ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down


Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Sun Feb 07, 2016 1:00 am

//அது மட்டுமல்ல! அவரை பெரிய பொருட்காட்சியில் கொண்டு போய் வைக்கிறோம். வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று விடுகிறோம். எங்கு அழைத்தாலும் அவன் வருகிறான். இப்போது சொல்லுங்கள்! அவன் நல்லவனா இல்லையா என்று!//

முழுக்க முழுக்க வெண்ணெயால் ஆன கிருஷ்ணர் ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Sun Feb 07, 2016 1:07 am

@shobana sahas wrote:
குடுப்பினை வேண்டாமா அய்யா ?! நாங்களா வேண்டாம்னு சொல்றோம் ? என் கவலை எனக்கு .... சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1191365

நிஜம் ஷோபனா................ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் .....ஆனால் நாம் பெருமாளைத்தான் கெட்டியா பிடிச்சுக்கணும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Sun Feb 07, 2016 1:12 am

அப்பாடா , நீங்கள் போட்டவரை எல்லாம் இன்று படித்து விட்டேன் விமந்தனி..............அருமை அருமை அருமை புன்னகை..மிக்க நன்றி ! .............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Sun Feb 07, 2016 7:36 am

@krishnaamma wrote:
@shobana sahas wrote:
குடுப்பினை வேண்டாமா அய்யா ?! நாங்களா வேண்டாம்னு சொல்றோம் ? என் கவலை எனக்கு .... சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1191365

நிஜம் ஷோபனா................ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் .....ஆனால் நாம் பெருமாளைத்தான் கெட்டியா பிடிச்சுக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192293


சஹசையா ??

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Sun Feb 07, 2016 10:49 am

என்னாச்சு விமந்தனிக்கு ?

மின்னல் மாதிரி வாராக ,மின்னல் மாதிரி போறாக !

உடல் நலமில்லையா ?

வாராமையை நினைத்தாலே இனிக்கவில்லையே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Feb 09, 2016 3:51 pm

நினைத்தாலே இனிக்கும்! (13)வர்தான் வேதவியாசர். நாராயணரே வியாசராக அவதரித்து மகாபாரதம், பாகவதம், பதினெண் புராணம் எல்லாம் எழுதினார். வியாசர் என்ற சொல்லுக்கு "பகுத்துக் கொடுத்தவர்' என்பது பொருள். வேதங்களை நான்காகப் பகுத்துக் கொடுத்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

கலியுகத்திற்கு முந்திய கிருத யுகம், துவாபர யுகம், திரேதா யுகங்களில் நான்கு வேதங்களும் ஒன்றாகவே இருந்தன. இதை ரிக்,யஜுர், சாம, அதர்வணம் என நான்காகப் பகுத்தளித்த வியாசரின் பரம்பரை மிகவும் விசேஷமானது.

அவரின் பரம்பரை பிரம்மாவில் தொடங்கும். படைப்புக் கடவுளான பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர். இவர் தான், ராமன் அவதரித்த ரகு வம்சத்தின் குலகுரு. அவரது பிள்ளை சக்தி. சக்தியின் மகன் பராசரர்.

பராசரருக்குப் பிறந்தவர் தான் வேதவியாசர். வியாசரின் மகன் சுகர். இப்படி அவருடைய பரம்பரையில் வந்த அனைவருமே தவ சிரேஷ்டர்கள். அதிலும் சுகருக்கு கண்ணில் காணும் எல்லாமே தெய்வீகம் தான். பேதநிலையைக் கடந்து எல்லாவற்றையும் ஒன்றாகக் காண்பவர்.

வியாசர் வயதில் பெரியவர். அவருக்கு 120 வயது. சுகருக்கோ வயது 16. வயதான தந்தையுடன் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தார் சுகர். அங்கு நீராடிக் கொண்டிருந்த பெண்கள் சுகரைக் கண்டு சிறிதும் வெட்கப்படாமல் நீராடிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாசரைக் கண்டு வெட்கப்பட்டு மேலாடையால் தங்களை மூடிக் கொண்டனர். ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்ற உண்மையை அந்த பெண்களிடமே கேட்டார் வியாசர்.

"கட்டிளங்காளையாக இருந்தாலும், இச்சை சிறிதும் இல்லாமல் மண், பெண், மரம், கல் என எல்லாவற்றையும் ஒன்றாக உணரும் பக்குவ ஆன்மாவாக உங்கள் பிள்ளை சுகர் இருக்கிறார்,'' என்றனர் அவர்கள்.

தன் பிள்ளையின் தெய்வீக மேன்மையை இதன் மூலம் உணர்ந்து கொண்டார் வியாசர். உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கின்றன. இதைக் கடந்து கரை சேர படகு தேவை.

ஆண்டாள் திருப்பாவை முப்பதாவது பாசுரத்தில் "வங்கக்கடல் கடைந்த மாதவன்' என்று பாடுகிறாள். வங்கம் என்றால் "கப்பல்'.  கடலைக் கடக்க கப்பல் உதவுவது போல, மனித வாழ்வு என்னும் சம்சாரக் கடலைக் கடக்க புராணங்கள் துணை செய்கின்றன.

சத்வ, ரஜோ, தமோ என்னும் முக்குணங்களைக் கொண்டவனாக மனிதன் இருக்கிறான். சாதுவான நல்ல குணமே சத்வம். அதாவது தெளிந்த சிந்தனையுடன் அமைதியாக இருப்பது. ரஜோ குணம் என்பது கோபம், ஆசை, வேகம் என உலகியலில் ஈடுபடுவது. தமோ குணம் என்பது சோம்பல், தாமதம், மயக்கம் நிறைந்திருப்பது.


Last edited by விமந்தனி on Tue Feb 23, 2016 4:16 pm; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Feb 09, 2016 3:54 pm

ஒருவரை எதிர்பார்ப்புடன் உதவி கேட்டுச் செல்லும்போது,"நிச்சயமா செய்து தருவேன்; என்னை நம்புங்கள்' என்று பண்புடன் நடந்து கொள்வது சத்வ குணம். செய்ய வாய்ப்பிருந்தாலும் கோபமாக வந்தவரைப் புறக்கணிப்பது ரஜோகுணம். அதைக் கண்டு கொள்ளாமல், சிந்திக்காமல் சோம்பலுடன் இருப்பது தமோகுணம்.

தமிழ் இலக்கியத்தில் தாண்டவம், பிள்ளைத்தமிழ், கலம்பகம் என்று எத்தனையோ பாடல் வகை உண்டு. அதில் "எழுகூற்றிருக்கை' என்பதும் ஒரு வகை. இதைக் "கணக்கு பாடல்' என்று சொல்லலாம். அதாவது, எண்களால் நிரல்படச் சொல்லி பாடுவது.

ஆழ்வார்களில் அதிகப் பாசுரங்களைப் பாடிய திருமங்கையாழ்வார் இப்பாடல் வகையில் "திருவெழுகூற்றிருக்கை' என்றொரு பாடல் பாடியிருக்கிறார். அதில் முக்குணம் பற்றிய குறிப்பு வருகிறது. "முக்குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றனில் இருந்து' என்று நமக்கு வழிகாட்டுகிறார் அவர். முக்குணத்தில் ரஜோ, தமோ குணத்தை கைவிட்டு சத்வகுணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

இந்த மூன்று குணங்களின் அடிப்படையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குணத்திற்கும் ஆறு வீதமாக பதினெட்டு புராணங்கள் உள்ளன. அதில் சத்வ குணத்தைப் போற்றும் விதத்தில் அமைந்த ஆறில் உயர்ந்ததாக இருப்பது விஷ்ணு புராணம்.

புராணங்களுக்கு ஐந்து விதமான லட்சணங்கள் உண்டு. அதில் முதலாவது குறிக்கோள். குறிக்கோள் என்றதும், நம் வாழ்க்கையே குறிக்கோளை நோக்கி செல்வது தான். ஆனால், எல்லாருக்கும் எப்போதும் ஒரே குறிக்கோள் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒருவரே வாழ்வில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு இருக்க முடியாது.

இரண்டு வயதில் இருந்த எதிர்பார்ப்பு அப்படியே ஆயுளுக்கும் நீடிப்பதில்லை. வயதுக்கேற்ப குறிக்கோள் மாறுகிறது. இருக்கும் இடத்தைப் பொறுத்தும், வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டைப் பொறுத்தும் அதன் தாக்கம் மாறிக் கொண்டே இருக்கும். பசியால் வாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் விஷ்ணு புராணத்தை எடுத்துச் சொன்னால் கேட்க முடியுமா? அவருக்கு சாப்பாடு தான் முக்கியம்.

கால் பந்தாட்டம் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் கால்பந்தாட்ட வீரர்கள் பந்து செல்லும் இடத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். பந்தும் ஓரிடத்தில் நிற்காது. ஆளாளுக்கு உதைக்க பந்து இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், எதை மாற்றினாலும் பந்து அடைய வேண்டிய இலக்கான "கோல் போஸ்ட்' மாறப் போவதில்லை.

அது போலத் தான் மனித வாழ்க்கையும். மனதிற்குள் எத்தனை ஆட்டம் நாம் ஆடிக் கொண்டிருந்தாலும் கடைசியில் சென்று சேர வேண்டிய குறிக்கோள் மாறப்போவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கை, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இறுதியில் வாழ்வு முடிவுக்கு வரத் தான் போகிறது.

வாழ்வில் இன்பதுன்பம் கலந்திருப்பதை, "முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் கெட்டவனும் இல்லை' என்று கூட சொல்லி வைத்தார்கள்.

நவக்கிரகங்களில் சனீஸ்வரர் ஒருராசியில் இரண்டரை வருஷம் சஞ்சரிப்பார். ராசி சக்கரத்தை அவர் கடக்க 30வருஷம் ஆகும். அதற்கேற்ப வாழ்வின் போக்கு மாறி விடும் என்பதால் தான் இப்படி சொன்னார்கள்.

ஆனால், இன்ப துன்பம் என்பது வெள்ளை வேட்டி போல இருக்கிறது. வேட்டியின் அடியில் இருக்கும் சரிகை நடக்கிறப்போ லேசா பளபளக்கும். அதுபோல, வாழ்வில் அப்பப்போ இன்பம் தலைகாட்டும். ஆனால், பெரும்பாலும் சந்திப்பது என்னவோ துன்பம் தான்.

இதை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லி வாழ்வின் முடிவான குறிக்கோளை எடுத்துச் சொல்வது புராணம் தான். பழையதாக இருந்தாலும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் விதத்தில் என்றும் புதியதாக இருந்து நமக்கு இன்றும் வழிகாட்டி நிற்கிறது. அதிலும் இந்த வரிசையில் முதலிடம் பிடிக்கும் விஷ்ணு புராணத்திற்குள் இனி நுழைவோம்.இன்னும் இனிக்கும்.....


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Tue Feb 09, 2016 4:13 pm

அருமை விமந்தனி, அன்பு மலர் அன்பு மலர்

வியாசர் --சுகர் ---வயது --

வயதிற்கும் --மனோ நிலைக்கும் வேறுபாடுகளை அழகாக கூறியுள்ளனர் ,நீராடிய பெண்கள் .

வேத வியாசரின் தாயார் யாரென அறிவீர்கள் அல்லவா ?

வேதவியாசர் பிறப்பு எப்பிடி ஏற்பட்டது தெரியுமா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Tue Feb 09, 2016 6:40 pm

//கால் பந்தாட்டம் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் கால்பந்தாட்ட வீரர்கள் பந்து செல்லும் இடத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். பந்தும் ஓரிடத்தில் நிற்காது. ஆளாளுக்கு உதைக்க பந்து இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், எதை மாற்றினாலும் பந்து அடைய வேண்டிய இலக்கான "கோல் போஸ்ட்' மாறப் போவதில்லை.

அது போலத் தான் மனித வாழ்க்கையும். மனதிற்குள் எத்தனை ஆட்டம் நாம் ஆடிக் கொண்டிருந்தாலும் கடைசியில் சென்று சேர வேண்டிய குறிக்கோள் மாறப்போவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கை, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இறுதியில் வாழ்வு முடிவுக்கு வரத் தான் போகிறது. //


எத்தனை அழகாய் சொல்கிறார் புன்னகை.........


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Feb 23, 2016 4:25 pm

நினைத்தாலே இனிக்கும்! (14)ழிப்போக்கன் ஒருவன் காட்டுவழியில் சென்று கொண்டிருந்தான். திடீரென புலி ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது. கண்ணை மூடிக்கொண்டு ஓடத் தொடங்கினான். வழியில் பாழுங்கிணறு ஒன்று இருந்தது. புதர் மண்டிக் கிடந்ததால், தெரியாமல் அந்த கிணற்றுக்குள் காலை வைத்து விட்டான். சரசரவென கீழே இழுத்துச் செல்லப்பட்டான். பாதிக் கிணற்றில் படர்ந்து கிடந்த கொடியைக் கையால் பற்றிக் கொண்டு நின்றான். அந்த சமயத்தில், புலி ஒன்று உணவு தேடி கிணற்றுப் பக்கம் வந்தது. உள்ளே இருந்தவனைப் பார்த்ததும், இரையாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அங்கேயே நின்றது.

அச்சத்துடன் கீழே குனிந்தான். பயம் மேலும் அதிகரித்தது. ஆழத்தில் விஷ நாகங்கள் புற்றில் தலையை நீட்டிய படி இருந்தன. அப்போது அவன் பற்றியிருந்த கொடியின் வேரை பொந்திலுள்ள பெருச்சாளி ஒன்று கடிக்கும் சத்தம் காதில் விழுந்தது.

பசி, தாகம், நடந்து வந்த களைப்பு எல்லாம் சேர்ந்து அவன் மயக்கநிலையில் இருந்தான். அந்த சமயத்தில் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த தேனடையில் இருந்து தேன் துளி வழிந்து, சரியாக அவன் நாக்கில் பட்டது.

"என்ன இன்பம்... இந்த இன்பம்...'' என்று அவன் மனம் சந்தோஷம் கொண்டது.

இந்த வழிப்போக்கன் வேறு யாருமல்ல... நாம் தான்...... புலியும், பாம்பும் துன்புறுத்த காத்திருக்கும் நேரத்தில் கூட, தேனை ருசிக்கும் வழிப்போக்கனின் மனநிலையில் தான் மனிதன் இருக்கிறான்.

சம்சார பந்தத்தில் சிக்கிக் கொண்ட மனிதனுக்கு திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயம் எல்லாம் தேன்துளி மகிழ்ச்சி போல அவ்வப்போது வந்து போகிறது. ஆனால், இன்பம் நிரந்தரமாக கிடைப்பதில்லை. நிலையான இன்பம் பெற ஒரே வழி கடவுளைச் சரணடைவது தான். அதையே பேரின்பம் என்று சொல்கிறார்கள்.

அப்போது வேண்டும் அளவுக்கு தேனைப் பருகி மகிழலாம். கடவுளைப் பற்றியும், அவரை அறியும் வழிமுறையைப் பற்றியும் எடுத்துச் சொல்வதால் தான், புராணத்திற்கு இவ்வளவு ஏற்றமும் சிறப்பும் அளிக்கிறோம். அதனால் தான் தனக்கு மரணம் நேரப் போகிறது என்பதை அறிந்த பரீட்சித்து மன்னன் சுகபிரம்மத்திடம் பாகவத புராணத்தைக் கேட்டான்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Feb 23, 2016 4:29 pm

நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக இந்த மண்ணில் பிறவி எடுத்து இருக்கிறோம்? சமான்ய நிலையில் நாம் எல்லாம் ஒவ்வொரு குறிக்கோளுடன் இருப்பதாக எண்ணுகிறோம்.

கோகுலாஷ்டமிக்கு வீட்டில் 17, 20, 27 பலகாரம் செய்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதில் யார் வீட்டில் அதிகம் செய்தது என்று போட்டாபோட்டி கூட நடக்கும். ஆனால், எல்லா பலகாரமும் இனிப்புச் சுவை கொண்டது தானே! நெய், இனிப்பு, மாவு மூன்றும் தான் பலகாரம், பட்சணத்திற்கு அடிப்படை.

சாப்பாட்டு விஷயத்தில் கூட"காய்கறியில் புடலங்காய் தான் பிடிக்கும். உருளைக் கிழங்கு தான் பிடிக்கும்' என்று சொல்கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும் தான்.

அப்புறம் எந்த உணவாக இருந்தாலும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவது போல, உயிர்கள் பிறவி எடுத்திருப்பதே கடவுளை அறிவதற்காகத் தான்.

உலகத்தில் உயிர்கள் படைக்கப்பட்டது எப்படி? அந்த உயிர்கள் எப்படி அழிகின்றன? எந்தெந்த மன்னர்கள் இந்த உலகை ஆட்சி செய்தார்கள்? சூரியன், சந்திரன், வருணன், வாயு என்பதெல்லாம் யார்? சூரிய, சந்திர வம்சத்தில் யாரெல்லாம் வந்தார்கள்? சூரியன், சந்திரனால் பருவநிலை எப்படி உண்டாகிறது? மழை எப்படி பெய்கிறது? மனுக்கள் ஏற்படுத்திய தர்மங்கள் என்னென்ன? மனிதனுக்கு இன்பம் துன்பம் ஏன் உண்டாகிறது? உலகில் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன் இந்த பாகுபாடு எப்படி ஏற்பட்டது? பாவம் எது? புண்ணியம் எது? என்பதெல்லாம் சீடர்கள் கேள்வி கேட்க, குரு பதில் அளிப்பது போல உரையாடலாக விஷ்ணு புராணத்தின் பகுதிகள் அமைந்துள்ளன.

சீடராக இருக்கும் மைத்ரேயர் கேள்வியைக் கேட்க, பராசரர் பதில் அளிப்பது போல கேள்வி பதிலாகவே அமைந்துள்ளது. கதை போலச் செல்லும் இதில் அங்கங்கே தத்துவார்த்தங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த உடம்பை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சிக்கலான அமைப்பு. இதை சரிபடுத்திக் கொள்ள எத்தனை வைத்திய முறைகள். அதுவும் நரம்பு, எலும்பு, தோல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வைத்தியர்கள்.

எத்தனை முறைகள் இருந்தாலும், பகவானால் படைக்கப்பட்ட இந்த சரீரத்தை பற்றி அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியுமா? பத்மாசனத்தில் அரை மணிநேரம் அமர்ந்து விட்டால், 27,000 நரம்புகளும் ஒருவரின் கட்டுக்குள் வந்து விடும் என்கிறது யோக சாஸ்திரம். அந்த அளவுக்கு நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் கூர்மையான புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. மேலெழுந்தவாரியாக அணுகினால் புரியாமல் போய் விடும். புராணமும் இப்படித் தான் அணுகுவதற்கு கடினமாக இருந்தது.

மூலத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் சிரமம் இருந்தது. இதனால் தான், எத்தனையோ பெரியவர்கள், உரையாசிரியர்கள் புராணத்திற்கு எளிய விளக்கவுரை அளித்திருக்கிறார்கள்.

காசி, சேது, கயா, கங்கை, புஷ்கரம் என்று எத்தனையோ புண்ணிய ÷க்ஷத்திரங்கள் இருக்கின்றன. இத்தனை தலங்களையும் தரிசித்தால் புண்ணியம் உண்டாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

அதனால் உண்டாகும் புண்ணியத்தை தராசின் ஒரு தட்டில் வைத்து விட்டு, மறுதட்டில் விஷ்ணு புராணத்தைக் கேட்டதால் உண்டாகும் புண்ணியத்தை வைத்துப் பார்த்தால் அந்த தட்டு கனத்தால் தாழ்ந்து விடும்.

இதன் காரணமாகவே, பதினெண் புராணங்களில் இந்த புராணத்தை "புராண ரத்தினம்' என்று சிறப்பாகச் சொல்கிறார்கள்.

இதில் "அர்த்த பஞ்சகம்' என்று ஒன்று இருக்கிறது. "பொருள் பொதிந்த ஐந்து விஷயம்' என்பது இதன் பொருள். இந்த ஐந்தைத் தெரிந்து கொண்டு விட்டாலே நம்முடைய இந்த ஜன்மம் கடைத்தேறி விடும். ஆனால், நாம் எல்லோரும் இந்த ஐந்தை விட்டு விட்டு, ஐந்தாயிரம் விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். தெரிந்து கொள்ள வேண்டிய அந்த ஐந்து தான் என்னென்ன?


இன்னும் இனிக்கும்.....


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Feb 23, 2016 4:34 pm

@T.N.Balasubramanian wrote:வியாசர் --சுகர் ---வயது --

வயதிற்கும் --மனோ நிலைக்கும் வேறுபாடுகளை  அழகாக கூறியுள்ளனர் ,நீராடிய பெண்கள் .

வேத வியாசரின் தாயார் யாரென அறிவீர்கள் அல்லவா ?

வேதவியாசர்  பிறப்பு எப்பிடி ஏற்பட்டது தெரியுமா ?

ரமணியன்
சத்யவதியின் பிள்ளையான இவர் தானே மகாபாரதத்தின் கதாநாயகர்...? அறியாதவரும் உண்டா...? புன்னகை புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Tue Feb 23, 2016 5:03 pm

தேன் துளிகள்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Tue Feb 23, 2016 5:07 pm

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:வியாசர் --சுகர் ---வயது --

வயதிற்கும் --மனோ நிலைக்கும் வேறுபாடுகளை  அழகாக கூறியுள்ளனர் ,நீராடிய பெண்கள் .

வேத வியாசரின் தாயார் யாரென அறிவீர்கள் அல்லவா ?

வேதவியாசர்  பிறப்பு எப்பிடி ஏற்பட்டது தெரியுமா ?

ரமணியன்
சத்யவதியின் பிள்ளையான இவர் தானே மகாபாரதத்தின் கதாநாயகர்...? அறியாதவரும் உண்டா...? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195215

மகாபாரதம் அவரின் சுயசரிதைதானே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Feb 23, 2016 5:49 pm

@T.N.Balasubramanian wrote:
மகாபாரதம் அவரின் சுயசரிதைதானே !

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Tue Feb 23, 2016 10:51 pm

நல்ல பகிர்வு விமந்தனி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Wed Feb 24, 2016 11:50 pm

நினைத்தாலே இனிக்கும்! (15)அர்த்த பஞ்சகம் என்றால் என்னென்ன தெரியுமா?

ஜீவாத்மா, பரமாத்மா, உபாயம், பிரதிபந்தகம், கைங்கர்ய சொரூபம் என்னும் ஐந்துமே அர்த்த பஞ்சகம்.

ஜீவாத்மா என்பது "நாம் யார்' என்பதைப் பற்றிச் சொல்வது.

உயிர்களைப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் கடவுளின் தன்மையை விளக்குவது பரமாத்மா.

உயிர், கடவுள் இந்த இரண்டிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கடவுளை அடையும் வழியைச் சொல்வது மூன்றாவதான உபாயம்.

இதில் ஆயிரமாயிரம் வழிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் பலவித சமய நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

கடவுளை அடைய விடாமல் தடுக்கும் சம்சார பந்தத்தைப் பற்றிச் சொல்வது பிரதி பந்தகம். முக்தி நிலையில் கடவுளை அடைந்த உயிர், நித்யமான இன்பத்தை அடையும். இதற்கு கைங்கர்ய சொரூபம் என்று பெயர். இந்த நிலையை அடைந்தால், உயிர் எல்லை இல்லாத ஆனந்தத்தை அனுபவித்தபடி இருக்கும்.

ஒரு வீட்டில் பத்து படி அளவுக்கு பால் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே சாப்பிட்டால் ருசி இருக்குமா? அதே பாலை அடுப்பில் ஏற்றி சுண்டக் காய்ச்சுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பாலின் அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் ஒன்பதே முக்கால்படி பால் வற்றி கால் படியாகி விட்டது என்றால், அந்த பால் எந்தளவு சுவையாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதைத் தான் திரட்டுப்பால் என்பார்கள்.

கண்ணனுக்கு மிகவும் பிடித்த நைவேத்யம் திரட்டுப்பால் தான். இது போல எந்த ஒரு விஷயத்திலும் திரட்டுப்பால் போல விசேஷமான பகுதி ஒன்று உண்டு.

ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் அதில் விபீஷண சரணாகதி,

மகாபாரதத்தில் பகவத்கீதை,

வேதத்தில் புருஷ சூக்தம்,

தர்ம சாஸ்திரத்தில் மனுநீதி என்பதெல்லாம் சிறப்பான பகுதிகள்.

அதுபோல,  புராணத்தில் விஷ்ணு புராணம் தான் திரட்டுப்பால் போல
விசேஷமானது

ஒருநாள் காலை அனுஷ்டானங்களை எல்லாம் முடித்துவிட்டு பராசரர் அமர்ந்திருந்தார். மைத்ரேயர் அவரிடம் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் கேட்க வந்தார். எல்லாம் தான் தெரிந்து விட்டதே என்று எண்ணிக் கொண்டு குரு என்பவர் சும்மா இருக்க கூடாதாம்! தனக்குரிய அனுஷ்டானத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Wed Feb 24, 2016 11:52 pm

குருவாக இருப்பவர், சீடர்களுக்கு உபதேசிப்பதைத் தானும் அனுஷ்டிப்பவராக இருக்கவேண்டும். அதுவே குரு ஸ்தானத்திற்கு லட்சணம். ஊருக்குத் தான் உபதேசம் என்று வாயளவில் சொல்லிக் கொண்டிருந்தால் அது நாயின்வால் போல ஆகி விடும் என்பார்கள்.

இப்படித் தான் குரு ஒருவர் தன் சீடரிடம், ""உபதேசம் மட்டுமே செய்து கொண்டிருந்து, அதற்குத் தகுந்த நடத்தை இல்லாவிட்டால், நாய் வால் போலாகிவிடும்,'' என்று சொல்லி விட்டார்.

உடனே சீடனுக்கு சந்தேகம் வந்து விட்டது.

"குருவே! தேவையில்லாத பொருள் எதையும் பெருமாள் உலகில் படைத்ததில்லை என்று அன்றொரு நாள் சொன்னீர்கள்! இப்போதோ வெறும் உபதேசம் மட்டும் செய்து விட்டு, அதன்படி நடக்காவிட்டால் குருவின் நிலை, நாய் வால் போலாகி விடும் என்கிறீர்களே?'' என்று கேட்டு விட்டான்.

அதற்கு குரு,""உண்மை தானப்பா! பெருமாள் எதையும் தேவையில்லாமல் படைத்தது இல்லை. பாண்டித்யம் பெற்ற பலர் உலகில் இருப்பார்கள். ஆனால், உபதேசிப்பதை அவர்களே பின்பற்ற மாட்டார்கள்.

அவர்களுக்கு உவமை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நாய் வாலைப் பெருமாள் படைத்தார்'' என்று விளக்கம் கொடுத்தார்.

அது சரி! சிங்கம், புலி,பசு எல்லா மிருகத்திற்கும் தானே வால் இருக்கிறது. நாய்க்கு மட்டுமா வால் இருக்கிறது? ஏன் நாய் வாலை மட்டும் சொல்ல வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறது அல்லவா! பொதுவாக மர்ம ஸ்தானத்தை மறைப்பது, ஈ, எறும்பால் தொல்லை நேரும் போது அசைத்து விரட்டுவது என்பது வாலின் பயன்பாடு.

ஆனால், இந்த இரண்டையுமே நாயால் செய்ய முடிவதில்லை. பெயரளவில் நாய்க்கு வாலுண்டே தவிர, அதனால் பயன் இருப்பதில்லை.

பராசர மகரிஷியின் பக்கத்தில் பணிவுடன் நின்றார் மைத்ரேயர். குருவை அணுகும் சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

நேருக்கு நேராக நின்றால் அது குருவுக்குச் சமம் என்பதாகி விடும். குருவின் பின்புறம் நின்றால் அவரின் அருட்பார்வை சீடன் மீது விழாமல் போய் விடும்.

அதனால், பக்கத்தில் பணிவுடன் நின்று தான் பேச வேண்டும் என்பார்கள்.

மைத்ரேயர் பராசரரை அணுகி, ""இந்த உலகம் எதனால் ஆக்கப்பட்டது? இது எதிலிருந்து தோன்றியது? ஆயிரமாயிரம் வேறுபாடுகள் இந்த உலகில் ஏன் உண்டானது? நேற்று என்பது எங்கே போனது? இன்று எங்கே போகிறது? நாளை என்பது என்ன? '' என்று தன் சந்தேகத்தை குருவின் முன் வைத்தார்.

அதற்கான விளக்கம் தர முன்வந்த பராசரர், தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும், மைத்யேர் கேட்ட கேள்விக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லத் தொடங்கினார்.

"விஸ்வாமித்திரரின் தூண்டுதலால், என் தந்தையாகிய சக்திமுனிவரை பிரம்ம ராட்சஷன் ஒருவன் கொன்று விட்டான். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிரம்ம ராட்சஷன் மீது எழுந்த கோபத்தால் ராட்சஷ வர்க்கத்தையே அழிக்க முடிவெடுத்து வேள்வி ஒன்றைத் தொடங்கினேன். பரசுராமர் எப்படி தன் கோடரியால் க்ஷத்திரிய வம்சத்தையே அழிக்க துணிந்தாரோ, அதுபோல என் சபதமும் அமைந்தது.

அப்போது என்னைக் காண வசிஷ்டரும், புலஸ்தியரும் வந்தனர். ஒருவன் செய்த தவறுக்காக, ஒரு வம்சத்தையே அழிக்கத் துணிவது தர்மம் ஆகாது. ஒருவரைத் தீயவன் என்று முடிவெடுத்து அழிக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் கிடையாது என்று எடுத்துரைத்து வேள்வியைத் தடுத்தனர். நானும் அவர்களின் உபதேசத்தை ஏற்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

உடனே அவர்கள் "சிறுவனாக இருந்தாலும், பிடிவாதம் கொள்ளாமல் ஏற்றுக் கொண்ட உனக்கு இரு வரங்களைத் தர விரும்புகிறோம். முதல் வரத்தின் பயனாக, பிரம்மம் என்பது எது என்பதை எளிதாக நீ புரிந்து கொள்வாய். இரண்டாவது வரத்தால் பிரம்மத்தின் தன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பாக்கியமும் உனக்கு கிட்டும்' என்று வாழ்த்தி விட்டு புறப்பட்டனர்.

அதன் பயனாகவே "மைத்ரேயா! நீயும் இப்போது என்னிடம் கேள்வி கேட்கிறாய்'' என்று சீடனின் கேள்விக்கு விடையளிக்கத் தொடங்கினார் பராசரர்.

பராசரர் மட்டும் இந்த வரத்தைப் பெற்றதாக எண்ணி விடாதீர்கள். நல்லவர்களால் வழங்கப்படும் எந்த விஷயமும் தனிப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் கிடைப்பது அல்ல..... அதன் பயன் உலகம் முழுமைக்கும் தான். எப்படி என்கிறீர்களா?

உங்களுக்கான விடையை கீதாசிரியன் கிருஷ்ணரே பகவத்கீதையில் விளக்குகிறார்.. பொறுத்திருங்கள் சொல்கிறேன்!இன்னும் இனிக்கும்......


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by யினியவன் on Wed Feb 24, 2016 11:55 pm

திட்டு வாங்கும் பாலோ ஆண்பால்
திட்டும் பாலோ பெண் பால்
திகட்டா பாலாகட்டும்
சம்சார பந்தம்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Feb 25, 2016 12:07 am

@யினியவன் wrote:திட்டு வாங்கும் பாலோ ஆண்பால்
திட்டும் பாலோ பெண் பால்
திகட்டா பாலாகட்டும்
சம்சார பந்தம்
எப்படியோ வாழ்க்கை திகட்டாமல் இருந்தால் சரி.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by யினியவன் on Thu Feb 25, 2016 12:50 am

திகட்டாமத்தானே உங்களுக்கு 25 வருடம் ஓடிடிச்சு புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Thu Feb 25, 2016 7:40 am

அளவாக பதிவு இடுவதால்
நிறைவாகப் படிக்க முடிகிறது ,

நிறைவாகப் படிப்பதால்,
படித்தாலே இனிக்கிறது ,
திரட்டுப் பால் போல் .! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Mon Feb 29, 2016 4:51 pm

நினைத்தாலே இனிக்கும்! (16)ண்ணன் பகவத் கீதையை அர்ஜூனனுக்காக மட்டுமா உபதேசித்தான்?

கீதையின் 18வது அத்தியாயத்தில், "மா மேகம் சரணம் வ்ரஜ'' என்று சரண ஸ்லோகம் இடம்பெற்றிருக்கும். "என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு' என்று கண்ணனே சொல்கிறான்.

அப்படியானால் கண்ணனின் உபதேசத்தைத் தொடர்ந்து அர்ஜூனனின் சரணாகதி பற்றித்தானே அடுத்த ஸ்லோகம் இருக்க வேண்டும். கீதை மட்டுமில்லாமல், மகாபாரதம் முழுவதுமே அர்ஜூன சரணாகதி பற்றிய குறிப்பு எங்குமே பார்க்க முடியாது.

கேட்டது என்னவோ அர்ஜூனன் என்றாலும், உலக நன்மைக்காகத் தான் கண்ணன் இதை உபதேசித்தான் என்பது தான் இதன் அடிப்படை.

புராணம், இதிகாசம், சாஸ்திரம் இப்படியான உயர்ந்த விஷயம் எல்லாம் ஒருவருக்காக எழுந்தது அல்ல. அது உலக நன்மை கருதி உண்டானது.

மைத்ரேயர் வாயிலாக விஷ்ணு புராணத்தின் மகத்துவத்தை உலகமே அறிந்து கொண்டது.

"உலகம் எதுவாக இருக்கிறது?' என்று கேட்ட மைத்ரேயரின் கேள்விக்கு பதிலாக, ""இந்த உலகம் விஷ்ணுவிடம் இருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவனையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த்துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான். அவனே உலகமாக இருக்கிறான்,'' என்று பராசரர் பதிலளித்தார்.

மைத்ரேயர் கேட்ட கேள்வியும், பராசரர் சொன்ன பதிலும் உயர்வான விஷயங்கள். நம்மைப் போன்றவர்களுக்கு இதன் விசேஷ உள்ளர்த்தங்கள் புரிவதில்லை.

இப்படித்தான், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் 16ஆண்டு காலம் உணவு, உறக்கம் இல்லாமல் புளிய மரத்தடியில் கண்மூடி தியானத்தில் இருந்தார். அவர் அமர்ந்திருந்த புளியமரமும் புனிதம் பெற்றது. இதனால், "திருப்புளியாழ்வார்' என்று அந்த மரத்திற்கே பெயர் வைத்து விட்டார்கள். அவரைத் தரிசிக்க வடநாட்டில் இருந்து மதுரகவி ஆழ்வார் வந்தார்.

நம்மாழ்வார் வெளியுலக பிரக்ஞை அற்றவராக அசைவற்று இருந்ததைப் பார்த்தார். அவர் மீது கல்லை வீசிப் பார்த்த போது லேசாகக் கண் திறந்தார். அவரிடம், "செத்ததின் வயிற்றில் சிறியது கிடக்கில் எத்தை தின்று எங்கே கிடக்கும்' என்று கேள்வி கேட்டார் மதுரகவியார்.
நம்மாழ்வாரும், "அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார். இந்த கேள்வியும், பதிலும் பார்த்தால் ஏதும் நம்மைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை.

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு குரு, சீடராக மாறினர்.

""ஜீவாத்மாவாகிய உயிர்களிடம், கடவுளைப் பற்றிய அறிவு உண்டானால் என்ன செய்யும்?'' என்பது தான் மதுரகவியாழ்வாரின் கேள்வி. ""கடவுளின் திருவடி இன்பத்திலே உயிர் ஒன்றி விடும்'' என்பது நம்மாழ்வாரின் பதில்.

தத்துவார்த்தமான இதனைக் கேட்பவருக்கு விளக்கிச் சொன்னால் தான் புரிகிறது. பராசரர், மைத்ரேயர் உரையாடலும் இப்படித் தான் இருந்தது.

உதாரணத்திற்கு ஒரு மண்பாண்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மண்பாண்டம் செய்ய வேண்டுமானால், மண், குயவன், தண்டச் சக்கரம் ஆகிய மூன்றும் அடிப்படைக் காரணங்கள். அது போல வேட்டிக்கு பஞ்சு, நெசவாளி, தறி மூன்றும் அடிப்படை.

சங்கிலி செய்ய வேண்டுமானால் தங்கம், பொற்கொல்லர், கொல்லரின் கருவி ஆகிய மூன்றும் அவசியம்.

எந்த பொருள் செய்ய வேண்டுமானாலும் இந்த மூன்று காரணம் இல்லாமல் முடியாது. ஆனால், உலக சிருஷ்டிக்கு இது பொருந்துவதில்லை. அங்கு பண்ணுவதும், பண்ணப்படுவதும் ஒன்று தான்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Mon Feb 29, 2016 5:01 pm

பிரம்மமே (தெய்வமே) உலகமாக இருக்கிறது. உலகமே பிரம்மரூபம் தான். எந்த ஒரு குயவனும் "நான் குடமாக ஆவேன்' என்று சொல்ல முடியாது. மண்ணும், குயவனும் தனித்தனி தான். ஆனால், "நான் உலகமாக ஆவேன்' என்று பிரம்மம் சொல்கிறது. அப்படியானால் பிரம்மமும், உலகமும் ஒன்று தானே என்று கேட்க முடியுமா என்றால் அதுவும் கிடையாது.

விளக்கம் ஒன்றைத் தெரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.

பழுதாகிப் போன கடிகாரம் ஒன்று இருந்தது. அதை கடிகாரக் கடைக்குச் சென்று பழுது பார்த்துத் தரும் படி கொடுத்தால் தெரியும்.

பழுதுபார்ப்பவர் அதில் உள்ள முள் அத்தனையையும் கழற்றி வைத்துக் கொண்டு பழுது பார்ப்பார். அங்கு போய்ப் பார்த்தால், நாம் கொடுத்த ஒரு கடிகாரம் அக்கு வேறு ஆணிவேறாக கழற்றப்பட்டு 150 கடிகாரம் போல பரப்பிக் கிடக்கும். கேட்டால், "இதோ 5 நிமிஷம் பொறுங்கள் கடிகாரம் தயாராயிடும்' என்று சொல்வார் கடைக்காரர். உண்மையாகவே, கண்மூடித் திறப்பதற்குள் அத்தனையையும் ஒன்றாக்கி கையில் கொடுத்து விடுவார்.

பொற்கொல்லர் தங்கவேலை செய்து கொண்டிருக்கும் போது தங்கத் துகள் கீழே விழுந்து கொண்டிருக்கும். வேலை முடிந்ததும் மெழுகு உருண்டையை எடுத்துக் கொண்டு ஒற்றி எடுத்தால் போதும். அத்தனை துகளும் அதில் ஒட்டிக் கொண்டு விடும். உலகில் கூடியிருக்கும் அத்தனை பேருக்குள்ளும் பிரம்மமே இருக்கிறது. ஆனால், நாம் தான் வேறு வேறாக உணர்கிறோம்!

எப்படி என்றால், அத்தனை தங்கமும் மெழுகில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், தங்கமும், மெழுகும் வேறு வேறாக இருப்பது போல!

ஆண்மயிலுக்குத் தோகை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பெண்மயிலான லட்சுமியைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் ஆண்மயிலான திருமால் தோகை விரித்து ஆடுகிறார்.

தோகை விரிப்பது தான் உலக சிருஷ்டி. ஆடி முடித்ததும் மயில் தன் அழகிய சிறகை ஒடுக்கி ஒன்றாக்கி விடுவது போல, உலகை ஒடுக்கி தன்னுள்ளே சேர்த்துக் கொள்கிறார். அது தான் உலகத்தின் அழிவு.

தனக்குரிய வீட்டினைக் கட்டும் சிலந்திப் பூச்சி தன் எச்சிலிலே இழையைப் பின்னிக் கொண்டு அதிலே தங்கிக் கொள்கிறது. அதே சிலந்தி அந்த இழைகளை வாய்க்குள் இழுத்துக் கொள்ளவும் செய்யும்.

இந்த இரண்டும் படைத்தல், அழித்தல் ஆகிய இரண்டும் போல இருக்கிறது. மயிலுக்குள் தோகையும், பூச்சிக்குள் நூல் இழையும் அடங்கி இருப்பது போல உயிர்களும், உலகமும் பிரம்மத்திற்குள் அடங்கி இருக்கின்றன.

இதே தத்துவத்தை துள்ளல் ஓசை நயத்துடன் ஒரு ஆழ்வார் பாசுரம் வேறுவிதமாகச் சொல்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.இன்னும் இனிக்கும்......


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Mon Feb 29, 2016 6:56 pm

அருமை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum