உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

சினிமா நியூஸ்...

சினிமா நியூஸ்... Empty சினிமா நியூஸ்...

Post by Powenraj on Thu May 26, 2016 9:28 pm

சினிமா நியூஸ்... P106a
‘அரண்மனை 2’, ‘நாயகி’ எனப் பேய் படங்களையும் ஒரு கை பார்க்கத் தொடங்கிவிட்ட த்ரிஷா, தற்போது இன்னும் ஒரு பேய் படத்தில் மிரட்ட இருக்கிறாராம். ‘மதுர’, ‘மிரட்டல்’ படங்களை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் த்ரிஷாதான் பேய். அதுவும் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாராம். ‘சிங்கம் 2’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. முழுக்க வெளிநாடுகளில் உருவாகிறது படம். ஒரு பேய்க்கே முடியல, இதுல ரெண்டு பேயா?

‘சபாஷ் நாயுடு’ என்று பெயரிலேயே கலவரத்தை ஆரம்பித்து வைத்த கமல்ஹாசன், ஜூலை மாதத்துக்குள் மொத்தப் படத்தையும் முடிக்க இருக்கிறார். அந்த காமெடிப் படத்தை முடித்த கையோடு தன் திரைக்கதை, வசனத்தில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறாராம். இதற்காக தற்போதே முன் தயாரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறாராம். விமானக் கடத்தலை மையமாகக்கொண்ட விறு விறு ஆக்‌ஷன் படம் என்கிறார்கள். ஒரு பிடி காமெடி, ஒரு பிடி அடிதடி!

‘புலி’, ‘போக்கிரி ராஜா’ படங்களில் படுதோல்வியைச் சந்தித்தாலும் மனம் தளராமல் தனது அடுத்த தயாரிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார். இயக்குநர் சாமி இயக்க இருக்கும் ‘மிருகம் 2’ படத்தைத் தயாரிக்கிறார். நாயகி முடிவாகாத இந்தப் படத்தில் ஆதி நாயகனாகவும், சோனா முக்கிய வேடத்திலும் நடிப்பார்கள் என சொல்கிறார்கள். ஆதி பாதி, மிருகம் மீதி!

சினிமா நியூஸ்... P106b

பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் சொந்தமாக ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டிருக்கிறார். படப்பிடிப்புக்குப் போகும் இடங்களில் ஹோட்டலில் தங்குவதில் உடன்பாடு இல்லையாம் பிரியங்காவுக்கு. மேலும் வருடத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவிலேயே தங்குவதால்தான் அங்கேயே ஒரு வீடு வாங்க முடிவெடுத்தாராம். ரகசிய கேமராக்கள் பொருத்தி குளியலறை, படுக்கை அறை வீடியோக்களை எடுத்து இணையத்தில் கசியவிட்டு விடுவதாலும் இந்த எச்சரிக்கை முடிவாம். யாருகிட்ட!

ரஜினியை வைத்து எப்படியாவது ‘சந்திரமுகி 2’ எடுக்க முயற்சித்த வாசு, ரஜினி கால்ஷீட் கிடைக்காததால். லாரன்ஸை வைத்து இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார். ரஜினி ‘சந்திரமுகி’ படத்துக்கு முன்பு சொன்னபடி, முதல் வேலையாக வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கி விட்டாராம் வாசு. கன்னட ‘சிவலிங்கா’ படத்தின் ரீமேக்கான இதில் வாசுவின் மகன் சக்திவேல் மட்டும் கன்னடத்தில் தான் நடித்த அதே கேரக்டரில் நடிக்கிறாராம். ராரா!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் விஜய் சேதுபதியை இயக்குகிறார், ‘ஆண்டவன் கட்டளை’ தலைப்பு என்ற செய்தி வந்தவுடனே என்ன மாதிரி படமாக இருக்கும் என மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால், மணிகண்டனோ இதுவும் ஒரு யதார்த்தமான படம்தான் என்கிறார். விசா வழங்கும் பிரச்னைகள், குளறுபடிகளை காமெடியாக அலசும் படம்தானாம் இது. ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை போட்ட ரித்திகா சிங், இதில் தைரியமான பத்திரிகையாளராக நடித்திருக்கிறாராம். ரித்திகான்னா தைரியம்தானே!

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து படம் இயக்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு படத்தில் நடிக்கப் போய்விட்டார் இயக்குநர் நலன் குமாரசாமி. மணி என்பவர் இயக்க, சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் படத்தில் ஒரு முக்கியமான காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் நலன். நடிகர் அவதாரம் எடுத்துள்ள நலன் படத்தில் மருத்துவராக நடிக்கும் காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என சொல்லிக்கொள்கிறார்கள் படக்குழுவினர். சிரிப்பு கவ்வுமா?

இந்தியில் சரித்திரப் படங்களுக்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தைத் தொடர்ந்து இயக்கும் அடுத்த படமும் ஒரு சரித்திரப் படம்தானாம். முந்தையப் படத்தில் நடித்த அதே ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடிதான் இந்தப் படத்திலும் நடிக்கிறார்களாம். சரித்திரப் படம்தான் என்றாலும் வழக்கம்போல இதுவும் வரலாற்றுக் காதல் கதைதானாம். அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மாவதியின் காதல்தான் படத்தின் மையக்கதையாம். இந்தப் பிரமாண்ட படத்துக்கும் அவரேதான் இசையமைக்க இருக்கிறாராம்.

தமிழின் முதல் ஸோம்பி படமான ‘மிருதன்’ சரியாகப் போகவில்லை என்றாலும், அதன் ஹீரோவான ‘ஜெயம்’ ரவியும், இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனும் மீண்டும் ஒரு விண்வெளி அறிவியல் சார்ந்த படத்தில் இணைகிறார்கள். அதில் முதல் பாதியில் வடசென்னையைச் சேர்ந்த திருடனாக இருக்கும் ரவி, இரண்டாம் பாதியில் விண்வெளிக்குப் போவதுதான் கதையாம். தமிழில் உருவாகும் முதல் விண்வெளிப் படம் என்ற பெயரைப் பெறுமாம் இந்தப் படம். முதல் முயற்சிகளின் இயக்குநர்!

எத்தனையோ பேர் விஜய்க்கு அம்மா வாகப் படங்களில் நடித்திருந்தாலும், விஜய்யின் ஃபேவரைட் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர்தானாம். இயக்குநராக, பாடகியாக, இசைக்கலைஞராக பல அவதாரங்கள் எடுத்திருக்கும் ஷோபா சந்திரசேகருக்கு விஜய்யின் அம்மாவாக ஒரே ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறாராம் விஜய். அம்மாங்ணா!
சினிமா நியூஸ்... P106c
எந்த ஈகோவும் இல்லாமல் யார் கூப்பிட்டாலும் பாடிக் கொடுப்பவர் நடிகர் சிம்பு. சிம்பு மீது எவ்வளவு சர்ச்சைகள் இருந்தாலும், சிம்புவைத் தங்கள் படங்களில் பாட வைக்கவும், கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கவும் எல்லாப் பிரபலங்களும் விரும்புகிறார்கள். சமீபத்தில்கூட ‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபுவுக்காக இமான் இசையில் தாறுமாறு என்ற குத்துப்பாடலை பாடிக்கொடுத்திருக்கிறார். பாடியதற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாகக் கொடுக்க, விக்ரம் பிரபுவின் நட்புக்காகத்தான் பாடினேன் என்று சொல்லி செக்கை திருப்பிக் கொடுத்து விட்டாராம். நல்லவன்!

‘கபாலி’ தான் தற்போதைய ட்ரெண்டிங் டாப்பிக். டீஸர் வெளியாகிப் பல சாதனைகளை முறியடித்துக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அதைப் பார்த்த இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், ‘கபாலி’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். கபாலிடா!

‘அ.ஆ’ படத்தில் அறிமுகமான நடிகை நிலாவுக்கு அதன் பிறகு தமிழில் படவாய்ப்புகள் பெரிதாக அமையாததால், லண்டனில் செட்டிலாகி தன் தந்தையின் பிஸினஸைக் கவனித்து வந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்து பிஸி நடிகையும் ஆகிவிட்டார்; தமிழில் அல்ல. இந்தியில் சின்ன பட்ஜெட் படங்களில்தான். தன் சொந்த பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே நடித்தும் வரும் அவர், தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் என் அதிர்ஷ்டம்தான், அது கிடைக்கும் வரை இப்படித்தான் என்கிறார். ஒ.ஓ!

நன்றி-டைம் பாஸ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை