ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by கார்த்திக் செயராம் on Tue Jan 12, 2016 4:33 pmஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அனுமதி வழங்கியது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. விலங்குகள் நல ஆர்வலர்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த மனுக்களில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் பிற மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

மேலும் இவற்றில் இரு மனுக்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுக்கள் ஆகும். அதாவது, மத்திய அரசின் அறிவிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாக அவற்றில் கூறப்பட்டு உள்ளது.

தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.அப்போது, "மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் கடந்த 2014–ம் ஆண்டு மே 7ம் தேதி வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறி உள்ளது. இதுபோன்ற போட்டிகள் காளைகளின் நலனுக்கு எதிரானது என்றும் கூறி இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்த போட்டி மிருகவதை தடை சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அறிவிக்கை மூலம் மத்திய அரசு மீறுவது சட்டவிரோதமானது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறினர்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனுக்கள் 11-ம் தேதி (இன்று) விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கை நீதிபதி பானுமதி ஏற்கனவே விசாரித்ததால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நண்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிடுகையில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே உள்ள அறிவிக்கையை மீற முடியாது என்றும், புதிய அறிவிக்கையில் ஜல்லிக்கட்டு அனுமதிக்காக புதிய அம்சத்தை சேர்த்தது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வாதிட்ட அட்டர்னி ஜெனரல், புதிய அறிவிக்கையில் காளை வதை தொடர்பாக கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

விலங்குகள் நல வாரியத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மத்திய, மாநில அரசு உள்ளிட்ட தரப்புகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி விகடன் செய்தி ..
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ராஜா on Tue Jan 12, 2016 5:11 pm

சோகம் இந்த தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததிலேயே ஒவ்வொரு கட்சிகாரனும் ஒவ்வொரு மாதிரியா அறிக்கை விடுறானுங்க. இதில் எப்படி நாம் ஒற்றுமையா மேல் முறையீடு பண்ணி ஜல்லிக்கட்டு நடத்துவது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by யினியவன் on Tue Jan 12, 2016 5:13 pm

சில நாட்களுக்கு முன் நீக்கம், இன்று மீண்டும் தடை, நாளை நீக்கம் என விளையாடுவது எந்தக் கட்சிக்கு வாக்குகளைத் தரப் போகுது வரும் தேர்தலில்? ஓட்டுக்கான விளையாட்டாகி விட்டது தமிழனின் ஜல்லிக்கட்டு.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by T.N.Balasubramanian on Tue Jan 12, 2016 5:15 pm

தடையா ,
நான் பங்கு பெறுவதாக இருந்தேனே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by விமந்தனி on Tue Jan 12, 2016 5:17 pm

வருடாவருடம் இதுவும் பொங்கல் விளையாட்டுகளில் ஒன்றாகிவிட்டது.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by விமந்தனி on Tue Jan 12, 2016 5:18 pm

@T.N.Balasubramanian wrote:தடையா ,
நான் பங்கு பெறுவதாக இருந்தேனே !

ரமணியன்
சிரி சிரி சிரி சிரி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by யினியவன் on Tue Jan 12, 2016 5:21 pm

@T.N.Balasubramanian wrote:தடையா ,
நான் பங்கு பெறுவதாக இருந்தேனே !

ரமணியன்
இன்று வியாபார நோக்கமோ அய்யாவுக்கு?
அங்கு சிரிப்பு, நலம் இவற்றை வாங்கி விற்கிறார்
இங்கு பங்கு சந்தை வியாபாரம் - பேஷ் பேஷ் நல்லாருக்கு புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ayyasamy ram on Tue Jan 12, 2016 6:58 pmஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் இயற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எனவே, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by M.Jagadeesan on Wed Jan 13, 2016 9:08 am

அவசரச் சட்டத்தைத் தமிழக அரசே இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ayyasamy ram on Wed Jan 13, 2016 9:22 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ராஜா on Wed Jan 13, 2016 3:18 pm

@M.Jagadeesan wrote:அவசரச் சட்டத்தைத் தமிழக அரசே இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார் .
மேற்கோள் செய்த பதிவு: 1187352 நன்றி

மத்திய / மாநில அரசு கேடிகள் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது போல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by விமந்தனி on Wed Jan 13, 2016 3:23 pm

யார் இந்த பீட்டா?
--------------------------
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.

(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!

இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!

பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.

சரி.
அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?

பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

மூன்றரை இலட்சம் கோடிகள்!

சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.

அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.

ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...

நன்றி


வாட்ஸ் அப்பில் வந்தது.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by விமந்தனி on Wed Jan 13, 2016 3:30 pmநாம் நம் பண்டிகையை கொண்டாட ஏன் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்க வேண்டும்?

இத்துணை நாட்கள் நீதிமன்றம் சொல்லியா பாரம்பரிய பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தோம்?!

தினமும் சுவாசித்து வெளிவிடும் காற்றில் பல நுண்னுயிரிகள் கொல்ல படுகின்றன

பீட்டா போன்ற விலங்கியல் ஆர்வலர்களே சுவாசிப்பதை எப்போது நிருத்தி கொள்ள போகிறீர்கள்?!!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by கார்த்திக் செயராம் on Wed Jan 13, 2016 3:31 pm

எல்லா அரசியல்வாதி பயல்களும் நம்மல காமெடி பீஸாக மாத்திபுட்டானுங்க..
இது எல்லாமே ஒரு கேம்..ஒரு டிவிஸ்ட்..எங்க தட்டுனா எங்கே விழும் என்பது நல்லா தெரிஞ்சி வச்சிருக்கானுங்க..

அம்பது வருசமா தமிழன முட்டாள் ஆக்கியது போதும்..

இன்னும் என்னாடா வேண்டும்?
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ayyasamy ram on Wed Jan 13, 2016 6:41 pm

பீட்டா அமைப்பினரின் ரத்தக்கறை படிந்த முகம்
என விகடன் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது
-
PETA has killed 29,426 dogs, cats, rabbits, and other domestic animals.
(11 ஆண்டுகளில்)
-
ஆதாரத்துடனும் புகைப்படங்களுடனும் ஆங்கில பத்திரிகையில்
வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்து செய்தியாக போட்டுள்ளார்கள்
-
அக்கட்டுரையை பகிர முடிந்தவர்கள் இங்கு பகிரலாம்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by krishnaamma on Wed Jan 13, 2016 7:36 pm

@M.Jagadeesan wrote:அவசரச் சட்டத்தைத் தமிழக அரசே இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார் .
மேற்கோள் செய்த பதிவு: 1187352


நானும் பேபரில் படித்தேன் ஐயா, அதை  ஏன் யாருமே கண்டுக்கலை என்று தெரியலைசோகம்............அவர் சொன்னது போல ஜெயலலிதாவே அவசர சட்டம் பிறப்பிக்கலாமே...........ஏன்  செய்யாமல் இருக்காங்க என்று தெரியலையே? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ராஜா on Wed Jan 13, 2016 7:53 pm

@krishnaamma wrote:
@M.Jagadeesan wrote:அவசரச் சட்டத்தைத் தமிழக அரசே இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார் .
மேற்கோள் செய்த பதிவு: 1187352


நானும் பேபரில் படித்தேன் ஐயா, அதை  ஏன் யாருமே கண்டுக்கலை என்று தெரியலைசோகம்............அவர் சொன்னது போல ஜெயலலிதாவே அவசர சட்டம் பிறப்பிக்கலாமே...........ஏன்  செய்யாமல் இருக்காங்க என்று தெரியலையே? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1187546

இன்னும் , தேர்தல் வியாபாரம் முடியல போல புன்னகை எல்லாம் நல்லபடியா முடிந்ததும்.


அனேகமா நாளை "காளைகள் மீண்டும் அம்மா என்று கத்தும்" BJP யும் அதிமுகவும் சேர்ந்து தமிழக மக்கள் தலையில் இன்னும் ஒரு 5 வருடத்திற்கு மிளகாய் அரைப்பார்கள் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by krishnaamma on Wed Jan 13, 2016 8:11 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:
@M.Jagadeesan wrote:அவசரச் சட்டத்தைத் தமிழக அரசே இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார் .
மேற்கோள் செய்த பதிவு: 1187352


நானும் பேபரில் படித்தேன் ஐயா, அதை  ஏன் யாருமே கண்டுக்கலை என்று தெரியலைசோகம்............அவர் சொன்னது போல ஜெயலலிதாவே அவசர சட்டம் பிறப்பிக்கலாமே...........ஏன்  செய்யாமல் இருக்காங்க என்று தெரியலையே? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1187546

இன்னும் , தேர்தல் வியாபாரம் முடியல போல புன்னகை எல்லாம் நல்லபடியா முடிந்ததும்.


அனேகமா நாளை "காளைகள் மீண்டும் அம்மா என்று கத்தும்" BJP யும் அதிமுகவும் சேர்ந்து தமிழக மக்கள் தலையில் இன்னும் ஒரு 5 வருடத்திற்கு மிளகாய் அரைப்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187552


மிளகாய் அரைத்துவிட்டுப் போகட்டும், நாளைக் காலை நல்ல சேதி சொல்லட்டும் புன்னகை .............எத்தனைப் பேர் காளைகளுடன் ஆர்வமாய் காத்திருப்பார்கள் அவர்கள் வயற்றில் பாலை வார்க்கட்டும் ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by யினியவன் on Wed Jan 13, 2016 10:24 pm

@krishnaamma wrote:
மிளகாய் அரைத்துவிட்டுப் போகட்டும், நாளைக் காலை நல்ல சேதி சொல்லட்டும் புன்னகை .............எத்தனைப் பேர் காளைகளுடன் ஆர்வமாய் காத்திருப்பார்கள் அவர்கள் வயற்றில் பாலை வார்க்கட்டும் ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
பலே பலே உங்க ஊர் காளை மாடு பால் தருகிறதே புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum