புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
2 Posts - 2%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
18 Posts - 2%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
8 Posts - 1%
Rutu
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 21 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 21 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 21 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 9:39 pm

M.Jagadeesan wrote:புகைப்படங்கள் எல்லாமே நேர்த்தியாக உள்ளது . சதுரகிரி போய்வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது . அருமையாக எழுதுகிறீர்கள் !
மிக்க நன்றி ஐயா.

சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 9:48 pm

ந்த மலையின் பிரதான கடவுளான சுந்தரமகாலிங்கம் பற்றி சொல்லவேயில்லையே. இப்போது சுந்தரமகாலிங்கம் இங்கே எழுந்தருளியதைப்பற்றி பார்ப்போம்.

சதுரகிரி பயணம்..... - Page 21 B9JauAkgTqEMftfswSFB+blogger-image-1479935928
படம்: இணையம்

கயிலாயத்தில் இருப்பதை ஒருகணம் மறந்து சிற்றின்பத்தில் திளைத்ததின் விளைவாய் ஈசனின் கோபத்திற்கு ஆளான யாழ்வல்லத்தேவன் – பூலோகத்தில் பச்சைமால் என்ற மானிடனாய் பிறப்பெடுத்து, அடுத்த நாற்பதாண்டுகாலங்களில் மறுபடியும் இந்த பக்தனை, எம்பெருமானால் தடுத்தாட்கொள்ள அந்த கயிலை மலையான் சதுரகிரியில் எழுந்தருளிய இடமே இன்றைய சுந்தரமகாலிங்க சந்நிதி.

இங்கே லிங்கத்திருமேனி சற்றே சாய்ந்தபடி இருப்பதை காணலாம். அதன் காரணமும் பச்சைமால் தான்.

எம்பெருமான் மகா சித்தராகி வந்து பச்சைமாலின் மனைவி (கைலாயத்தில் இவர் ஒரு தேவமாது. யாழ்வல்லதேவரும், தேவமாது – இருவரும் தான் பரமனின் கோபத்திற்கு ஆளானது) சடைமங்கை-யை உரிய காலத்தில் தடுத்தாட்கொண்டார்.

இடையரான பச்சைமாலும் மனைவியின் பிரிவிற்கு பிறகு தனது பசுமாடுகளை ஓட்டிக்கொண்டு சதுரகிரிக்கு வந்துவிட்டான். இங்கு தான் சுந்தரானந்த சித்தர், அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜித்து வந்ததை பார்த்து, பச்சைமால் தன்னிடமிருந்த பசுக்களில் ஒன்றின் பாலை மட்டும் சித்தருக்கும், சுவாமியின் அபிஷேகத்திற்கும் தர தன்னை அனுமதிக்குமாறு சுந்தரானந்தரிடம் வேண்டி நின்றான்.

சுந்தரானந்தரும் அதற்கு சம்மதித்ததில் தினமும் பச்சைமால், தான் சொன்னபடியே ஒரு பசுவின் பாலை சுவாமியின் அபிஷேகத்திற்கும், பசியாற சித்தருக்கும் வழங்கி வந்தான்.

இந்நிலையில், பச்சைமாலின் விமோச்சன நேரம் நெருங்கவே ஈசன் மகா சித்தராக சதுரகிரியில் தோன்றி தன் திருவிளையாடலை ஆரம்பித்தார்.

ஒருநாள் தொழுவத்தில், அபிஷேகத்திற்கான நேரம் ஆகிவிட்டிருந்த நிலையில், பச்சைமால், அந்த குறிப்பிட்ட பசுவை தேடிப்போனபோது.... அந்த பசு அங்கில்லை.

“எல்லா மாடுகளையும் சரியாக தானே ஒட்டி வந்தோம் இது மட்டும் எப்படி வழி தவறியது...?” என்று குழப்பம்.

“சரி, வந்த வழியே சென்று பார்ப்போம்....” என்று நினைத்து பச்சைமால் அந்த பசுவைத்தேடி போக, அந்த பசு ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்ததை பார்த்ததும்....

ஈஸ்வரனின் அபிஷேகத்திற்கு நேரமாகிறதே என்ற பதை, பதைப்பில் பசுவின் அருகே ஓடிச்சென்றவன், அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்.

சதுரகிரி பயணம்..... - Page 21 6TvynKMsSy2sQatNoc4r+11234
படம்: இணையம்

சுந்தரானந்தர் பூஜிக்கும் லிங்கத்திற்கு பால் தரும் அந்த பசுவின் மடியில் மகா சித்தராக வந்த ஈசன் பாலை பருகிகொண்டிருந்தார். அபச்சாரம் நிகழ்ந்து விட்டதாக கருதிய பச்சைமால் கோபத்தின் உச்சிக்கே சென்று, மாடு மேய்க்க கையில் வைத்திருந்த கழியால் சிவனாரை மண்டையில் ஓங்கி அடித்துவிட்டான்.

மகா சித்தரான ஈசனின் தலையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது அறிந்து ஓடிவந்த சுந்தரானந்தர் வெகுண்டெழுந்த போது, எம்பெருமான் தடுத்து, தான் பச்சைமாலை தடுதாட்கொள்ளவேண்டியே இத்திருவிளையாடல் நிகழ்த்தியதை கூறி அவர்களுக்கு சிவபெருமான் தனது ஜடாமுடி, சர்ப்ப ஆபரணங்களுடன் காட்சி தந்தார்.

அதன் பிறகு, பச்சைமாலின் விருப்பப்படியே அவனை தனது திருவடிகளில் ஐக்கியப்படுத்திக்கொண்டார். சித்தர்களின் விருப்பத்திற்கிணங்க, பக்தர்களுக்கு அருளை வழங்க தான் நின்ற இடத்திலேயே சற்றே சாய்ந்த நிலையில், பச்சைமால் அடித்ததினால் ஏற்பட்ட காயத்தழும்புடன், சுயம்பு லிங்கமாய் தோன்றினார் எம்பெருமான்.

சுந்தரமகாலிங்க அபிஷேகத்தின் போது லிங்கத்திருமேனியில் இருக்கும் காயத்தழும்பை நாமும் காணலாம்.

சதுரகிரி பயணம்..... - Page 21 NONLOSojSrW1zIKk3rVD+001

சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:46 am

ஜூன் 2 லிருந்து படிக்கலை, நாளை படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 08, 2016 1:29 pm

நாங்கள் எதிர்பாராமல் அங்கு நடந்த விஷயம்.........

துணையாக உடன் வந்த நாய் அசிங்கத்தில் வாய்வைத்து விட்டது. அதைப்பார்த்ததும் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த நால்வரும் ஒருவித அருவருப்பு ஏற்பட முக சுளிப்புடன் தேங்கி நின்றார்கள். பின்னால் கூப்பிடும் தூரத்தில் வந்து கொண்டிருந்த எனக்கு, அங்கிருந்தே தகவல் சொன்னார்கள் பிள்ளைகள்.

அதைக்கேட்டதும், ஏனோ மனதிற்குள் எனக்கும் ஒருவித அருவருப்பு மண்டியது. எனில் இவ்வளவு நேரம் நம்முடன் வந்தது பைரவர் இல்லையா... என்ற எண்ணம் கேள்வியாக எழுந்த போது மனம் ஏமாற்றத்தில் சோர்ந்தது. உள்ளுக்குள் மனம் இந்த துர்பாக்கியத்தை எண்ணி ஊமையாக அழப்பார்த்தது.

அடக்கடவுளே ஒரு கணம் நம்மை எவ்வளவு பாக்கியசாலிகளாக நினைத்து கர்வம் மேலிட புளங்காகிதம் அடைந்து விட்டேன்..... சென்ற முறை போலவே மறுபடியும் அந்த கர்வத்திற்கு கிடைத்த அடியா.... மனதிற்குள் பலவாறாக நினைத்தபடி, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்த நாயும் அங்கேயேதான் சுற்றிக்கொண்டு இருந்தது.

நான் வரும் வரை என்னவரும் காத்திருந்தார். ‘என்ன இப்படி பண்ணிடுச்சே....’ என்று வருத்ததோடு சொன்னார். அதற்கு அவருக்கு, நான் பதிலாக சொன்னது எனக்கே ஆச்சரியமூட்டும் விதத்தில் இருந்தது. அதுவரையிலும் மனதிற்குள் புலம்பிக்கொண்டு வந்த எனக்கு எப்படி அப்படி ஒரு பதிலை சொல்லத்தோன்றியது என்பது இன்னமும் எனக்கு வியப்பான விஷயமாக தான் இருக்கிறது. நானே சொன்னேனா அல்லது எனக்குள் இருந்து என்னை செலுத்தியது அந்த ஆண்டவனா.... இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது.

நான் சொன்ன பதில், ‘எடுக்கும் உருவத்திற்கேற்ற இயல்பு தானே இருக்கும். சீதையை அடைய, ராவணன் ராமன் உரு எடுத்த போது அவனுக்குள் எப்படி ராமனின் மேன்மையான குணங்களும் இயல்பாய் எழுந்ததோ.... அப்படி தான் இதுவும் இருக்கணும். நாயின் இயல்பான பிறவிகுணங்கள் வெளிபட்டிருகிறது...... ‘ என்றேன். அந்த பதில் அவரை எந்த அளவிற்கு சமாதானப்படுத்தியதோ தெரியாது. ஆனால், நான் – என் மனம் தெளிந்து விட்டது.

தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிஷ இடைவெளியில் திடீரென்று எங்கிருந்து வந்ததோ தெரியாது, இன்னொரு வெள்ளை நிற நாய் எங்களை தொடர ஆரம்பித்தது. இப்போது எங்கள் வரையில் இது சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டிருந்தது. முன்னவர் கொடுத்த அனுபவத்தில்....

சதுரகிரி பயணம்..... - Page 21 XtzeEgQAS6WQTjTnsRJm+DSCN4337

சதுரகிரி பயணம்..... - Page 21 Xv2uFyjxTIybEVBOeyAQ+DSCN4361

இரண்டாவதாக வந்த பைரவர் ஓரங்களில் எங்கும் முகர்வதோ, மேய்வதோ இன்றி அது பாட்டிற்கு உடன் வந்து கொண்டிருந்தது. முதலில் வந்தது வழக்கம் போலவே மேய்ந்து கொண்டுத்தான் உடன் வந்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் மேலே படத்தில் உள்ள இடத்தில் இரண்டாம் பைரவர் உட்கார்ந்து விட்டது. பின்னாலேயே வந்த முன்னவர் அதன் அருகில் சென்று முகரும் போது, உக்கார்ந்திருந்த பைரவர் ஒரு உறுமல் உறுமியது பாருங்கள்.... பாய்ந்து குதறிவிடும் ஆவேசம். எங்கே அங்கொரு யுத்தம் தொடங்கி விடுமோ என்று பயந்து விட்டேன்.

ஒரே உறுமல் தான். கணநேரத்தில் அதிலேயே இருவருக்கும் பரிபாலனை நடந்து முடிந்து விட்டிருந்தது. முன்னது, இரண்டாவதிடமிருந்து விலகி முன்னால் ஓடியது.
நாங்களும் நடையை தொடர்ந்தோம். சற்று நேரம் கழித்து தான் கவனித்தோம், வெள்ளை பைரவர் எங்களை தொடரவில்லை என்பதை. அதுமட்டுமல்ல தலைய குனிந்த படியே எந்நேரமும் மேய்ந்து கொண்டிருந்த முதலாமவர், எங்கேயும் வாயை வைக்காமல் அது பாட்டுக்கு கூடவே வந்து கொண்டிருந்தது.

ஏனிந்த திடீர் மாற்றம்?

நாங்கள் தவறாக நினைக்க வாய்ப்பு கொடுத்துவிட்டதற்காக முதலாமவரை தன் ஒரேயொரு உறுமலில் இரண்டாமவர் கண்டித்திருக்கவேண்டும். ஆம், அது தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அதை எங்களால் நன்றாகவே உணர முடிந்தது.

அதற்கேற்றார்போல் முன்னவரும் கருமமே கண்ணாய் எங்களுடன் வந்தது அதிசயமும், ஆச்சரியமுமாய் இருந்தது. கீழே அடிவாரம் வரை வழியில் எந்த இடத்திலும் அது வாய் வைக்கவில்லை. அதன் மீது ஒரு வித பரிதாபம் தோன்றியது.

எவ்வளவு தூரம் நமக்காக நம்முடன் நடந்து வருகிறது.... அதற்கு சாப்பிடக்கொடுப்பதற்கு கூட அந்த நேரத்தில் எங்களிடம் எதுவுமில்லாமல் இருந்தது என்னை ரொம்பவே வருத்தப்பட வைத்தது.

மலை ஏறும் போது வழியெங்கும் இருந்த கடைகளில் ஒன்றைக்கூட இப்போது காணவில்லை. ஆளுக்கு ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் தான் இறங்கினோம். ஸ்நாக்ஸ் போன்ற தின்பண்டங்கள் ஏதும் எங்களிடம் இல்லை.

பைரவரின் மீது ஏற்பட்ட பரிதாபத்தினால் ஏதேனும் அவருக்கு சாப்பிடக்கொடுக்கவேண்டும் என்று தோன்றியது. அடிவாரம் சென்ற பிறகு தான் ஏதாவது வாங்கித்தரமுடியும். ஆனால், அதுவரை உடன் வரவேண்டுமே என்றும் கவலையாக இருந்தது.

சதுரகிரி பயணம்..... - Page 21 PVahmC61R4SV9OkLwiUU+DSCN4339

சதுரகிரி பயணம்..... - Page 21 HU1F8jeSRJyHykvbwr4D+DSCN4370

அதனாலேயே பைரவரிடம் நேரிடையாகவே சொல்லிவிட்டேன். பாதியிலேயே விடை பெற்றுக்கொள்ளாமல் அடிவாரம் வரை எங்களுடம் வரவேண்டுமென்று.....

நான் சொன்னது புரிந்துதான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட safe ஆன இடம் வந்ததும்  நம்முடன் வரும் பைரவர் இனி இவர்களுக்கு பயமில்லை என்று விடைபெற்று சென்று விடாமல் அடிவாரம் வரை உடன் வந்ததும் ஆச்சரியம் தான்.

சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 08, 2016 1:30 pm

ஏற்கனவே மேகம் வெகுவாய் திரண்டிருந்தது. அதன் காரணத்தினால், வழியில் சங்கிலிப்பாறை தாண்டியதும் மழை சடசடவென பிடித்துக்கொண்டது.

இடையில் எங்கே மழை பெய்துவிடுமோ என்று பயந்த மனம். இப்போது நிஜமாகவே மழை பெய்யும்போது, எதுவானாலும் தயார் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது.

மழை சற்றே வலுத்த போது ஒரு கனத்த மரத்தடியில் நின்றோம். ஆனாலும், மழை நேரத்தில் மரத்தினடியில் நிற்பது உசிதமில்லை என்பதனால்   வேகவேகமாய் மரங்களினூடே இருந்த ஒற்றையடி பாதையில் வேக நடை போட்டோம். கிட்ட தட்ட நாங்கள் அனைவருமே நனைந்து விட்டோம். பைரவரும் எங்களுடன் முழுக்கவே நனைந்து தான் விட்டார்.

நனைந்த பாறைகளின் மீது நடப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். நல்லவேளை அப்படிப்பட்ட பாதைகளை எல்லாம் கடந்து விட்டோம். இனி இருப்பது வழுக்கு பாறை மட்டும் தான். அதையும் கடந்து விட்டால் பிரச்னை ஏதுமில்லை.

வழுக்கு பாறையும் வந்தது. மழை சற்று நின்று, தூறலாக கீழே இறங்கிக்கொண்டிருந்தது. பாறை முழுவதும் நனைந்திருந்ததால் நன்றாகவே வழுக்கியது. செருப்பை கழட்டி விட்டு வெறும் காலோடு நடந்தாலும் கூட வழுக்கத்தான் செய்தது.

எப்படியோ என்னவர் துணையுடன் பாறையை ஏறி இறங்கி விட்டேன். குதிரயூத்து அருகே வந்ததும் மழை சுத்தமாக நின்று விட்டிருந்தது. விரைவாக நடந்து அடிவாரத்திற்கு வந்து விட்டோம். இறங்கும் போது சரியாக நான்குமணி நேரம் ஆகியிருந்தது. மதியம் மணி 12.35 ஆகியிருந்தது.ஆக, ஏறுவதற்கு ஆறுமணி நேரமும் – இறங்குவதற்கு நான்கு மணி நேரமும் ஆகியிருக்கிறது.

ஏறும் போது இன்னொரு விஷயமும் இருக்கிறது. முதன் முறையாக ஏறுபவர்கள் மலையிலிருந்து தரிசனம் முடித்து திரும்பிக்கொண்டிருப்பவர்களிடம் “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்...?”  என்று யாரிடம் கேட்டாலும் வரும் ஒரே பதில் –

‘கொஞ்ச தூரம் தான்..... இன்னும் அரைமணி நேரத்துல வந்துடும்....’ என்று சொல்வார்கள். சங்கிலிப்பாறை அருகே கேட்டால் கூட இதைத்தான் சொல்லுவார்கள். இவர்கள் மட்டுமில்லை வழியிலிருக்கும் கடைகாரர்கள் கூட அப்படித்தான் சொல்வார்கள். நம் மனதை தளரவிடாத வார்த்தைகள்.... நமக்குள் டானிக் மாதிரி செயல் படும் அதிசயத்தை சதுரகிரி செல்லும் போது அதை நேரிலேயே நாம் உணரலாம்.

அடிவாரம் வந்ததும் ஊன்று கோலாய் வந்த தடியை அடுத்து வரும் பக்தர்களுக்கு உபயோகமாக எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு சதுரகிரி நுழைவாயிலுக்கு வந்தோம்.

என்னவர் பைரவருக்கு ஏதேனும் வாங்கிக்கொடுக்க கடைகள் பக்கமாக சென்றார். பைரவரும் உடன் சென்றுவிட்டது. நாங்கள் மடத்தில் கார் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். ஏற்கனவே எங்கள் லக்கேஜுகள் வந்து விட்டிருந்தது.

அந்த பிறகு இவர் வந்ததும் அங்கிருந்து கிளம்பினோம். மூன்று மணியளவில் வழியில் சாப்பிட்டுவிட்டு நாங்கள் வீடு வந்து சேர்ந்த போது இரவு மணி பதினொன்று.

சதுரகிரி பயணம்..... - Page 21 N2fvRqG5Ri2vJRwB4frV+001

சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 08, 2016 1:40 pm

தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் யாவும் மலையில் இருந்த போது காதில் விழுந்த செவி வழிச்செய்திகளே. மேலும், சில விஷயங்கள் இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் (மலைக்கு போவதற்கு முன்னால்) படித்து அறிந்துகொண்டது.

சதுரகிரி பயணம்..... - Page 21 XAHft7wiQLKw8ywrdnVL+Magalingam-old

வழியெல்லாம் பிள்ளைகளுக்கு இத்தலப்புராண கதையை நான் சொல்லிக்கொண்டே தான் மலை ஏறினேன். அதே என் பாணியில் தான் உங்களுக்கும் இங்கே பதிவேற்றியிருக்கிறேன். (எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

எந்த ஒரு விஷயத்தையும் அனுபவம் மட்டுமே ஒருவருக்கு புரியவைக்கமுடியும். எனது எழுத்துக்களால் ஓரளவிற்கு விவரித்திருந்தாலும் அது எந்த அளவிற்கு நிஜத்துடன் உங்களை ஒன்றவைத்திருக்கும் என்பது கேள்விக்குறி தான்.

இருந்தாலும்,  

என்னால் இயன்றவரை சதுரகிரி மலையானின் அருளையும், இந்த மலையின் தோற்றத்தையும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்து இருக்கிறேன். அதில் எந்த அளவிற்கு நான் சரியாக செய்து வெற்றிப்பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை.

மலையேறும் போதும், இறங்கும் போதும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்கலாம். தரிசனம் முடித்து விட்டு வரும் பக்தர்கள் நம்மை கடந்து செல்லும் போது ஒருவித நறுமணம் நம்மை சூழும். இன்னமும் அந்த வாசனை நாசியை விட்டு நீங்காமல் தான் இருக்கிறது. சதுரகிரி மலையே மணம் கமழும் மலையாக தான் திகழ்கிறது.  

கர்ப்பகிரகத்தின் அருகே நாம் நிற்கும் போது ஏற்படும் அதே மணம். அவர்கள் நெற்றியில் இருக்கும் திருநீற்றுக்கு அப்படி ஒரு உயர்வான மணம். மனம் அதிலேயே லயித்துவிட நினைக்கிறது.

அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.

சித்தர்கள் திரிந்து கொண்டிருக்கும் இந்த மலையில், அவர்கள் நடமாடிய இடங்களில் நம் காலடி படவே நாம் பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

சில இலக்ஷம் மக்களுக்கு கிடைத்த அந்த பாக்யம் மிக, மிக சாமான்யமான எனக்கும், என் குடும்பத்திற்கும் கிடைத்திருக்கிறது என்றால் ஏதோ எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே நினைக்கிறேன்.

இந்த கொடுப்பினை என் வாழ்நாள் முழுவதும், வருடத்திற்கு ஒருமுறையாவது கிடைக்கவேண்டும் என்பது என் விருப்பம்.    

சதுரகிரி போகாதவர்கள் நம் உறவுகளில் யாரேனும் இருப்பின் நேரம் கிடைக்கும் போது அவசியம் ஒருமுறையேனும் சென்று அவனருளை பெற்று வாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 21 92uy4z30Sx2tbeGpbJ02+சதுரகிரி

சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா!

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  

நிறைவு பெற்றது

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  

சதுரகிரி பயணம்..... - Page 21 IeOAqaLxReDKAXhbmonA+001

சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2016 5:19 pm

(எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது  என்பதை எழுத்துகளால் விவரிக்க முடியாது .
சொந்தமாக 10 வரிகள் எழுதுவது , 10 C & P ஐ விட சிறந்தது என்று நினைப்பவன் நான் .

சதுரகிரி ஆன்மீக பயணம் அருமையாக ஆரம்பித்து அருமையாகவே முடித்து உள்ளீர் .
அழகு பட ,ஆர்வத்தை தூண்டும் படியும் , சதுரகிரி மகாலிங்க சுவாமிகளை நிச்சயம்  தர்சித்து அருள்
பெறவேண்டும் என்கிற உத்வேகத்தை உண்டாக்கிற தொடராகவே இருக்கிறது .

மேலும் பல ஸ்தலங்கள் சென்று ,உங்கள் அனுபவங்களை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jun 08, 2016 9:07 pm

விமந்தனி wrote:
ஸ்ரீரங்கா wrote:சித்தி...... உங்கள் எழுத்துக்களில் உள்ள வார்த்தைகள் அருமை

உண்மையில் சூப்பருங்க சூப்பருங்க

சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் அருளை அனைவரும் பெறுகின்றனர்.....
பிழையில்லா தமிழ். சூப்பருங்க வாழ்த்துக்கள்.!
மேற்கோள் செய்த பதிவு: 1209731
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jun 08, 2016 9:10 pm

சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா! சித்தி ஆணைத்தும் அருமை...

சதுரகிரி பயணம்..... - Page 21 103459460 சதுரகிரி பயணம்..... - Page 21 103459460 சதுரகிரி பயணம்..... - Page 21 103459460 சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 08, 2016 10:13 pm

அருமை பயனம்.

எழுத்தில் இல்லை காப்பி பேஸ்ட்;
கர்மத்தில் நம்பிக்கை உள்ளோர்
சொல்லார் வாழ்வில் அப்படி
இல்லை என!!!

Sponsored content

PostSponsored content

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக