உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:35 pm

Admins Online

திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக்

திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் Empty திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக்

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 7:39 pm

திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் WbHTlprUSKa8UD2KVBzP+jiljunkjuk_2736586f
-
கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான்.

போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான். இதற்காக நாஞ்சில் சிவாஜி (ஜில்-சித்தார்த்), ஜங்கு லிங்கம் (ஜங் - அவினாஷ் ரகுதேவன்), ஜாகுவார் ஜகன் (ஜக் - சனந்த் ரெட்டி) என மூன்று புதிய இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஜில், ஜங், ஜக்கின் பயணம் வெற்றிகரமாக முடிந்ததா என்பதுதான் கதை.

போதைப்பொருளை ஒளித்துவைக் கும் ஐடியாவில் தெறிக்க ஆரம்பிக்கிறது அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்தியின் ரசாயன மூளை. சூதாட்ட விடுதியில் ‘போக்கர்’ மாபியாவாக இருக்கும் அப்பா நாசருடன் கூட்டணி அமைத்து, ஆர்.ஜே. பாலாஜியை போண்டியாக்கும் சித்தார்த் தின் அறிமுகம், எதிர்பார்ப்பைக் கூட்டு கிறது. சினிமா படப்பிடிப்பில் சிக்கி, கார் நொறுங்குவது வரையிலான முதல் பாதித் திரைக்கதையில் சிக்கலோ விக்கலோ இல்லை. ஏகப்பட்ட திருப்பங்களும் பின் னணிக் கதைகளும் கொண்ட இரண்டாம் பாதியில்தான் தடுமாறுகிறது.

தீரஜ் வைத்தியின் அணுகுமுறை கிட் டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களையும் கேலிச்சித்திரங்களாக மாற்றுகிறது. பேசிப் பேசியே கவரும் சித்தார்த் (பல சமயங்களில் சித்தார்த் பேசுவதை புரிந்துகொள்ள கோனார் நோட்ஸ் தேவைப்படலாம்), சனத், அவினாஷ் ரகுதேவனும் படத்துக்கு பலம். அதே நேரம், தெய்வா, அவனுடைய காரிய தரிசி, அந்த டிரைவர், ஃபார்மஸிஸ்ட், ரோலக்ஸ் ராவுத்தர் என்று மற்ற பல கதாபாத்திரங்களும் தனித்துத் தெரிகிறார்கள். இத்தனை பேருக்குமே திரைக்கதையில் போதிய இடமிருக்கிறது! ஒரே ஒரு காட்சியில் வந்து போகும் நாசர், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது பாத்திரங்களும் நினைவில் தங்குகின்றன.

ஆப்பிரிக்க ‘சினிமா’வைப் பற்றிய காட்சியும், ‘கதாகாலட்சேப’ பாணியில் ஒருவர் பேசுவதும் திரையரங்கில் ஆரவாரத்தை ஏற்படுத்துகிறது. கதைக் களம் 2020-ல் அமைந்ததற்கான பெரிய காரணம் எதையும் காண முடியவில்லை.

வழக்கமான சித்தார்த் துணிச்சல்படி, நாயகனைச் சுற்றியே பெரும்பாலான காட்சிகள் நகராமல்... கதையின் போக்கில் நாயகன் இணைந்துகொள்ளும் படம்தான் இதுவும். கதைக்குத் தேவையில்லை யெனில் நாயகியைக்கூடத் தியாகம் செய்யும் துணிச்சல் இயக்குநருக்கும் இருக்கிறது. ஆனால் படம் முழுவதும் பெண்கள், பாலியல் தொடர்பான வசனங்களுக்குக் குறைவு இல்லை.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா கிருஷ்ணா, கலை இயக்குநர் சிவஷங்கர் ஆகிய இருவரும் கொண்டாட்டமான பங்களிப் பைச் செய்திருக்கிறார்கள். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் புது வண்ணம்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்கை வைத்திருக்கும் காரை, யார் வேண்டு மானாலும் வந்து எடுத்துக்கொண்டு போகும் விதத்திலா நிறுத்திவிட்டுப் போவார்கள்? இதுபோன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒரு கட்டத்துக்கு மேல் சம்பவங்கள் திரும்பத் திரும்ப வருவதுபோன்ற தோற்றம் ஏற்படுமளவு திரைக்கதை ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்கிறது.

ஒவ்வொரு பாத்திரத்தின் அடையாளத் தையும் ‘ஜில்’லென்று செதுக்கியும், பிற்பாதியை விறுவிறுப்பாக நகர்த்து வதில் ‘ஜங்’ ஆகி இயக்குநர் தடுமாறு கிறார். ஆனாலும், ‘ஜக்’ ஆகாமல் காப்பாற்றிவிட்டார்.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53124
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் Empty Re: திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக்

Post by krishnaamma on Mon Feb 15, 2016 12:27 pm

ம்ம்... அப்போ பார்க்க வேண்டாம்...............புன்னகை..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை