ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

சத்குரு பதில்கள்

View previous topic View next topic Go down

சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 12:51 pm

ஆர். செல்வராணி, பெரியகொல்லப்பட்டி:
-
கணினியிலும், அலைபேசியிலும் முடங்கிப் போயிருக்கும் இன்றைய இளைய
தலைமுறை சாகஸங்களில் ஆர்வம் காட்டுவதில்லையே?

-
வாலிப வயதில் செய்யக்கூடிய சாகஸச் செயல்களை ஒருவர்
தவற விட்டுவிட்டால் வாலிபத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம்
அவர் வாழ்வில் இல்லாமலேயே போய்விடும்.
-
துரதிஷ்டவசமாக இன்றைய இளைஞர்கள் வாலிபம் என்றாலே
சுகத்தை தேடுவது மட்டுமே என்ற தவறான எண்ண ஓட்டத்துடன்
இருக்கிறார்கள்.
-
இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல.
அது தீரச்செயல்களுக்கான நேரம். இவ்வயதைக் கடந்துவிட்டால்
அந்தத் தீரச் செயல்களை ஒருபோதும் அதே இலகுவுடன் செய்ய
இயலாது.
-
----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 12:53 pm

வி. வெங்கட்ராமன், செகந்திராபாத்:
-
எனக்குத் தெரிந்த ஒருவர், தன் குழந்தைக்கு அறிவுத்திறன் வளரும்
என்று செஸ் விளையாட்டை பயிற்றுவித்தார். ஆனால் அந்தக்
குழந்தைக்கு அதில் ஈடுபாடே வரவில்லை என்று சொல்கிறார்.
இந்த முரண்டாடு ஏன்?

-
என் குழந்தை செஸ் விளையாட்டு வீரர் ஆகவேண்டும்?
என்பது உங்களது கனவானால் உங்கள் கனவை குழந்தை மீது
திணிப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு.
-
அவர்களுக்கு அவ்விளையாட்டு பிடித்திருந்தால், தானாகவே
அதில் ஆர்வம் காட்டுவார்கள். செஸ்ஸின் மூலம் மட்டுமே
ஒருவருடைய அறிவு வளரவேண்டும் என்று அவசியம் இல்லை.
-
இன்னும் சொல்லப் போனால் செஸ் ஒரு குறிப்பிட்ட
நோக்கத்தினாலான வளர்ச்சியை மட்டுமே வழங்கும். மூளையின்
முழுமையான வளர்ச்சிக்கு மிக அதிகமான உள்ளீடுகள் தேவை.
உங்கள் குழந்தை தோட்டத்தில் அல்லது பாதுகாப்பான வனப்
பகுதியில் ஓடியாடி விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.
-
பல வகையான இலைகளை திரட்டச் சொல்லுங்கள். வகை வகையான
பூச்சிகளை, மரங்களைக் கணக்கிடச் சொல்லுங்கள். இவ்விதத்தில்
அவன் தன்னுடைய உடலையும், மனதையும் மிக அற்புதமாகப் பயன்
படுத்துவான். இன்றைய குழந்தைகள் உடலளவில் குறைவாகச்
செயல்படுகிறார்கள். வெளியே விளையாடக்கூட செல்வதில்லை.
-
ஒரு குழந்தை தன் உடலையும் மனதையும் ஒருசேர பயன்படுத்துவது
அவனுடைய வளர்ச்சிக்கு மிகமிக அவசியம். உங்களுக்கு உங்கள்
குழந்தையின் வளர்ச்சி முக்கியமா அல்லது செஸ் முக்கியமா என்பதை
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 12:55 pm

சு. ஆறுமுகம், கழுகுமலை:
-
இந்தியா பக்தி மார்க்கத்தில் பெயர் பெற்றுள்ளது.
ஆனால் வேறெங்கும் இல்லாத ஏழ்மை, துன்பங்கள் இங்குதானே
நிலவுகின்றன. இது ஏன்?
-

பொருள் சார்ந்த உலகம் என்று பார்க்கும் போது,
தற்போது பல கலாசாரங்கள் இந்தியாவைவிட நன்றாகவே
சாதித்திருக்கின்றன.
-
அவை பொருள் தொடர்பான விதிகளுடன் ஒத்திசைவாக இருப்பதால்
நன்றாகப் பொருளீட்டுகின்றன. ஆனால் அந்தக் கலாசாரங்களில் மக்கள்
உள்நிலையில் படும் துன்பங்களைச் சொல்லி மாளாது. ஏனெனில்,
அவர்கள் உள்நிலைக்கான விதிகளுடன் ஒத்திசைவாக இல்லை.
-
நாம் ஏழைகளாக இருப்பது நம்முடைய பக்திநாட்டம் காரணமாக இல்லை.
உள்சூழ்நிலை அல்லது வெளிசூழ்நிலை இரண்டையுமே முறையாகக்
கையாளாததால்தான். இன்று நம் தேசத்தில் வெற்றுப் பேச்சுக்களே
மிகுதியாகிவிட்டன. செயல் குறைந்துவிட்டன.
-
இச்சமயத்தில், குறிப்பாக பொருளாதார மேன்மையின் விளிம்பில் நாம்
இருக்கும் இச்சமயத்தில், சரியான திசையை நோக்கி செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்.
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 12:56 pm

ஜி. குப்புசாமி, சங்கராபுரம்:
-
ஒருவர் ஞானோதயமடைந்து முக்தி அடைவதை விட,
மீண்டும் பிறந்து மனிதகுலத்திற்கு சேவை செய்தால் என்ன?


எந்த விஷயமாக இருந்தாலும் அது உங்கள் விருப்பப்படி நடப்பதாக
நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் விருப்பம் என்று எதனை
நினைக்கிறீர்களோ அதுகூட நீங்கள் கட்டுண்டிருக்கும் நிர்பந்தங்களின்
படியே நடக்கிறது.
-
நீங்கள் மட்டுமல்ல, இன்றைய சமூகமே பெரும்பாலும் நிர்ப்பந்தத்தினால்
மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்கள் வாட்டும்போது
முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள். முக்தி கிடைக்காதா என ஏங்குகிறீர்கள்.
-
வாழ்க்கை சுகமாக இயங்கும்போது, மீண்டும் மீண்டும் பிறந்து வந்து
மனிதகுலத்திற்கு சேவை புரிய வேண்டும் என்கிறீர்கள். இதுமனித மனத்தின்
நிலையற்ற குணம். நீங்கள் மீண்டும் பிறந்து வந்து சேவை செய்யவேண்டும்
என நினைப்பது எதனால்? இப்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
போதே உங்களுடைய சேவையை துவங்கலாமே?
-
அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லையே.
-

-=

நன்றி- குமுதம் பக்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:26 pm

@ayyasamy ram wrote:
இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல.
அது தீரச்செயல்களுக்கான நேரம். இவ்வயதைக் கடந்துவிட்டால்
அந்தத் தீரச் செயல்களை ஒருபோதும் அதே இலகுவுடன் செய்ய
இயலாது.
மேற்கோள் செய்த பதிவு: 1181542
சத்குருவின் அருமையான கருத்துக்கள்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:30 pm

@ayyasamy ram wrote:
என் குழந்தை செஸ் விளையாட்டு வீரர் ஆகவேண்டும்?
என்பது உங்களது கனவானால் உங்கள் கனவை குழந்தை மீது
திணிப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு.
மேற்கோள் செய்த பதிவு: 1181543
சத்குருவின் உரையை அவருடன் இருந்து இரண்டு நாள் முழுவதும் கேட்ட அனுபவம்
என்றுமே அதை மறக்கவே முடியாது,நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:31 pm

@ayyasamy ram wrote:
இச்சமயத்தில், குறிப்பாக பொருளாதார மேன்மையின் விளிம்பில் நாம்
இருக்கும் இச்சமயத்தில், சரியான திசையை நோக்கி செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்.
மேற்கோள் செய்த பதிவு: 1181544
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:34 pm

@ayyasamy ram wrote:
நீங்கள் மட்டுமல்ல, இன்றைய சமூகமே பெரும்பாலும் நிர்ப்பந்தத்தினால்
மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்கள் வாட்டும்போது
முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள். முக்தி கிடைக்காதா என ஏங்குகிறீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1181545
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum