ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

View previous topic View next topic Go down

வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

Post by கார்த்திக் செயராம் on Fri Dec 11, 2015 8:32 am

வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

 
சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தில், தான் பல ஆண்டுகளாக சேகரித்த 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை இழந்து தவித்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த நூலகர் ஒருவர்.

 
வெள்ளத்தில் போன அரிய நூல்கள்
சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிவரும் ரெங்கய்யா முருகன், தாம்பரத்தில் உள்ள முடிச்சூர் பகுதியில் வசித்துவருகிறார்.

மானுடவியல் தொடர்பாகவும் தமிழகத்தில் அமைந்துள்ள பிராமணர் அல்லாத மடங்கள் தொடர்பாகவும் 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை தரைத்தளத்தில் அமைந்திருக்கும் தன் வீட்டில் சேமித்துவைத்திருந்தார் ரெங்கைய்யா முருகன்.

ஏற்கனவே வட இந்தியப் பழங்குடிகளைப் பற்றிய அனுபவங்களின் நிழல் பாதை என்ற புத்தகத்தை எழுதியிருந்த அவர், தன் சேகரிப்பில் உள்ள புத்தகங்களை வைத்து தமிழக மடங்கள் தொடர்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது என்கிறார் ரெங்கய்யா முருகன்.

டிசம்பர் 2ஆம் தேதி காலையில், தெருவில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓட ஆரம்பித்ததும் தன் வீட்டின் புத்தக அலமாரியில் கீழ் பகுதியில் இருந்த புத்தகங்களை மேல் பகுதிக்கு மாற்றினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே நீர்மட்டம் இடுப்பளவுக்கு உயரவும் வீட்டை விட்டு வெளியேறினார் அவர்.

வெள்ள நீர் வடிந்த பிறகு வந்து பார்த்தபோது, அவரது பல ஆண்டு சேகரிப்பு தண்ணீரில் ஊறிப்போய் கிடந்தது. பல புத்தகங்களின் பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கிடந்தன.

தற்போது வேறு யாரிடமும் கிடைக்க வாய்ப்பில்லாத பல புத்தகங்கள் தன் சேகரிப்பில் இருந்ததாகக் கூறுகிறார் அவர்.

மடாலயங்கள் பற்றிய புத்தகங்கள்

 நூல்களை இழந்த ரெங்கையா முருகன்
1998ல் புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பித்த அவர், தமிழகத்தில் உள்ள பிராமணரல்லாத மடங்களில் இருந்த புத்தகங்களைத் தேடித் தேடி சேகரித்துவந்தார். நூற்றுக்கணக்கான புத்தகங்களை படியெடுத்தும் வைத்திருந்தார்.

பல மடாதிபதிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், திராவிட இயக்க சித்தாந்திகளின் வரலாற்று நூல்கள் - இவற்றில் பல 70-80 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டவை - இவரது சேகரிப்பில் குறிப்பிடத்தக்கவை.

டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளம் வடிந்த பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவருடைய அரிய சேகரிப்புகளில் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. எல்லாமே தண்ணீரில் ஊறிப் போயிருந்தன. அவற்றைப்பார்த்து நிலைகுலைந்துபோன அவர், வேறு வழியின்றி அவற்றைத் தூக்கியெறிய முடிவுசெய்தார்.

நீரில் ஊறிய புத்தகங்களைத் தெருவில் தூக்கியெறிந்துவிட்டபோது, அவற்றை அகற்றவந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், தன் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி சொன்னதாகச் சொல்கிறார் அவர். அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்தவர்களும் புத்தகங்களை காய வைத்துத் தர முன்வந்ததாகவும் கூறுகிறார் முருகன்.

ஆனால், பல புத்தகங்களின் பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஓட்டிப்போன நிலையில், புத்தகங்களைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை என முடிவுசெய்ததாகக் கூறுகிறார் அவர்.

இவ்வளவு அரிய புத்தகங்களை இத்தனை ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்தது தவறு என தற்போது வருந்துகிறார் ரெங்கய்யா முருகன். முன்பே அவற்றை டிஜிட்டல் வடிவில் படியெடுத்திருக்க வேண்டும் எனவும் அரிய புத்தகங்களைச் சேகரிப்பவர்களுக்கு அதுவே தன் அறிவுரை என்றும் கூறுகிறார் ரெங்கய்யா முருகன்.

நன்றி பிபிசி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

Post by ChitraGanesan on Fri Dec 11, 2015 10:21 am

அவரின் நில கண்டு கண்ணிர்வடிக்கிறேன்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:58 am

அடாடா...பாவம் சோகம்...............அவர் சொல்வது போல முன்பே அவற்றை டிஜிட்டல் வடிவில் எடுத்திருக்கலாம் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

Post by கே. பாலா on Sat Dec 12, 2015 7:01 am

ஈடு செய்யமுடியாத இழப்பு சோகம்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

Post by ayyasamy ram on Sat Dec 12, 2015 7:12 am

அரிய புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் படியெடுத்திருந்தால்
காப்பாற்றி இருக்கலாம்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 12, 2015 6:56 pm

@கார்த்திக் செயராம் wrote:வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்
சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தில், தான் பல ஆண்டுகளாக சேகரித்த 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை இழந்து தவித்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த நூலகர் ஒருவர்.
நன்றி பிபிசி
மேற்கோள் செய்த பதிவு: 1179757
இந்த இழப்பு பெரியது ஆனால் இன்று அனைத்தையும் டிஜிடல் வடிவில் பதிவு செய்ய வசதியிருப்பதால்
அதை முடிந்தளவு செய்ய வேண்டும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum