ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
sudhagaran
 
Admins Online

நவீன குடும்ப விளக்கு _சசி

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 11:32 am

First topic message reminder :

கோழிகள் கூவவில்லை என்றாலும் 
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு 
பார்த்தால் மணி 5:30 ஆகா! 

மணி ஆகிவிட்டதே! 
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி 
வாசல் தெளித்து கோலமிட்டு 
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு 
அடுக்களைக்குள் நுழைந்தால் 
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! 

ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு 
ஆனால் ராஜா செய்வது இல்லை! 

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் 
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! 
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே 
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை 
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில் 
சமைத்தாக வேண்டுமே!

என்ற கவலை அவளுக்கு! 

குழந்தைக்கும் கணவனுக்கும் 
மாமா மாமிக்கும் சூடாக உணவு 
பரிமாற இயலவில்லையே! 
அவள் வேலையை பதப்படுத்தி 
செய்து கொண்டு இருக்கிறது!! 

அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்! 

அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் 
அம்மா அம்மா! 
இதோ வருகிறேன் என் கண்ணே! 
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!! 

ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக 
குழந்தைகளுக்கு முத்தம்!! 
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும் 
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!! 

ஆச்சா? மீண்டும் அடுப்படியில் 
காலை காபி டீ 
மாமிக்கு டிகிரி காபி 
மாமனாருக்கு டீ 
குழந்தைகளுக்கு பால்! 
கணவருக்கு வரடீ! 
முடிந்ததா! 
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!! 

காலை உணவு ;;மதிய உணவு 

அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு 
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து  அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!

ஆகா 
மணி ஆகிவிட்டதே! 
கிளம்பு கிளம்பு குழந்தையை 
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை 
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது! 

இந்த வீட்டு ராஜா 
நிதானமாக உறக்கம் கலைந்து 
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி 
கையால் டீ கிடைக்கும்! 

டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால் 
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!! 

பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 
நிதானமாக எழுந்திருத்தாலும் 
அவசர கதியில் அலுவலகம் செல்வதை 
வழக்கமாக கொண்டிருப்பவர்கள் 
ஆண்கள்! 
அப்படியும் கிளம்பியாகி விட்டது! 

வீட்டை பூட்ட வேண்டிய வேலை 
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்! 

அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது! 
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை! 

அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால் 
சற்று ஓய்வு தான்! 

அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!! 

கழுகு பார்வையில்லிருந்தும் 
கண்டவனின் உரசுதலில் இருந்தும் 
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம் 
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது! 

அலுவலகம்! ;

அலுவலகம் வந்தாச்சு 
அவசரகதியில் வந்தாலும் 
நான்கு தோழிகளை பார்த்து 
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில் 
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம் 
சில மணித்துளிகள் தான்! 

தொடரும் __-
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by ayyasamy ram on Tue Jan 26, 2016 8:36 am

சசி விரும்பி கேட்ட ஆலமர விழுதுகள் புகைப்படங்கள்
-

-

-

-
கூடுதலாக தற்போதைய யதார்த்த நிலை...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 8:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ஐயா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 10:52 am

@krishnaamma wrote:வாவ் !..சூப்பருங்க ...........அருமை சசி, முதலது மட்டும் படித்தேன், எல்லாமும் படித்ததும் பின்னூட்டம் போடுகிரேன் .........மிக நேர்த்தியாக எழுதுகிறீர்கள்............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .....தொடருங்கள் சசி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1189386

மிகவும் நன்றி அம்மா வாழ்த்துக்களுக்கு
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 10:59 am

@K.Senthil kumar wrote:அருமை சசி ...

கவிதாயினி சசி கதை எழுதினாலும் அருமையே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1189579

@K.Senthil kumar wrote:அருமை சசி ...

கவிதாயினி சசி கதை எழுதினாலும் அருமையே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1189579என்னை வைத்து நகைச்சுவை ஏதும் செய்யவில்லையே. பட்டம்லாம் பலமாக இருக்கு அதான் கேட்டேன் தோழரே
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 11:39 am

முழுவதும் ஒரே மூச்சாக படித்து விட்டேன் சசி..................படிக்கும்போதே மிகவும் ஆயாசமாய் இருந்தது...........சனி , ஞாயிறு என இரண்டு நாட்களும் ஏதோ நானே வேலை செய்தது போல ஒரு பிரமை வந்தது எனக்கு புன்னகை .........அவ்வளவு அழகாய் உயிர்ப்பாய்  எழுதி இருக்கீங்க................ அருமையிருக்கு  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி ...............வாழ்த்துகள்.................... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
.
.
நீங்கள் சொல்வது  வாஸ்த்தவம் தான்................

வசதி வாய்ப்புகள் இருந்தாலும்
வீட்டு வேலைக்கு ஆட்கள்
இருந்தாலும் பெண்களுக்கான
பொறுப்புகள் குடும்ப பராமரிப்பும்
இன்னும் பெண்களிடம் தான்
இருக்கிறது!!

ஆனால் இது தான் நல்லது என்று நான் நினைக்கிறேன், இதை சுமையாக நினைக்காமல் நம்முடைய பொறுப்பாக நினைக்கணும் என்று நான் நினைக்கிறேன்................எதிர்காலத்து குடிமகன்களை நாம் உருவாக்குகிறோம்................அது ஆணாகட்டும் பெண்ணாகட்டும் நாம் தானே சரிவர வளர்த்து எடுக்கிறோம்..............அதே போல குடும்ப பொருளாதாரமும் நம் கை இல் தான் இருக்கணும், அதனால் தானே இப்படி சொல்வார்கள்..............

"பாவம்,  ஏர் பிடிச்சவன் என்ன செய்வான், பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்று..................எனவே, கஷ்டமானாலும் சலிக்காமல் செய்யணும் என்று எனக்கு தோன்றுகிறதுபுன்னகை.....ஒரு 20 வருஷம் கஷ்டப்படணும்  அப்புறம் மாட்டுப் பெண்ணிடம்   பொறுப்பை கொடுத்துடலாம்  ஜாலி  ஜாலி  ஜாலி நாம் மேற்பார்வை பார்த்து அறிவுரைகள் ( தேவையான போது) சொன்னால் போறும்................

ஒவ்வொரு பெண்ணும் இந்த 20 வருடத்தை  ஸ்ரத்தையாக   செய்தால் குடும்பங்கள் உருப்படும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை புன்னகை

ரமணீயன் ஐயா சொல்வது போல,

//ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன் //

நானும் பார்த்திருக்கேன், நானும் என்னால் முடிந்தவரை என் கணவரிடம் அல்லது எங்க கிருஷ்ணாவிடம் உதவிகள் செய்ய சொல்லி கேட்டிருக்கேன் புன்னகை..............உங்களுக்கே தெரியும் எங்கள் வீட்டில் எல்லோருமே சமைப்போம் என்று, எனவே, நாம் தான் குழந்தைகளுக்கு மற்றும் நம் கணவருக்கு சொல்லித்தரவேண்டும் நமக்கு உதவ  புன்னகை ..................நாம் எதுவும் கஷ்டமே படாமல் சுலபமாய் செய்கிறோம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பார்கள், நாம் தான் நம் கஷ்டத்தை சொல்லணும், ஆத்துக்கரரிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வது?....சொல்லுங்கோ புன்னகை
.
.
இன்னும் நிறைய பேர் குழந்தை வளர்ப்பிலும் ( குழந்தைகளுக்கு டயபர் மாற்றுவது, குளித்து விடுவது உட்பட) மனைவிக்கு உதவுகிறார்கள்.......நான் பார்த்திருக்கேன் சசி புன்னகை.................இந்த காலத்தில் ஆண்கள் பக்கம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது சசி, நீங்கள் கவலைப்படவேண்டாம்........உங்கள் எதிர் பார்ப்பை ஆண்கள் சிக்கிரம் நிறைவேற்றுவார்கள்................. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
.
.
மிக முக்கியமான ஒன்று நாம் , பெண்கள் செய்யவேண்டியது என்ன என்றால்...................." நம் வீட்டு   ஆண்   பிள்ளைகளுக்கு, அதாவது ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை மதிக்க சொல்லித்தரணும்",
இது தான் அவன் பெண்களை ரொம்ப 'சீப்  ' ஆக போகப்பொருளாக நினைக்ககாத வண்ணம் இருக்க வகை செய்யும்.

சும்மாவே, அவன் ஆம்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நீ தான் அடங்கிப்போகணும் என்று அவங்களுக்கு  கொம்பு சீவி வளர்ப்பதும் பெண்கள் தானே?. கோபம் .............அந்த வழக்கத்தை அடியோடு ஒழிக்கணும்................

வீட்டில் பெண்குழந்தைகளை மதிக்கும் ஆண்குழந்தைகள்  , பெண்களை மதிக்கவும், மனைவியை மதிக்கவும் செய்வார்கள்...............அதைக் கற்பிப்பது நாம் தான்...............அப்படி செய்தால் , ஆண்களுக்கும் பொறுப்பு வரும்,  எதிர்காலம் நன்கு அமையும் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by யினியவன் on Tue Jan 26, 2016 11:39 am

நீண்ட பதிவுகளை கண்டால் எனக்கு ஒவ்வாமை புன்னகை

பின்னூட்டங்களைப் படித்து எளிதாக அறிந்து கொண்டேன் - கருவை.

காலமாற்றத்தில் மாறிவரும் ஆண்களும், இன்னும் சில சமூகம் தந்த வசதிகளை ஆணாக அனுபவிக்க, பெண்ணின் மீது சவாரி செய்வது இயல்பாக நடந்து வருகிறது, பெண்களும் இன்னும் அதை வெகு இயல்பாக ஏற்று கொள்வதும் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 11:47 am

@விமந்தனி wrote:
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி  அதிசயம் தான்.

எதுக்கு இப்படி அதிர்ச்சி விமந்தனி...............இப்போவெல்லாம் பசங்க எவ்வளவோ செய்யறாங்களே................டிபிகல் கணவனாக இருக்காங்க ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 12:05 pm

@யினியவன் wrote:நீண்ட பதிவுகளை கண்டால் எனக்கு ஒவ்வாமை புன்னகை

பின்னூட்டங்களைப் படித்து எளிதாக அறிந்து கொண்டேன் - கருவை.

காலமாற்றத்தில் மாறிவரும் ஆண்களும், இன்னும் சில சமூகம் தந்த வசதிகளை ஆணாக அனுபவிக்க, பெண்ணின் மீது சவாரி செய்வது இயல்பாக நடந்து வருகிறது, பெண்களும் இன்னும் அதை வெகு இயல்பாக ஏற்று கொள்வதும் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1189655

நீங்க தான் சொல்லுங்களேன் ஆண்கள் எப்படி நடக்கணும் என்று புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 12:11 pm

நன்றி அம்மா 
தங்களது அனுபவமிக்க கருத்துக்களுக்கு. என்னுடைய பதிவுக்கு நீண்ட அனுபவம் மிக்க கருத்துக்களை எனக்காக பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by யினியவன் on Tue Jan 26, 2016 12:12 pm

@krishnaamma wrote:
நீங்க தான் சொல்லுங்களேன் ஆண்கள் எப்படி நடக்கணும் என்று புன்னகை

ஆண் பெண் பேதம் ஒழிய
மரபணுவில் மாற்றம் வந்தால்
தான் சாத்தியம் அம்மா.

இன்னும் நூற்றாண்டுகள் ஆகும் தற்போதைய வேகத்தில்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 12:18 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:நீண்ட பதிவுகளை கண்டால் எனக்கு ஒவ்வாமை புன்னகை

பின்னூட்டங்களைப் படித்து எளிதாக அறிந்து கொண்டேன் - கருவை.

காலமாற்றத்தில் மாறிவரும் ஆண்களும், இன்னும் சில சமூகம் தந்த வசதிகளை ஆணாக அனுபவிக்க, பெண்ணின் மீது சவாரி செய்வது இயல்பாக நடந்து வருகிறது, பெண்களும் இன்னும் அதை வெகு இயல்பாக ஏற்று கொள்வதும் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1189655

நீங்க தான் சொல்லுங்களேன் ஆண்கள் எப்படி நடக்கணும் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189660
அண்ணி கொஞ்சம் பாவம் தான். 
அண்ணா சொல்வதும் சரிதான். 
சமூகம் தந்த சலுகைகளை ஆண்கள் 
இன்னும் அனுபவித்து கொண்டு தான் 
பெண்களின் மீது சவாரி செய்கின்றனர். 
நன்றி அண்ணா. சரியாக சொன்னீர்கள். 
அந்த சமூகம் நம் வீட்டில் இருந்து தான் உருவாகிறது. அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 12:23 pm

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி  அதிசயம் தான்.

எதுக்கு இப்படி அதிர்ச்சி விமந்தனி...............இப்போவெல்லாம் பசங்க எவ்வளவோ செய்யறாங்களே................டிபிகல் கணவனாக இருக்காங்க ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1189657

அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் நகரத்துவாழ்க்கையில் சாத்தியமாகிறது. 
ஆனால் கிராமங்களில். நான் தினமும் கிராமத்தில் பயணிக்கிறேன். மக்களோடு மக்களாக பழகுகிறேன். இன்னும் மாற்றம் வேண்டுமம்மா எவ்வளவோ வலி நிறைந்த வாழ்கை கிராமத்து பெண்கள் அனுபவிக்கிறார்கள்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 12:24 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
நீங்க தான் சொல்லுங்களேன் ஆண்கள் எப்படி நடக்கணும் என்று புன்னகை

ஆண் பெண் பேதம் ஒழிய
மரபணுவில் மாற்றம் வந்தால்
தான் சாத்தியம் அம்மா.

இன்னும் நூற்றாண்டுகள் ஆகும் தற்போதைய வேகத்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1189662

ம்ம்... மரபணு வை மாத்தறேன் என்று சொல்லி உலகத்தின் எதிர்கால சந்ததியையே குலைத்து விடப்போகிறார்கள் இனியவன்...........ஹா...ஹா..ஹா....புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by யினியவன் on Tue Jan 26, 2016 12:26 pm

@சசி wrote:
அண்ணி கொஞ்சம் பாவம் தான். 
அண்ணா சொல்வதும் சரிதான். 
சமூகம் தந்த சலுகைகளை ஆண்கள் 
இன்னும் அனுபவித்து கொண்டு தான் 
பெண்களின் மீது சவாரி செய்கின்றனர். 
நன்றி அண்ணா. சரியாக சொன்னீர்கள். 
அந்த சமூகம் நம் வீட்டில் இருந்து தான் உருவாகிறது. அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
வளர்க்கப்படுவது பெண்ணாலே
பாதிக்கப்படுவது ஆண்ணாலே
எய்தவரிருக்க அம்பினை நோவதேன்?

வளர்ப்பு முறையை நிச்சயம் மாற்ற வேண்டும் - மாறிவிடுவான் ஆண்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 12:31 pm

@சசி wrote:நன்றி அம்மா 
தங்களது அனுபவமிக்க கருத்துக்களுக்கு. என்னுடைய பதிவுக்கு நீண்ட அனுபவம் மிக்க கருத்துக்களை எனக்காக பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1189661

என் கருத்தில் உங்களுக்கு அவ்வளவாக உடன் பாடு இல்லை என்றே நினைக்கிறேன் சசி புன்னகை........அது தான் இரத்தின சுருக்கமாய் பின்னுட்டம் போட்டு விட்டீர்கள் புன்னகை..............
.
.
.
நான் கொஞ்சம் அந்தக்காலம் சசி.............புன்னகை..............எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........ஜீன்ஸ் போட்ட சகுனி என்று ஒரு படத்தில் சொல்வார்களே அது போல நான் சுடிதார் போட்ட 1930 ஜாலி ஜாலி ஜாலி ..........எதானாலும் முதலில் பெண்களைத்தான் சொல்வேன் ...........அன்பு காட்டும் இடத்தில் அன்பும் , கண்டிப்பு காட்டும் இடத்தில் கண்டிப்பும் இருக்கணும்.
.
.
நாங்கள் இப்போ தானே பட்டணத்தில் இருக்கும், எங்க பாட்டி - அப்பாவை பெற்றவர் - 1920 -30 களிலேயே வீட்டில் சிவபூஜையும் செய்தவர், நாங்கள் வைஷ்ணவர்கள் புன்னகை.................எங்கள் அப்பாவிற்கு சமையல் முதல் காடு கழனி பார்க்கும் வரை எல்லா வேலைகளும் சொல்லித்தந்து இருந்தார்கள்...........

அவங்க பேர் தான் எனக்கு வைத்திருக்கிறார்கள் அதனால் , கிராமம் பட்டணம் என்று பாகுபாடு இல்லை, மனதில் தைரியமும், துணிச்சலும் ஆளுமையும் முக்கியம். புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by M.Jagadeesan on Tue Jan 26, 2016 12:33 pm

குட்டிக் கவிதை எழுதிய சசி இன்று
...குடும்ப விளக்கு எழுதும் அளவுக்கு
எட்டிப் பிடிக்க முடியா உயரத்தில்
...எழுந்து இங்கே ஜொலிக் கின்றார் !

பாரதி தாசன் ஏற்றிய விளக்கில்
...பாதியை இங்கே படித்த மகிழ்வு !
சாரதி கண்ணன் துணையாய் இருக்க
...சாதித் திடுவீர் மீதியை இங்கு !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 12:33 pm

@சசி wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி  அதிசயம் தான்.

எதுக்கு இப்படி அதிர்ச்சி விமந்தனி...............இப்போவெல்லாம் பசங்க எவ்வளவோ செய்யறாங்களே................டிபிகல் கணவனாக இருக்காங்க ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1189657

அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் நகரத்துவாழ்க்கையில் சாத்தியமாகிறது. 
ஆனால் கிராமங்களில். நான் தினமும் கிராமத்தில் பயணிக்கிறேன். மக்களோடு மக்களாக பழகுகிறேன். இன்னும் மாற்றம் வேண்டுமம்மா எவ்வளவோ வலி நிறைந்த வாழ்கை கிராமத்து பெண்கள் அனுபவிக்கிறார்கள்.

கண்டிப்பாக பட்டணத்தைவிட கிராமத்தில் பெண்களின் கல்வி அறிவு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், ஆனால் நான் மேலே சொன்னது போல ஆளுமைத்திறனும் அறிவு கூர்மையும் குறைவு இல்லையே சசி புன்னகை ...தில்லையாடி வள்ளி யம்மை எந்த பட்டணத்தில் இருந்து வந்தார்? சொல்லுங்கள் புன்னகை ...............லீடர் ஷிப் ஐ நாம் தான் வளர்த்துக்கணும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 12:38 pm

@யினியவன் wrote:
@சசி wrote:
அண்ணி கொஞ்சம் பாவம் தான். 
அண்ணா சொல்வதும் சரிதான். 
சமூகம் தந்த சலுகைகளை ஆண்கள் 
இன்னும் அனுபவித்து கொண்டு தான் 
பெண்களின் மீது சவாரி செய்கின்றனர். 
நன்றி அண்ணா. சரியாக சொன்னீர்கள். 
அந்த சமூகம் நம் வீட்டில் இருந்து தான் உருவாகிறது. அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
வளர்க்கப்படுவது பெண்ணாலே
பாதிக்கப்படுவது ஆண்ணாலே
எய்தவரிருக்க அம்பினை நோவதேன்?

வளர்ப்பு முறையை நிச்சயம் மாற்ற வேண்டும் - மாறிவிடுவான் ஆண்.

மேற்கோள் செய்த பதிவு: 1189671

நான் அதத்தான் சொன்னேன் இனியவன்...........பெண் தானே வளர்க்கிறாள், தனக்கு ஏற்றபடி வளர்க்க வேண்டியது தானே?............எங்கே அப்படி தான் வளர்த்து விட்டால் , நாளை தன் மருமகள் நிம்மதியாக குடித்தனம் செய்து விடுவாளோ என்கிற நல்ல (!) எண்ணமே அதற்க்குத்தடையாக இருக்கு என்று நான் நினைக்கிறேன்..

( நான் மட்டும் இந்த ஆளைக் கட்டிக்கொண்டு அழுகிறேன், வரவ மட்டும் சௌக்கியமாய் இருக்கலாமா? என்று நினைத்து ஒழுக்கம் கேட்ட மகனுக்கு கூட சப்போர்ட் செய்கிறார்கள், இல்லாவிட்டால் டெல்லி இல் நடந்த கொடுமைக்கு காரணமான தன் பிள்ளையை வெட்டி போட மாட்டாளோ ஒரு பெண்?...............கோபம் கோபம் அவன் ஆண்பிள்ளை அப்படித்தான் இருப்பான் என்று பேட்டி தருகிறாள் அவள் சோகம் )
.
.
.
பெண்களுக்குப் பெண்கள் தான் எதிரியே அல்லாமல் ஆண்கள் எந்த காலத்திலும் இல்லை என்பதே என் கருத்து புன்னகை .....................இதெல்லாம் ரொம்ப சொன்னா என்னை அடிப்பார்கள்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by யினியவன் on Tue Jan 26, 2016 12:51 pm

நான் பல பெண்களுக்கும் சொல்வது இது தான்:

ஆணிடம் ஜாக்கிரதையாக பழகு;
பெண்ணிடம் சர்வ ஜாக்கிரதையாக பழகு ன்னு புன்னகை

பெண் ஆணை வெல்வது/வீழ்த்துவது மிக எளிது;
பெண் பெண்ணை வெல்வது/வீழ்த்துவது மிக கடினம்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by M.Jagadeesan on Tue Jan 26, 2016 12:59 pm

வாழைக்குக் கன்று எமன் !
தேளுக்குக் குட்டி எமன் !
சிப்பிக்கு முத்து எமன் !
பெண்ணுக்கு பெண் எமன் !

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by யினியவன் on Tue Jan 26, 2016 1:03 pm

எமன் வாழ்வினை சமன் செய்யும் வரை
ஒரு வுமனுக்கு இன்னொரு வுமனே எமன் புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 1:06 pm

@krishnaamma wrote:
@சசி wrote:நன்றி அம்மா 
தங்களது அனுபவமிக்க கருத்துக்களுக்கு. என்னுடைய பதிவுக்கு நீண்ட அனுபவம் மிக்க கருத்துக்களை எனக்காக பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1189661

என் கருத்தில் உங்களுக்கு அவ்வளவாக உடன் பாடு  இல்லை என்றே நினைக்கிறேன் சசி புன்னகை........அது தான் இரத்தின சுருக்கமாய் பின்னுட்டம் போட்டு விட்டீர்கள் புன்னகை..............
.
.
.
நான் கொஞ்சம்  அந்தக்காலம் சசி.............புன்னகை..............எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........ஜீன்ஸ் போட்ட சகுனி என்று ஒரு படத்தில் சொல்வார்களே அது போல நான் சுடிதார் போட்ட 1930 ஜாலி ஜாலி ஜாலி ..........எதானாலும் முதலில் பெண்களைத்தான் சொல்வேன் ...........அன்பு காட்டும் இடத்தில்  அன்பும் , கண்டிப்பு காட்டும் இடத்தில் கண்டிப்பும் இருக்கணும்.
.
.
நாங்கள் இப்போ தானே பட்டணத்தில் இருக்கும், எங்க பாட்டி - அப்பாவை பெற்றவர் - 1920 -30 களிலேயே வீட்டில் சிவபூஜையும்  செய்தவர், நாங்கள் வைஷ்ணவர்கள் புன்னகை.................எங்கள் அப்பாவிற்கு சமையல் முதல் காடு கழனி பார்க்கும் வரை எல்லா வேலைகளும்   சொல்லித்தந்து இருந்தார்கள்...........

அவங்க பேர் தான் எனக்கு வைத்திருக்கிறார்கள் அதனால் , கிராமம் பட்டணம் என்று பாகுபாடு இல்லை, மனதில் தைரியமும், துணிச்சலும் ஆளுமையும் முக்கியம். புன்னகை
[url=http://www.eegarai.net/t127802p30-_#1189674]மேற்கோள் செய்த பதிவு: 1189674[/உ

அம்மா அப்படி லாம் இல்லை 
[size=34]பெரியவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பு [/size]
[size=34]அளிப்பவள் நான். சில கருத்து பரிமாறல்களே தான்.எப்படி இருந்தாலும் நாம் சாதிப்போம் அம்மா. பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள். [/size]
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 1:08 pm

@யினியவன் wrote:எமன் வாழ்வினை சமன் செய்யும் வரை
ஒரு வுமனுக்கு இன்னொரு வுமனே எமன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189689

அண்ணா நவீனதிருவள்ளுவரே வணக்கங்கள்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 1:13 pm

@M.Jagadeesan wrote:குட்டிக் கவிதை எழுதிய சசி இன்று
...குடும்ப விளக்கு எழுதும் அளவுக்கு
எட்டிப் பிடிக்க முடியா உயரத்தில்
...எழுந்து இங்கே ஜொலிக் கின்றார் !

பாரதி தாசன் ஏற்றிய விளக்கில்
...பாதியை இங்கே படித்த மகிழ்வு !
சாரதி கண்ணன் துணையாய்  இருக்க
...சாதித் திடுவீர் மீதியை இங்கு !
மேற்கோள் செய்த பதிவு: 1189676

மிகவும் நன்றி ஐயா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 1:21 pm

@யினியவன் wrote:எமன் வாழ்வினை சமன் செய்யும் வரை
ஒரு வுமனுக்கு இன்னொரு வுமனே எமன் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி.............அருமையாக சொல்லி இருகீங்க இனியவன் புன்னகை ............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum