ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

“இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”-ஐஸ்வர்யா ராஜேஷ்

View previous topic View next topic Go down

“இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”-ஐஸ்வர்யா ராஜேஷ்

Post by ayyasamy ram on Thu Apr 07, 2016 8:59 am


-

-
“டான்ஸ் மேல காதலா இருந்தப்ப, `நடிக்கணும்’னு ஆசை வந்துச்சு. நடிக்க சான்ஸ் கேட்டு, சினிமா கம்பெனிங்க படி ஏறி இறங்கிட்டு இருந்தேன். பல டைரக்டர்களை மீட் பண்ணியிருக்கேன். `யாராவது சான்ஸ் தர மாட்டாங்களா…’னு ஏங்கிக்கிட்டு இருந்த காலம் அது. இப்ப அஞ்சு வருஷமா சினிமாவுல தீவிரமா நடிச்சுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா சந்தோஷமா இருக்கு’’ துறுதுறுவெனப் பேசுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
-
“சினிமா கனவு எப்படி நிறைவேறுச்சு?”
-
“காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கும்போதே நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அலைஞ்சு திரிஞ்சு ஒருவழியா ‘அவர்களும் இவர்களும்’னு ஒரு படத்துல நடிச்சேன். அந்தப் படம் வந்ததே பல பேருக்குத் தெரியாது. அவ்வளவுதான் நம்ம சினிமா கரியர்னு நினைச்சுட்டு இருந்தப்போதான் ‘அட்டகத்தி’ படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சின்ன ரோல்னாலும் பசங்க மனசுல ஒரு இடம் பிடிச்சுட்டேன். ஒரு சின்ன பிரேக்கும் கிடைச்சது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: “இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”-ஐஸ்வர்யா ராஜேஷ்

Post by ayyasamy ram on Thu Apr 07, 2016 9:02 am


-
அடுத்து விஜய் சேதுபதிகூட ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’னு பல படங்கள். இப்ப `நல்லா நடிக்கிறேன்’னு எல்லாரும் சொல்றாங்க. கேட்கவே சந்தோஷமா இருக்கு. இதுக்குத்தானே இந்த ஐஸ்வர்யா ஆசைப்பட்டா!”
-
“தொடர்ந்து விஜய் சேதுபதி கூடவே நான்கு படங்களுக்கு மேல் நடிச்சுட்டீங்களே?”

-
“ஆமா… ஒவ்வொரு படத்துலயும் என்னை நடிக்கக் கூப்பிடுறதுக்கு முன்னாடி, `ஏற்கெனவே ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங் களே’னுதான் இயக்குநர்கள் யோசிப்பாங்க. ஆனா, எங்களை ஸ்கிரீன்ல பார்க்கும்போது புதுசா இருக்கும். அதுதானே முக்கியம்.
-
`ரம்மி’ பட ஷூட்டிங்லதான் விஜய் சேதுபதியை முதன்முதலாப் பார்த்தேன். ‘கூடமேல கூட வெச்சு…’ பாட்டு ஷூட் பண்ணாங்க. நான் கையில கூடையைத் தூக்கிட்டு வெட்கப்பட்டு விஜய்யைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே நடந்து வரணும். ஆனா, இந்த சீன் எடுக்கவே 20 டேக் மேல தாண்டிடுச்சு. எல்லாருக்கும் டென்ஷன். விஜய் சேதுபதிதான் பக்கத்துல வந்து நின்னு ‘நீங்க நல்லா நடிக்கிறீங்க. தைரியமா பண்ணுங்க’னு என்கரேஜ் பண்ணினார். அப்ப இருந்து, ‘இடம் பொருள் ஏவல்’, `பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’னு ஒண்ணா டிராவல் பண்றோம். விஜய் சேதுபதி ஆல்வேஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்.”
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: “இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”-ஐஸ்வர்யா ராஜேஷ்

Post by ayyasamy ram on Thu Apr 07, 2016 9:03 am

“ `காக்கா முட்டை’யில் உங்க நடிப்பை நிறையப் பேர் பாராட்டினாங்க…” எனக் கேட்கும்போதே குறுக்கிடுகிறார்…
-
“இந்தப் படத்தின் வாய்ப்பை மட்டும் நான் மிஸ் பண்ணியிருந்தா, வாழ்க்கை முழுக்க வருத்தப்பட்டிருப்பேன். மணிகண்டன்கிட்ட முதல்ல கதை கேட்டபோது, `ரெண்டு பசங்களுக்கு அம்மாவா?! யோசிக்கிறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். இதைப் பத்தி விஜய் சேதுபதிகிட்ட எதேச்சையா சொன்னப்பதான் `மணிகண்டன் பிரமாதமான டைரக்டர். சான்ஸை விட்டுடாதீங்க. கண்டிப்பா நடிங்க’னு சொன்னார். முதலில் ஆடிஷன்ல நடிக்கவெச்சாங்க. இதைப் பார்த்த வெற்றி மாறன் சார், ‘இந்தப் பொண்ணு சரி இல்லை. வேற யாரையாவது மாத்திடலாம்’னு சொல்லிட்டார். ஆனாலும் மணிகண்டன்தான் என்னை நம்பிக்கையா நடிக்க வெச்சார்.
-
படம் எடுத்து முடிச்சு முழுப் படத்தையும் பார்த்தப் பிறகு, வெற்றி மாறன் சார் ‘எப்படிங்க இந்தப் பொண்ணை நடிக்க வெச்சீங்க?’னு கேட்டு பாராட்டினார். அதேபோல சர்வதேச விருது நிகழ்ச்சியிலும் இதுதான் நடந்தது. `அந்தக் குழந்தைகளுக்கு உண்மையான அம்மாவா இவங்க?’னு நிறையப் பேர் கேட்டாங்க. இந்த இயல்பான நடிப்புக்குக் காரணம் மணிகண்டன்தான். சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கூட கவனிச்சு மாத்தினார். நாளைக்கு எனக்கு பையன் பிறந்தா ‘பாருடா… அம்மா நல்ல நல்ல படங்களில் எல்லாம் நடிச்சிருக்கேன்’னு பெருமையா சொல்ல முடியும்.”
-
“ `காக்கா முட்டை’க்குப் பிறகு எந்த மாதிரி கதைகள் உங்களிடம் வருது?”


“வித்தியாசமான நிறைய ரோலில் நடிக்கக் கூப்பிடுறாங்க. ‘குற்றமே தண்டனை’யில நெகட்டிவ் கேரக்டர் பண்ணியிருக்கேன். ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மனிதன்’னு நான் இப்ப நடிச்சிருக்கிற எல்லா படங்களுமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.”

=நா.சிபிச்சக்கரவர்த்தி

விகடன்.காம்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: “இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”-ஐஸ்வர்யா ராஜேஷ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum