ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மே மாத பலன்கள் !

View previous topic View next topic Go down

மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 12:58 am

மேஷம்

வருங்காலத்தை கருத்தில் கொண்டு வாழும் நீங்கள், சாதிக்கப் பிறந்தவர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் வலுவாக ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும்.

சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். ஆனால் சனியுடன் சேர்ந்து நிற்பதால் அலர்ஜி, இரத்த அழுத்தம், முன்கோபம், இரத்தத்தில் சிவப்பணுக் குறைப்பாடுகளெல்லாம் வந்துச் செல்லும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களின் தனாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

வீடு மாறுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். 5-ல் ராகு நீடிப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகமாகும். அரசு காரியங்கள் தாமதமாகும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. புதனும் சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும்.

பழைய கடனில் ஒரு சிறு பகுதியை பைசல் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு அடைவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள். கேது லாப வீட்டில் தொடர்வதால் ஷேர் லாபம் தரும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். புது வேலை கிடைக்கும். குருபகவான் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.

விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பதால் தேங்கிக் கிடந்தப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இடையூறுகள் வந்தாலும் இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப்பிடிக்கும் மாதமிது.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:00 am

ரிஷபம்

எதிலும் மாற்றத்தை விரும்பும் நீங்கள், ஆதாரமில்லாமல் எதையும் நம்ப மாட்டீர்கள். ராசிநாதன் சுக்ரனும், தன-பூர்வ புண்யாதிபதி புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். இங்கிதமாக, இதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம், சிமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் நீண்ட நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்தை புதுபிப்பீர்கள்.

நீண்ட கால பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் சப்தமாதிபதியான செவ்வாய் 7-ம் வீட்டிலேயே ஆட்சிப் பெற்று தொடர்வதால் ஒரு சொத்தை மாற்றி புதிதாக வீட்டு, மனை சிலர் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆனால் 7-ம் இடத்திலேயே சனியும் நீடிப்பதால் மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பரிசோதனை செய்வது நல்லது. அவ்வப்போது சோர்வடைவார். ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் உறுதிமொழி தர வேண்டாம்.

ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். கொஞ்சம் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் தூக்கமில்லாமல் போகும். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும்.

புது ஏஜென்சியை யோசித்து எடுக்கப்பாருங்கள். உத்யோகத்தில் தலைமையுடன் மோதல் வரும். ஒருதலை பட்சமாக மூத்த அதிகாரி நடந்துக் கொள்கிறார் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். சின்ன சின்ன ஏமாற்றங்கள், ஆரோக்ய குறைவு, செலவினங்களை தந்தாலும் ஒரளவு நன்மைகளையும் தரும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:00 am

மிதுனம்

தொலை நோக்குப் பார்வை கொண்ட நீங்கள், அண்டி வந்தவர்களை ஆதரிக்கத் தவறமாட்டீர்கள். ராகு வலுவாக 3-ம் வீட்டிலேயே நிற்பதால் உங்களின் புகழ், கெரளவம் ஒருபடி உயரும். எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். 13-ந் தேதி வரை உங்களின் தைரியஸ்தானாதிபதியான சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 6-ல் சனிபகவான் தொடர்வதால் வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்ரனும், ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழந்தை பாக்யம் உண்டு. பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். 3-ல் குரு நீடிப்பதால் சிறுசிறு இழப்புகள், எதிலும் நாட்டமின்மை, காரியத் தாமதம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு திருமணம் கூடி வரும்.

உங்கள் லாபாதிபதியான செவ்வாய் 6-ம் வீட்டிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் உழைப்பை உணர்ந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கலைத்திறன் வளரும். திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களையும் சந்திக்கும் தரும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:01 am

கடகம்

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருக்கும் நீங்கள், மற்றவர்கள் மதிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சூரியன் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். மனயிறுக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

வழக்குகள் சாதகமாகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். நீண்ட நாட்களாக சந்தித்து பேச வேண்டுமென்று நினைத்திருந்த உறவினர், நண்பர்களை இந்த மாதத்தில் சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். ஷேர் மூலமும் பணம் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிப் பெற்று வலுவாக இருப்பதால் பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு இருந்து வந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பழைய சுகமான அனுபவங்களில் மூழ்குவீர்கள். ராகு 2-லும், கேது 8-ம் இடத்திலும் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடியும் போகும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்வீர்கள். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். குரு 2-ம் வீட்டில் தொடர்வதால் வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.

பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்பு வரும். சிலர் பணியாற்றும் நிறுவனத்தை புதியவர்கள் வாங்க வாய்ப்பிருக்கிறது. கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். நிதானத்தால் நினைத்த காரியங்களை முடித்துக் காட்டும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:02 am

சிம்மம்

உறங்காச் சூரியன் போல் ஓயாமல் சிந்திக்கும் நீங்கள், அன்பால் ஆக்கிரமிப்பவர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் பகவான் 4-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த வி.ஐ.பிகள் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துக் கொடுப்பார்கள்.

விற்க வேண்டுமென்று நினைத்திருந்த சொத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சிலே அனுபவ அறிவு வெளிப்படும். பழைய பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். நட்பு வட்டம் விரியும். சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சமாகி இருப்பது மனதில் தைரியம் பிறக்கும். ஆனால் தந்தைக்கு வேலைச்சுமை, மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ஜென்ம குரு தொடர்வதால் தோலில் தடிப்பு, கட்டை விரலில் அடிப்படுதல், பசியின்மை, எதிலும் ஈடுபாடற்ற நிலையெல்லாம் வந்துச் செல்லும்.

உங்களைப் பற்றிய அவதூறுகளை சிலர் பரப்பிவிடுவார்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் தாமதமாகி வரும். வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வேலையாட்களிடம் அதிக கண்டிப்புக் காட்ட வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். அதிகாரிகளுடன் மோதல்கள் இருக்க தான் செய்யும். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:02 am

கன்னி

வாதம் விவாதத்தை விரும்பாத நீங்கள், எதையும் கலைக் கண்ணோடு பார்ப்பீர்கள். செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கையும் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள்.

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பதவிகள் தேடி வரும். 12-ம் இடத்திலேயே ராகுவும், குருவும் தொடர்வதால் அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கைமாற்றாக கொஞ்சம் கடனும் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். கவனக்குறைவால் விலை உயர்ந்த ஆபரணங்கள், முக்கிய ஆவணங்களை இழந்து விடாதீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.

புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சுக்ரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். 6-ல் கேது தொடர்ந்துக் கொண்டிருப்பதால் பங்குச் சந்தை லாபம் தரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பணியிலிருந்து விலகிச் சென்ற பழைய வேலையாள் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். சக ஊழியர்களும் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உங்களுடைய படைப்புத் திறன் வளரும். குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு வெற்றி பாதையை கண்டறியும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:03 am

துலாம்

போராட்ட சிந்தனை கொண்ட நீங்கள் உரிமைக்குரல் எழுப்புவதில் வல்லவர்கள். ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே வலுவாக தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் அணுகுமுறையை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரைக்குறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். உறவினர், நண்பர்களுடனான மனவருத்தங்கள் நீங்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களின் பாதகாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இல்லாததால் உடல் உஷ்ணம் அதிகமாகும். செலவுகள் கூடிக் கொண்டேப் போகும்.

மூத்த சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். அரசு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். பாதச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். யாரையும் நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். எல்லாவற்றையும் நிதானமாக செய்யப்பாருங்கள். கன்னிப் பெண்களே! நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலைக்கு வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். பங்குதாரர்கள் மாறுவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். கலைத்துறையினரே! தெலுங்கு, கன்னட மொழிப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்கள் படைப்புகளும் நல்ல விதத்தில் வெளியாகும். சகிப்புத் தன்மையாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் சாதித்துக் காட்டும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:03 am

விருச்சிகம்

கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாத நீங்கள், மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவர்கள். 13-ந் தேதி வரை சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பிள்ளைகளின் கோப தாபங்கள் நீங்கும். அவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆனால் செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சல், இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். 19-ந் தேதி வரை சுக்ரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இருவருக்குள் பிரச்னையை உருவாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உங்கள் குடும்பத்தினரையோ, உறவினரையோ யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் உடனே நம்பிவிடாதீர்கள்.

அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். இந்த மாதம் முழுக்க புதனும் 6-ல் மறைந்திருப்பதால் தொண்டை வலி, மூச்சுத் திணறல், நரம்புச் சுளுக்கு, உறவினர், நண்பர்களுடன் பகைமை வந்துப் போகும். ஜென்மச் சனி தொடர்வதால் வீண் விரையம், ஏமாற்றம், நெஞ்சு வலி, அஜீரணப் பிரச்னை, அல்சர் வரக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பற்று வரவு சுமார்தான். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களை விட வயதில் குறைவானவர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுத்துப் போக வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களுக்கு அலைச்சல், செலவுகள் இருக்கும். படைப்புகள் வெளியாவதில் தாமதம் உண்டாகும். உணர்ச்சி வசப்படாமல் உள்மனசு சொல்வதை உள்வாங்கி செயல்படவேண்டிய மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:04 am

தனுசு

படைப்புத் திறன் அதிகம் கொண்ட நீங்கள், பகையாளிக்கும் உதவும் பரந்த மனசுக்காரர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். நட்பு வட்டம் விரியும். திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். 13-ந் தேதி சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டுமென்ற கவலைகள் வந்துப் போகும். மகனுக்கு முன்கோபம் அதிகரிக்கும். மகள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்.

குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் நன்றி மறந்து நடந்துக் கொள்வார்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலை தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 14-ந் தேதி முதல் சூரியன் 6-ல் நுழைவதால் தள்ளிப் போன அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். வி.ஐ.பிகளும் உதவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிலர் வீடு மாறுவீர்கள். 20-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள், மின்னணு, மின்சார சாதனப் பழுது, சிறுசிறு விபத்துகள், சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வந்துப் போகும். ஏழரைச் சனி தொடர்வதால் அவ்வப்போது பணப்பற்றாக்குறை ஏற்படும். சில நேரங்களில் கைமாற்றாக வெளியில் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சொன்னபடி சொன்ன நேரத்தில் வாங்கிய பணத்தை திருப்பித் தர முடியவில்லையே சில நேரங்களில் ஆதங்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும்.

உங்கள் ராசிநாதன் குரு 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். சக ஊழியர்கள் மத்தியில் உங்களுடைய கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:05 am

மகரம்

யாருக்காகவும் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், எல்லோரும் வேண்டுமென நினைப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.

தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர் வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்கும். எம்.எம்.டி.ஏ., சி.எம்.டி.ஏ அப்ரூவலாகி வரும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். செவ்வாயும், சனியும் வலுவாக இருப்பதால் தாயாருக்கு இருந்து வந்த ஆரோக்ய குறைவு நீங்கும்.

தாய்வழி சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிர்பார்த்த விலைக்கு காலி கிரவுண்டை விற்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதரவுப் பெருகும். கேது 2-லும், ராகு 8-ம் இடத்திலும் தொடர்வதால் ஏமாற்றம், எதிலும் ஆர்வமின்மை, பிறர் மீது நம்பிக்கையின்மை, மூச்சுப் பிடிப்பு வந்துச் செல்லும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவுப் பெருகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு. சூழ்ச்சிகளை முறியடித்து, விவேகமான முடிவுகளால் சாதித்துக் காட்டும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:05 am

கும்பம்

நாலா விஷயங்களையும் கூட்டிக் கழித்து யோசிக்கும் நீங்கள், நல்லவர்களின் அருகில் நிற்பீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வி.ஐ.பிகளும் பக்கபலமாக இருப்பார்கள்.

பிள்ளைகள் நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். நண்பர்கள் வலிய வந்து உதவுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடியும். சூரியன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 10-ம் வீட்டில் செவ்வாய் நீடிப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வேலைக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் சின்ன சின்ன இழப்புகள், எதிர்காலம் பற்றிய பயம், எதிலும் ஒருவித தடுமாற்றம், யூரினரி இன்பெக்ஷன், குதிக்கால் வலி, உடம்பில் இரும்புச் சத்துக் குறைப்பாடுகளெல்லாம் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! உங்களின் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும்.

தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். குரு வலுவாக இருப்பதால் வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். இடைத்தரகர்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். முக்கிய வியாபார விஷயங்களை நீங்களே நேரில் சென்று பேசி முடிப்பது நல்லது. உத்யாகத்தில் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார்கள். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். போராட்டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon May 02, 2016 1:06 am

மீனம்

கொடுத்து சிவந்த கைகளை உடைய நீங்கள், மனிதநேயம் அதிகமுள்ளவர்கள். உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த பணம் வரும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சகோதரங்கள் உங்களை முழுமையாகப் புரிந்துக் கொள்வார்கள்.

சகோதரிக்கு திருமணம் முடியும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். உங்கள் ராசிநாதன் குரு 6-ல் நிற்பதால் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது பணத்தட்டுப்பாடு ஏற்படும்.

பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்வது நல்லது. தங்க நகைகளை பத்திரப்படுத்துங்கள். ராகுவும் வலுவாக 6-ம் இடத்திலேயே தொடர்வதால் வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களுடைய புதிய திட்டங்கள் நிறைவேறும். அழகு, ஆரோக்யம் கூடும். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.

விளம்பர யுக்திகளையும் கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். ஆனால் குரு 6-ல் மறைந்திருப்பதால் உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களை தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். அச்சம் விலகி அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் மாதமிது.

webduniya !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மே மாத பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum