ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு - நினைவு தின சிறப்பு பதிவு

View previous topic View next topic Go down

லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு - நினைவு தின சிறப்பு பதிவு

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 21, 2016 5:53 am

1920 ஏப்ரல் மாதம் 22ல் மாஸ்கோ நகரத்தில் ஒரு தலைவர், தனக்கு பிறந்த நாள் கொண்டாடுவது கூடாது என்று உத்தரவிட்டார். அதையும் மீறி ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட்டம் நடத்தினர். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அக்கூட்டத்தில் “சில மனிதர்களைப் பற்றி பேசுவது எளிதன்று. அவர்களுடைய சிறப்புகளையும் குறிப்பிடுவது இயலாது. நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும் அவருடைய உருவத்தை உங்கள் முன் சித்தரிக்க சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்” என்றார்.

1893ல் குடியானவர்களின் வாழ்க்கையில் புதிய மறு மலர்ச்சி என்ற முதல் கட்டுரையையும் வெளியிட்டார் லெனின். அப்போது அவருக்கு வயது 23தான்.

ஒரு சமயம் தன்னை சந்திக்க வந்த மனைவி (குரூப்ஸ்கயா)யிடம் ரகசிய செய்தியை சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று சிந்தித்தார். மனைவியிடம் உரையாடினார் கீழ்க்கண்டவாறு ‘எனக்கு கொடுத்த நூல்களை கொடுத்துவிட்டேன். தங்கை மரியாவின் நூலையும், அறை எண் தெரியுமா?’ என கேட்டவுடன் குரூப்ஸ்கயா, 193 என்றார். ஆனாலும் சம்பந்தமில்லாமல் பேசுவது அப்போது புரியவில்லை. ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்ந்த குரூப்ஸ்கயா, தங்கை மரியாவிடம் உள்ள நூல் பக்கம் 193ஐ புரட்டினார். அதில் தொழிலாளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரகசிய சுற்றறிக்கை செய்தி இருந்தது. இப்படியாக எதிரிவர்க்கத்தினை ஏமாற்றி, தனது வர்க்கத்தினை தன் தந்திரத்தால் வழி நடத்தியது என இது போன்ற பல உதாரணங்கள்.

புரட்சி வெற்றி பெற்ற நேரத்தில் லெனின் அறைக்கு இரு தொழிலாளர்கள் அவரை சந்திக்க வந்தனர். லெனினின் செயலாளர் அவர்களை அழைத்துச் சென்றார். அமைச்சரவை தலைவரான லெனினின் சாதாரண அறையை பார்த்து வியந்தனர். தன்னைப் பார்க்க வந்தவர்களை சந்திக்க வந்த லெனின், அவருடைய அதிகாரப்பூர்வ இருக்கையில் அமராமல் நேரடியாக தொழிலாளர்களின் பக்கத்தில் வந்தமர்ந்து, என்ன விசயம் என கேட்டார். சந்திக்க வந்தவர்கள் லெனினின் அடக்கத்தை பணிவை கண்டு வியந்தனர். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லத் தயங்கினர். இருந்த போதும் என்ன விசயம் என கேட்டார். தொழிலாளர்கள், நாங்கள் தொழிற் சாலைகளில் பணிபுரியவே அனுபவம் மிக்கவர்கள். எங்களால் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய முடியாது என மறுத்தனர். ஆனால் லெனின், தோழர்களே நமக்கு நம்பிக்கையான ஆள் அமைச்சரவை செயலகத்திற்கு தேவை. நாம் பழைய அமைச்சரவை அமைப்பை உடைத்துவிட்டோம். இப்போது இருப்பது புதிய அமைப்பு. இதற்காகத் தான் நாம் போராடினோம். இங்கே நாம்தான் பணியாற்ற வேண்டும். நாம் கற்றுக் கொள்ளலாம். பணியாற்ற சிரமம்தான். தவறு செய்தால் திருத்திக்கொள்வோம். இல்லையெனில் கற்றுக்கொள்வோம். அமைச்சரவை தலைவர் என்ற முறையில் கற்றுக்கொள்ளுங்கள் என கூறாமல், கற்றுக்கொள்வோம் என லெனின் தன்னடக்கத்துடன் கூறியது, சந்திக்க வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் அவர்கள் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டனர்.

எதிர்ப்புரட்சியாளர்கள் லெனினை குறிவைத்து தாக்க திட்டமிட்டனர். முதலில் 1918 ஜனவரி 1ல் காரில் வந்த போது லெனினை நோக்கிச் சுட்டனர். அருகில் இருந்த சுவிஸ் கம்யூனிஸ்ட் தலைவர் பிளாட்டன், லெனின் தலையை அமுக்கி காப்பாற்றினார். பிளாட்டன் கையை துப்பாக்கி ரவை பதம் பார்த்தது. லெனின் மயிரிழையில் உயிர்தப்பினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு கூட தன்னுடைய பணியில் எந்தவித தொய்வும் இன்றி பணியாற்றினார்.

1918 ஆகஸ்ட் 30 பெத்ரோ கிராத் நகர் கூட்டத்தில் லெனின் பேசவேண்டும். தோழர்கள், வரவேண்டாம்; இங்கே நம் தோழரை எதிர்ப்புரட்சியாளர்கள் கொன்று விட்டார்கள் என்ற எச்சரித்த பின்பும், சிரித்தபடியே ‘அலைகளுக்கு பயந்தால் மீனவர் மீன் பிடிக்க முடியாது எனவும், மிருகத்திற்கு பயந்தால் வேடன் வேட்டையாட முடியாது எனவும் கூறிவிட்டு, புரட்சியாளர்கள் சமூக மாற்றத்திற்காக போராடுபவர்கள்; உயிருக்கு பயந்தால் துணிச்சலாக செயல்பட முடியாது என கூறிவிட்டு கூட்டத்திற்கு செல்ல லெனின் தயாரானார். கூட்டத்தில் பேசவேண்டிய, அமைச்சரவை கூட்டத்தில் பேசவேண்டியது பற்றி சிந்தித்த படியே காரில் பயணித்தார். திட்டமிட்டபடி கூட்டம் நடை பெற்றது.  கூட்டத்தில் லெனின் உரையாற்றினார். கூட்டம் முடிந்து தொழிலாளர்களுடன் திரும்பும்போது திடீரென்று துப்பாக்கி சத்தம், ஆம்; ஒரு குண்டு லெனின் இடது கையில், இரண்டாவது குண்டு கழுத்தில், மூன்றாவது குண்டு முதுகில்; லெனின் கீழே சாய்ந்தார். தொழிலாளர்கள் பதறினர். லெனின், வீட்டுக்கு வண்டியை ஓட்டச் சொன்னார். மூன்று குண்டுகள் பாய்ந்த போதும் தங்கள் இருப்பிடம் மூன்றாவது மாடியில் இருப்பதால் லெனினிடம் மூன்றாவது மாடிக்கு தொழிலாளர்கள் தூக்கிச் சொல்வோம் என்று கூறியபோது மறுத்த லெனின், நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று துணிச்சலாகக் கூறி தொழிலாளர்களின் தோள்களை பிடித்துக் கொண்டே மூன்றாவது மாடிக்குச் சென்றார். தங்கை கதறியபோது “நீ கதறாதே; சின்னக்காயம்தான் உன் அலறல் குருப்ஸ் கயாவை (மனைவியை) கலவரப்படுத்தும்” என்று கூறினார். மூன்று குண்டுகள் தாக்கியபோதும் பதறாமல் மக்கள் பணியில் தொடர்ச்சியாக முன்னேறினார். மீண்டுவந்தார். சோசலிச அரசுக்கு தலைமையேற்று நடத்தினார். விடாமுயற்சி, வைராக்கியம், ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி, தன்னடக்கம் போன்ற பல்வேறு நல்ல பண்புகளைக் கொண்டவர் லெனின்.  ஜார் மன்னனையும், முதலாளிகளையும், நிலப் பிரபுக்களின் கூட்டணியையும், போலிப் புரட்சிவாதிகளையும் வென்றவர் லெனின். 1924 ஜனவரி 21ல் உலகப்புரட்சியாளர் லெனின் மறைந்தார்.

நன்றி வோர்ல்ட் பிரசு.காம்.


Last edited by கார்த்திக் செயராம் on Thu Jan 21, 2016 6:03 am; edited 1 time in total
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு - நினைவு தின சிறப்பு பதிவு

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 21, 2016 5:56 am

1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.

அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.

சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum