ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மகளிர் நலம் -பத்து கேள்விகள் பளிச் பதில்கள்!

View previous topic View next topic Go down

மகளிர் நலம் -பத்து கேள்விகள் பளிச் பதில்கள்!

Post by ayyasamy ram on Tue Jan 26, 2016 6:31 am



1. கர்ப்ப காலத்தில், முதல் மூன்று மாதங்கள் செய்யக் கூடாதது?

-
இயல்பாக செய்யும் எல்லா வேலைகளையும் செய்யலாம்.
தண்ணீர் நிரம்பிய குடம் மற்றும் எடை மிகுந்த பொருட்களை
தூக்கக்கூடாது.

2. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்திலிருந்த உடல், மன மாற்றங்கள்,
இரண்டாம் காலகட்டத்திலும் நீடிக்குமா?


இதை தேன்நிலவு காலகட்டம் என்போம்.
வாந்தி மற்றும் சோர்வான உணர்வு மறைந்து, சுறுசுறுப்பாக காணப்படுவர்.
நன்றாக சாப்பிடத் துவங்குவர். முதல் மூன்று மாதத்தில் எடை சற்று குறைய
நேர்ந்தாலும், இரண்டாம் கால கட்டத்தில் எடை கூடும்.

3. கர்ப்பத்தின் போது உடல் எடை எவ்வளவு அதிகரிக்கலாம்?

-
உயரத்திற்கேற்ற எடை இருந்தால், 10 முதல், 11 கிலோ வரை எடை கூடலாம்.
ஆனால், உடல் பருமன் உள்ளவர்கள், 6 கிலோ முதல், 10 கிலோ வரை கூடலாம்.
உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருப்பவர்கள்,
10 கிலோ முதல், 12 கிலோ வரை கூடலாம்.

4. குழந்தையின் அசைவுகளை எப்போது உணரலாம்?

-
முதல் கர்ப்பமாக இருந்தால், 18 முதல், 20 வாரத்திற்குள் தெரிய வரும்.
இரண்டாவது குழந்தையாக இருந்தால், 16 முதல், 18 வாரத்தில் தெரியும்.
ஆரம்பத்தில், பட்டாம்பூச்சி சிறகடிப்பதுபோல், மெலிதான உணர்வு
அவ்வப்போது இருக்கும். மற்றபடி, குழந்தை எப்போதும் தூங்கிக்
கொண்டே இருக்கும். எட்டி உதைப்பது போல் உணர, மேலும் சில
வாரங்கள் ஆகும்.

5. கர்ப்பத்தின் இரண்டாம் கால கட்டத்தில், உடலில் என்னென்ன மாற்றங்கள்
நிகழும்?


குழந்தை வளர வளர, கர்ப்பப்பை விரிவடையும். அதனால், வயிற்றில் தோல்
பகுதி விரிந்து, தழும்பு ஏற்படும். இதைத் தவிர்க்க இயலாது. மாய்ஸ்ச்சரைசர்
தடவி, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளலாம். சிலருக்கு,
சருமத்தின் சில பகுதிகள் கருமையடைய ஆரம்பிக்கும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மகளிர் நலம் -பத்து கேள்விகள் பளிச் பதில்கள்!

Post by ayyasamy ram on Tue Jan 26, 2016 6:32 am

-
6. கர்ப்பத்தின்போது கால் பாதம் வீக்கமடைவது ஏன்?

-
உடலில் நீர் அதிகமாவதால், அது பாதங்களை சென்றடைந்து அங்கேயே
தேங்கிவிடும். அதனால், கால் வீக்கமடைகிறது. எனவே, உட்காரும்போது
கால்களை சற்று மேலே உயர்த்தி வைத்துக்கொள்வது நல்லது.

7. கர்ப்பத்தின் இரண்டாம் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?


கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதோடு நடைபயிற்சியும் அவசியம். கர்ப்ப காலத்திற்கு என்றே, உடற்பயிற்சி
வகுப்புகள் உள்ளன. அதை, தேர்ந்த நிபுணர்களிடம் கற்றுக் கொள்வது நல்லது.
-
8. கர்ப்பத்தின்போது தடுப்பூசிகள் அவசியமா?

-
'டெட்டனஸ்' நோய் தாக்காமல் இருக்க, 'டெட்டனஸ் டாக்ஸாய்ட்' ஊசி அவசியம்
போட வேண்டும். கர்ப்பம் உறுதி செய்தவுடன் முதல் ஊசியும், ஆறு வாரங்கள்
கழித்து இரண்டாவது ஊசியும் போட வேண்டும்.

9. உணவு தவிர சப்ளிமென்டாக என்ன எடுக்க வேண்டும்?

-
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, இரும்புச்சத்து,
'வைட்டமின் பிடுவல்' மற்றும் 'போலிக் ஆசிட்' நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்
கொள்ள வேண்டும். அதோடு, மருத்துவர் அறிவுரைப்படி, கால்சியம் மற்றும்
வைட்டமின் 'டி' நிறைந்த மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
10. இரண்டாம் கால கட்டத்தின்போது, என்னென்ன பரிசோதனைகள் செய்ய
வேண்டும்?

-
மாதத்திற்கு ஒருமுறை, மருத்துவரை சந்திக்க வேண்டும். பின், ரத்த அழுத்தம்,
எடை, சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
18 முதல், 22 வாரங்களில், குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக உள்ளதா
அல்லது ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என்பதை அறிய, ஸ்கேன்
பரிசோதனைகள் செய்ய வேண்டும். மேலும், குழந்தையின் வளர்ச்சி, இதயத்
துடிப்பை கண்காணிக்க வேண்டும். 24 முதல், 28 வாரங்களில், கர்ப்ப கால நீரிழிவு
இருக்கிறதா என்று ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
-
-------------------------------------

- எஸ்.ராஜஸ்ரீ,
மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர், சென்னை.
நன்றி- தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum