ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

View previous topic View next topic Go down

மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by கார்த்திக் செயராம் on Sat Jan 23, 2016 5:28 am

வேலூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன், மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

குஷ்பு பேசுகையில், ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் போட்டோ ஒட்டியவரை பிடித்து உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. மதுவுக்கு எதிராக பாடல் பாடிய கோவனை உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஒரு அரசு ஊழியர் இறந்தாரே அதற்கு தனிப்படை அமைத்தார்களா? விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார்களா?

சமீபத்தில் இளங்கோவன் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதற்கு இதுவரை எந்த அமைச்சர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை. ஆட்சி முடியும் சமயத்தில் அம்மா கால் சென்டர் என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், 2013லேயே டாஸ்மாக் சரக்கு அளவு குறைந்திருந்தால் புகார் அளிப்பதற்கு 10581 என்ற நம்பரை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குடிகாரர்களுக்காகத்தான் இந்த ஆட்சி செயல்படுகிறதா?

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் மோடி துக்கம்கூட விசாரிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி, ரோஹித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்'' என்றார்.

இதன் பின்னர் இளங்கோவன் பேசுகையில், ''மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா நிவாரணம் ஏதும் செய்யாவிட்டாலும், ஆறுதல் கூறுவதற்காகவாவது வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. ஆறுதுல் கூறுவதற்கு கூட லாயக்கற்ற முதலமைச்சரை பெற்றுள்ளோம். அதனை சொல்லாமல் சொல்லி விட்டார் ஜெயலலிதா.

மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவித்தனர். அவர்களுக்கு வீடு கட்டி தராத ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துகிறார். (பிரசுரிக்க முடியாத ஒப்பீடு) எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். எப்போதெல்லாம் தேர்தல் வருமோ அப்போதெல்லாம் இந்த அம்மாவுக்கு எம்.ஜி.ஆர். மீது பிரியம் வரும். அதன் பிறகு எம்.ஜி.ஆரை மறந்து விடுவார். இதுவரை எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். அந்த திட்டங்கள் எதற்காவது எம்.ஜி.ஆர். பெயரை வைத்திருக்கிறார்களா? அனைத்திலும் அம்மா புராணமே.

அ.தி.மு.க. அரசை குறித்து விமர்சித்தாலோ அவதூறு வழக்கு போடுவது இந்த அம்மாவின் வாடிக்கை. கருணாநிதியை நீதிமன்றத்துக்கு வரவைத்தார். எனக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தினார். விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு, ராமதாஸ் மீது வழக்கு என அனைவர் மீது வழக்கு தொடுக்கிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இது எல்லாம் அரசியல் காழ்புணர்ச்சியால் போடப்படும் வழக்குகள். ஆனால், ஜெயலலிதா மீது பெங்களூரில் இருப்பது கிரிமினல் வழக்கு.

இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் ஊழல். ரேஷன் அட்டை வாங்குவதற்கு 5 ஆயிரம், பஸ் கண்டக்டர் வேலைக்கு 5 லட்சம், துணை வேந்தர் 12 கோடி என்று பட்டியல் போட்டு ஊழல் செய்கிறார்கள். மத்தியில் மோடியும், இங்கு லேடியும் மக்கள் விரோத சக்திகள். இவர்களை வெளியேற்ற வேண்டும்'' என்றார்.

நன்றி விகடன் செய்தி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by T.N.Balasubramanian on Sat Jan 23, 2016 7:33 pm

இளங்கோவன்
இவன் கோபன் .

அரசியல் உலகில் தானும் இருப்பதை காண்பித்துக்கொள்ள ,
கையாளும் உத்திகளில் இதுவும் ஒன்று .

ஒவ்வொருவருக்கும் limelight இல் இருக்கவே ஆசை .

ஆசை யாரை விட்டது .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by M.Jagadeesan on Sat Jan 23, 2016 8:57 pm

இவருடைய தந்தையார் EVK சம்பத் , மிகவும் அழகாகப் பேசுவார் . அதனால் அவரை " சொல்லின் செல்வர் " என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள் . ஆனால் இவர் பேச எழுந்தாலே எல்லோரும் பயப்படுகிறார்கள் !
இவரைப் போன்ற பேச்சாளர்களைக் கண்டுதான் வள்ளுவரும் , " நா காக்க ! " என்று உரைத்தார் போலும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by T.N.Balasubramanian on Sat Jan 23, 2016 9:13 pm

அண்ணா  தலைமையில்  5 பேர் குழுவால் உதித்தது தான் திமுக .
நெடுஞ்செழியன் ,
NV நடராஜன்
இவிகே சம்பத் ,
மதியழகன் .  
எந்தன் ஞாபகம் இதுதான் .
வேறு யாருக்காவது தெரிந்தால் தெளிவு படுத்துங்கள் .

ஆனால் சொல்லின் செல்வர் என்று
அமரர் திரு மா பொ சிவஞான கிராமணியாரை தானே  குறிப்பிடுவார்கள் , M Jagadeesan .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by T.N.Balasubramanian on Sat Jan 23, 2016 9:23 pm

நீங்கள் சொல்லிய , " சொல்லின் செல்வர் " சரியாக இருக்கும் ., M Jagadeesan . மன்னிக்கவும் .

மா பொ சி --சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார் . நினைவுக்கு வந்து விட்டது .

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by யினியவன் on Sat Jan 23, 2016 9:26 pm

சொல்லினால் செல்வார் உள்ளே புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by யினியவன் on Sat Jan 23, 2016 9:27 pm

110 விதி
அவதூறு வழக்கு
தமிழனுக்கு இழுக்கு
அம்மாவுக்கு போடட்டும் முழுக்குavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by M.Jagadeesan on Sat Jan 23, 2016 9:33 pm

ம .பொ . சி . அவர்களை " சிலம்புச் செல்வர் " என்று அழைப்பார்கள் !

DR . ரா .பி . சேதுப்பிள்ளை அவர்களையும் " சொல்லின் செல்வர் " என்று அழைப்பார்கள் . அவருடைய உரைநடை தனித்துவம் வாய்ந்தது . அடுக்குமொழிச் சொற்களால் அமர்க்களப்படுத்துவார்.

இராமாயணத்தில் அனுமன் , இராமனை முதன்முதலாகச் சந்தித்துப் பேசுகிறான் . அனுமனுடைய பேச்சிலே மயங்கிய இராமன் , "யார்கொலோ இச்சொல்லின் செல்வன் ? " என்று வியந்து பாராட்டுவதாகக் கம்பர்
பாடுவார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by ayyasamy ram on Sat Jan 23, 2016 9:44 pm

-
இளம் வயதில் அண்ணாதுரையும், சம்பத்தும் விளையாட்டாகக் கைவண்டி
இழுக்கின்றனர்.
இது நாற்பதுகளின் (1940கள்) இறுதியில் எடுக்கப் பட்ட புகைப் படம்...
(இவர்கள் இப்படிச் சேர்ந்தே வண்டி இழுத்திருந்தால், தமிழகம் இன்று எங்கோ இருக்கும்!)
-
நன்றி- ஒத்திசைவு வலைத்தளம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by ayyasamy ram on Sat Jan 23, 2016 9:49 pm

அடைமொழிகள் வேண்டாம்

தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து "இன முழக்கம்' பொங்கல் மலரில் (1961) செய்தி விடுத்த சம்பத், தம்மை இனி "சொல்லின் செல்வர்' என்ற அடைமொழியிட்டு அழைக்க வேண்டாமென்றும், தோழர் சம்பத் என்று குறிப்பிடுவதே தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர், கலைஞர், கலைவாணர் போன்ற அடைமொழிப் பட்டங்கள் கலைத்துறையினருக்கு மட்டும் இருப்பதாக இருந்தால் விரசமாகப்படுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி தேவை என்கிற நிலை பிற்போக்கான பரிதாபநிலையாகும். அடைமொழிப் பட்டம் கொடுத்து, அரசியல்வாதிகளை அழைப்பதென்பது பூஜா மனோபாவத்தை வளர்ப்பதோடு, பாசிசப் பாதை நோக்கி நடக்கும் ஆபத்தை அறிவிப்பதாகும். என்னையும் சொல்லின் செல்வர் என்றழைக்காமல் தோழமை உணர்ச்சி பொங்க "தோழர் சம்பத்' என அழைத்து மகிழ்வூட்டுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்...

இவ்வாறு "இன முழக்கம்' கட்டுரையில் தோழர் சம்பத் குறிப்பிட்டிருந்தார்.

தி.மு.க. அதன் அரசியல் வடிவத்தை மறைத்துக் கொண்டு கலை கோஷ்டியாகவும், கவர்ச்சி மேனாமினுக்கியாகவும் மாறி பஜனை பாடிகளை ஏற்படுத்திக் கொண்டது. உரிய நேரத்தில் இவற்றை சம்பத் சுட்டிக்காட்டிக் கண்டித்தார். அடைமொழி வீரர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதே தவிர அறிவு வேலை செய்யவில்லை. தொடர்ந்து அடைமொழிகள் படைமொழிகளாய் பறந்து விரிந்தன
-
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்- கட்டுரையிலிருந்து
நன்றி- தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by T.N.Balasubramanian on Sat Jan 23, 2016 9:50 pm

ஆம் , a ram .
காமராஜ் மறைவு , அண்ணா மறைவு --தமிழகத்தின் முதன்மைத்தன்மை மறைவு .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by T.N.Balasubramanian on Sat Jan 23, 2016 9:59 pm

@M.Jagadeesan wrote:ம .பொ . சி . அவர்களை " சிலம்புச் செல்வர் " என்று அழைப்பார்கள் !

DR . ரா .பி . சேதுப்பிள்ளை அவர்களையும் " சொல்லின் செல்வர் " என்று அழைப்பார்கள் . அவருடைய உரைநடை தனித்துவம் வாய்ந்தது . அடுக்குமொழிச் சொற்களால் அமர்க்களப்படுத்துவார்.

இராமாயணத்தில் அனுமன் , இராமனை முதன்முதலாகச் சந்தித்துப் பேசுகிறான் . அனுமனுடைய பேச்சிலே மயங்கிய இராமன் , "யார்கொலோ இச்சொல்லின் செல்வன் ? " என்று வியந்து பாராட்டுவதாகக் கம்பர்
பாடுவார் .
மேற்கோள் செய்த பதிவு: 1189053

ஆம் எனக்கு பிறகு நினைவிற்கு வந்தது .

விளையாட்டாக ம பொ சி , ஒரு முறை தன்னை "சொல்லின் செல்வர் " என்று சொல்லிக் கொண்டார் .
அப்போது அவர் சென்னை மாநில மேலவைத் தலைவராக இருந்தார் . (upper house --legistative council )
அப்போது ,அவையிலிருந்து உறுப்பினரை , சில காரணங்களுக்காக நீக்க வேண்டுமெனில் ,
நான் சொன்னால் வெளியேறுவர் . ஆகவே நான் "நான் சொல்லின் செல்வர் தானே " என்றார் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by ராஜா on Sun Jan 24, 2016 11:48 am

தமிழக மக்களின் சாபம் இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் , இவர்களிடம் இருந்து தமிழகம் எப்ப விடுதலை அடையபோகிறதோ தெரியவில்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by யினியவன் on Sun Jan 24, 2016 12:14 pm

தப்பித்தவறி அம்மையார் மீண்டும் வந்துவிட்டால் நிலைமை படு மோசமாகிவிடும்.

பலமிக்க கூட்டணி அமைத்து நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டியர் அம்மையார்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by கார்த்திக் செயராம் on Sun Jan 24, 2016 12:58 pm

அரசியல் பேய்கள் என்பார் .
ஆள்வது நாங்கள் என்பார்.
மக்களை மூடர் என்பார் .
மாந்தரை நாய்கள் என்பார் .

விலைபோகும் விபச்சாரிகள்
கருணையில்ல பேய்கள் .
கரை வேட்டி நாய்கள் .

தமிழ் மக்களின் தீரா தொல்லை .
தமிழனுக்கு விடிவேன்பது இல்லை .

புவியிலே பிறந்த ஈன பிறவிகள் .
துவைக்க முடியா அழுக்கு மூட்டைகள் .
முதுகெலும்பு அற்ற விச விலங்குகள் .
சாகா வரம் பெற்ற சாப கேடுகள் ..

போங்க ...திட்டுவதற்கே கடுப்பாக உள்ளது . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by ராஜா on Sun Jan 24, 2016 1:44 pm

@கார்த்திக் செயராம் wrote:
போங்க ...திட்டுவதற்கே கடுப்பாக உள்ளது . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சாமான்ய மக்கள் இவர்களுக்காக நம் நேரத்தை வீணாக்க கூடாது என்று நினைப்பது தான், இவர்களின் பலம் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by T.N.Balasubramanian on Sun Jan 24, 2016 2:10 pm

வட இந்திய கட்சிகளில் பிடிக்குமோ பிடிக்காதோ
ஒரு சபை நாகரீகம் உண்டு .
மோடி , சோனியா இருவரும் ஒருவரை ஒருவர் கண்டால் வாழ்த்துவதும் ,
அரசியல் சம்பந்த விழாக்களிலும் , social சம்பந்தப்பட்ட விழாக்களிலும்
தொடருகின்ற மரியாதை , ஒரு வழிபட வேண்டிய உதாரணம் .
இங்கோ , அப்பப்பா ........
தேர்தல் சமயத்தில் இணைந்துள்ள கட்சிகளும் , சட்ட சபை கூடும் போதும் ,
வராதிருப்பதும், வந்தால் செய்யக்கூடாதவைகளும் செய்வதும் ,
இந்த திராவிட கட்சிகள் செய்யும் கொனஷ்டைகள் .,அருவருக்கத் தக்கது .
இது இவர்கள் திராவிட மக்களுக்கு செய்யும் மிக பெரிய அநீதி .

இதைத்தான் இளங்கோவன் காப்பி அடிக்கிறார் .

உதாவாக்கரை அரசியல் வாதிகள் . சுயநலமே பெரிது .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum