ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை

View previous topic View next topic Go down

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை

Post by ayyasamy ram on Thu May 26, 2016 8:13 am


-

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் நடிகையாக இருந்து
பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்
பட்டவர் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாச
கருத்து வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.

பெண் எம்.எல்.ஏ.

நடந்து முடிந்த அசாம் மாநில சட்டசபை தேர்தலில்,
பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது.
அங்கு பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட 6 பெண்
வேட்பாளர்களில் 2 பேர் வெற்றி பெற்றனர்.

அவர்களில் அங்குர்லதா தேகா என்ற பெண்ணும்
ஒருவர். அவர் படாத்ரோபா தொகுதியில், காங்கிரஸ்
முன்னாள் மந்திரி கவுதம் போராவை சுமார் 6 ஆயிரம்
ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அவர் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
அசாம் மொழிப்படங்கள் மட்டுமின்றி, வங்க மொழிப்
படங்கள், டெலிவிஷன் தொடர்கள் மற்றும்
நாடகங்களிலும் நடித்துள்ளார். மாடலிங்கும் செய்துள்ளார்.

பொதுவாக, ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றால்,
அவரது பின்னணி, பிரசார பலம், தேர்தல் வாக்குறுதி
ஆகியவற்றை குறிப்பிட்டுத்தான் கருத்து தெரிவிப்பார்கள்.
-
------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை

Post by ayyasamy ram on Thu May 26, 2016 8:15 am


ஆபாச கருத்து

ஆனால், அங்குர்லதா தேகா, வெற்றி பெற்றதில்
இருந்து அவரது அழகுக்கு முக்கியத்துவம்
கொடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணைய
தள பத்திரிகைகளிலும் ஆபாசமாகவும்,
அருவருக்கத்தக்க வகையிலும் கருத்துகள் பதிவு
செய்யப்பட்டு வருகின்றன.

அவரது சினிமா, மாடலிங் புகைப்படங்களை
வெளியிட்டு, அதன் அருகே ஆபாச கருத்துகளை
பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்
ஆதரவாளர்கள் இத்தகைய கருத்துகளை பதிவு
செய்து வருகிறார்கள். இணையதள பத்திரிகை
கட்டுரைகளில், ‘சூடான பெண் எம்.எல்.ஏ.’
என்றுதான் அங்குர்லதா தேகாவை வர்ணிக்கிறார்கள்.

‘சட்டசபையில் அங்குர்லதா தேகா இருப்பதால்,
இனிமேல் அங்கு 100 சதவீத வருகைப்பதிவு இருக்கும்’
என்றும் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒருபடி மேலே போய்,
‘அசாமில், பா.ஜனதா ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய
காரணமே அங்குர்லதா தேகாவின் கவர்ச்சிதான்’
என்று கூறியுள்ளனர்.

ராம்கோபால் வர்மா

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை
வெளியிட்டு வரும் பிரபல டைரக்டர் ராம்கோபால்
வர்மாவும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அவர் அங்குர்லதாவின் கவர்ச்சியான புகைப்படத்தை
வெளியிட்டு, ‘எம்.எல்.ஏ. இந்த மாதிரி இருந்தால்,
நல்ல நாட்கள் வந்தே தீரும். நன்றி அங்குர்லதா,
நன்றி மோடிஜி. முதல்தடவையாக நான் அரசியலை
நேசிக்கிறேன்’ என்று ராம்கோபால் வர்மா பதிவு
செய்துள்ளார்.

அதற்கு உடனடியாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
‘நீங்கள் பெண்களை மதிக்காதபோது, உங்களை எப்படி
நாங்கள் மதிக்க முடியும்? முதலில், பெண்களை மதிக்க
கற்றுக் கொள்ளுங்கள்’ என்று பலரும் கருத்து
தெரிவித்துள்ளனர்.

கண்டனம்

இதையடுத்து, ராம்கோபால் வர்மா தனது கருத்துக்கு
விளக்கம் அளித்தார். ‘நான் அங்குர்லதாவுக்கு
பாராட்டுதான் தெரிவித்தேன். நிறைய எம்.எல்.ஏ.க்கள்
அழகாக இல்லாததால், இது ஒரு மாற்றம்தான்’ என்று
கூறியுள்ளார்.

ஆனால், அவரது விளக்கத்துக்கு பிறகும் அவருக்கு
கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுபோல், ஆபாச கருத்துகளை பதிவு செய்தவர்களுக்கு
அசாம் திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனம்
தெரிவித்துள்ளனர். பிரபல அசாம் நடிகைகள் பிரஸ்துதி
பரஷார், ஜெரிபா வாகித், அசாம் நாடக கதாசிரியர்
அபிஜித் பட்டாச்சார்யா, நாடக ஆசிரியர் சத்யகீ புயன்
ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அரசியலில் நுழைந்த
போது சந்தித்த நிகழ்வுகளை இவை நினைவூட்டுவதாக
அவர்கள் கூறியுள்ளனர்.
-
-------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum