா செய்திகள் ...

சினிமா செய்திகள் ... Empty சினிமா செய்திகள் ...

Post by Powenraj on Wed Jun 01, 2016 12:49 pm

சினிமா செய்திகள் ... Vo9jmTNHQzmDl44Sqc4G+p108a
பாலிவுட் கவர்ச்சிப் புயல் அலியா பட் இதுவரை நடித்த படங்களில் எல்லாம் கவர்ச்சியாகவே நடித்து வந்திருக்கிறார். இதற்கு நேர்மாறாக ‘உத்தா பஞ்சாப்’ படத்தில், பழங்குடி இன விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அலியா பட் அதனை எதிர்த்துப் போராடும் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறாராம். ஷாகித் கபூர் போதைக்கு அடிமையான ராக்ஸ்டாராக நடித்திருக்கிறார், இருவருக்கும் சிகிச்சை அளிக்கும் டாக்டராக கரீனா கபூர் நடித்திருக்கிறாராம். பூ ஒன்று புயலானது!

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ காமெடிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் எழிலிடம் உதவியாளர் செல்லாவின் இயக்கத்தில் நடிக்கிறார் விஷ்ணு. அதுவும் பக்கா காமெடி கதையாம். சுசீந்திரனின் நல்லு ஸ்டுடியோஸ் தயாரிக்க, இமான் இசையில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கௌதம் மேனனின் லேட்டஸ்ட் நாயகி மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளக்காரன் வேகத்தில் விஷ்ணு!

‘வெற்றிவேல்’ படத்தை அடுத்து ‘கிடாரி’ என்ற கிராமத்துக் கதையில் நடித்துவரும் சசிகுமார், அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மதுரை மண் சார்ந்த கிராமிய ஆக்‌ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’ படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா தன் முதல் பட ஹீரோ, சசிகுமாருடன் மீண்டும் இணைகிறாராம். இந்தப் படத்தில் எப்படியாவது தன் ஆஸ்தான நாயகி லட்சுமி மேனனை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் முத்தையா. கெட்டிப்புலிதான்!

எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வழியில், தன் வேலையை மட்டும் பார்க்கும் நடிகைதான் ‘கபாலி’ ராதிகா ஆப்தே. சமீபத்தில் சில ரசிகர்களைத் திட்டி அவர்களோடு சண்டை போட்டிருக்கிறார். அவர் திட்டியது, அவரோடு செல்ஃபி எடுக்க அவரைப் பின் தொடர்ந்த ரசிகர்களைத்தான். ‘என் ரசிகர்கள் என்று பொய் சொல்லி செல்ஃபி கேட்டார்கள், நான் நடித்த மூன்று படங்களின் பெயர்களைக் கேட்டால்கூட அவர்களுக்குத் தெரியவில்லை. என் சினிமா கவர்ச்சியை மட்டும் பார்த்து போட்டோ எடுக்க வந்தால், எனக்கு சுத்தமாகப் பிடிக்காது’ என்று கடுப்பாகக் கூறியிருக்கிறார். நெருப்புடா!
சினிமா செய்திகள் ... 9OWsRT06Te2BD8YCiaux+p108b
பாடகராக இருந்து ‘மாரி’ படத்தில் வில்லனாக மாறிய விஜய் யேசுதாஸ் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, வில்லனாக நடிக்கிறாராம். மணிரத்னத்தின் உதவியாளர்களில் ஒருவர் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘படைவீரன்’ என்று பெயரிட்டுள்ளார்கள். ஹேப்பி ஸ்டுடியோஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறதாம். சந்தோஷம் நீடிக்கட்டும்!

‘இரும்புக்குதிரை’ படத்தில் ரேஸராக அறிமுகமான அலிஷா அப்துல்லா என்ற ரியல் பைக் ரேஸர், அடுத்து விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் தனக்கு மாடர்னான கிளாமர் வேடம்தான் என்று கூறும் அலிஷா, தன்னைப் போலவே ரியல் ரேஸரான அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதுவும் தன் பைக் ரேஸிங் திறமைகளை வெளிப்படுத்தும் ஆக்‌ஷன் படமாக இருந்தால் இன்னும் சூப்பர் என்கிறார். பில்லா 3 எடுத்தா நீங்கதான்!

‘குற்றப்பத்திரிகை’, ‘குப்பி’, ‘வனயுத்தம்’, ‘ஒரு மெல்லிய கோடு’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ், அடுத்து ராஜீவ்காந்தி படுகொலையை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். இதற்காக ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களின் குடும்பங்களையும், சில அரசு அதிகாரிகளையும், அதற்கான திட்டம் தீட்டியவர்கள் சிலரையும் சந்தித்துப் பேட்டி எடுத்து ஆராய்ச்சி செய்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம். ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக அர்ஜூனும், ராஜீவ்காந்தி வேடத்தில் ஒரு இந்தி நடிகரும் நடிக்க இருக்கிறார்களாம். குற்றப்பத்திரிகையும் இதுதானே!

இண்டஸ்ட்ரியின் சமீபத்திய ஹாட் ஜோடி ஜி.வி.பிரகாஷ் ‘கயல்’ ஆனந்தி ஜோடிதான். ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களில் அவர்கள் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரியை பார்த்த இயக்குநர் ராஜேஷ், தான் இயக்கி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தியை ஒப்பந்தம் செய்துவிட்டார். ஏற்கெனவே நிக்கி கல்ராணியும் நாயகியாக நடித்து வந்தாலும் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் ஆனந்தி. ஆனந்தம்தான்!

‘சதுரங்க வேட்டை’ படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவு, நடிப்பு என இரண்டிலும் மாறி மாறி பயணித்து வரும் நட்டி, அடுத்து ஒரு பரபர ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறார். பேரரசு திரைக்கதை, வசனம் எழுத ‘மகாராணி கோட்டை’ என்ற படத்தை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்குகிறாராம். ‘வாடா மவனே’ என படத்தின் தலைப்பிலேயே இறங்கி அடித்திருக்கிறார் நட்டி. நாட்டி!
சினிமா செய்திகள் ... JQCLNlbTw26ID0OIADVj+p108c
எப்படியாவது தன் மகளை டாப் ஹீரோயின் ஆக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்துவரும் அர்ஜுன், தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். ‘காதலின் பொன் வீதியில்’ என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தன் மகளுக்கு ஜோடியாக சந்தன் என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்தும் அர்ஜூன், கதை, வசனம் எழுதி இயக்கி சொந்த செலவிலேயே படத்தை எடுத்தும் வருகிறார். மகளுக்காற்றும் உதவி!

தனுஷை வைத்து இளமைத் துள்ளல் நிறைந்த ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் அடுத்து ஷாரூக் கானை இயக்குவதால் ஷாரூக் வயதுக்கேற்ற ஜோடியாக கத்ரீனா கைஃப்பையும், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஒரு இளம் நடிகையையும் நடிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார். தனது முந்தைய படத்தில் நடித்த சோனம் கபூர் மற்றும் அலியாபட் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இருவரில் ஒருவர் ஷாரூக்குடன் ரொமான்ஸ் செய்வார்களாம். யூத் கான்!

நன்றி-டைம் பாஸ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை