ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

View previous topic View next topic Go down

பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

Post by ராஜா on Tue Apr 26, 2016 7:22 pm

ஊழல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் நிலவாயு தொடர்பானவற்றை அழைக்க முடியாது

பணமும் வர்த்தகமும் என் ரத்தத்தில் ஊறியவை - 2014-ல் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது அந்நாட்டு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படப் பேசியது இது. அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர் தன்னைப் பற்றி மிகையாகவோ ஜோடனையாகவோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இந்த அரிய குணத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நடந்த இயற்கை நிலவாயுக் கண்டுபிடிப்பு மோசடி. எந்த வாயுவாக இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். இல்லாத வாயுவைக் கண்டுபிடித்து, வெளியில் எடுப்பதாக ‘பாவனை செய்ய’ அசாதாரணத் திறமையும், சூழ்ச்சி செய்யும் மனமும் தேவை. நடந்ததையெல்லாம் எவர் கண்ணிலும் படாமல் மறைக்க மிகுந்த திறமைசாலியாக இருக்க வேண்டும். இதுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநில வாயு மோசடியின் கதைச் சுருக்கம். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 5 அறிக்கைகளில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.19,700 கோடி மதிப்புள்ள இந்த ஊழலை, நாடே அறியாதபடி பார்த்துக்கொண்ட திறமைக்காகப் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டலாம்.

அரசுத் துறை நிறுவனமான குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஜி.எஸ்.பி.சி.) கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் ஆழ்கடலில் நிலவாயு இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி 2005 ஜூன் 26-ல் அறிவித்தார். அந்த வாயுவின் அளவு ரூ.2,20,000 கோடி மதிப்புள்ள 20 லட்சம் கோடி கன அடி என்றார். நாடே அச்செய்தி கேட்டு வியப்பில் ஆழ்ந்தது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் பேச முடியாமல் வாயடைத்து நின்றனர். 2007 டிசம்பரில் உற்பத்தி தொடங்கும் என்றும் நிலவாயு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்றும்கூட மோடி அறிவித்தார். இப்போது ஆண்டு 2016. மோடி அறிவித்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வடிநிலத்திலிருந்து இன்னமும் ஒரு கன அடி நிலவாயுகூட எடுக்கப்படவில்லை.

ஏன்? ஏனென்றால், அங்கு நிலவாயுவே கிடையாது! ஜி.எஸ்.பி.சி. என்ற நிறுவனம் இத்தனை ஆண்டுகளில் நிலவாயுவைத் தேட ரூ.19,700 கோடியைச் செலவிட்டுள்ளது.

மோசடி எங்கே வந்தது?

பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை நிலவாயு ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பல உலக அளவில் இதைப் போலத் தோல்வியில் முடிந்துள்ளன. உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள்கூட இப்படி முயற்சி செய்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளன. எனவே, இதில் மோசடி எங்கே வந்தது? எண்ணெய் அல்லது நிலவாயுவைக் கண்டுபிடித்து எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நிச்சயம் வெற்றிதரும் என்று கூற முடியாதவை, அதிக செலவுபிடிப்பவை. நிச்சயமாக நிலவாயு அல்லது எண்ணெய் கட்டுப்படியாகும் அளவுக்குக் கிடைத்துவிடும் என்பது நிச்சயமில்லைதான். நிலவாயுவோ எண்ணெயோ எதிர்பார்த்தபடி இல்லை என்று தெரிந்தால், உடனே துரப்பணப் பணியை நிறுத்திவிடுவார்கள் அல்லது சோதனை முயற்சிக்கு ஆகும் செலவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வருவார்கள். ஜி.எஸ்.பி.சி. மேற்கொண்ட முயற்சி அப்படிப்பட்டதல்ல என்பதைத்தான் கீழே விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

மிகுந்த முக்கியத்துவமும் மிக நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியதுமான இந்த ஆய்வுப் பணிக்கு தொழில்நுட்பப் பங்குதாரராக ‘ஜியோகுளோபல் ரிசோர்சஸ்’ என்ற நிறுவனத்தைத்தான் ஜி.எஸ்.பி.சி. சேர்த்துக்கொண்டது. இந்நிறுவனம் 2 தனி நபர்களுக்குச் சொந்தமானது. கேரி சோபர்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட் என்ற 2 கிரிக்கெட் பிரபலங்களின் நாடான பார்படாஸ் தீவைச் சேர்ந்தது. ஜியோகுளோபல் நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் உள்ள ராய் குழுமம் என்ற நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. மொரீஷியஸ் நாடு எண்ணெய்த் துரப்பணப் பணிக்காக அல்ல, வரி ஏய்ப்பு செய்வோருக்கு சொர்க்கபுரி என்று அறியப்பட்ட நாடு. கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நிலவாயுவை அகழ்ந்தெடுக்கும் சோதனை முயற்சி ஆரம்பத்திலிருந்தே ஏதோ துர்வாடையுடன்தான் தொடங்கியது.

ரூ.4,800 கோடி கடன் ஏன்?

நிலவாயு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2007 முதல் தயாரிப்பு தொடங்கிவிடும் என்று நரேந்திர மோடி 2005-லேயே அறிவித்ததை நினைவுகூர வேண்டும். அறிவித்தபடி 2007-ல் அல்ல 2009-ல்தான் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் நிலவாயுவை அகழ்ந்தெடுப்பது தொடர்பாகக் ‘கள வளர்ச்சித் திட்டம்’ தயாரித்து அளிக்கப்பட்டது. வடிநிலத்திலிருந்த இயற்கை நிலவாயு எப்படி அகழ்ந்தெடுக்கப்படும் என்று சில நூறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை விவரித்தது.நிலவாயு அகழப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு, எப்படி அகழப்படும் என்ற விளக்கமான அறிக்கை தயாரிக்கப்பட்ட காலம்வரையில் ஜி.எஸ்.பி.சி. நிறுவனமானது அரசுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.4,800 கோடி கடன் வாங்கியிருந்தது. வெறும் அறிக்கை தயாரிக்க ரூ.4,800 கோடி செலவு பிடித்திருக்க முடியாது! வடிநிலத்தின் ஆழத்திலிருக்கும் எரிவாயுவைக் கண்டுபிடித்து எடுப்பதற்கு முன்னதாகவே இத்தனை கோடி ரூபாய் கடன் ஏன் வாங்கப்பட்டது என்ற கேள்வி பிறக்கிறது.

2009-ல் வெளியான திட்ட அறிக்கை, மோடியின் அறிவிப்பு அதிகப்படியான எதிர்பார்ப்பு என்று தெரிவித்துவிட்டு, அதில் 90% அளவைக் குறைத்தது. இந்த நிலவாயு அகழ்வுத் திட்டமே வீணான முயற்சி, ஒரு அலகுக்கு (எம்.எம்.பி.டி.யு.) 5.7 டாலர் என்று இந்த நிலவாயுவை விற்க முடியாதென்றால், நிலவாயு அகழ்வுப் பணியையே நிறுத்திவிடலாம் என்று வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறியது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட நிலவாயு விற்பனை விலை ஒரு அலகுக்கு 4.2 டாலர்கள்தான். எனவே, அந்த முழு திட்டமும் கட்டுப்படியாகாதது, பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் விரயமாக்குவது. அப்போதைய நிலையிலேயே இந்த அகழ்வுப் பணி முயற்சியை அரசு கைவிட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தும் அப்போது குஜராத்தில் ஆட்சியில் இருந்த மோடி அரசு, ஜி.எஸ்.பி.சி.யின் இறக்கைகளின் கீழ் அடைக்கலம் புகுந்த, சந்தேகத்துக்கிடமான பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க விரிவான திட்டத்தை வகுத்தது.

நஷ்டத்துக்கு விற்க முடியுமா?

கிருஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் இல்லாத வாயுவுக்காக எண்ணெய்த் துரப்பண மேடைகளில் பொருத்துவதற்காகத் துரப்பணக் கருவிகளை வாங்க கூட்டுச் செயல்பாட்டு நிறுவனம் முடிவெடுத்தது. துரப்பணக் கருவிகளை அளித்தே பழக்கப்பட்டிராத ‘டஃப் டிரில்லிங்’ என்ற நிறுவனத்துக்குத் துரப்பண மேடைக் கருவிகளுக்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்தியாவிலேயே மிகப் பெரிய நிலவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக மோடி அறிவித்ததற்கு வெகு நாட்களுக்குப் பிறகு, அதாவது 2007-ல்தான் ‘டஃப் டிரில்லிங்’ நிறுவனம் நிறுவப்பட்டது.

2015 மார்ச் வரையில் மட்டும் டஃப் டிரில்லிங் மற்றும் அதே போன்ற பிற நிறுவனங்களுக்கு ரூ. 5,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதி நிலவாயு உற்பத்திப் பணிக்காக ரூ.19,700 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அப்படியே நிலவாயு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதை நஷ்டத்துக்குத்தான் விற்றிருக்க முடியும். காரணம், அதை வெளியே எடுப்பதற்கு ஆகும் செலவைவிட மிகக் குறைந்த விலையில்தான் சர்வதேசச் சந்தையில் நிலவாயு கிடைத்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி விலையைவிட விற்பனை விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் தயாரிப்பை மேற்கொள்வதைவிட சும்மா இருக்கலாம் என்பதை பணமும் வர்த்தகமும் தன் ரத்தத்தில் ஊறியவை என்று அறிவித்துக்கொண்ட தலைவரும் உண்மையிலேயே அறிந்திருப்பார். ஜி.எஸ்.பி.சி.க்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது?

உள்நோக்கம் என்ன?

1979-ல் குஜராத் மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.பி.சி. நிறுவனத்துக்கு 2007 மார்ச் 31 வரையில் கடன் என்பதே ஏற்படவில்லை. 2008 தொடங்கி 2015 வரையில் மொத்தம் ரூ.19,720 கோடியை 13 அரசுத் துறை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இந்தப் பணம் முழுவதும் சந்தேகத்துக்கிடமான நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களின் உள்நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.

பிரதமரான பிறகு வாராக் கடன்கள் குறித்து வருத்தப்படவும் அரசு வங்கிகளிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் குறித்துப் பேசவும் அவரால் முடிகிறது. உண்மையான வர்த்தகத்துக்கு அல்லாமல் வேறு எதற்காகவோ கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ள ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்களால்தான் அரசு வங்கிகளே வாராக் கடன் சுமையில் ஆழ்ந்து கிடக்கின்றன.

அனைத்துக்கும் ஆதாரம் உண்டு

கிருஷ்ணா-கோதாவரி வடிநில ஊழல் என்பது, நிலவாயு கிடைத்துவிட்டது என்ற போலியான அறிவிப்பு மூலம், மாநில அரசுத் துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி நிலவாயுவை அகழ்வதற்காக அல்ல, கோடிக்கணக்கான ரூபாயை அரசு வங்கிகளிடமிருந்து கறப்பதற்காக என்று புரிகிறது. 2015-ல் தனது தணிக்கை அறிக்கையில் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக வாங்கிக்கொண்டு தேவையற்ற, பயனற்ற நிலவாயு அகழ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பக்கம் பக்கமாகத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், செய்தி ஊடகத்திலோ மின்னணு ஊடகத்திலோ இதுகுறித்து ஒரு செய்திகூடக் கண்ணில் படவில்லை. இது அரசியல் நோக்கில் கூறப்படும் குற்றச்சாட்டு அல்ல. இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்துமே ஆதாரபூர்வமான பல ஆவணங்களிலிருந்து திரட்டப்பட்டவை.

செபி நிறுவனத்திடம் ஜி.எஸ்.பி.சி. நிறுவனம் அனுமதி கோரி அளித்த ஆரம்பகால பங்கு விற்பனை உட்படப் பல சான்றுகள், ஜியோ குளோபல் நிறுவனம் செபியிடம் அமெரிக்காவில் தாக்கல் செய்த தகவல்கள், கம்பெனிகள் நடவடிக்கைக்கான துறை அமைச்சகப் பதிவேடுகள் உள்ளிட்ட பல ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்த ஊழல் பற்றி - ஊழல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் இதை அழைக்க முடியாது -உச்ச நீதிமன்றத்தில் இப்போது பணிபுரியும் நீதிபதியைத் தலைவராகக்கொண்டு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

Post by T.N.Balasubramanian on Tue Apr 26, 2016 9:28 pm

19700 கோடி நில வாயு ஊழல்
175 லக்ஷம் கோடி 2 G ஊழல்
ஆதர்ஷ் ஊழல்
காமன் வெல்த் விளையாட்டு ஊழல்
இவைகளை பார்க்கும் போது அம்மா கேசு ஒண்ணுமே இல்லையே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

Post by M.Jagadeesan on Tue Apr 26, 2016 10:41 pm

@T.N.Balasubramanian wrote:19700 கோடி நில வாயு ஊழல்
175 லக்ஷம் கோடி 2 G ஊழல்
ஆதர்ஷ் ஊழல்
காமன் வெல்த் விளையாட்டு ஊழல்
இவைகளை பார்க்கும் போது அம்மா கேசு ஒண்ணுமே இல்லையே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204761

அம்மா , சாதாரண மனுஷியாக இருந்து ஊழல் செய்திருந்தால் , யாரும் அவரைப்பற்றிப் பேசப்போவதும் இல்லை ; கவலைப்படப் போவதும் இல்லை . ஆனால் அவர் நம்முடைய முதல்வராக இருக்கிறாரே ! நம்முடைய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பதில் என்ன தவறு ?

ஊழலைப் பொறுத்த அளவில் , சிறிய ஊழல் , பெரிய ஊழல் என்று எதுவும் கிடையாது . நெருப்பிலே , சிறிய நெருப்பு, பெரிய நெருப்பு என்று பாகுபாடு செய்ய முடியுமா ? அக்கினிக் குஞ்சாக இருந்தாலும் , அது எரிக்கத்தானே செய்யும் ?

"சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் " என்பது ஆங்கிலப் பழமொழி . அதுபோல ஒரு மாநிலத்தின் முதல்வரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

Post by krishnaamma on Wed Apr 27, 2016 12:20 am

@M.Jagadeesan wrote:
@T.N.Balasubramanian wrote:19700 கோடி நில வாயு ஊழல்
175 லக்ஷம் கோடி 2 G ஊழல்
ஆதர்ஷ் ஊழல்
காமன் வெல்த் விளையாட்டு ஊழல்
இவைகளை பார்க்கும் போது அம்மா கேசு ஒண்ணுமே இல்லையே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204761

அம்மா , சாதாரண மனுஷியாக இருந்து ஊழல் செய்திருந்தால் , யாரும் அவரைப்பற்றிப் பேசப்போவதும் இல்லை ; கவலைப்படப் போவதும் இல்லை . ஆனால் அவர் நம்முடைய முதல்வராக இருக்கிறாரே ! நம்முடைய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பதில் என்ன தவறு ?

ஊழலைப் பொறுத்த அளவில் , சிறிய ஊழல் , பெரிய ஊழல் என்று எதுவும் கிடையாது . நெருப்பிலே , சிறிய நெருப்பு, பெரிய நெருப்பு என்று பாகுபாடு செய்ய முடியுமா ? அக்கினிக் குஞ்சாக இருந்தாலும் , அது எரிக்கத்தானே செய்யும் ?

"சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் " என்பது ஆங்கிலப் பழமொழி . அதுபோல ஒரு மாநிலத்தின் முதல்வரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1204773

நீங்க சொல்வது ரொம்பவும் சரி ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

Post by T.N.Balasubramanian on Wed Apr 27, 2016 4:29 pm

இன்றைய பிரதமர் /அன்றைய முதல்வர் ஆக இருந்த போது நடந்த பெரும் உழல்தான் தலைப்பே .
இன்றைய பேபரில் கிடைத்த தலைப்புச் செய்தி ,
இத்தாலிய கவர்ன்மெண்ட் , ஹெலிகாப்டர்  விற்ற டீலில் ,
த்யாகி ,இந்திய ராணுவ தலைமை , லஞ்சம் வாங்கிய ஆதாரமும் அதில் 15/16 மில்லியன் ஈரோ டாலர் குடும்பத்திற்கும் , 8.4 மில்லியன்அதிகாரிகளுக்கும் ,6 மில்லியன் விமான படைக்கும் ,3மில்லியன் அரசியல்வாதிகளுக்கும் சேர்ந்துள்ளதாக செய்தி.
நாட்டில் நடப்பதுதானே ,என்று சிறிதே கீழிறங்கி வந்தால்  
கண்ணை உறுத்தியது  வாசன் ஐ /ஹெல்த் கேர்  சமாச்சாரம் .
112 கோடி ரூபாய்க்கு @7500 விலையில் வாசன் ஹெல்த் கேர் ஷேர்களை செகுலா வெஸ்ட்பிரிஜ் ,மரிஷியஸ் வாங்கிய விஷயம் . வாசன் ஹெல்தின்   சுய மதிப்புப் படியே ஷெரின் விலையே 110/- ரூபாய்தான் .

எதாவது  ஒரு அரசியல்வாதியை /அரசியல் கட்சியை காட்டுங்கள் லஞ்ச ஊழல் இல்லாத, ஈடுபடாதது என்று.
பிறகு சிறிய நெருப்பு பெரிய நெருப்பை பற்றி பேசலாம் .

மறக்கவில்லை , நல்லக் கண்ணு ,கம்யுனிஸ்ட் , எந்த கட்சியின் சார்பாகவும் எங்கள் தொகுதியில் நின்றால் எங்கள் வோட் அவருக்கே  . அவருக்காக பிரச்சாரமும் செய்வேன் . நான் கம்யுனிஸ்ட் அனுதாபி கூட இல்லை

லஞ்சம் ஊழல் பற்றி இவ்வளவு பேசும் நாம் , நமக்கு காரியம் சீக்கிரம் ஆக வேண்டுமானால் , கவனிக்க வேண்டியவர்களை கவனிப்பது இல்லையா ? . எவ்வளவு முறை ட்ரெயினில் ரிசர்வேஷன் கோச்சில் , முன் பதிவு செய்யாமல் , கவனிக்கவேண்டியவரை கவனித்து சுகமாக படுத்து யாத்திரை செய்து இருக்கிறோம் .
தாயார் , தனக்கு வேண்டிய சாமானை வாங்கி வர ,பையனிடம் பணம் கொடுத்து , ஒரு கேட்பரிஸ் சாப்பிட்டு விட்டு நான் சொன்ன சாமான்களை வாங்கி வா என்று சொல்வதில்லை ?
எல்லாருக்கும் ஆசைதான் ஊழலற்ற தலைமை தேச அளவில் , மாநில அளவில்  வேண்டும் என்று .

அரசியலில் சேவைதான் செய்யவேண்டும் .பணம் எதுவும் பண்ணமுடியாது என்று ஒரு நிலை கொண்டுவரமுடிந்தால் , ஒருவர் கூட அரசியலில் ஈடுபடமாட்டார்கள் .
கோடி கோடி கோடி யாக பணம் பண்ணமுடியும் /வெளிநாட்டில் முதலீடு செய்யமுடியும் என்ற வசதி இருப்பதால்தான் 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தும் , இன்னும் ஆசை விடவில்லை .
சேவை மனப்பான்மை உள்ளவர்கள் , அவர்கள் ஆரம்பித்து உள்ள மெடிகல் /இஞ்சினீரிங்க் கல்லோரிகளில்
capitation fees வாங்காமல் நியாயமான fees வாங்கட்டும் முதலில் . முன்னோடிகள் என மார் தட்டிக்கொள்ளட்டும் .
நிர்வாணபுரியில் கோமணம் கட்டினவன் பைத்யக்காரன், என்பதற்கு இணங்க , லஞ்ச ஊழல்கள் நிறைந்த இந்த அரசியலில் , இவன் வந்தால் மானத்தை வில்லை வளைப்பான் ,அவன் வந்தால் மணலை கயிறாய் திரிப்பான் என்று கற்பனை செய்து கொண்டு மாயாலோகத்தில் மிதக்கிறோம் .

ரமணியன்    
,


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum