ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2016 - புத்தாண்டு பலன்கள் !

View previous topic View next topic Go down

best 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:43 amவளமாக இருக்க போகும் ராசிகள்: 
ரிஷபம் - மிதுனம் - மகரம் - மீனம்

முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்:
கடகம் - சிம்மம் - கன்னி - தனுசு

இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்:
மேஷம் - துலாம் - விருச்சிகம் - கும்பம்


நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீமன்மத வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி (1.1.2016) கிருஷ்ணபக்ஷ சப்தமியும் உத்திர நக்ஷத்ரமும் சௌபாக்ய நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2016 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.உத்திர நக்ஷத்ரம் கன்னி ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் - ஆயுசுடனும் - ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் - திருமணம் கைகூடி வரவும் - சந்தாண பாக்கியம் கிட்டவும் - நல்ல வேலை கிடைக்கவும் - வெளிநாடு பயணம் இனிதே பெறவும் - வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

இந்த ஆண்டு சிவனுக்கும் சாஸ்தாவிற்கும் அய்யனாருக்கும் உகந்த நக்ஷத்ரமான உத்திரநக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் சுகஸ்தானத்தில் இருக்கும் லகனதிபதி ராசிநாதன் புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான பரமனையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். மன்மத வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி நிகழும் புத்தாண்டை முதல்நாளே கொண்டாடுவது சிறப்பானதாகும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 


நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே.
ஆண்டின் தொடக்கத்தில் லக்ன தொழில் அதிபதி புதன் சுகஸ்தானத்தில் விரையாதிபதி சூரியனுடன் இணைந்தும் - தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் தைரியஸ்தானத்திலும் -  தைரிய அஷ்டம ஸ்தானாதிபதி செவ்வாய் தனஸ்தானத்திலும் சுக களத்திர சப்தமாதிபதி குரு லக்னத்திலும் - பஞ்சம ரண ருண ரோகாதிபதி சனி தைரிய ஸ்தானத்திலும் - லாபாதிபதி சந்திரன் லக்னத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சுக்கிரனும் - செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.


தொடரும்................நன்றி :  4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) Last edited by krishnaamma on Wed Dec 16, 2015 10:05 am; edited 2 times in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:49 am

ஆண்டின் தொடக்கத்திலேயே சுபகாரகன் குரு லக்னத்தில் சஞ்சரிக்கும் நிகழ்வானது 12 ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் அறிய நிகழ்வாகும். எனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. மேலும் லாபாதிபதி சந்திரன் லக்னத்திற்கு நட்பு கிரகமாவார். அவர் குருவுடன் இணையும் போது குரு சந்திர யோகம் எனப்படும் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. 


தனது பார்வையால் குருவும் செவ்வாயும் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் - பாக்கியஸ்தானத்தையும் நிரப்புகிறார்கள். இது குருமங்கள யோகத்தைக் காட்டுகிறது. மங்கள காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி நடைபெறும். பூமியிலுள்ள மக்களுக்கெல்லாம் தைரியமும் - இறைவனின் பரம சைதன்யமும் நிறையப் போகிறது. கவலைகள் மறைந்து கை நிறைய தனலாபம் அமையப் போகிறது. 

உயர்வான வாழ்க்கைக்கு எண் 2:

1 + 1 + 2 + 0 + 1 + 6 = 11 = 1 + 1 = 2;

இது சந்திரனுடைய எண்ணாகும். சந்திரன் நட்பு வீடான கன்னியில் சஞ்சாரம் பெறுகிறார். மேலும் குருவுடன் இணைந்திருக்கிறார். மனதையும் இறைவியையும் குறிக்கும் எண் இரண்டாகும். ஒன்று என்பது ஆரம்பமானால் அதை இரட்டிப்பாக்கும் சக்தி கொண்டது இரண்டாவது எண்ணாகும். 


எனவே இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு அனைத்து விதமான நற்பலன்களையும் அளிக்கும் என நம்பலாம். மேலும் ஆண்டின் கூட்டுத் தொகையானது 9. இந்த எண் தைரியகாரகன் செவ்வாயைக் குறிப்பதாகும். இவ்வருடம் எந்த ஒரு செயலையும் தொடங்க விரும்புபவர்கள் அம்மனையும்  - முருகனையும் வழிபட்டு வந்தால் அனைத்து காரியங்களும் கைகூடும். 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:51 am

பொதுப் பலன்கள்:

கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்யமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துதுறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயணம் - ஆண்மீகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 


சுக்ரன் தனது வீட்டை தானே பார்ப்பதால் கலைத்துறை செழிக்கும். கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். 


பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். 


சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள். 


தொடரும் ............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:51 am

இவ்வாண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்: ( வாக்கிய பஞ்சாங்கப்படி)

குருபகவான்:


வருட ஆரம்பித்தின் போதே குருபகவான் அதிசாரமாக கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். 2016 - ஜனவரி மாதம் 22ம் தேதி (மன்மத வருஷம் - தை மாதம் 8ம் தேதி) வக்ர நிவர்த்தியாக ஆரம்பிக்கிறார். சிம்மத்தில் நட்பாக இருக்கும் குரு பகவான் கன்னி ராசிக்கு ஆகஸ்டு மாதம் 1ம் தேதி (துன்முகி வருஷம் - ஆடி மாதம் 17ம் தேதி) மாறுகிறார். கன்னிக்கு மாறும் குரு பகவான் தனது பஞ்சம பார்வையாக மகர ராசியையும் - சப்தம பார்வையாக மீன ராசியையும் - நவம பார்வையாக ரிஷப ராசியையும் பார்க்கிறார்.

ராகு நிலை:


2016 - ஜனவரி மாதம் 7ம் தேதி (மன்மத வருஷம் - மார்கழி மாதம் - 22ம் தேதி) - வியாழக்கிழமை:
கன்னி ராசியிலிருக்கும் ராகு பகவான் சிம்ம ராசிக்கு மாறுகிறார். மாறும் ராகு பகவான் மிதுனம் - கும்பம் - துலாம் ராசிகளைப் பார்க்கிறார். (சிலர் ராகுவிற்கு பார்வையில்லை என்பர்)

கேது நிலை:


2016 - ஜனவரி மாதம் 7ம் தேதி (மன்மத வருஷம் - மார்கழி மாதம் - 22ம் தேதி) - வியாழக்கிழமை:
மீன ராசியிலிருக்கும் கேது பகவான் கும்ப ராசிக்கு மாறுகிறார். ரிஷபம் - சிம்மம் - தனுசு ஆகிய ராசிகளை பார்க்கிறார் கேது பகவான். (சிலர் கேதுவிற்கு பார்வையில்லை என்பர்)

இனி வரும் நாட்களில் பகுதி பகுதியாக, பன்னிரு ராசிகளுக்களுக்குமான விரிவான பலன்களை இங்கே காணலாம். 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:53 am

2016 மேஷ ராசி பலன்கள்மேஷம்:  மற்றவர்களின் நல்வாழ்விற்காக தன் பங்கை முன்வந்து தரும் மேஷ ராசி அன்பர்களே!
கிரகநிலை: குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் - ராகு ரண ருண ரோகஸ்தானத்திலும் - சனி பகவான் அஷ்டமஸ்தானத்திலும் - கேது விரையஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  சப்தம களத்திர  ஸ்தானம் -  லாப ஸ்தானம் -  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசி -    பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  பாக்கிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  தொழில்  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  அயன சயன போக  ஸ்தானம் -  நவம பார்வையால்  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி:
எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான  சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.

இவ்வாண்டில் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும். பல நற்செயல்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தில் பெயரும் புகழும் அடைவீர்கள். பொருளாதார வரவுகளும், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் அபரிமிதமாக இருக்கும்.

இளைய சகோதர, சகோதரிகளால் சற்று மனக்கசப்பு ஏற்படலாம். அவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அவர்களால் சிறிது செலவும் உண்டாகலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மட்டுமின்றி வெளியில் செல்லும் போதும் சுகாதார வசதியை ருவாக்கிக் கொண்டால் ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் நிறையவே இருக்கிறது. குழந்தைகள் வகையிலும் பூர்வ சொத்துக்களாலும் வருமானம் உண்டு. பூமி, மனை, நிலங்கள் தொடர்பானவற்றில் இருந்த எதிர்ப்புகள் மாறி அனுகூலமான பலன் கிட்டும். தொழில் ரீதியாக எதிரிகள் முடங்கிப் போவார்கள்.

நண்பர்கள் வகையில் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம். அவர்களை விட்டு சற்று ஒதுங்கியே நில்லுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் தெய்வ வழிபாடு நடத்தும் வாய்ப்புகள் உருவாகும். உடலில் சில நோய்க்கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளதால் உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி உறவினர்களால் அனுகூல பலன் கிட்டும். இவ்வாண்டு முழுவதும் சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும். ஆதாயமாக வரும் பணம் முழுவதையும் சேமிக்கும் வாய்ப்பு கிட்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: 
அரசுத்துறை ஊழியர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியில் மிகுந்த கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவார்கள். தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு நினைப்பதைவிட அதிகமாக சம்பள உயர்வும், பாராட்டும், பரிசும் கிட்டும். மனதில் தைரியம் உண்டாகும். தனக்குக்கீழ் உள்ள ஊழியர்களுக்கும் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி சம்பள உயர்வை பெற்றுத் தருவார்கள். ஒருசிலருக்கு உத்தியோக உயர்வு, இடமாற்றம், புது வீடு வாங்குதல், புதிய வாகனம் வாங்குதல் ஆகிய பலனகள் நடக்கும். உங்களின் லட்சிய பயணத்தில் பிறரின் குறுக்கீடு இன்றி வெற்றிநடை போட தெய்வசக்தி துணை நிற்கும். குடும்பத்தில் உள்ள நீண்டகால பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திடீரென சுபச்செலவு வரும்.

தொழிலதிபர்களுக்கு:
விசைத்தறி தொழில் நடத்துவோர், இயந்திரம் தொடர்பான தொழில் செய்வோர் தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள். வாகன தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் ஆர்டர் கிடைக்கும். தொழிற்சாலை பணிகளை மேற்பார்வையிட செல்லும் போது தகுந்த பாதுகாப்பை மேற்கொள்ளுதல் அவசியம். மனதில் உற்சாகமும், செயல் திறனும், அதிகரிக்கும். அரசு தொழில் நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர் அனுகூலமான பலன் பெறுவர். தாயின் அன்பும் ஆசியும் கிட்டும்.

புத்திர வகையில் புகழும் பெருமையும் உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும்.  அழகு சாதன பொருள் உற்பத்தி செய்வோர் மேன்மை பெறுவர். விஷப்பிராணிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். கால்வலி, முதுகுவலி உடையவர்கள் சிகிச்சையை தொடர வேண்டி வரும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். தொழிலில் கிடைக்கும் ஆதாயம், தொழில் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு கிட்டும். புத்திரர்கள் வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.

மாணவர்களுக்கு:
தனக்குப் போகத்தான் தானம் என்ற எண்ணம் மனதில் குடிகொண்டிருந்தாலும் மற்றவர்களுக்கு சேவை செய்யும்  நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அவ்வாறு கிடைத்த வாய்ப்பை முழு மனதுடன் செயல்படுத்தி கல்வியில் வளர்ச்சி காண முடியும். நண்பர்களின் தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்கு துணைபோகாமல் இருந்தால், பின்னால் வரும் பெரிய துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பொருளாதாரமும், புகழும் உங்கள் நற்செயல்களுக்கு  துணைபுரியும். கல்வியில் இருந்த கவனச் சிதறல்கள் மாறி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். போக்குவரத்து இனங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நண்பர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். படித்துக்கொண்டே பகுதி நேர பணிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிட்டும். சகோதரர்களுடன் விட்டுக்கொடுத்து நடங்கள்.

பெண்களுக்கு:
தனியார் மற்றும் அரசுத்துறையில் பணிபுரியும் பெண்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நலன்  தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிட்டும் வாய்ப்பு உண்டு. மனதில்  இருந்த சஞ்சலங்கல் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். சகதோழிகளுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு பொருளாதார நிலை வளம் நிறைந்ததாக இருக்கும். வீரு, பணியிடம் இவைகளில் ஏதேனும் ஒன்று மாறும் சூழ்நிலை உண்டு. சிலருக்கு பொன் ஆபரணங்களைபுதுப்பிக்கும் வாய்ப்பு கிட்டும். மன தைரியத்துடன் அணுகும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். திருமணமான புதுப் பெண்களுக்கு புத்திரபேறு தாமதமின்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிறு தொழில் செய்பவர்கள் குழுவினராக இணைந்து அரசின் உதவி பெற்று தொழிலில் மேன்மை அடைவர். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் பெருமை ஏற்படும்.

கலைஞர்களுக்கு:
 சினிமா, நடக கலைஞர்களுக்கு பொருளாதார அசதி அதிகமாகும். ஆடை வடிவமைப்போர், சித்திர, சிற்ப வேலை, தச்சு வேலை செய்பவர்கள் அதிகமான வேலை வாய்ப்பு பெறுவார்கள். கட்டடக் கலைஞர்கள், நகைத்தொழில் செய்வோர் புதிய தொழ்ல்நுட்பத்தை புகுத்தி பொருளாதார வசதி பெறுவர். தொழிலில் கிடைக்கும் பணம் போதுமான அளவுக்கு இருக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு:
சில சிக்கலான பேர்வழிகள் உங்களை ஆதரிப்பதாக கூரிக்கொண்டு அடைக்கலமாவது போல நடித்து உங்கள் பணத்திற்கும் பதவிக்கும் மறைமுகமாக ஊரு விளைவிப்பார்கள். உங்களின் பாரம்பரிய குணங்களால் சிரமமின்றி தப்பிவிடலாம். மென்மையான சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு கடுமையான செயல்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் உயர்வும், புகழும் பெறுவதில் மந்தநிலையும், பயணத்தால் அனுகூலமும் உண்டு. அரசியலோடு தொழில் நிறுவனம் நடத்துவோர் புத்திரர்களின் உதவியால் தொழில் மேன்மை பெறுவர்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன்
அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருத்தணி, விராலிமலை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:55 am

2016 ரிஷபராசி பலன்கள்!
இடபம்: 
 எந்தச் செயலையும் கலை அழகு மிலிரச் செய்து அனைவரிடமும் பாராட்டு பெறும் ரிஷப ராசி அன்பர்களே!
கிரகநிலை:    
குருபகவான் சுகஸ்தானத்திலும் ராகு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சனி பகவான் ஸப்தம ஸ்தானத்திலும் கேது லாப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ரண ருண ரோக  ஸ்தானம் -  தொழில்  ஸ்தானம் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அயன சயன போக  ஸ்தானம் -  சுக ஸ்தானம் -  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  பாக்கிய  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  லாப ஸ்தானம் -  நவம பார்வையால்  ராசி -   ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள்.  சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பண வரத்து திருப்தி தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இந்த ஆண்டில் நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது மிகுந்த நிதானம் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால் புகழ் தேடி வரும். புகழுக்கான ஆசையில் வீண் செலவுகள் உருவாகும். வாய்ப்பு உள்ளதால பணத்தை மிக கவனமாக கையாள வேண்டும். உங்களது இயற்கையான மனதைரியத்தால் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வீடு, வாகனம், பால்பாக்கியம், இதர கால்நடை இனங்களில் அனுகூலமான நிலை உருவாகும். புத்திர வகையில் செலவினங்கள் உண்டாகும். தொழில் வகையிலும் உறவினர்கள், நண்பர்கள் வகையிலும் ஏற்பட்ட பகை நீங்கி அனுகூலம் உண்டாகும். மனைவியின் அதிர்ஷ்டத்தால் வீடு, மனை வாங்கவும், அபிவிருத்தி செய்யவும் நல்ல நேரம் வந்திருக்கிறது. உடல் ஆரோக்கியம் பெறவும், ஆயுள் விருத்தி அடையவும் கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உதவிகேட்டு உங்களிடம் வருவர். தகுதிக்கு உட்பட்டு உதவி புரிந்தால் துன்பம் இல்லை. இயந்திரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலில் அபிவிருத்தி பெறுவர். ஆதாயமும் விரயமும் அடுத்தடுத்து வரும். தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
புதிய உற்சாகத்துடன் அரசுப்பணி ஊழியர்கள் ஈடுபடுவார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களிடம் கடுமையான கண்டிப்பு காட்டினால் நிர்வாக உயர்வுக்கு வசதியாக இருக்கும். இந்நேரத்தில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். தொழில் சார்ந்த வார்த்தைகள் மட்டுமேயன்ரி, ஊழியர்களின் சொந்த பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதை தவிர்க்க வேண்டும். தைரியமான சிந்தனை மனதில் உருவாகும். உங்கள் செயல்பாடுகளால் வருமானம் அதிகரிக்கும். நிர்வாகத்தின் சார்பில் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்ரு வரும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெண் ஊழியர்களுக்கு சற்று கூடுதலான செலவாகும். உணவு பழக்க வழக்கங்களில் வரைமுறை தேவை. இல்லாவிட்டால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். நடைபயிற்சி, யோகாசனம் ஆகியவை உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

தொழிலதிபர்களுக்கு:
ஆட்டொமொபைல் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் உற்பத்தி செய்பவர்களும் தங்கள் தொழிலில்  முன்னேற்றம் காண்பர். பால் தொடர்பான பொருட்கள் செய்வோர் நல்ல லாபம் அடைவார்கள். அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்வோர் உயர்வு பெறுவர்.  ரெடிமேட் தொழிலில் உள்ளவர்கள், கவரிங் நகை தயாரிப்பாளர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் புதுமைகளைச் செய்து மிகுந்த வரவேற்பு பெறுவார்கள். உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோர் தங்கள் அணுகுமுறையை சற்று மாற்றி தேவைக்கேற்ப கொள்முதல் செய்து விற்பனை செய்வது நலம் தரும். பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கல் தங்களின் தொழில் திறமையால் மலிவான விலைக்கு பொருட்களை கொடுத்து நல்ல லாபம் ஈட்டுவார்கள். ஆண்டுமுழுவதும் மனம் உற்சாகமாக இருக்கும். கடுமையாக பேசும் வார்த்தைகளால் சில சிரமங்கள் உண்டாகலாம். தைரியமான எண்ணங்கள் மனதில் உருவாகி நல்வழிப்படுத்தும். நண்பர்களால் புதிய படிப்பினை கிட்டும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் எதிரிகளால் வரும் இடையூறுகள் திசைமாரி சென்றுவிடும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபச்செலவுகள் அதிகம் என்றாலும் மன நிறைவுக்கு குறைவில்லை.

மாணவர்களுக்கு:
படிப்பில் மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும். நண்பர்களுடன் வீண் வார்த்தைகள் பேசுவதால் வார்த்தைகள் கடினமாகி மனக்கசப்பு ஏற்படும் சூழ்நிலை வரலாம். தைரியமான சிந்தனைகளும், அதனை செயல்படுத்தும் வாய்ப்புகலும் உருவாகும். இயற்கையிலேயே படிப்பில் ஆர்வமுள்ள உங்களுக்கு சில கிரகச் சூழ்நிலைகளால் கல்வித்தடை ஏற்படலாம் என்பதால், காலையில் எழுந்து கடவுள் வணக்கம் செய்து படிப்பைத் துவங்கினால் கூடுதல் மதிப்பெண் பெறுவது எளிதாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன், அவர்களால் உதவியும் நிறையவே கிடைக்கும். மருத்துவம் சார்ந்த கல்வி பயில்வோர் நுட்பமான அறிவுடன் செயல்பட்டு நற்பெயர் பெறுவார்கள். பெற்றோரின் அன்பான கவனிப்பால் உங்களது நியாயமான தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான சில தீய நட்புகள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே குரு வழிபாடு செது அதிலிருந்து விலகுவதற்கான வழிவகைகளை செய்துவிடுங்கள். படித்துகொண்டே பணம் சம்பாதிக்கும் வேலை ஒன்றை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

பெண்களுக்கு:
மிகவும் நிதானத்துடன் குடும்பத்தை நிர்வகிக்கும் புதிய சூழ்நிலை உருவாகும். இதுவரை குடும்பம் முன்னேர பல்வேறு வகையில் உதவி செய்த உங்களுக்கு, அதனால ஏற்படும் பலன்களும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல கண்கூடாக தெரியவரும். கைத்தொழில் மூலம் வருவாய் ஈட்டும் பெண்களின் வேலை வாய்ப்பில் சிறிது சுணக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தங்களது உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து நடவடிக்கைகளுக்கு ஆட்படலாம். எனவே கவனமுடன் செயல்படுங்கள். ஆன்மீக வழிபாடும் பிறருக்கு உதவிகள் புரிவதன் மூலமும் மனமகிழ்ச்சி உண்டாகும். தம்பதியர் ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகள் உங்கள் மீது பாசம் செலுத்துவார்கள். உடல்நலமும் ஆயுள் பலமும் ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உருவாகும். திருத்தல சுற்றுலா செல்வீர்கள்.
கலைஞர்களுக்கு:
தங்கநகை உற்பத்தி கலைஞர்கள் மேன்மை அடைவார்கள். திரைக்கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஓவியக்கலைஞர்கள் தங்கள் தொழில்திறமையால் நற்பெயர் பெறுவார்கள். கட்டடக் கலைஞர்கள் வேலையில் சற்று சுணக்கம் ஏற்படும். தைரிய சிந்தனை, புகழ் அபிவிருத்தி ஆகும். பகை நீங்கும். நண்பர்கள் உதவி செய்வர். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீக சிந்தனைகள் மனதை நல்வழிப்படுத்தும்.

அரசியல்வாதிகளுக்கு:
உயர்பதவியில் உள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொண்டு காரியத்தை முடித்துக்கொடுப்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். இதன் காரணமாக சக தொண்டர்களுடன் தகராறு உருவாகி வழக்குகளில் சிக்கலாம். எனவே நிதானத்துடன் செயல்பட்டு சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாரிசு அரசியல் அவப்பெயரை உருவாக்கலாம். அரசியலுடன் தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் சற்று சிரமப்படுவார்கள். அடிதடி, கட்டைப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களை தவிர்ப்பது நலம். உடல்நலமும், பொருளாதார வளமும் அனுகூலமாக இருக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருப்பதி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:56 am

2016 மிதுன ராசி பலன்கள்!
மிதுனம்: மற்றவர்கள் புகழும் வகையில் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் மிதுனராசி அன்பர்களே!
கிரகநிலை: குருபகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலும் ராகு சுகஸ்தானத்திலும் சனி பகவான் ரண ருண ரோகஸ்தானத்திலும் - கேது தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  பாக்கிய  ஸ்தானம் -  ராசி   ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது பாக்கிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  லாப  ஸ்தானம் -  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஸப்தம  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  தொழில்  ஸ்தானம் -  நவம பார்வையால்  அயன சயன போக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். காரிய வெற்றி உண்டாகும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங் களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.

இந்த வருடம் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கியே இருக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் கைகூடும்.  அனைத்து தொழிலிலும் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு இதுவரை இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். வீடு, வாகனம், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் மேலோங்கினாலும், சமரச பேச்சால் நல்ல சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பேச்சுகளில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தட்ப வெப்ப மாறுதலால் உடல்நலம் சற்று பாதிக்கப் படலாம். முன்னெச்சரிகையாக இருந்து நோய்களில் இருந்து காத்துக் கொள்ளுங்கள். தந்தை வழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடை நீங்கும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு பல்வேறு வழியில் கிடைக்கும் ஆதாயத்தை ஆடம்பரமான பொருட்களில் முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
மேல்அதிகாரிகளின் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்களால் தேவையில்லாமல் அதிருப்தியான சூழல் உருவாகும். நடைமுறைச் செலவுகளில் அதிக தேவை ஏற்படும். கடன் வாங்க நேரிடலாம். இருப்பினும் எதிர்கால தேவைக்காக சேமிப்பதில் தடை ஏதும் இருக்காது. மனதில் அசாத்தியமான தைரியம் ஏற்படும். இறைவனை வேண்டி அந்த தைரியத்தை நல்ல வழியில் பயன் படுத்துவது நல்லது. புகழ் பெறுவதற்குண்டான நல்ல வாய்ப்புகளும் உண்டாகும். பணியில் இருந்துகொண்டே படிப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடு பயணங்கள் உருவாகும் நிலை ஏற்படும்.

தொழிலதிபர்களுக்கு:
பட்டு, பருத்தி, தோல், நைலான் தொடர்பான தொழிலில் உள்ளவர்கள் அதிக ஆடர்கல் பெற்று பொருளாதார மேன்மை அடைவார்கள். மாற்றுப் பயிர் உற்பத்தி செய்பவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். ராகுவின் சூரிய வீடு சஞ்சாரத்தால் கணிணி, தொலைதொடர்பு, அரசாங்கம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும். பொதுவில் அனைத்து தொழில் அதிபர்களுக்கும் மனதில் தைரியமும், நல்ல லாபமும் கிடைக்க வழி உண்டு. வியாபாரத்திற்கென்று புதிய அலுவலகம் வாங்குவீர்கள். உங்கள் வியாபாரத்தின் கிளைகளை பரப்புவீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை காணப்படும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கல். அழகு சாதன பொருட்கள் தொழிலில் இருப்பவர்கள் வளர்ச்சி பெறுவார்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். இவ்வாண்டில் நடைபெறும் குருப்பெயர்ச்சிக்குப் பின் வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். அரசு சார்ந்த ஆவணங்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு:
லட்சிய சிந்தனையுடன் படித்து அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள். இதனால் அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கல். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். பிரச்சனை பெரிதாகாமல் சுமூகமாக பேசி மோதல்களைத் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனம். வாகனங்களில் நிதானமாக பயணம் செய்வது நன்மையைத் தரும். உல்லாச பயணம் செல்லும் போது அதிக கவனம் தேவை. ஆசிரியரிகளின் அறிவுரைகளையும், பெற்றோரின் வழிகாட்டுதல்களையும் கேட்பது எதிர்கால வாழ்க்கைக்கு உதவும். தன்னிச்சையாக முடிவெடுப்பதை தவிர்த்து பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

பெண்களுக்கு:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எந்த செயலிலும் கால தாமதம் ஏற்படலாம். பொறுமையாக கையாள்வது உங்கள் திறமை. குடும்பம் சார்ந்த பெண்களுக்கு வேலைகள் கடினமாக தென்படும். திட்டமிட்டு செய்வது கடினத்தைக் குறைக்கும். ஏற்கனவே சேர்த்து வைத்த பணம் சுப காரியங்களுக்காக கரையலாம். சுபச்செலவாதலால் மனம் வருந்தத் தேவையில்லை. குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கண்டிப்பு தேவை.  உங்கல் கண்டிப்பு குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். புதிய சிநேகிதிகள் அறிமுகம் ஆகலாம். அவர்களில் நல்லவர்களை இனம் கண்டு கொள்வது நல்லது. ஆன்மீக வழிபாடு உங்களைக் காக்கும்.

கலைஞர்களுக்கு:
 கலைஞர்கள் கிடைத்த வாய்ப்புகளை முறைப்படி அணுகுவது நன்மை தரும். கவனமாக  அணுகினால் உங்கள் வெற்றிக்கு வழி உண்டாகும். உங்கள் நலனில் அக்கறை உள்ள நபர்கள் சொல்லும் அறிவுரைகளை தவறாமல் கேளுங்கள். அதை நல்ல வழியில் பயன் படுத்திக் கொள்ளுங்கள். ஓவியம், சிற்பம், வர்ணப்பூச்சு, கட்டிடக் கலைஞர்கள், மர வேலை செய்பவர்கள் ஆகிய தொழிலில் உள்ள கலைஞர்களுக்கு நற்பலன் கிட்டும். தங்க நகை சார்ந்த கலைஞர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய வருடம். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் போது கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு:
அரசியல்துறையில் நற்பெயர் பெற தகுந்த சூழ்நிலைகள் உருவாகும். மேலிடம் கொடுக்கும் வேலையை கவனத்துடன் செய்யுங்கள். இதனால் மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் பதவியைப் பெற அதிகமான பணம் செலவழிக்க வேண்டி வரும். தேவையற்ற வழியில் பணம் செலவழிப்பதைத் தவிர்த்து கவனமுடன் செயல் படுவது அவசியம். பெண் அரசியல் துறையினருக்கு அவமான சூழ்நிலை ஏற்படலாம். மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால அவமானத்தை தவிர்க்கலாம். அரசு சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. ஏனெனில் அரசின் பார்வை உங்கள் மீதே இருக்கும் சூழல் உருவாகலாம். பகைவர்களும் நண்பர்களாகும் வாய்ப்பு ஏற்படும். தங்கள் தேவைக்காக நண்பர்களாகும் குணம் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். 
பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் திவ்யதேசங்கள்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:57 am

2016 கடகராசி பலன்கள் !
கடகம்:
 நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க அடுத்தவருக்கு நலம் புரிய வாழும் கடக ராசி அன்பர்களே !
கிரகநிலை:    குருபகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் ராகு தைரிய வீரிய ஸ்தானத்திலும் சனி பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கேது பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  சுக ஸ்தானம் -  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  அயன சயன போக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது அஷ்டம ஆயுள்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தொழில்  ஸ்தானம் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ரண ருண ரோக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  ஸப்தம  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  பாக்கிய  ஸ்தானம் -  நவம பார்வையால்  லாப  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும்.  வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய  சொல்வது நல்லது.

இந்த 2016ம் ஆண்டு உங்களுக்கு நல்ல பெயர் ஈட்டித்தர போகிறது. தஞ்சம் என்று வந்தவர்களை ஆதரித்து வாழ வைப்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். வெகுகாலம் எதிர்பார்த்திருந்த தனவரவு தானாகவே வந்து சேரும். இளைய சகோதரர்களாலும் - நண்பர்களாலும் அதிகமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உங்களுக்கு அனுபவம் தரும் வகையில் அமைந்திருக்கும். பெரியவர்களின் உடல்நலம் ஓரளவு பாதிக்கப்பட்டாலும் பின் சரியாகி விடும். புத்திரர்கள் வகையிலும் - தாய்வழி உறவினர்கள் வகையிலும் நற்செய்திகள் வந்து சேரும். தீராத வழக்கு - கடன் வகை ஏதும் இருந்தால் இவ்வருடம் பைசல் ஆகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் சரியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ரசயணம் சார்ந்த இனங்களை கையாளும் போது கவனம் தேவை. திருமண வாய்ப்புகள் கைகூடும்.

உத்தியோகஸ்தர்கள்:

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு திறமைகேற்றவாறு பணி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களுடன் நல்லுறவு கூடும். செயல்திறன் அதிகரிக்கும். சிறுதவறுகள் செய்து தண்டனைக்குள்ளானவர்கள் இவ்வருடம் மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் வரும். நீங்கள் போட்டு வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். மேலிடமும் அதற்கு ஒத்துழைப்பு தருவார்கள். தைரியமும் புகழும் கூடும். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் மனநிலை ஏற்படும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவார்கள். 

தொழிலதிபர்களுக்கு:
செய்தொழில் எதுவானாலும் தங்களுடைய தனித்தன்மையினால் வளமான ஆண்டாக இவ்வாண்டு இருக்கப் போகிறது. குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், உணவு சார்ந்த துறையினர், ஓட்டல் போன்ற துறையினர் தரத்தை அதிகப்படுத்தி வளம் பெறுவீர்கள். பொருளாதார வகையில் வரவேண்டிய பணம் அனைத்தும் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். ஊழியர்களுக்கு அதிகமான தொகையினை செலவு செய்ய வேண்டி வரலாம். அரசாங்கத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம், கவனம் தேவை. எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். 

மாணவர்களுக்கு: 
சிந்தனையிலும் - செயல்திறனிலும் புதிய உத்வேகம் பிறக்கும். உங்கள் பேச்சின் வசீகரத்தால் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். அறிவியல் சார்ந்த கல்வி பயிலும் மாணவமணிகளுக்கு நல்ல முறையில் தேர்ர்சி பெறுவீர்கள். மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களைப் பெற வாய்ப்பு ஏற்படும். மனதில் ஏதேனும் சஞ்சலம் உருவாகி மறையும். நண்பர்கள் - உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு : 
குடும்ப செலவுக்காக கணவரின் கையை எதிர்பார்த்து காத்திருந்த நிலைமை மாறி உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உற்றார் உறவினர்களின் அணுசரனையான பேச்சால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு கவுரமான சூழல் ஏற்படும். பணம் சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். தம்பதிகள் ஒற்றுமை சீராக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வதற்குரிய அருள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடி வரும். 

கலைஞர்களுக்கு:
சிற்பம் செய்பவர்கள், கைவினைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். நடிப்புத்துறையில் உள்ளவர்களுக்கு அதிக உழைப்புதேவைப்படும். நகைத்தொழில் செய்வோருக்கு அதிக லாபம் கிட்டும். பெண் கலைஞர்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நிறைவேறும். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார மேன்மையும் ஏற்படும். சக கலைஞர்களின் ஆதரவால் அறிய சாகசங்களை புரிய முடியும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான போட்டிகளை மென்மையாக அணுக வேண்டும். பல்வேறு விருதுகள் - பாராட்டுகள் கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு:
கட்சிப்பதவி - அரசுப்பதவி என இரண்டையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வாய்ய்பு ஏற்படும். எந்த சோதனைகளையும் திடமான மனதுடன் எதிர்கொள்வது நல்லது. நீங்கள் ஏணியாக இருந்து ஏற்றி விட்டவர்களே உங்களுக்கு எதிரான நிலை எடுக்கலாம். அரசுத்துறை சலுகைகளால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் வகையில் உங்களது வளர்ச்சி இருக்கும். அரசியல் விரோதங்கள் மறைந்து உங்களுக்கு இதமான சூழல் உருவாகும். விட்டுக் கொடுத்து செயல்படுவது உங்களுக்கு உகந்ததாக இருக்கும். பொருளாதார வகையில் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். 
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: சமயபுரம், திருவேற்காடு, குலசேகரன்பட்டினம், திருக்குற்றாலம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:58 am

2016 சிம்மராசி பலன்கள் !
சிம்மம்:
நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை கடினமாக உழைக்கும் மனௌறுதி கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
கிரகநிலை:    

குருபகவான் ராசியிலும் ராகு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சனி பகவான் சுகஸ்தானத்திலும் கேது அஷ்டமஸ்தானத்திலும் - இருக்கிறார்கள். 

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது ராசிக்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஸப்தம  ஸ்தானம் -  லாப ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது ஸப்தம  வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பாக்கிய  ஸ்தானம் -  ராசி -   பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  ரண ருண ரோக  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  நவம பார்வையால்  தொழில்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில்  பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள்.  கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப் பவர்கள்  எதையும் குழப்பத்துட னேயே செய்ய நேரிடும். சக ஊழியர் களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

வரும் 2016ம் ஆண்டு எது நடந்தாலும் நன்மைக்கே என்ற உறுதிப்பாட்டுடன் உங்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கும். நிறைவேற்ற வேண்டிய பல பணிகள் உங்களை சுற்றி சுற்றி இருக்கும். உங்கள் ராசிக்கு வரப்போகும் ராகுவாலும் - தனஸ்தானத்தில் வலம் வரப்போகும் குரு - இந்த அமைப்பால் ஒவ்வொரு செயலும் வெற்றி தருவதாகவே இருக்கும். ஆனாலும் சனியின் தசம பார்வையால் போட்டு வைத்திருந்த திட்டங்களில் சுணக்கம் ஏறப்ட வாய்ப்புண்டு. பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தைத் தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் - நண்பர்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள். ஆன்மீக காரியங்களை மனநிறைவுடன் நடத்துவீர்கள். துன்பங்கள் விலகிப் போகும். சில சமயங்களில் கடுமையான சொற்கள் வெளிப்படலாம். இதனால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லவும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்கவும் - வீடு - மனைகள் வாங்கவும் மிகவும் நல்ல காலகட்டமிது. ஏற்கனவே இருக்கும் வீட்டினையும் சீர் செய்ய வாய்ப்புகள் வந்து சேரும். குலதெய்வம் உங்களை அரண் போல் காக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வாய்ப்பும் - சந்தாண பாக்கியமும் கிட்டும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து  ஏற்றமான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை தொற்றிக் கொள்ளும். தம்பதிகளுக்குள் நல்ல இணக்கமான சூழல் இருக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆயுள் அபிவிருத்தி ஏற்படும். வெளிநாடு வாய்ப்புகள் வந்து குவியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
அரசு மற்றும் தனியார் துறையில் உயர்பதவியில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணீயில் திறம்பட செயலாற்றி கொடுக்கப்பட இலக்கினை அடைவார்கள். அடிக்கடி வெளியூர் - வெளிநாடு பிரயாணம் செய்யும் நிலை உருவாகும். பள்ளி - கல்லூரி போன்ற கல்வி ஸ்தாபனங்களை நடத்தி வருபவர்களுக்கு உயர்ந்த நிலை ஏற்படும். சக அதிகாரிகளுடன் சுமூகமான நிலை காணப்படும். சொல்லும் செயலும் மிகுந்த கவனம் நிறைந்ததாக இருக்கும். மேலிடத்துடன் ஏற்படும் கருத்து மோதலால் அவப்பெயர் ஏற்படலாம். உத்தியோக உயர்வுக்காக கல்வி பயில்பவர்களுக்கு நல்ல முறையில் தேர்ச்சி பெற்று பணியில் உயர்வும் கிட்டும். வேலை பற்றீ மனதிலிருந்த கவலைகள் நீங்கும். உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

தொழிலதிபர்களுக்கு:
உணவு தானியங்கள் - தாவர எண்ணைகள் உற்பத்தி செய்ப்வர்களுக்கு உற்பத்தி பெருகும். ஏற்றுமதி வாய்ப்புகள் வந்து குவியும். மருத்துவமனை நடத்துபவர்களுக்கு நவீன உபகரணங்கள் சேரும். இதனால் நல்ல பெயர் கிடைக்கும். ஆடைகள் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு உற்பத்தி பெருகுவதோடு மட்டுமல்லாமல் அதிகமான ஆர்டர்களும் கிடைக்கும். தொழிலுக்கென்று புதிய வாகனம் - அலுவலகம் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடன் - வழக்குகள் பைசல் ஆகும். லாபத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. உங்கள் நிறுவன பங்குகள் உச்சத்தைத் தொட வாய்ப்புகள் கிடைக்கும். பங்குதாரர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்வோருக்கு எந்த தடங்கலும் இராது.

மாணவர்களுக்கு:
கம்ப்யூட்டர் - தொழில் நுட்பக் கல்வி - தொலைத்தொடர்பு - வானியல் விஞ்ஞானம் - நுணுக்கமான கல்வி பயிலும் மாணாக்கர்கள் நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். எந்த தடங்கலும் இன்றி கல்வியில் வளர்ச்சி இருக்கும். அனைவரையும் மதித்து நடக்கும் பண்பு அதிகரிக்கும். இதனால் அனைத்து இடத்தில் நற்பெயர் கிட்டும். உற்றார் உறவினர்கள் - சக மாணவர்கள் - ஆசிரியர்கள் ஆகியோரின் ஆதரவால் மனமகிழ்ச்சி உண்டாகும். வாகனம் சார்ந்த படிப்பு - மின்சாரம் - மிகப் பெரிய அளவில் கட்டுமானம் சார்ந்த கல்வி பயில்பவர்களுக்கு கவனச் சிதறல்கள் ஏற்படலாம். ரசாயணம் - மருத்துவம் போன்ற கல்வி கற்பவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான சூழல் ஏற்படும். புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். முக்கிய பரிட்சைகள் எழுதுபவர்கள் தங்களது சுகதுக்கங்களை மறந்து கடுமையாக உழைத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். 

பெண்களுக்கு:
குடும்பத்தை நிர்வாக செய்து வரும் பெண்களுக்கு நெருங்கிய சொந்தங்கள் மூலம் இன்னல்கள் ஏற்படலாம். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்புகள் வந்து சேரும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நிர்வாகம் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுக்கு எதிரான செயல்களை செய்வோர் உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரால் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடுவார்கள். சமூகம் சார்ந்த பொறுப்புகள் கிடைக்கும். புத்திரபாக்கியம் எதிர்பார்ந்திருந்த பெண்களுக்கு நல்ல முறையில் கிடைக்கும். உங்களால் குடும்பத்தில் ஒற்றுமையும் குதூகலமும் நிறைந்திருக்கும். ஆரோக்கிய பலம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு:
திரைப்படத்துறை - தொலைகாட்சிதுறை கலைஞ்சர்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு பெறுவார்கள். கிராமப்புற கலைஞ்சர்கள் தங்களை உலகத்திற்கு வெளிகாட்ட சரியான சமயமிது. வருமானம் போதுமானதாக இருக்கும். புகழுக்கும் பாராட்டுக்கும் குறைவில்லை. நகைத்தொழில் செய்பவர்களின் வாழ்வு மேம்படும். தொழில் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் அதிலுள்ள ஷ்டரத்துகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து வைத்துக் கொள்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு: 
எண்ணீய செய்லகள் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் சிரமேற் கொண்டு செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அதே வேளையில் சில காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றியின் படிக்கட்டுகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். புதிய பதவிகளை பெறுவதின் மூலம் அனைவருக்கும் நன்மைகள் வாய்ப்புகள் கிட்டும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ர்பு வரும். இறைபக்தியால் அனைத்து விதமான பிரச்சனைகளை சாதித்துக் கொள்வீர்கள். மற்ற மொழி பேசும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. அறிமுக இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது அவசியமாகிறது. எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி மனதில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். 
பரிகாரம்: ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: சூரியனார் கோவில், பாபநாசம், திருவண்ணாமலை.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 9:59 am

2016 கன்னிராசி பலன்கள்!
கன்னி: தோற்றப்பொலிவின் மூலம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பர்களே
கிரகநிலை:    
குருபகவான் அயன சயன போக ஸ்தானத்திலும் ராகு ராசியிலும் சனி பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலும் கேது ஸப்தம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ரண ருண ரோக  ஸ்தானம் -  தொழில்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  அயன சயன போக  ஸ்தானம் -  சுக ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் ராசிக்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  ஸப்தம  ஸ்தானம் -  நவம பார்வையால்  பாக்கிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் வீண் பிரச்சனையால் மனகுழப்பம் ஏற்படலாம். பயணங்களில்  தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது.  பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். போட்டிகள் உண்டாகலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை உண்டாகும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி குறையும். பேசாமல் சென்றால் கூட வீண் பிரச்சனை களை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துசெல்வது நல்லது. பிள்ளைகளிடம் கவனமாக இருப்பது நன்மை தரும்.

2016ம் ஆண்டில் நீங்கள் புதிய செயல்களை தொடங்கி வெற்றி காண்பீர்கள். கடந்த ஆண்டில் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இவ்வாண்டு அணுகூலமாக நடைபெறும். தேவையற்ற வேலைகளை செய்து குடும்பத்தினரிடம் அவப்பெயர் நீங்கும். அதோடு மட்டுமல்லாமல் சாதனைகள் செய்து மற்றவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவீர்கள். உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருவதற்கான வழிகள் வந்து சேரும். புதிய வாகனங்கள் - மனை யோகம் ஏற்படும். மற்றவரிகளிடம் பேசும் போது வார்த்தைப் பிரயோகம் முக்கியம். உடல் உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமாணம் அதிகரிக்கும். வேலைய் இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தம்பதிகளுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புத்திரங்கள் வகையில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். வம்பு வழக்குகள் சரியாகும். இடம் விட்டி இடம் பெயரும் சூழல் உருவாகும். குடும்பத்திஐ விட்டு பிரிய வேண்டிய காலகட்டம் வரலாம். நற்குணம் இல்லதாவர்களின் பழக்க தோஷத்தால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. சில போலிகள் நல்லவர்கள் போல் நடித்து உங்களை ஏமாற்றலாம். வாக்குவாதங்களால் நேர விரையம் - பொருளாதார இழப்பு - நிம்மதி குறைவு ஆகியவை ஏற்படலாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள வழக்குகள் இவ்வாண்டு இறுதிக்குள் உங்களுக்கு சாதகமாகும். கடன் பாக்கிகள் பைசல் பண்ணுவதில் சிறிது தடை ஏற்படலாம். வீட்டில் உள்ள வளர்ப்புப் பிராணிகளிடம் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு:
அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்கள் மற்றும் மேலிடத்தால் ஏதேனும் மனக்கிலேசங்கள் ஏற்படலாம். மேலதிகாரிகள் உங்களை நடத்தும் விதத்தால் உங்களுக்கு அவ்வப்போது எரிச்சல் ஏற்படலாம். இதுவரை உங்களுக்கு சாதகமாக் நடந்து வந்தவர்கள் கூட இனி உங்களிடம் பகைமை பாராட்டலாம். பேசும் வார்த்தைகளில் அவச்சொல் வரமால் பார்த்துக் கொள்வது நல்லது. தெய்வப் பணிகளில் ஆர்வமும் சமூகம் சார்ந்த பணிகளில் தொய்வும் ஏற்படலாம். சம்பள உயர்வு கணிசமாக இருக்கும். பிறரால் அச்சுறுத்தல் இருந்தாலும் அதைககண்டு ஒதுங்கி விடுவது நன்மை தரும். உத்தியோக உயர்வுடன் கூடிய பணி இட மாற்றத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. 

தொழிலதிபர்களுக்கு:
ஆட்டோமொபைல் - சரக்கு போக்குவரத்து - கப்பல் துறை - விமான சார்ந்த துறையினருக்கு எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உற்பத்தியாளர்கள் கணிசமாக உற்பத்தியைப் பெருக்குவார்கள். தங்கலிடம் பணியாற்றூம் ஊழியர்களுக்கு அனைத்து விதமான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்கள். பதிப்பகங்கள் - அச்சுக்கூடங்கள் - புத்தக விற்பனையாளர்கள் - ஆன்மீக எழுத்தாளர்களுக்கு எதிர்பார்க்கும் அனைத்து லாபங்களும் நல்ல மூறையில் வந்து சேரும். வாகனங்கள் புதிது படுத்துதல் - சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கடல் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்வோருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து குவியும். பங்குதாரகளுக்குள் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும்.

மாணவர்களுக்கு:
கணிப்பொறி - கணக்குப் பதிவியல் - பொருளாதாரம் - கணிதம் சார்ந்த மாணவர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி சாதனைகள் புரிவார்கள். தொழில்நுட்ப பயிற்சி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரலாம். மேலாண்மை சம்பந்தமான படிப்பில் சிறு சிறு தடைகள் வரலாம். கல்லூரியில் நடக்கும் நேர்முகத்தேர்விலேயே வேலை கிடைக்கும் சூழல் இருக்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவ மணிகளுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். மனதில் துணிவு உர்ய்வாகும். வீரதீர செயல்களில் அதிக கவனம் செல்லக்கூடும். குடும்பத்தினர் - நண்பர்கள் - உறவினர்கள் -ஆசிரியர்கள் ஆகியோன் ஆதரவு கிடைக்கும். புதிதான சாதனைகளைப் படைப்பீர்கள்.

பெண்களுக்கு:
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கேற்ப பொறுமையாக அனைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். சுயதொழில் செய்து வரும் பெண்கள் கூட்டுத்தொழிலில் அதிக லாபம் பெறுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்திலிருந்து நற்பெயர் கிட்டும். சேவை சார்ந்த துறையில் இருக்கும் பெண்களுக்கு பாராட்டுகள் குவியும். உஞ்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிஉறைவேறும். சந்தோஷ சூழ்நிலை நிலவும்.

கலைஞர்களுக்கு:
திரைக்கலைஞர்கள் மிக சிரமப்பட்டு தங்களது தொழிலை நிலைநிறுத்திக் கொள்ள இயலும். சமையல் கலைஞர்கள் - ஆடை வடிவமைப்பினர் - அலங்கார கலைஞ்சர்கள் - தொழில்நுட்பக் கலைஞ்சர்கள் தங்களது புதிய எண்ணங்களை நுழைத்து வெற்றி காண்பார்கள். கிராமபுறம் சார்ந்த கூத்துக் கலைஞர்களுக்கு விருத்துகள் கிடைக்கும். நகைத்தொழில் செய்வோருக்கு மிகக் குறைந்த லாபமெ கிடைக்கும். நிலையான பொருளாதார வசதியும் ஆரொக்கியமான் உடல்நிலையும் உண்டாகும். இசைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நன்அர்கள் உதவியாக இருப்பார்கள்.

அரசியல்துறையினர்:
கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நன்மை தரும். வீண் பகை உருவாகலாம். உங்கள் மீதான பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு மீண்டும் வீண் பிரச்சனைகள் தலை தூக்கலாம். சிலருகு தலைமறைவு வாழ்க்கை ஏற்படலாம். ஆனாலும் பணவரவிற்கு பஞ்சமிருக்காது. மேலிடத்திற்கும் உஞ்களுக்கும் இடையில் சில கருத்து மோதல்கள் வரலாம். பதவி கிடைப்பதில் கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகும். உங்களுக்கு எதிரானவர்கள் உங்களை ப்பற்றி அவதூறு பிரச்சாரம் செய்யலாம். கவனம் தேவை. அனுகூலமான நிலை வர குருப் பெயர்ச்சி வரை காத்திருப்பது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.
சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்தையனார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 10:00 am

2016 துலாராசி பலன்கள் !

துலாம்:
உங்களது நேர்மையான செய்லகளால் மற்றவர்களின் பாராட்டுதல்களையும் -  சுக்கிரனின் பூரண அருளாசியும் ஒருங்கே பெற்ற துலா ராசி அன்பர்களே,

கிரகநிலை:    

குருபகவான் லாப ஸ்தானத்திலும் ராகு அயன சயன போக ஸ்தானத்திலும் சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது ரண ருண ரோகஸ்தானத்திலும் - இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது லாப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசி  -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  பாக்கிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    


08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ஸப்தம   லாப  ஸ்தானம் -  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  சுக ஸ்தானம் -  சப்தம பார்வையால்  ரண ருண ரோக  ஸ்தானம் -  நவம பார்வையால்  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.  மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும்.  பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்  சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.  

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2016ம் ஆண்டில் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள். ராகு கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு செயலும் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்வீர்கள். சகல் செல்வங்களும் பெற்று வாழும் பேறு கிடைக்கும். நண்பர்களின் உதவியும் - குடும்பத்தினரின் பாசமும் - அரசுத்துறை சார்ந்தவர்களின் ஆதரவும் உங்களை சந்தோஷத்தில் நிலைகுலையச் செய்யும். பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு - மனை - ஆடை -ஆபரண சேர்க்கை உண்டு. சொல்லும் செயலும் ஒருங்கே இருக்கும். தைரியம் மிளிரும். அதிக புகழ் உண்டாகும். புதிய லக்வி கற்பதற்கான சூழல் ஏற்படும். அதிக புக உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். எதிரிகள் பலமிழந்து போவார்கள். பெற்றொர்ர்கள் உங்களுக்கு அணுசரனையாக இருப்பர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பிணி நீங்கும். தியான - யோக செய்வது நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
அரசு - தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நீதி - நெர்மையுடன் செயல்பட்டு மக்கள் ஆதரவைப் எப்றுவீர்கள். அத்தியாவசிய கோரிக்கைகள் அனைத்தும் எமேலிடத்தால் அங்கீகரிக்கபப்டும். நடைமுறை ம்வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கன சூழல் உருவாகும். புகழ் அதிகரிக்கும்.வாகனஞ்களை மாற்றூவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பூமி - மனை - வீடு வசதிகளுக்கான வங்கிக் கடனுதவி தாரளாமகக் கிடைக்கும். அலுவலக எதிரிகள் காணாமல் போவார்கள். கிடைக்கும் ஆதாயத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். அலுவகத்தில் சிறப்பாக பணிபுரிவதால் அரசாஞ்கத்தில் சிறப்பு சலுகைகள் கிட்டும். பழையகால் இழப்புகள் இவ்வாண்டில் சரிசமமாகும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

தொழிலதிபர்களுக்கு:
பால் - மருத்துவம் - பண்ணைகள் வைத்திருப்போருக்கு சில கட்டுப்பாடுகளால் தொழிலில் விரக்தியான சூழ்நிலை உருவாகலாம். ஆனாலும் மனதில் தைரியத்துடன் பீடு நடை போடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சனி - குரு சஞ்சாரத்தால் ஆட்டோமொபைல் - இயந்திரம் சார்ந்த துறையினருக்கு லாபங்கள் அதிகமாகும். வீடு - அலுவலகம் போன்றவற்றில் பணம் - ஆவணங்கள் - நகைகள் ஆகியவற்றை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது. பஞ்குதாரர்களுடன் வீண் மனக்கிலேசம் ஏற்படூ மனநிம்மதி குறையக்கூடும். கடுமையான உழைப்பை செலவழிக்க வேண்டி வரலாம். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. குருப்பெயர்ச்சிக்கு பின் அனுகூலமான நிலை வந்து சேரும். பாங்க் கடனகள் பைசல் ஆகும். கடந்த ஆண்டில் இருந்து வந்த நிலுவைத் தொகை அனைத்தும் கொஞ்ச கொஞ்சமாக அடையும். ஆடை வடிவமைப்பளருக்கு ஆச்சர்யங்கள் தரும் வைகயில் லாபங்கள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு:
உயர்கல்வி பயில்வதற்கான சூழல் உருவாகும். கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டி வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். படிப்பில் நல்ல முன்ன்ற்றம் ஏற்படும். நண்பர்கள் - ஆசிரியர்கள் சகஜமாகப் பழகுவார்கள். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். அதிக நேரம் விழித்திருந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரனையாக இருந்து உங்களை ஊக்குவிப்பார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று நற்பெயர் எடுப்பீர்கள்.

பெண்களுக்கு:
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் வேலைகளை திருப்திகரமாக முடித்து நிர்வாகத்தினரிடம் நற்பெயர் வாங்குவார்கள். பணி உயர்வும் - சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி  கிடைக்கும். குடும்ப நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். இதனால் முதுகுவலி - உடல்வலி ஏற்படலாம். மாத விலக்கின் போது அதிகமான வயிற்று வலியும் ஏற்படலாம் - கவனம் தேவை. வருமானத்திற்கு எவ்வித குறைவும் இருக்காது. கால்நடை வளர்ப்போருக்கு அதிகமான லாபங்கள் வந்து சேரும். சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் கிடைப்பதோடு நல்ல அங்கீகாரமும் வந்து சேரும். திருமண வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு மங்கள நாண் ஏறும் வருடமிது. 

கலைஞர்கள்:
திரைக்கலைஞர்கள் கூடுதல் திறமையினை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவார்கள். கிராமியக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து குவியும். நகைத்தொழில் செய்பவர்களுக்கு மிக அதிக லாபம் வந்து சேரும். கட்டிட கலைஞர்களுக்கு பொன்னான காலமிது. புதிய வாகனங்கள் சேர்க்கை உண்டு. தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் சேர்க்கையால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். 

அரசியல்துறையினர்:
பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. மேடைப் பேச்சாளர்களுக்கு சக மனிதர்களாலேயே பிரச்சனைகள் வரலாம். பெண் அரசியல்துறையினருக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். வீணாண பஞ்சாயத்தில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கவும். வருமானம் நல்ல முறையில் வந்து சேரும். எதிரிகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பது நன்மை தரும்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 10:01 am

மற்றவை, அந்த தளத்தில் போட்டதும் போடுகிறேன் புன்னகை................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by ayyasamy ram on Wed Dec 16, 2015 11:51 am

2016 -ம் ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக
இருக்க கூடுமாம்....
-
2016 ம் ஆண்டு பலன்களில் எந்தெந்த ராசிக்காரர்கள்
அதிக வெயிலால் பாதிப்படைவார்கள் என்றும்
சோதிடர்கள் கணித்துக் கூறினால் உபயோகமாக இருக்கும்..!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 11:59 am

@ayyasamy ram wrote:2016 -ம் ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக
இருக்க கூடுமாம்....
-
2016 ம் ஆண்டு பலன்களில் எந்தெந்த ராசிக்காரர்கள்
அதிக வெயிலால் பாதிப்படைவார்கள் என்றும்
சோதிடர்கள் கணித்துக் கூறினால் உபயோகமாக இருக்கும்..!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1180845

அண்ணா, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியலை............ஹா...ஹா....ஹா........புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 16, 2015 7:31 pmவெயில் வாட்டும் போது அனைத்து ராசிக்காரர்களும்
வாடப்போவது உறுதி .இதனால் வரக்கூடிய நோய்
தாக்கம் ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு
இருக்கலாம்.
எனக்கு-
அஸ்வினி
மேஷம்
கஷ்டம் தான் போல
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 7:45 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:

வெயில் வாட்டும் போது அனைத்து ராசிக்காரர்களும்
வாடப்போவது உறுதி .இதனால் வரக்கூடிய நோய்
தாக்கம் ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு
இருக்கலாம்.
எனக்கு-
அஸ்வினி
மேஷம்
கஷ்டம் தான் போல
மேற்கோள் செய்த பதிவு: 1180909


இதெல்லாம் ஒரு டைம் பாஸ் போல படிக்கணும் ஐயா, நல்லா இருந்தால் நமக்கு என்று சந்தோஷப்படனும்  ............இல்லாவிட்டால் சீ சீ இது நமக்கு இல்லை என்று விட்டுடனும் ஜாலி ஜாலி ஜாலி....ஏன்னா இது உலக மக்கள் அனைவருக்கும் மானது, நம் தனி ஜாதகத்துக்கானது  இல்லை புன்னகை  ...........


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by T.N.Balasubramanian on Wed Dec 16, 2015 8:12 pm

பழ முத்துராமலிங்கம் அவர்களே,
அவரவர் ஜாதகப்படித்தான் எல்லாமே நடக்கும் .
பிறந்த லக்னம் ,கிரக அமைப்புகள் இவைகளைப் பொறுத்தே
யாவும் நடக்கும் .
வருடாந்திர பலன்கள் பொதுவாக சொல்லப்படுபவை .

நல்லதே நினைக்கவும் ,நல்லதே செய்யவும் ,
நல்லதே நடக்கும்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 16, 2015 8:15 pm

@T.N.Balasubramanian wrote:பழ முத்துராமலிங்கம் அவர்களே,
அவரவர் ஜாதகப்படித்தான் எல்லாமே நடக்கும் .
பிறந்த லக்னம் ,கிரக அமைப்புகள் இவைகளைப் பொறுத்தே
யாவும் நடக்கும் .
வருடாந்திர பலன்கள் பொதுவாக சொல்லப்படுபவை .

நல்லதே நினைக்கவும் ,நல்லதே செய்யவும் ,
நல்லதே நடக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180918


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 23, 2015 6:41 pm

2016  விருச்சிக  ராசிப்பலன்கள் !  விருச்சிகம்:   நிதானத்தைக் கடைபிடித்து லட்சிய மனதுடன் செய்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறும் விருச்சிகராகி அன்பர்களே!


கிரகநிலை:    
குருபகவான் தொழில் ஸ்தானத்திலும் ராகு லாப ஸ்தானத்திலும் சனி பகவான் ராசியிலும் கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அயன சயன போக  ஸ்தானம் -  சுக ஸ்தானம் -  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ரண ருண ரோக  ஸ்தானம் -  தொழில்  ஸ்தானம் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் லாப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  நவம பார்வையால்  ஸப்தம  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் எதிர்பார்த்த வசதிகள் கிடைக்கும்.  எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.     

இதுவரை எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. இந்த 2016ம் ஆண்டில் நிலை மாறப் போகிறது. நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக்  காண்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பார்வை உங்கள் மீது படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடலில் ஏற்பட்ட  உபாதைகள் நீங்கி மிடுக்குடன் நடப்பீர்கள். உங்களை உதாசீனம் செய்த உற்றார், உறவினர்கள்  உங்களுக்கு உதவ முன் வருவார்கள். மற்றவர்களுக்கு  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பல புராதன ஆலயங்களுக்கு சென்று  வழிபாடு  செய்வீர்கள்.  புதிய உறவு முறைகள் ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி நிறையும். கர்வத்தினால் எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வம்பு  வழக்குகளில் விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்ளவும்.  உங்கள் செய்தொழிலை விரிவு படுத்த எந்தக் குறுக்கு வழியையும் நாட வேண்டாம்.

சிறிய கௌரவப் பிரச்னைக்காக நண்பர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப்  பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள்.  வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து  நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி பெற்றோர் பெருமைப் படத் தக்க வகையில்  குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம்  விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல  விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது. 

உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.  எனவே  பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு  தருவார்கள். அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். 

தொழிலதிபர்களுக்கு: 
வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத்  தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை  வாங்கும்போது அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விலையைக் கூட்டியோ குறைத்தோ  பொருட்களை விற்பனை செய்யவும். 

பெண்மணிகளுக்கு:
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை  அதிகரிக்கும். ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமான இருக்க மாட்டார்கள. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். தெய்வ வழிபாட்டில்  மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கவும். நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள். அதனால் பதவி உயர்வு வந்து சேரும். தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். கையில் நிறைவான பணம் கிடைக்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயர் வாங்கும் வகையிலான செயல்களை செய்வீர்கள். உங்கள் பெயரில் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கணவனின் ஆயுள் பலம் அதிரிக்கும். மன அமைதியையும்  செய்வ அனுகூலத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கு நீங்கள் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து உதவுவீர்கள்.

மாணவர்களுக்கு: 
மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.  கடுமையாக முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். விளையாட்டில்  வெற்றி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு:
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே  கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள்.  மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும்.  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். உங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச்  செய்வீர்கள்.  எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக்  காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர்


Last edited by krishnaamma on Wed Dec 23, 2015 6:55 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 23, 2015 6:54 pm

2016 தனுசு ராசிப் பலன்கள் !

 தனுசு:  அன்பையும் பண்பையும் உணர்வோடும் உயிரோடும் இணைத்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!
கிரகநிலை:    
குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலும் ராகு தொழில் ஸ்தானத்திலும் சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்திலும் கேது சுகஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது பாக்கிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  லாப  ஸ்தானம் -  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஸப்தம  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  பாக்கிய  ஸ்தானம் -  ராசி -   ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  சுக ஸ்தானம் -  நவம பார்வையால்  ரண ருண ரோக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம்.  சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல்  சற்று மந்தமாக  காணப்படும்.  பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள்  ஏற்படலாம். உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

இந்த 2016ம் ஆண்டில் செய்தொழிலில் உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும்.  இன்முகத்துடன் வலம் வருவீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் சிறுசிறு தவறுகளைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். பெற்றோர் பெருமைபடத்தக்க வகையில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வைக் காண்பீர்கள். நண்பர்களிடம் தன்னம்பிக்கையை  ஏற்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை  செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும்.  உங்களின் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறுவீர்கள். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களை  எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டாம். எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று  குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டு விசாலமான இல்லங்களுக்கு  மாறும் யோகம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களைச் சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். ஏனெனில்  தகுதியில்லாதவர்களால் வில்லங்கம் வரலாம். மற்றபடி நஷ்டம் வரும் தொழில்களிலிருந்து பக்குவமாக விலகிவிடுவீர்கள். பணப்புழக்கத்தில்  பின்னடைவுகள் ஏற்படாது. எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். 
உத்தியோகஸ்தர்களுக்கு,
உத்தியோகஸ்தர்கள்  கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால்  கவனமாக நடந்துகொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக  அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள்.

தொழிலதிபர்களுக்கு:
வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின்  எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும்  அவற்றை சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப்  பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

பெண்களுக்கு:
பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த  கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி  உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.  வாழ்வில் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க அதன்மீது கவனம் தேவை. பழைய வீடு, வாகனங்கள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு;
மாணவமணிகள் நல்ல முறையில் படித்து  மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள். உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள்  தென்படும். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆபத்தான இடங்களுக்குள் பிரவேகித்தல் ஆகாது. எதிர் கருத்துகள் கொண்டவர்கள் கூட  அனுகூலமாக மாற  நிலை உண்டு. அறச்செயல்களும் ஆன்மிக வழிபாடுகளும் உங்களை காத்து நிற்கும்.

கலைஞர்களுக்கு:
கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களில்  நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக  வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பொருளாதாரத்தில் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை  உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில்  மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க  முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருவானைக்காவல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 23, 2015 6:57 pm

2016 மகர ராசிப்பலன்கள் !
 மகரம்: கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்டுப்கு இலக்கணமாகத் திகழும் மகர ராசி அன்பர்களே!
கிரகநிலை:    
குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் ராகு பாக்கிய ஸ்தானத்திலும் சனி பகவான் லாப ஸ்தானத்திலும் கேது தைரிய வீரிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது அஷ்டம ஆயுள்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தொழில்  ஸ்தானம் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ரண ருண ரோக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  சுக ஸ்தானம் -  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  அயன சயன போக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் பாக்கிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  ராசி -   சப்தம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் -  நவம பார்வையால்  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத துன்பமும், தொல்லையும் உண்டாகும். அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்கியம் கெடலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள்  மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவ பூர்வ மான அறிவு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் எளிதாக  பணி களை  செய்து முடிப்பார்கள். செயல் திறன்  அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது  நன்மையை தரும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். 

இந்த வருடம் ஏற்கனவே இருக்கும் புகழுடன் புதிய புகழ் சேரும் மார்க்கமும் உண்டு. 
வாகன போக்குவரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும்.உங்களின் பொருளாதாரத்தில் மேல் நிலையைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை  உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். பொது நலத்  தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்.  பெற்றோருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் தீரும். பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு துணிவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய  சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு  கிடைக்கும். அறிவாளிகளின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் நீங்கி திட்டமிட்ட காரியங்கள் முடிவடையும். கடுமையாக உழைத்து  எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கு  ஏற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்தையும் சுலபமாக சாதித்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.  வாய்தாக்களை தவறாமல் குறித்துக்கொண்டு ஆஜராகவும். உங்களுக்கு எதிராக, ஒரு தலைப்பட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான  குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும்,  அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள்.  அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். அதன்மூலம் பரிசுகளை வெல்லும்  ஆண்டாகவும் இது அமைகிறது.
உத்யோகஸ்தர்களுக்கு,
உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின்  முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கிவிடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின்  அலுவலக வேலைப் பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள். சிலர் கடன்  வாங்கி வாகனங்களை வாங்குவீர்கள்.
தொழிலதிபர்களுக்கு,
வியாபாரிகள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை  விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக்  கவர்வீர்கள். சிலர் திட்டமிட்டு செயல்பட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும்.  
பெண்களுக்கு,
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில்  இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.  நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணிஇடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.

மாணவர்களுக்கு,
மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக  மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். ஆசிரியரிடம் மரியாதை சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.

கலைஞர்களுக்கு,
கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.  புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள்  உயரும்.

அரசியல்வாதிகளுக்கு,
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும்.  கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன்  போட வேண்டாம். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.  

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
அனுகூலமான திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 23, 2015 6:58 pm

2016 கும்ப ராசிப் பலன்கள் !கும்பம்:எவ்வளவு கடினமான நேரத்திலும், எதையும் திடமான சிந்தனையுடன் செயல்படுத்திவரும் கும்ப ராசி அன்பர்களே!!
கிரகநிலை:   குருபகவான் ஸப்தம ஸ்தானத்திலும் ராகு அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் சனி பகவான் தொழில் ஸ்தானத்திலும் கேது தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது ஸப்தம  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பாக்கிய  ஸ்தானம் -  ராசி -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது ராசிக்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஸப்தம  ஸ்தானம் -  லாப  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் அஷ்டம ஆயுள்  வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  அயன சயன போக  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  நவம பார்வையால்  சுக ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் யாரிடமும் பழகும் போதும் கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கும்.  எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனு சரித்து  செல்வது நல்லது.  வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க  நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். 

இந்த ஆண்டில் அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். சிறு விவசாயிகள் முதல் பெரிய நிலச்சுவான்தார்கள் வரை தங்கள் விவசாய விளைநிலங்களில் முன் எப்போதும் கண்டிராத வகையில் அதிக தானிய மகசூல் பெற்று பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவார்கள். கோயில்களில் பூஜைகள் நடத்திவரும் அர்ச்சகர்கள் இறைபணி செய்வதால்  கிடைக்க வேண்டிய நற்பலன்களை இந்த ஆண்டு பரிபூரணமாக பெற்று சிறப்பான வாழ்வு வாழ்வார்கள். நெருப்பை வைத்து செய்யக்கூடிய தொழில் எதுவாக இருந்தாலும், அத்தொழிலை செய்பவர்கள் சிறப்பான முறையில் செயலாற்றி தொழில் அபிவிருத்தியும், பொருளாதார மேன்மையும் அடைவார்கள். மருத்துவ துறையில் பணிபுரிபவர்கள், தங்கள் தொழிலில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைகள் மூலம் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து பெறுவார்கல்.
வீட்டடி மனை விற்பனை செய்பவர்களும், அடுக்குமாடி குடியிருப்புகள் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த வகைகளிலிருந்து கைக்கு வந்து சேரும். நற்செயல்களால் புகழ் உண்டாகும். பசு, பால், பாக்கிய இனங்கள் பல்கி பெருகும். குலதெய்வ அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சில சமயம் தனக்குத்தானே எதிரி என்ற நிலையில் உங்களது செயல்கள் நிதானமின்றி நடந்து விடும். கணவன் மனைவி இருவரது உறவு சார்ந்த முறையில் நன்னிலைகள் உண்டாகும்.

உடல் பலம் பெற்று, ஆயுள் அபிவிருத்தி அடையும். தந்தை வழி சார்ந்த இனங்களில் அனுகூல குறைவு உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகள் நிறையவே வந்து சேரும். ஆதாயங்கள் சேமிக்கும் வகையில் வாய்ப்புகள் உருவாகும். குலதெய்வ வழிபாடுகளில் நிறைவேறாத நேர்த்திகடன் நேர்ந்து கொண்டபடி நிறைவேற்றும் வழிவகைகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு,
விவசாயத்துறை சார்ந்த அரசு ஊழியர்கள், தேயிலை, காப்பி, ஏலக்காய் போன்ற தனியாருக்கு சொந்தமான எஸ்டேடுகளில் மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகள் தகுந்த கவனம் செலுத்தி உற்பத்தியை பெருக்குவார்கள். ராணுவத்தில் உயர்பதவி வகிப்பவர்கள் துறை சார்ந்தவர்களிடம் நற்பெயர் பெறுவார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில், கண்காணிப்பாளர்களாக பணிபுரிபவர்கள் பலவகை நிர்வாக சீர்கேடுகளை கண்டுபிடித்து அதனை சரிசெய்யும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.
கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அரசு, அதிகாரிகளின் கால்நடைகளின் வளர்ச்சிக்கு தேவையான நெறிமுறைகளை உருவாக்கி அதனை தங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்துவார்கள். மின்சாரத்துறை அதிகாரிகள், அரசுக்கு வரவேண்டிய கடன் பாக்கிகளை கடுமையான முறையில் வசூல் செய்வார்கள். மனம் மிகுந்த சந்தோஷத்துடனும், பொருளாதார வரவுகள் தேவைக்கு தகுந்தாற்போலவும் சிரமம் இல்லாது கிடைக்கும். தனியார் துறையில் உள்ளவர்கள் வருமானம் கூடப்பெறுவர். சிற்றின்ப விஷயங்களில் மனம் அலைக்கழிக்கப்பட்டு பின்பு தெய்வ அருளால் நல்ல நிலைமை உருவாகும். புத்திரர்களால் சில இடையூறுகள் வந்து விலகும். பெண்களேடு எதிரித்தனத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. உத்தியோகம் சார்ந்த வெளியூர் பயணங்கள் உயர்வைத்தரும்.
தொழிலதிபர்களுக்கு,
மின்பொருள் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புபவர்கள் தொழிலி முன்னேற்றம் அடைவர். அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலில் ஏற்படும் போட்டிகளாலும் பொறாமைகளாலும் சில சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதால் நிதானமாக செயல்பட்டு வருவது நல்லது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வோர் புதிய பணியாளர்களை நியமனம் செய்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். பழங்கள், காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் இறைச்சி வகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள், பங்குகளில் கடன் பெற்று முன்னேற்றம் காண்பர். மனம் தைரியமாகவும், செயல்கள் உற்சாகமாகவும், நண்பர்களின் உதவியும் நிறையவே உண்டாகும். நோயற்ற வாழ்க்கையும், குடும்பத்தில் ஒற்றுமையும் திகழும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.
வியாபாரிகளுக்கு,
உணவுப்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் தொழிலில் இன்னும் மூலதனத்தை பெருக்கி முன்னேற்றம் காண்பார்கள். ஸ்டவ், கேஸ் அடுப்பு வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். சிலர் தங்கள் தொழில் சார்ந்த பாதுகாப்புக்காக சங்கம் போன்றவை வைத்து செயல்படும் வழிவகைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கைகளும், சமூகத்தில் தேவையான அந்தஸ்தும், தைரியமாக செயல்பாடுகளும் நல்ல பெயரை உருவாக்கும். சிறுதொழில் மூலமாக உற்பத்தி செய்ய்பபடும் உணவுப் பொருட்களை பெருமளவில் வாங்கி விற்பனை செய்து சாதனை நிகழ்த்துவார்கள். வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபத்தினை தகுந்த இடங்களில் முதலீடு செய்து எதிர்கால வாழ்விற்கு பாதுகாப்பு தேடிக் கொள்வார்கள்.
மாணவர்களுக்கு,
மருத்துவம், ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் விதத்தை, சமூக சூழ்நிலைகளை உணர்ந்து திட்டமிட்டு உருவாக்குவார்கள்.  விலங்கியல் துறை சார்ந்த மருத்துவப்படிப்பு பயிலும் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களால் படிப்பில் உதவியும், உறவினர்களால் மதிக்கப்பெறும்  நன்னிலைகளும் உருவாகும். கோயில்கள், வீடுகளில் பூஜை முறைகலுக்கு தேவையான சடங்குகளைப் பற்றிய குருகுல கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்து ஆன்மீகப் பணிகளில் சிறந்து விளங்குவார்கள். புதிய வகை வாகன வாய்ப்புகள் உண்டாகும். ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பலம் தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு,
அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையின் இலக்கை திறம்பட செய்து சிறப்பு பெறுவார்கள். காவல்துறை பணியிலுள்ளவர்கள் புதிய சலுகை பெறும் வகையில் பணியை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள். விவசாய கூலி வேலை செய்பவர்கள், தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு பெறுவர். தொழில்நுட்ப கல்வி பயின்று புதிதாக பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். சிறு தொழில் நடத்துவோர் நல்ல வருமானம் பெறுவர். திருமண வயதை அடைந்தவர்கள் குருவின் அருளால் திருமணம் நடக்கும்  வாய்ப்பு பெறுவார்கள். தெய்வ வழிபாடுகளும், உறவுமுறை சார்ந்த பெண்களால் புதிய நட்புகளும் உருவாகும்.

கலைஞர்களுக்கு,
மண்பாண்டங்கள் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். திரைத்துறை கலைஞர்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவர்.  சிற்பக்கலைஞர்கள் வேலை வாய்ப்பும், பொருளாதார வசதியும் பெறுவார்கள். வீடு,  மனை, வாகனங்கள் போன்றவை உயர்வுதரும் வகையில் உருவாகும். நகைத் தொழில் செய்வோருக்கு இது நல்ல காலம். ஓவியர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். உடல்நலமும், மனவளமும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு,
அரசின் நல்ல திட்டங்களை ஆதரிக்கும் நிலையில் உள்ள மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் கட்சி சார்ந்த நடவடிக்கைகளை வளர்த்துக் கொள்ளவும், சகல தரப்பின் ஆதரவும் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டுள்ள பெண் அரசியல்வாதிகள் தங்களது ஆர்வம் மிக்க செயல்பாடுகளால் பொதுமக்களிடமும், நிர்வாக அமைப்பினரிடமும் நியாயமான பணி வாய்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: மேற்கு - வடகிழக்கு - தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma on Wed Dec 23, 2015 6:59 pm

2016 மீன ராசிப் பலன்கள் !


மீனம்:  பரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட மீன ராசி அன்பர்களே!!
கிரகநிலை:  குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் ராகு ஸப்தம ஸ்தானத்திலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது ராசியிலும் இருக்கிறார்கள். 
08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  அயன சயன போக  ஸ்தானம் -  சுக ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ரண ருண ரோக  ஸ்தானம் -  தொழில்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் ஸப்தம  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  லாப  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  ராசி -   நவம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி   போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும்.  நெருக்க மானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான  முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான  பொருள்களை  வாங்குவீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி கூடும்.  பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை. 

நீங்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்து நல்ல பலன்கள் பெறுவீர்கள். புகழ் தரும் வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி சார்ந்த உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும். உபதேச தொழில் புரிபவர்களும், ஆன்மீக பலம் பெற்று பாமர மனிதனுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளவரிகளும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவார்கள்.

பணவரவு இவ்வாண்டு நன்றாகவே அமையும். குரு வழிபாடு செய்தால் அவர் உங்களுக்கு நன்மையையே தருவார்.  இவ்வாண்டு நீங்கள் தர்மம் செய்யும் ஆண்டாக கருத வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுங்கள். ஏழை சுமங்கலி பெண்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் ஆடை எடுத்துக் கொடுங்கள். இந்த தர்மத்தின் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் வருவது நிச்சயமாக தடுக்கப்படும்.
சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சனை வந்தாலும் தர்மம் தலை காத்து விடும். வக்கீல் தொழில் புரிபவர்கள், தாங்கள் ஆஜராகும் வழக்குகளில் வெற்றி பெறும் வாய்ப்புகல் உருவாகும். பொன், பொருள் சேர்க்கையும், உணவுத் தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவங்கள் வளர்ச்சி பெறும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி யோகம் சிலருக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். இயந்திர வகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடமாற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். ஆதாயங்கள் ஏராளமாக கிடைக்கும். ஆனால் உங்களிடமிருந்து அதை பெற எண்ணலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு,
அரசு அதிகாரிகள் செயல்பாடுகல் தீவிரமாக இருக்கும். பாங்கு மற்றும் தனியார் துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் பொருளாதார வரவு செலவு கணக்கில் நற்பெயர் பெறுவார்கள். பிறரிடம் ஒப்படைக்காமல் கவனமாக இருங்கள். பொருளாதார வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. குலதெய்வ அருளும், பூர்வ புண்ணிய பலன் தகுந்த நேரத்தில் காப்பாற்றும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடம் ஒற்றுமை சீராக இருக்கும். சிலருக்கு உத்யோகம் அல்லது இடமாற்றம் லாபத்துடன் ஏற்படும். இவ்வாண்டு இரட்டிப்பு போனஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தொழிலதிபர்களுக்கு,
தங்கள் கம்பெனிக்கு புதிய கிளைகள் தொடங்கவே, இருக்கும் இடத்தை விஸ்தரிப்பு செய்யவோ தற்சமயம் ஏற்ற காலம். சாக்லெட், பிஸ்கட் வகை உற்பத்தி செய்பவர்கள் புதிய பெயர்களுடன் உற்பத்தி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். நவரத்தினக்களால் உருவாக்கப் பெற்ற ஆபரணங்களை உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர் பெற்று சிறப்பு பெறுவர். சமையல் எண்ணெய் தொழிலில் மிகப்பெரிய அளவில் செயல்படும் நிறுவனங்கள் அரசிடமிருந்து சிறந்த சேவைக்கான விருது பெறும் வாய்ப்பு உண்டு. தொழில் சிறப்பு பெற்றாலும் மனதில் நிம்மதி அற்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
வியாபாரிகளுக்கு,
பேக்கரி, வாசனைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். மருந்து விற்பனையாளர்கள் தொழிலில் உயர்வு பெறுவர். உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை செய்பவர்கள் வியாபார மேன்மை பெறுவர். நாட்டு மருந்து கடை நடத்துபவர்கள் தங்கல் வியாபாரம் செழிக்கப் பெறுவர். சமையல் பொடி, ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனையாளர்கள் நல்ல லாபம் பெறுவர். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து விலகும். தெய்வ வழிபாடுகள் ஆன்ம பலத்தை கொடுக்கும். சுபகாரிய செலவினங்கள் உண்டாகும்.
மாணவர்களுக்கு,
சமையல் கலை, இயந்திரங்களை கையாளும் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றம் பெறுவர். ஆன்மீகம், கலை, யோகாசனக் கல்வி பெறும் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். சக நண்பர்களிடம் வாக்கு வாதங்களும், விளையாட்டு செயல்பாடுகளும் ஏற்படாமல் தவிர்த்துக் கொண்டால் நன்மை உண்டாகும். சகோதரர்களால் தகுந்த உதவி கிடைக்கும். கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.
பெண்களுக்கு,
 அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் தங்கள் பணியில் அதிக சுமை பெற்றாலும் நல்ல வருமானம் பெறுவர். மகளின் சுய உதவிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், சிறு தொழில்கள் மூலம் முன்னேற்றம் காண்பர். புத்திர வகையில் இவர்களுக்கு பெண் பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். மனதில் புதிய தைரியமும், செயலில் உத்வேகமும் நிறைந்திருக்கும். நடக்கப் போகும் விஷயங்களை சூழ்நிலைகள் முன்கூட்டியே உணர்த்திவிடும். நட்பு வகையிலான உதவிகள் நன்மைகளைத் தரும். உடல் ஆரோக்கியத்துடன் ஆயுள் பலம் நிறைந்த்தாகவும் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் ஒருமித்து வாழ்வார்கள். தந்தை வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறவும், உங்களுக்குக் தரவேண்டிய சீர்முறைகளும் கிடைக்க வழி உண்டு.சிறுதொழில் நிர்வாகம் செய்பவர்கள் நற்பெயர் பெறுவர். ஆடை, ஆபரணங்கல் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும்.
கலைஞர்களுக்கு,
இசை, நடிப்பு கலைஞர்கள் பிறருக்கு கலைகளை கற்றுத்தருவதன் மூலம் புகழும், பொருளாதார மேன்மையும் பெறுவர். மரப் பொருட்களில் அலங்கார பொருட்கள் செய்பவர்களுக்கு புதிய வரவேற்பு கிடைக்கும். வாகன பிரயாணங்களில் கவனம் வேண்டும். சுக சவுகரிய வாழ்க்கை கடுமையான உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். பிணிகல் தரும் துன்பம் விலகும். நகைத் தொழிலாளர், சிற்பக் கலைஞர்கள் ஏற்றம் பெறுவர். வியர்கள் இவ்வாண்டு பரிசு பெறுவதற்கான  வாய்ப்புண்டு. எனவே உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கல்.
அரசியல்வாதிகளுக்கு,
அரசியல் பணிகள் தவிர மற்ற பிற விஷயங்களான உறவினர், நண்பர்கல் அல்லாத பிற நபர்களின் பிரச்சனைகளில் ஈடுபட்டாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சொந்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்மை தரும். வர்த்தைகளில் கனிவும், பணிவும் வேண்டும். வீடு, மனை இவை வாங்குவதற்கு நல்ல நேரம். அரசியல் சார்ந்த நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: 2016 - புத்தாண்டு பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum