ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரோஹித், போலார்ட் அதிரடி; மும்பைக்கு 2-ஆவது வெற்றி

View previous topic View next topic Go down

ரோஹித், போலார்ட் அதிரடி; மும்பைக்கு 2-ஆவது வெற்றி

Post by ayyasamy ram on Thu Apr 21, 2016 8:07 am



ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது லீக் ஆட்டத்தில்
6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி
2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்
பெங்களூர் அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
முன்னணி தொடக்க வீரரான கிறிஸ் கெயிலின் மனைவிக்கு
ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் விடுப்பில் சென்று
விட்டார். அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை
தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியில்
கேப்டன் விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் தொடக்க
வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு
3.5 ஓவர்களில் 32 ரன்கள் சேர்த்தது.

மெக்ளெனகன் வீசிய 4-ஆவது ஓவரின் முதல் பந்தில் கோலி
ஒரு ரன் எடுக்க, அடுத்த 3 பந்துகளில் 2 சிக்ஸர்களையும்,
ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்ட லோகேஷ், அதற்கடுத்த
பந்தில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் ஆனார்.
அவர் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து டிவில்லியர்ஸ் களம்புகுந்தார்.
கோலி-டிவில்லியர்ஸ் ஜோடி வேகமாக ரன் சேர்க்க,
10 ஓவர்களில் 89 ரன்கள் குவித்தது பெங்களூர். 11-ஆவது ஓவரை
வீசிய கிருனால் பாண்டியா 2-ஆவது பந்தில் கோலியையும்,
கடைசிப் பந்தில் டிவில்லியர்ûஸயும் வீழ்த்தினார். கோலி
30 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 33 ரன்களும், டிவில்லியர்ஸ்
21 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் வந்த வாட்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ்
ஹெட்டுடன் இணைந்தார் சர்ஃப்ராஸ் கான். இந்த ஜோடி,
மெக்ளெனகன் வீசிய 18-ஆவது ஓவரை பதம்பார்த்தது. முதல்
பந்தில் சர்ஃப்ராஸ் கான் பவுண்டரி அடிக்க, 3-ஆவது பந்தில் டிராவிஸ்
ஹெட் விளாசிய சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரைக்கு பறந்தது.
5-ஆவது பந்தில் சர்ஃப்ராஸ் கான் சிக்ஸரை விளாச, அந்த ஓவரில்
18 ரன்கள் கிடைத்தன.

பூம்ரா வீசிய கடைசி ஓவரில் டிராவிஸ் ஹெட் ரன் அவுட்டானார்.
அவர் 24 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள்
எடுத்தார். அந்த ஓவரின் 3-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசிய
சர்ஃப்ராஸ் கான், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில்
2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். இறுதியில்
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது பெங்களூர்.

ரோஹித் 62: பின்னர் ஆடிய மும்பை அணியில் பார்த்தீவ் படேல்
5 ரன்களில் வெளியேற, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் அம்பட்டி
ராயுடு. இதன்பிறகு அதிரடியில் இறங்கிய ரோஹித் சர்மா, வருண்
ஆரோன் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும்
விரட்ட, 5 ஓவர்களில் 43 ரன்களை எட்டியது மும்பை.

ரோஹித்-ராயுடு ஜோடி தொடர்ந்து வேகம் காட்ட 10 ஓவர்களில்
81 ரன்களை எட்டியது மும்பை. இக்பால் அப்துல்லா வீசிய 11-ஆவது
ஓவரில் ராயுடு ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன்
31 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்கள்
சேர்த்தது.

இதையடுத்து ஜோஸ் பட்லர் களமிறங்க, 38 பந்துகளில் அரை சதம்
கண்டார் ரோஹித். இது அவருடைய 27-ஆவது அரை சதமாகும்.
இக்பால் வீசிய 13-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை
விளாசிய ரோஹித், மற்றொரு சிக்ஸரை விளாச முயன்றபோது
டிவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார். அவர் 44 பந்துகளில் 3 சிக்ஸர்,
4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்தார்.

போலார்ட் 40*: இதையடுத்து போலார்ட் களமிறங்க, ஜோஸ் பட்லர்
14 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து
ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களமிறங்க,
மறுமுனையில் போலார்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். ரிச்சர்ட்ஸன்
வீசிய 17-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விரட்டிய போலார்ட்,
வாட்சன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை
விரட்டி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதனால் 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து
வெற்றி கண்டது மும்பை.

போலார்ட் 19 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40,
பாண்டியா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ரோஹித், போலார்ட் அதிரடி; மும்பைக்கு 2-ஆவது வெற்றி

Post by ayyasamy ram on Thu Apr 21, 2016 8:07 am



----------
சுருக்கமான ஸ்கோர்
பெங்களூர்-170/7
டிராவிஸ் ஹெட் 37 (24)
கோலி 33 (30)
டிவில்லியர்ஸ் 29 (21)
சர்ஃப்ராஸ் கான் 28 (18)
பூம்ரா 3வி/31
கிருனால் பாண்டியா 2வி/27
மும்பை - 171/4
ரோஹித் சர்மா 62 (44)
போலார்ட் 40* (19)
அம்பட்டி ராயுடு 31 (23)
அப்துல்லா 3வி/40
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum