ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
rajeshk1975
 

Admins Online

சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

View previous topic View next topic Go down

சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by கார்த்திக் செயராம் on Fri Dec 18, 2015 11:15 pmமும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மற்ற இருவரும் படைக்கும் கடவுளான பிரம்ம தேவனும், காக்கும் கடவுளான விஷ்ணு பகவானும். சிவபெருமான் அழிக்கும் கடவுள். சிவபெருமானை கடவுளுக்கு எல்லாம் கடவுளாக, மகாதேவன் என அழைக்கின்றனர். அவருக்கு எல்லையில்லை, உருவமில்லை. மற்ற இருவரை காட்டிலும் மிகப்பெரியவரும் இவரே.

அச்சந்தரும் வகையில் பல வடிவங்களை சிவபெருமான் எடுத்துள்ளார். அவையெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தவையும் கூட. மும்மூர்த்திகளில் எளிதாக கவர முடியும் என்றால் அதுவும் இவரையே. கடும் கோபக்காரராக விளங்குவரும் இவரே. அவரைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத சில தகவல்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

சிவபெருமானின் பிறப்பு
இந்து புராணத்தில் புகழ் பெற்ற கடவுள்களில் சிவபெருமானும் ஒருவர் தான் என்றாலும் கூட, அவருடைய பிறப்பை பற்றி வெகு சிலருக்கே தெரியக்கூடும். அதற்கு ஒரு கதை உண்டு. அது சதி கலந்த கதையாக இருந்தாலும் கூட மந்திரத்தை கட்டிப் போட்டதை போல் உணர வைக்கும். ஒரு முறை பிரம்மனும் விஷ்ணுவும் யார் பெரியவர் என்ற சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென அவர்கள் முன்பு அண்டத்தின் வழியாக மிகப்பெரிய ஒளியுடன் கூடிய தூண் ஒன்று தோன்றியது. அதன் அடிப்பகுதியும் மேற்பகுதியும் பூமியை நோக்கியும், ஆகாசத்தை நோக்கியும் சென்று கொண்டிருந்தது.

5000 வருடங்கள் கடந்தும் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் அந்த தூணில் இருந்து சிவபெருமான் வெளிவந்ததை இரண்டு பேரும் பார்த்தனர். அவர் தான் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்ட இருவரும் இந்த அண்டத்தை ஆளும் மூன்றாவது சக்தியாக அவரை ஏற்றுக்கொண்டனர்.ராக் ஸ்டார்
கடவுள் கடவுள்களுக்கென இருக்கும் மரபு ரீதியான விதிமுறைகளை தகர்த்து எறிந்தவர் தான் சிவபெருமான். புலித்தோல் அணிபவரான அவர், சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை உடல் முழுவதும் தடவியிருப்பார். அதேப்போல் மண்டை ஓடுகளால் செய்யப்பட மாலையை அணிந்திருப்பார். தனக்கு துணையாக தன் கழுத்தைச் சுற்றி பாம்பையும் வைத்திருப்பார். அவர் கஞ்சாவை புகைப்பார் என்றும் அறியப்படுகிறது. அதேப்போல் பித்துப்பிடித்தவரை போல் நடனமும் ஆடுவார். தன் ஜாதியில் இல்லாத பழக்கத்தை பின்பற்றுபவரை போல் அனைத்தையும் செய்தவர் தான் இக்கடவுள்.

நடனக்கடவுள்
சிவபெருமானை நடராஜர் என்றும் அழைக்கின்றனர். அப்படியானால் நடனத்திற்கு ராஜா என அர்த்தமாகும். அவர் ஒரு சிறந்த நடன கலைஞராக அறியப்படுபவர். அவருடைய அந்த நிற்கும் தோரணை உலகம அறிந்ததே. அவருடைய வலது புறத்தில் சின்ன முரசு ஒன்றை வைத்திருப்பார். அது படைத்தலை குறிக்கும். அவருடைய நடனம் இந்த அண்டத்தின் அழிவை குறிக்கும். இதனை ருத்ரதாண்டவம் என்ற அழைக்கின்றோம். இயற்கையை மீண்டும் உருவாக்குவதற்கான நேரம் இது என பிரம்மனுக்கு தரப்படும் அறிகுறியும் கூட இது.


விஷ்ணுவுக்காக வாணர் அவதாரம்
மற்றொரு ராக் ஸ்டார் கடவுளாக அறியப்படுபவர் சக்தி வாய்ந்த அனுமான். சிவபெருமானின் 11 ஆவது அவதாரமாக இவர் கருதப்படுகிறார். விஷ்ணு பகவானின் அவதாரமான ராம பிரானின் மீதுள்ள அனுமானின் பக்தியை பற்றி அனைவருக்கும் தெரியும். விஷ்ணு பகவான் மீது சிவபெருமான் வைத்திருந்த பக்தியை இந்த பந்தம் எடுத்துக்காட்டும்.

நீலகண்டர்
இந்து புராணத்தில் மற்றொரு புகழ் பெற்ற கதையாக விளங்குவது அமுதம் எடுக்க பாற்கடலை கடைந்த (சமுத்ர மந்தன்) கதை. சிரஞ்சீவியாக இருக்க உதவும் அமுதத்தை எடுக்க தேவர்களும் அசுரர்களும் கூட்டணி வைத்துக் கொண்டார்கள். அதன் படி, பாற்கடலை கடைந்தனர். மந்தாரா மலை தான் கடையும் மத்தாக இருந்தது.
கடையும் கயிறாக வாசுகி (சிவபெருமானின் பாம்பு) பயன்படுத்தப்பட்டது. ஆனால் முழு பாற்கடலும் கடையப்பட்டதால், அது பேரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கியது. அப்போது ஹலாஹல் என்ற பொருள் கிடைத்தது.
இது அண்டத்தையே நஞ்சாக்கி விடும் தன்மையை கொண்டிருந்தது. அப்போது உள்ளே வந்த சிவபெருமான் அந்த விஷத்தை தானே விழுங்கினார். ஆனால் விஷம் பரவாமல் இருக்க அவர் தொண்டையை பிடித்து விட்டார் பார்வதி தேவி. இதனால் நீல நிறத்தில் மாறியது சிவபெருமானின் தொண்டை. அதனால் தான் அவர் நீலகண்டர் என அழைக்கப்பட்டார்.

யானை முக கடவுளுக்கு பின்னணியில் இருக்கும் காரணம்

தன் உடலில் உள்ள மண்ணை கொண்டு பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவரே விநாயகர். தன் மூச்சை கொடுத்து விநாயகருக்கு உயிரை அளித்த பார்வதி, சிவபெருமானுக்கு நந்தி தேவி இருப்பதை போல் தனக்கும் விநாயகர் விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைத்தார். ஒரு முறை சிவபெருமான் வீட்டிற்கு வந்த போது, பார்வதி தேவி குளித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு பாதுகாப்பாக இருந்த விநாயகர் சிவபெருமானை தடுத்து நிறுத்தினார். இதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், விநாயகர் யார் என்ற விவரம் அறியாமல் அவரின் தலையை துண்டித்தார். இதனால் அவமானமடைந்தார் பார்வதி தேவி.

அப்போது தான் தன் தவறை உணர்ந்தார் சிவபெருமான். அதனால் ஒரு யானையின் தலையை விநாயகருக்கு பொருத்தி அவருக்கு உயிரளித்தார். இப்படி பிறந்தவர் தான் யானை முகத்தை கொண்ட விநாயகர்.பூதேஸ்வரன்
நாங்கள் ஏற்கனவே சொன்னதை போல் மரபுகளுக்கு அப்பார்பட்டவராக விளங்கினார் சிவபெருமான். சுடுகாட்டில் வாழ்ந்து வந்த அவர் சவத்தின் சாம்பலை எடுத்து உடலில் பூசிக்கொண்டிருந்தார். அவருக்கு இருக்கும் பல பெயர்களில் பூதேஸ்வரரும் ஒன்றாகும். அப்படியானால் பூதங்கள் மற்றும் தீய சக்திகளின் கடவுளாகும். அதை தான் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

ட்ரையம்பக தேவன்
சிவபெருமானை ஒரு அறிவொளியாக தான் நாம் பார்க்கிறோம். ட்ரையம்பக தேவன் என்றால் மூன்று கண்களை கொண்ட கடவுள் என்பதாகும். சிவபெருமானுக்கு மூன்றாவது கண் ஒன்றும் உள்ளது. யாரையாவது கொல்ல அல்லது அழிவை ஏற்படுத்துவதற்கு மட்டுமே அவர் இந்த கண்ணை திறப்பார். தன் மூன்றாவது கண்ணை கொண்டு ஆசைகளை சாம்பலாக்கும் கடவுளாக இவர் அறியப்படுகிறார்.


மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்
மிருகண்டு மற்றும் மருத்மதி தம்பதிக்கு, சிவபெருமானை பல ஆண்டு காலம் வணங்கி வந்த பிறகு, மார்கண்டேயன் பிறந்தான். ஆனால் தன் 16 வயது வரை மட்டுமே அவன் வாழ்வான் என அவனுக்கு விதி எழுதப்பட்டிருந்தது. மார்கண்டேயனும் கூட சிவபெருமானின் தீவிர பக்தனாவான். அவனின் உயிரை எமதர்மனின் தூதர்களால் எடுக்க முடியவில்லை. மரணத்தின் கடவுளான எமனே நேரில் வந்து மார்கண்டேயனின் உயிரை எடுக்க வந்தார். ஆனால் வந்தவரோ சிவபெருமானுடன் சண்டையிட்டு உயிரை இழந்தார். மார்கண்டேயன் எப்போதும் சிரஞ்சீவியாக வாழ்வான் என்ற நிபந்தனையோடு எமனுக்கு மீண்டும் உயிரை அளித்தார் சிவபெருமான். இதனால் அவருக்கு கலண்டகர், அதாவது மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என அர்த்தமாகும்.

பாலின சமுத்துவத்தை ஊக்கப்படுத்தியவர்
சிவபெருமானுக்கு அர்தநாரீஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த பெயருக்கு ஏற்றது போல் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆண் மற்றும் பெண்ணின் உருவங்கள் இணைபிரியாதவை என்பதை இங்கே நமக்கு சிவபெருமான் எடுத்துக்காட்டுகிறார். கடவுள் என்பவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்பதையும் கூறுகிறார். சொல்லப்போனால் அவர் இரண்டுமே. அவர் எப்போதும் பார்வதி தேவியை மரியாதையுடனும், தன்னில் பாதியாகவும் கருதினார். ஒவ்வொரு மனிதனும் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அவர் முற்போக்குவாதியாக இருந்தார்.

நன்றி நாட்டு நடப்பு ஆன்மீகம்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by சாமி on Sat Dec 19, 2015 6:51 am

@கார்த்திக் செயராம் wrote:  அவரைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத சில தகவல்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா? - நன்றி நாட்டு நடப்பு ஆன்மீகம்
மேற்கோள் செய்த பதிவு: 1181475

இது ஒரு அரைவேக்காட்டுத்தனமான கட்டுரை. கடவுட்கொள்கையைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் எழுதியது. ஒரு துறையைப் பற்றி எழுதவேண்டுமானால் அந்தத் துறையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு வேண்டும். அதன்பின்தான் பேனாவில் (மௌஸில்) கையை வைக்க வேண்டும். ஊர் முழுக்க இப்படிப்பட்டவர்கள் நிரம்பி வழிவதால்தான் தமிழன் தன்னுடைய கடவுட்கொள்கையை மறந்தான். வெளிநாட்டு மதப் பரப்பிகள் சுகவாழ்வு இங்கு வாழமுடிகிறது.

ஒரு சில மறுப்புகள்:-

கட்டுரையாளர்:  .... கடும் கோபக்காரராக விளங்குவரும் இவரே...
பதில்: அன்பே சிவம் என்பது சிவபெருமானுக்கு மட்டுமே உரிய பெயர். வேறு எந்தக் கடவுளுக்கும் இல்லாத பெயர். உண்மையில் வேறு யாரும் கடவுள் இல்லை. கடவுளான சிவபெருமானின் தொழிலைச் செய்பவர்கள்.

கட்டுரையாளர்: ....... அவர் ஒரு சிறந்த நடன கலைஞராக அறியப்படுபவர்......இதனை ருத்ரதாண்டவம் என்ற அழைக்கின்றோம்....
பதில்: எந்த  மாஸ்டர்கிட்ட கத்துக்கிட்டார்? .... கலா மாஸ்டர்கிட்டேயா?... ஐயா அது டான்ஸ் இல்லை. ஆனந்தக் கூத்து. சைவசமய உண்மையை விளக்குக்கின்ற தத்துவம். இது ஆனந்த தாண்டவம். கடவுளின் ஐந்தொழிலை விளக்குக்கின்ற ஒரு தத்துவம்.

கட்டுரையாளர்: ..............சிவபெருமானின் பிறப்பு.....
பதில்: சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவன். பிறப்பிலி. அவன் எப்படி பிறக்க முடியும்? தாயின் வயிற்றில் ஒருவன் பிறந்தால் அவன் கடவுள் இல்லை. அப்படிப் பிறப்பவன் நம்மைப் போன்ற ஓர் உயிரே.

கட்டுரையாளர்: சிவபெருமானின் 11 ஆவது அவதாரமாக இவர் கருதப்படுகிறார். விஷ்ணு பகவானின் அவதாரமான ராம பிரானின் மீதுள்ள அனுமானின் பக்தியை பற்றி அனைவருக்கும் தெரியும். விஷ்ணு பகவான் மீது சிவபெருமான் வைத்திருந்த பக்தியை இந்த பந்தம் எடுத்துக்காட்டும்.
பதில்: சிவபெருமானின் அவதாரம் என்று எதுவும் யாரும் கிடையாது. அவர் பிறப்பிலி. சில சீசனல் சாமியார்களை "சிவபெருமானின் அவதாரம்" என்று சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது கடைந்தெடுத்த வடிகட்டுன பொய். சிவபெருமான் பிறந்தார் என்று சொல்வதே மிகப்பெரிய பாவம். விஷ்ணு சிவபெருமான் மீது பக்தி வைத்தார் என்பது சரி. சிவபெருமான் விஷ்ணு மேல் பக்தி வைத்திருந்தார் என்பது மகா உளறல்.

கட்டுரையாளர்: ............யானை முக கடவுளுக்கு பின்னணியில் இருக்கும் காரணம்.........
பதில்: நீங்கள் சொல்வது டுபாக்கூர் கதை. கடவுளை கொச்சைப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட பல கதைகளில் இதுவும் ஒன்று.  "இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழிமுனை கபாலமும் காட்டி" என விநாயகரின் உருவத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஒளவையார் விநாயகர் அகவலில்.
உங்களுக்கு ஊழ் இருந்தால் அந்த புத்தகத்தைத் தொட்டுப்பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்கும்.

கட்டுரையாளர்: நாங்கள் ஏற்கனவே சொன்னதை போல் மரபுகளுக்கு அப்பார்பட்டவராக விளங்கினார் சிவபெருமான். சுடுகாட்டில் வாழ்ந்து வந்த அவர் சவத்தின் சாம்பலை எடுத்து உடலில் பூசிக்கொண்டிருந்தார். அவருக்கு இருக்கும் பல பெயர்களில் பூதேஸ்வரரும் ஒன்றாகும். அப்படியானால் பூதங்கள் மற்றும் தீய சக்திகளின் கடவுளாகும். அதை தான் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
பதில்: தீய சக்திகளின் கடவுளா....? அடப்பாவமே....!!! இதைச் சொல்கிற நீங்கள்தான் ஒரு தீயசக்தி. உனக்குத்தான் புரியவில்லை என்கிறாயே எதற்காக இதைப் பற்றி எழுத வந்தாய்?

கட்டுரையாளர்: ...சிவபெருமானுக்கு மூன்றாவது கண் ஒன்றும் உள்ளது. யாரையாவது கொல்ல அல்லது அழிவை ஏற்படுத்துவதற்கு மட்டுமே அவர் இந்த கண்ணை திறப்பார்....
பதில்: "மோகய முக்கண் மூன்றொளி" என திருமந்திரம் சொல்கிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்னும் மூன்று சக்திகளைக் குறிப்பதற்காக மூன்று கண்களால் குறிப்பிடப்படுகிறார் இறைவன்.

ஞான, இச்சா கிரியையளாகவும் சோம சூரிய அக்கினிகளாகவும் உள்ள விசாலம் பொருந்திய கண்களையுடையவர் என்பார் அகோர சிவாச்சாரியார் (தீஷா விதி: கிரியாக்ரம ஜோதி வியாக்யானம்)

கட்டுரையாளர்: ................. சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!! ...............
பதில்: முதலில் நீங்கள் ஒழுங்காகத் தெரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு எங்களைக் கொல்லாதீர்கள்.

கட்டுரையாளர்: ......நாட்டு நடப்பு ஆன்மீகம்.....
பதில்: நண்பரே.... உங்கள் உளறல்களை நாட்டு நடப்பு பற்றி மட்டும் எழுதுங்கள். அதைவிட்டு விட்டு ஆன்மீகம் பக்கம் வராதீர்கள். வர நினைத்தால்... ஆன்மிகத்தத்துவங்களை நல்ல ஒரு குருவின் துணை கொண்டு தெரிந்து கொண்டு பின்னர் எழுத வாருங்கள்.


.......................................................................................................
பின் குறிப்பு: இன்னும் பல உளறல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன. சாம்பிளுக்கு சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்.


Last edited by சாமி on Sat Dec 19, 2015 7:04 am; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by கார்த்திக் செயராம் on Sat Dec 19, 2015 6:59 am

கடும் கோபம் வேண்டாம் சுவாமி . உங்களுக்கு ஒரு நெற்றி கண் இருந்தால் என்னையும் எரித்து விடுவீர்கள் போல். சற்று வித்தியாசமான கட்டூரை என்பதால் பதிப்பித்தேன்.மற்றபடி அடியேன் பொருப்பு இல்லை.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by சாமி on Sat Dec 19, 2015 7:11 am

@கார்த்திக் செயராம் wrote:கடும் கோபம் வேண்டாம் சுவாமி . உங்களுக்கு ஒரு நெற்றி கண் இருந்தால் என்னையும் எரித்து விடுவீர்கள் போல். சற்று வித்தியாசமான கட்டூரை என்பதால் பதிப்பித்தேன்.மற்றபடி அடியேன் பொருப்பு இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1181486

கோபம் இல்லை கார்த்திக். உங்களுக்கு என்னுடைய நன்றிகள். இவரைப் போல பலர் இப்படித்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இங்கு பதிப்பித்ததால்தான் இதற்கு மறுப்பு அளிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதற்காக மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றிகள்!!!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by கார்த்திக் செயராம் on Sat Dec 19, 2015 7:19 am

சரியாக சொன்னீர்கள் சுவாமி , உலகத்தில் பலர் இப்படி தான் திரிகிறார்கள்.ஆழ்ந்து ஆறாயமல் பல கட்டூரைகள் வெளி வருகிறது.சற்று வித்தியாசமான இருந்தால் பதிவு செய்தேன். இதில் விவாத பொருளாக மாறி விட்டது.

அப் பாட சுவாமி சாந்த மூர்த்தி யாகி நான் தப்பித்தேன்.

நன்றி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by Namasivayam Mu on Sat Dec 19, 2015 7:43 am

.சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by சாமி on Sat Dec 19, 2015 4:57 pm

@கார்த்திக் செயராம் wrote:சரியாக சொன்னீர்கள் சுவாமி , உலகத்தில் பலர் இப்படி தான் திரிகிறார்கள்.ஆழ்ந்து ஆறாயமல் பல கட்டூரைகள் வெளி வருகிறது.சற்று வித்தியாசமான இருந்தால் பதிவு செய்தேன். இதில் விவாத பொருளாக மாறி விட்டது. அப் பாட சுவாமி சாந்த மூர்த்தி யாகி நான் தப்பித்தேன்.
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181496

புன்னகை நன்றி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by T.N.Balasubramanian on Sat Dec 19, 2015 7:44 pm

நன்றி சாமி .
இப்பிடிதான் பல பத்திரிகைகள் இடத்தை நிரப்ப சில செய்திகளை பிரசுரிக்கிறார்கள்.
தப்பான செய்திகளை போட்டுவிட்டு , இங்கு பிரசுரிப்பவை யாவும் கற்பனையே என்றும் ,
எழுதிய தகவல்களுக்கு எழுதியவர்தான் பொறுப்பு என்றும் கூறி தப்பித்துக் கொள்கின்றனர் .
முகநூலோ கேட்கவே வேண்டாம் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
நெல்சன் மாணிக்கம் ரோட் நெல்சன் மண்டேலா ஞாபகார்த்தமாக பெயர் வைக்கப்பட்டது என்று கூறினால் அதை நம்புவதற்கு ஆயிராமாயிரம் பெயர்கள் .
சாமி அவர்கள் நாட்டு நடப்பு ஆன்மிகம் பத்திரிகைக்கு மறுப்பு தெரிவித்தால் நல்லது .
இனியும் மனதிற்கு இசைந்த மாதிரி தப்பாக பதிவுகள் போடமாட்டர்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by krishnaamma on Sat Dec 19, 2015 8:20 pm

@T.N.Balasubramanian wrote:நன்றி சாமி .
இப்பிடிதான் பல பத்திரிகைகள் இடத்தை நிரப்ப சில செய்திகளை பிரசுரிக்கிறார்கள்.
தப்பான செய்திகளை போட்டுவிட்டு , இங்கு பிரசுரிப்பவை யாவும் கற்பனையே என்றும் ,
எழுதிய தகவல்களுக்கு எழுதியவர்தான் பொறுப்பு என்றும்  கூறி தப்பித்துக் கொள்கின்றனர் .
முகநூலோ கேட்கவே வேண்டாம் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
நெல்சன் மாணிக்கம் ரோட் நெல்சன் மண்டேலா ஞாபகார்த்தமாக பெயர் வைக்கப்பட்டது என்று  கூறினால்  அதை நம்புவதற்கு ஆயிராமாயிரம் பெயர்கள் .
சாமி அவர்கள் நாட்டு நடப்பு ஆன்மிகம்  பத்திரிகைக்கு மறுப்பு தெரிவித்தால் நல்லது .
இனியும் மனதிற்கு இசைந்த மாதிரி தப்பாக பதிவுகள் போடமாட்டர்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181590


 ........ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 20, 2015 9:28 am

@சாமி wrote:
@கார்த்திக் செயராம் wrote:  அவரைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத சில தகவல்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா? - நன்றி நாட்டு நடப்பு ஆன்மீகம்
மேற்கோள் செய்த பதிவு: 1181475
கட்டுரையாளர்: ......நாட்டு நடப்பு ஆன்மீகம்.....
பதில்: நண்பரே.... உங்கள் உளறல்களை நாட்டு நடப்பு பற்றி மட்டும் எழுதுங்கள். அதைவிட்டு விட்டு ஆன்மீகம் பக்கம் வராதீர்கள். வர நினைத்தால்... ஆன்மிகத்தத்துவங்களை நல்ல ஒரு குருவின் துணை கொண்டு தெரிந்து கொண்டு பின்னர் எழுத வாருங்கள்.
பின் குறிப்பு: இன்னும் பல உளறல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன. சாம்பிளுக்கு சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1181483
தவறான தகவலுக்கும், பதிவுகளுக்கும் சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் சாமி ஐயா, நன்றி
தங்களின் அறிவுரைக்கு நன்றி ஐயா. இனி யாரும் பதிவுக்கு முன்பு பல முறை தெளிவுபடுத்தி
பதிவு செய்வர்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum