ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள முதலுதவி மோட்டார் சைக்கிள்

View previous topic View next topic Go down

பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள முதலுதவி மோட்டார் சைக்கிள்

Post by ayyasamy ram on Tue Feb 16, 2016 8:47 am


-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சென்னையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலுதவி மோட்டார்சைக்கிளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
சேவை தொடங்கப்பட்ட நான்கு நாள்களில் 10 வாகனங்களின் மூலம் 101 பேருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைய முடியாத இடத்தில் எளிதில் செல்வதற்காகவும், விரைந்து முதலுதவி அளிப்பதற்கு ஏதுவாகவும் மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அளித்து வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனமே இந்தச் சேவையையும் அளிக்கிறது.
இவற்றில் 31 வாகனங்கள் ஆண்கள் இயக்கும் மோட்டார்சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் பெண்கள் இயக்கும் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன.
-
மோட்டார் சைக்கிள்களின் மூலம் முதலுதவி அளிக்கும் திட்டம் ஏற்கெனவே கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. சில தனியார் மருத்துவமனைகளின் மூலம் ஒன்றிரண்டு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், இலவச மருத்துவச் சேவை அளிக்கும் வகையில், அதிக அளவில் மோட்டார்சைக்கிள் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
-
நவீன கருவிகள்: மோட்டார்சைக்கிள் வாகனங்களின் பின்புறத்தில் ஒரு பெட்டி பொருத்தப்பட்டிருக்கும். அதனுள் கையடக்க பிராணவாயு உருளை, ரத்த அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் கருவி, உடல் வெப்பத்தை அறியும் கருவி உள்ளிட்ட முதலுதவிக்குத் தேவையான அனைத்து நவீன கருவிகளும், விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கத் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டிருக்கும்.
-
பெரிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள ஸ்டிரெச்சர் தவிர, இதர அனைத்து வசதிகளும் இதில் இடம் பெற்றிருக்கும். அதனால், அனைத்து வகையான ஆபத்துகளையும் இந்த வாகனங்களால் கையாள முடியும்.
சைரன் விளக்குகள்: மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்கள், வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் விரைவாகச் செல்வதற்கு ஏதுவாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ளதைப் போன்று சைரன், வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் ஒளிரும் விளக்குகள், ஒலிபெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
-
அவசரகால உதவியாளர்கள்: ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருக்கும் அவசரகால உதவியாளர்களே இந்த வாகனத்தை இயக்குகின்றனர்.
-
விபத்து அல்லது முதலுதவி தேவைப்படும் இடத்துக்கு இவர்கள் விரைந்து சென்று தேவையான முதலுதவி அளித்து, நோயாளியை நிலைப்படுத்துவார்கள்.
-
அதன்பிறகு, தேவைப்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்.
இதுதொடர்பாக 108 சேவை நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
-
சென்னையில் முதல் கட்டமாக 10 வாகனங்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. பத்து வாகனங்களின் மூலம் திட்டம் தொடங்கப்பட்ட நான்கு நாள்களில் 101 பேருக்கு முதலுதவி, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
-
வாகன நெரிசல் அதிகமுள்ள இடங்களில் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தச் சேவை அளிக்கப்படும். தேவையைப் பொருத்து, இந்த வாகனத்தின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். அதன்பிறகு, பிற நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
-
மக்கள் வரவேற்பு:
இந்தப் புதிய சேவைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்வோர் மோட்டார் வாகனங்களை அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டுக் கூறுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இரவு 8 மணி வரையிலான இந்தச் சேவையை 24 மணி நேரமாக விரிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள முதலுதவி மோட்டார் சைக்கிள்

Post by ayyasamy ram on Tue Feb 16, 2016 8:48 am


101 பேருக்கு முதலுதவி

-
இந்தச் சேவை தொடங்கப்பட்ட நான்கு நாள்களில்
101 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
-
அதன் விவரம்:

-
வாகன விபத்துகள்- 29 பேர்
பிற விபத்துகள்- 18 பேர்
சுவாசப் பிரச்னை- 14 பேர்
சுயநினைவு இழப்பு- 11 பேர்
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை- 8
வலிப்பு நோய்- 8 பேர்
மாரடைப்பு- 4
பக்கவாதம்- 4
தற்கொலை முயற்சி- 2 பேர்
தீக்காயம், காய்ச்சல், சர்க்கரை நோய்- 3
-
பிரத்யேக சீருடை

-
மோட்டார் சைக்கிளை இயக்கும் அவசரகால உதவியாளர்களுக்கென்று
பிரத்யேக வண்ணத்தில் சீருடையை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று
வருகின்றன.
-
நாள் முழுவதும் வெயிலில் சென்றால் வியர்க்காத வகையில்,
வாகனத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் கால், கை மூட்டுகளில்
அடிபடாத வகையில் உபகரணங்கள் பொருத்தப்படும் வகையில்,
அந்தச் சீருடை தயாரிக்கப்பட்டு வருகிறது.
-
சோதனை அடிப்படையில் ஒரு சிலருக்கு இந்தச் சீருடை
வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வடிவமைப்பு முழுமை பெற்றவுடன்
அனைவருக்கும் வழங்கப்படும்.
-
இந்த வாகனங்களை இயக்குபவர்களுக்கு தலைக்கவசம் அணிவது
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஈட்டுறுதி காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் சிகிச்சை, விபத்துக் காப்பீடு உள்ளிட்டவை
வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
---------------------------------------------
---
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum