ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா?

View previous topic View next topic Go down

அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா?

Post by கார்த்திக் செயராம் on Tue Dec 29, 2015 7:49 am


வரும் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு தம்பதியினர் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பூர்வமாக அறிவித்திருக்கிறது சீன அரசு. 1978-ம் ஆண்டு முதல் இருந்து வரும் சர்ச்சைக்குரிய 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை' திட்டத்தை நீக்கியிருப்பது சீன மக்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த முடிவுக்கு, சீனா வந்தது ஏன்?

திட்டம் பிறந்த கதை

அதைத்தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் வரலாற்றையும் கொஞ்சம் அறிய வேண்டியது அவசியம். 1949-ல் மாவோ சீனாவை தன்வசப்படுத்தியபோது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்ததும் சீனாதான். 50 கோடிக்கும் மேல் இருந்தது அன்றைய சீனாவின் மக்கள் தொகை. அப்போது, இதனை சுமையாகக் கருதாமல், சீனாவின் தனித்துவமான பலமாக கருதியது சீனக்கம்யூனிச கட்சி.

“அதிக மக்கள் தொகை என்பது அதிகமான மக்கள் சக்திக்கு அடையாளம். சுதந்திரமாக செயல்படும் 600 மில்லியன் மக்கள் என்பது, அணுசக்தியை விட பத்தாயிரம் மடங்கு வலிமையானது” என்றார் அன்றைய கம்யூனிச கட்சியின் ஹூ யாபேங். ஆனால் மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவை வளர, வளர மக்களின் இறப்பு விகிதம் குறையத்துவங்கியது. பிறப்பு விகிதம் சீராக அதிகரித்துக்கொண்டே சென்றது. இதை 1950களிலேயே உணரத்துவங்கியது சீன அரசு. அதிகரிக்கும் மக்கள் தொகை ஒரு வகையில் பிரச்னைதான் என்பதை கண்டுகொண்டது. இதற்கு காரணமாக அன்று அமைந்தது, அப்போது நாட்டில் வந்த வெள்ளம்.  லட்சக்கணக்கான மக்களை வெள்ளம் வெகுவாக பாதிக்க, அதன் பின்பு வந்த உணவுப்பஞ்சம், நாட்டை உலுக்கி எடுத்தது. அதிகமான மக்களுக்கு போதுமான உணவளிக்க முடியாமல் அரசு திணறியது. பின்னரே தனது பெருமைக்கான சுருதியை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக்கொண்டு, இதற்கான தீர்வுகளைப்பற்றி சிந்திக்கத் துவங்கியது.

1970களில், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. உற்பத்தியை விட, நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகமானதால் உணவு, உடை, இருப்பிடம் என எல்லாவற்றிலும் பற்றாக்குறை, போட்டி என சிக்கல்கள் உருவாகத் தொடங்கியது. அரசு தலையிட்டு எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை வந்தது. 60 கோடியாக இருந்த சீனாவின் மக்கள் தொகை, 80 கோடியை எட்டியது. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்கட்டமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சீன கம்யூனிசக் கட்சி 'Late, Long and Few' என்ற வாசகத்தை பிரபலமாக்கியது. அதாவது தாமதமாக திருமணம் செய்து, குறைவாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி இருக்கட்டும் என மென்மையாக, அறிவுரைகள் வழங்கியது. குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ளாது இருக்க, குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தம்பதிகளை, குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள ஊக்குவித்தது.

1976-ல் மாவோ மறையவே, ஆட்சிப்பொறுப்பு அப்படியே, டெங் ஜியோபிங்கிடம் வந்தது. சீனாவை பொருளாதார ரீதியாக ஆசியாவில், வல்லரசாக மாற்ற கனவு கொண்டிருந்தார் டெங். அதற்கு ஒவ்வொரு சீனக்குடிமகனும் ஒத்துழைக்க வேண்டுமே? அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால், அவர்களது தனி நபர் வருமானம் உயர வேண்டும். அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டும். இதற்கு தடையாக இருப்பது எது என யோசித்தார். அதிகப்படியான குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக வளர்வது கடினம் என்பதோடு, சீனாவின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என நினைத்தார். மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை குறைக்க விரும்பினார். இதன் விளைவாக 1978-ல் அறிமுகமானது 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை திட்டம்'.அன்று முதல் இன்று வரை இருக்கும் திட்டத்தின் வரலாறு இதுதான். இதில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டும் உள்ளது. நாட்டின் சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஊர்களில், சில இடங்களில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2008-ல் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, 70,000 மக்கள் மாண்டனர். 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இதில் அடக்கம். அப்போது பலரும், தங்கள் ஒரே குழந்தையையும் விபத்தில் இழக்க, அவர்களுக்கு மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து, பார்த்து சலுகைகள் அளித்தது மிகப்பெரிய எதிர்ப்பையும் கிளப்பின. ஆனால், அந்த சலசலப்புக்கு கொஞ்சமும் அஞ்சாமல், கொள்கையில் உறுதியாக நின்றது சீனா.

சலுகைகள் என்ன?

இந்த சட்டத்தை, நாடு முழுக்க கொண்டு சேர்ப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது அரசுக்கு நன்கு தெரிந்திருந்தது. எனவே இந்த சட்டத்தை பின்பற்றும் தம்பதிகளுக்கு அரசு மானியங்கள், பள்ளி, கல்லூரிகளில் முன்னுரிமை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வங்கிக் கடன்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் என அள்ளி அள்ளிக்கொடுத்தது அரசு. அரசு ஊழியர்களின் குழந்தைகள் 14 வயதை எட்டும் வரை, அவர்களுக்கு சம்பளத்துடன் ஊக்கத்தொகையும் அளித்தது. இதே சலுகைகள், தங்கள் திருமணத்தை தள்ளிப்போடும் மக்களுக்கும் அளித்தது சீன அரசு.

இதில் யாருக்கும் பிரச்னைகள் இல்லை. ஆனால், இந்த சட்டத்தை பின்பற்றாத மக்களுக்கு அரசு இழைக்கும் அநீதிகள்தான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு கடும் அபராதம் விதித்தது. இதை செலுத்த முடியாமல் போகும் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்வது, சட்ட உரிமைகளை மறுப்பது போன்றவை மனித உரிமை ஆர்வலர்களின் கோபத்தை தூண்டியது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 1 கோடிக்கும் மேல் கட்டாய கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்பது வேதனையான விஷயம்.

கருப்பு குழந்தைகள்

சீனாவில் மொத்தம் 13 மில்லியன் கருப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். யார் இவர்கள்? ஒரு தம்பதி- ஒரு குழந்தை திட்டத்தை மீறி பிறக்கும் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு,  'சமூக பாராமரிப்பு நிதி' எனத் தனியே 5,000 யுவான் கட்டணம் செலுத்த வேண்டும். இது மிகமிக அதிகமான கட்டணம் என்பதால், ஏழைகளால் செலுத்த முடியாது. எனவே, அவர்களின் குழந்தைகள் கருப்புக் குழந்தைகளாக கணக்கில் கொள்ளப்படுவர். ஹூகோ என்பது சீனாவின் குடிமகனாக பதிவு செய்து கொள்ளும் அடிப்படை சட்டநெறிமுறை. இவர்களுக்கு அதில் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பு கிடையாது. எனவே, இவர்கள் சீனக்குடியுரிமை பெற முடியாது. மருத்துவமனைகளில் அனுமதி கிடையாது. பள்ளிகளில் சேர முடியாது. பிறப்பு சான்றிதழ் எதுவும் கிடைக்காது என்பதால், வங்கிக்கணக்கு, வேலை என எதுவும் கிடைக்காது. சொந்த வீடு கட்டக்கூட அனுமதி கிடையாது. இப்படி சொந்த நாட்டிலேயே அகதிகளாக, அகதிகளை விட மோசமாக  வாழும் இவர்களின் எண்ணிக்கை மட்டுமே 2010 கணக்கெடுப்பின்படி, 13 மில்லியன். இது போர்ச்சுக்கல் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம்.

“நான் இங்குதான் பிறந்தேன். ஆனால், இந்த நாட்டின் குடிமகளுக்குரிய எந்த உரிமையும் எனக்கு கிடையாது. என்னிடம் ஹூகோ இல்லை என்பதால், என்னை சுற்றியுள்ள அனைவரை விடவும் நான் வித்தியாசமானவளாக இருக்கிறேன். நான் நாட்டில் புறக்கணிப்படாத இடங்களே இல்லை. பல நாட்கள் பள்ளிகளின் வெளியே நின்று, பாடம் நடத்துவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். ஆனால், பாடம் படிக்கத்தான் முடியாதே...” என்கிறார் 22 வயது பெண்ணான லீ.

இப்படி சீனாவின் கருப்பு குழந்தைகளின் சோக பக்கங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது, நீக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம் இவர்களுக்குத்தான் வாழ்க்கையின் இன்ப வாசலை திறந்து விட்டிருக்கிறது. இப்படி நிழலில் வாழும் இவர்களை,  சீனக்குடிமக்களாக எந்தவொரு கட்டணமும் இன்றி, பதிந்து கொள்வோம் என அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஜீ ஜின்பிங். இதன் மூலம் வருங்காலத்தில் எல்லா சட்ட உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் சீனாவின் மக்கள்தொகை ஏன் குறையவில்லை?

இப்படி இவ்வளவு கடுமையான தண்டனைகள், கட்டுப்பாடுகள் இருந்தும் ஏன் இன்னும் சீனாவே மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கிறது? இதற்கு காரணம் 1980களிலேயே சீனாவின் மக்கள் தொகை 98 கோடியாக உயர்ந்து விட்டது. அதற்கு பிறகு வந்த கட்டுப்பாடுகளால் மட்டும் கடந்த 38 ஆண்டுகளில் 40 கோடி குழந்தை பிறப்புகளை தடுத்திருந்தாலும், நிலைமை ஏற்கனவே கைமீறிப்போயிருந்தது. இதனால்தான் தற்போது சீனாவின் மக்கள்தொகை 137 கோடியாக இருக்கிறது.

இப்போது ஏன் கொள்கையை தளர்த்துகிறது சீனா?

தற்போது சீனாவில் இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை, அதாவது 60 வயது தாண்டியவர்களின் எண்ணிக்கை 21 கோடியை தாண்டியுள்ளது. இது இன்னும் சில வருடங்களில், அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, முக்கியமாக உழைப்பாளர் சக்திக்கு தேவையான இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். பணியாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பாதிப்பு ஆகியவை ஏற்படும்.அடுத்த அடி, பாலின விகிதம். ஒரே ஒரு குழந்தைகள் மட்டுமே, பெற்றுக்கொள்வதால் பெரும்பாலான நகரங்களில் ஆண்-பெண் விகிதத்திலும் பெரிய அளவிலான சமச்சீரற்ற தன்மை உருவாகியிருக்கிறது. இது சமூக பாலின சமத்துவத்தையும் பாதிப்பதால், இந்த பிரச்னையும் முக்கியமானதாக இருக்கிறது. இதனால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்திருக்கிறது சீனா. இதன் மூலம் 13 மில்லியன் தம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் எனவும் அறிவித்திருக்கிறது. இதன்படி, அடுத்த ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை இன்னும் அதிகமாகும். தற்போதைய பிறப்பு விகிதத்தை வைத்துக் கணக்கிட்டால், 2035-ல் 146 கோடியாக மக்கள் தொகை உயர்ந்து விடும்.

இது நிச்சயம் வரவேற்கத்தக்கதா?

இல்லை என்கின்றனர் சீனாவின் மனித உரிமை ஆர்வலர்கள். ஒரு தம்பதி-ஒரு குழந்தை என்னும் திட்டம் 'ஒரு தம்பதி- இரு குழந்தை' என்று மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவதாக பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சட்ட உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஒரு குழந்தையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, வேறு எந்த சுதந்திரமும் இதனால் கிடைக்கவில்லை. ஏனெனில் ஒரு தம்பதியினர் எவ்வளவு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசு எப்படி முடிவு செய்யலாம்? அது அவர்களின் தனிமனித உரிமை அல்லவா? அதைப்போலவே, இவ்வளவு ஆண்டுகள் கழித்து, திருத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இனி போதும் என நினைத்தால், மீண்டும் பழையபடி, சட்டத்தை மாற்ற அரசுக்கு சில நிமிடங்கள் போதுமே? எனக்கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள்.

ஆக, இந்த விஷயத்தில் சீனாதான் இன்னும் பல காலம் நம்பர் 1.

நன்றி விகடன் செய்தி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா?

Post by shobana sahas on Wed Dec 30, 2015 12:32 am

avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2809
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 30, 2015 9:41 pm

@கார்த்திக் செயராம் wrote:
திட்டம் பிறந்த கதை

அதைத்தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் வரலாற்றையும் கொஞ்சம் அறிய வேண்டியது அவசியம். 1949-ல் மாவோ சீனாவை தன்வசப்படுத்தியபோது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்ததும் சீனாதான். 50 கோடிக்கும் மேல் இருந்தது அன்றைய சீனாவின் மக்கள் தொகை. அப்போது, இதனை சுமையாகக் கருதாமல், சீனாவின் தனித்துவமான பலமாக கருதியது சீனக்கம்யூனிச கட்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1183588
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8610
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum