ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 சின்னக் கண்ணன்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

View previous topic View next topic Go down

கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:29 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை 


கூட்டுக் குடும்பமாய் வாழ விரும்பும் நீங்கள், அசைக்க முடியாத தெய்வ பக்தி உள்ளவர்கள். தன் சொந்த உழைப்பால் உயர விரும்பும் நீங்கள், பாதை மாறிச் சென்று பணம் சம்பாதிக்க தயங்குவீர்கள். இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களுடைய ஆளுமைத்திறன் அதிகரிக்கும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ராகுவும் 6ம் இடத்தில் நிற்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் யூரினரி இன்ஃபெக்‌ஷன், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, தலைச்சுற்றல், சிறுசிறு விபத்துகள் வந்துபோகும். 29ந் தேதி வரை உங்களின் தனசப்தமாதிபதியான சுக்கிரன் 6ல் மறைந்து கிடப்பதால் கணவன்-மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும்.

 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் நுழைந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். மனைவியுடனான மோதல்கள் விலகும். அவருக்கு இருந்த நோய் குணமாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குரு 5ல் நீடிப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 8ல் நிற்கும் சனியுடன் இந்த மாதம் முழுக்க உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியனும் சேர்வதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல், செலவுகள் இருக்கும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகி முடியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர், நண்பர்களின் ஆதரவு பெருகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 

மாணவ, மாணவிகளே! அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். 

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். 

அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு குறையும். தலைமையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். யாருக்காகவும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். நெல், கரும்பு, காய், கனி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும் என்றாலும் அஷ்டமத்துசனி தொடர்வதால் நேர்மூத்த அதிகாரிகளால் மறைமுக தொந்தரவுகள் வந்துபோகும். சம்பள பாக்கி கைக்கு வரும். 

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப் பாருங்கள். 

கலைத்துறையினரே! 
உங்களுடைய படைப்புத்திறன் வளரும். சககலைஞர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். இடைவிடாத உழைப்பாலும், சமயோஜித புத்தியாலும் சவால்களை சமாளிக்க வேண்டிய மாதமிது.     

ராசியான தேதிகள்: நவம்பர் 17,18,19, 20, 26, 27, 29, டிசம்பர் 5, 6, 7, 8, 14,15,16.

சந்திராஷ்டமம்: 
டிசம்பர் 9ந் தேதி மாலை 5 மணி முதல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: சென்னை-குன்றத்தூர் முருகனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:34 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
திட்டமிட்டு குறிக்கோளுடன் வாழும் நீங்கள், இருட்டிலிருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர விரும்புவீர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தடம்மாறி தரம் குறைய மாட்டீர்கள். 29ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். 30ந் தேதி முதல் சுக்கிரன் ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல், தொண்டைப் புகைச்சல் வந்து போகும். இந்த மாதம் முழுக்க சூரியன் 7ல் நிற்கும் சனியுடன் சேர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி வந்து போகும். முன்கோபம் அதிகமாகும். மனைவிக்கு ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்னை, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். 

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ராகுவும், செவ்வாயும் இந்த மாதம் முழுக்க 5ம் இடத்திலேயே தொடர்வதால் பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சகோதரர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கேது லாப ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. புது வேலை கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். உறவினர்கள் மதிப்பார்கள். மாணவ, 

மாணவிகளே! விளையாட்டுத் தனத்தை குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கண்ணில் கரு வளையம், முடி உதிர்தல் வரக்கூடும். 

அரசியல்வாதிகளே! 
உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். புது முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். கமிஷன், துணி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். 

விவசாயிகளே! 
கடன் பிரச்னையை நினைத்து கலங்குவீர்கள். மஞ்சள், எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். 

கலைத்துறையினரே! மனம் தளராதீர்கள். சின்ன வாய்ப்பு வந்தாலும் பயன்படுத்தத் தவறாதீர்கள். ஈகோவாலும், உணர்ச்சிகரமான முடிவுகளாலும் சில வாய்ப்புகளை இழக்கும் மாதமிது.          

ராசியான தேதிகள்: நவம்பர் 20,21,22,23,28,29,30, டிசம்பர் 1,8,9,10,11,15,16.

சந்திராஷ்டமம்: 
டிசம்பர் 12, 13 மற்றும் 14ந் தேதி காலை 9 மணி வரை எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: 
கும்பகோணம் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:35 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
மற்றவர்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர்களான நீங்கள், போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்கள் நீங்கள்தான். பாவ புண்ணியம் அடிக்கடி பார்ப்பீர்கள். உங்களின் தைரியஸ்தானாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு 6ல் வீட்டில் வலுவாக அமர்ந்ததால் தன்னம்பிக்கை துளிர்விடும். உங்களின் பூர்வ புண்யாதிபதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். செவ்வாய் 4ல் நிற்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ராகுவும் 4ம் இடத்திலும், கேது 10ல் தொடர்வதால் வேலைச்சுமையால் அவ்வப்போது சோர்வடைவீர்கள். 

31ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் புதன் பலவீனமாக காணப்படுவதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்துபோகும். நண்பர்களுடன் மோதல்கள் வரும். 1ந் தேதி முதல் புதன் 6ல் நிற்கும் சனியை விட்டு விலகுவதால் கோபம் குறையும். அழகு, இளமை கூடும். அநாவசியச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 6ம் வீட்டிலேயே சனிபகவான் நீடிப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். 3ம் இடத்து குருவால் எந்தவொரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போகும். 

மாணவ,மாணவிகளே! 
உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 

கன்னிப்பெண்களே! 
உற்சாகமாக இருப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சகாக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிரடிச் சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். முரண்டுபிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். ஜவுளி, துரித உணவகம், அழகு சாதனங்களால் லாபமடைவீர்கள். 

உத்யோகத்தில் 
ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டியது வரும். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப்பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை வேறு நிறுவனம் வாங்க வாய்ப்பிருக்கிறது. அதனால் உத்யோகத்தில் இடையூறுகள் வரும். 

விவசாயிகளே! 
பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள். 

கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்புகளால் பயனடைவீர்கள். சூரியனின் பலத்தால் மாறுபட்ட அணுகுமுறையாலும், யதார்த்தமான பேச்சாலும் இழந்ததை எட்டிப்பிடிக்கும் மாதமிது.                

ராசியான தேதிகள்: நவம்பர் 21, 22, 23, 24, 30, டிசம்பர் 1, 2, 3, 4, 10, 11.

சந்திராஷ்டமம்: 
நவம்பர் 17, 18 மற்றும் டிசம்பர் 14ந் தேதி காலை 9 மணி முதல் 15, 16ந் தேதி மதியம் 1 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம்.  

பரிகாரம்: 
திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:35 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
அடுத்தவர்களின் தவறுகளை இங்கிதமாக எடுத்துரைப்பதில் வல்லவர்களான நீங்கள், எதிரியாக இருந்தாலும் மன்னிப்பதுடன், மனசாட்சிக்கும் பயந்தவர்கள் நீங்கள்தான். குருபகவான் 2ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்களின் யோகாதிபதி செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் மனோபலம் கூடும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மழலை பாக்யம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். 

என்றாலும் 5ல் நிற்கும் சனியுடன் இந்த மாதம் முழுக்க பகைக் கோளான சூரியனும் பிரவேசிக்கயிருப்பதால் சிலர் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ராகு 3ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர், மாற்று மொழியினரால் பண உதவிகள் கிடைக்கும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் மதிப்பும், மரியாதையும் கூடும். இரு சக்கர வாகனத்தை மாற்றி சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர், நண்பர்கள் வீடுதேடி வருவார்கள். 

மாணவ, மாணவிகளே! படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலைப் போட்டிகளும் பரிசு, பாராட்டுகள் பெறுவீர்கள். மதிப்பெண் கூடும். வகுப்பாசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். 

கன்னிப் பெண்களே! கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். சிலருக்கு திருமணம் கூடி வரும். 

அரசியல்வாதிகளே! 
அநாவசியமாக யாருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். அதை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். 

வியாபாரத்தில்
 சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி அன்பாகத் திருத்துங்கள். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

உத்யோகத்தில்
 உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். 

விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.                        

ராசியான தேதிகள்: நவம்பர் 18, 23, 24, 26, டிசம்பர் 5, 6, 7, 8,12,13,15.

சந்திராஷ்டமம்: 
நவம்பர் 19, 20, 21ந் காலை 8 மணி வரை மற்றும் 16ந் தேதி மதியம் 1 மணி முதல் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 

பரிகாரம்: நாமக்கல் அனுமனை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு உங்களால் முடிந்தளவு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:36 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
மனதில்பட்டத்தை பளிச்சென்று பேசி உண்மைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே தெரிவீர்கள். ஜென்ம குருவும், அர்த்தாஷ்டமச் சனியும் அவ்வப்போது மனதிலே வழக்கில் அலட்சியம் வேண்டாம். என்றாலும் சுக்கிரன் உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் எத்தனை பிரச்னைகள், இடையூறுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் போராடி சமாளிக்கும் சக்தியை தருவார். வாகனத்திற்கான லைசென்ஸ், இன்சூரன்சையெல்லாம் உரிய காலக்கட்டத்திற்குள் புதுப்பிப்பது நல்லது. சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டியது வரும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 

இந்த மாதம் முழுக்க புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களின் விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். இந்த மாதம் முழுக்க 2ல் நிற்கும் ராகுவுடன் செவ்வாயும் நிற்பதால் கண்பார்வைக் கோளாறு வரக் கூடும். காலில் அடிப்படக் கூடும். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூருக்கு செல்வதாக இருந்தால் தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கங்களை பத்திரப்படுத்தி விட்டு செல்வது நல்லது. விதிகளுக்கு அப்பாற்பட்டு யாருக்கும் உதவாதீர்கள். செலவினங்கள் அதிகமாகும். கடந்த மாதம் முழுக்க நீசமாகியிருந்த உங்கள் ராசிநாதன் சூரியன் இப்போது 4ல் அமர்ந்ததால் வீடு கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். 

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும். 

மாணவ, மாணவிகளே! 
கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சி யமாக இருந்துவிடாதீர்கள். அவ்வப்போது விடைகளை எழுதிப்பாருங்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்த்து விடுங்கள். 

கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.              

வியாபாரம் 
மந்தமாக இருக்கும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். பூ, ஸ்டேஷனரி, மர வகைகளால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அனுபவமில்லாத தொழிலில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 

உத்யோகத்தில் 
ஓய்வின்றி உழைக்க வேண்டியது வரும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். வேலையை விட்டு விடலாமா என்று நினைப்பீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்து நீங்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். 

விவசாயிகளே! 
எலி, பூச்சித் தொல்லையை கட்டுப்படுத்துங்கள். வாய்க்கால், வரப்புச் சண்டைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். முன்கோபத்தை தவிர்த்து உள்மனசு சொல்வதை உள்வாங்கி செயல்பட வேண்டிய மாத மிது.           

ராசியான தேதிகள்:
 நவம்பர் 17,18,19,26,27,28, டிசம்பர் 6,7,8,9,14,15,16.

சந்திராஷ்டமம்: 
நவம்பர் 21ந் தேதி காலை 8 மணி முதல் 22 மற்றும் 23ந் தேதி காலை 10.15 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள்.

பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:36 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
ஈரப் பார்வையால் அனைவரையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், எல்லோரின் இயக்கங்களையும் அசைபோட்டு எடைபோடுவதில் வல்லவர்கள். கடந்த ஒருமாத காலமாக 2ம் வீட்டில் நீசமாகி அமர்ந்து கொண்டு உங்களுக்கு பணப் பற்றாக்குறையையும், பேச்சில் கடுமையையும், முன்கோபத்தையும் தந்த சூரியபகவான் இப்போது 3ம் வீட்டில் வலுவாக நுழைந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சனியும் உங்கள் ராசிக்கு 3ல் தொடர்வதால் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் 31ந் தேதிவரை சனியுடன் சேர்ந்து நிற்பதால் வீண் டென்ஷன், அலர்ஜி, உடல் அசதி, சோர்வு, அலைச்சல் வந்து நீங்கும். 1ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் வலுவடைவதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரிவடையும். 

பழைய சொந்தபந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். என்றாலும் உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 12ல் குரு நிற்பதால் பயணங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். தவிர்க்க முடியாத செலவு களால் திணறுவீர்கள். அவ்வப்போது பழைய கடனை நினைத்து பயம் வந்துபோகும். கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 

மாணவ, மாணவிகளே! வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர வேண்டாம். 

கன்னிப் பெண்களே! ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். 

அரசியல்வாதிகளே! 
கட்சி நிர்வாகிகள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். கோஷ்டி பூசலிலிருந்து விடுபடுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வீர்கள். தள்ளுபடி அறிவிப்புகள் மூலம் விற்பனை கூடும். வேலையாட்களிடம் கோபப்படாதீர்கள். சம்பளத்தைத் தவிர அதிக சலுகைகள் தந்தும் நன்றி இல்லாமல் இருக்கிறார்களே! என்று ஆதங்கப்படுவீர்கள். போட்டிகள், எதிர்ப்புகளையும் தாண்டி இந்த மாதத்தில் லாபம் சம்பாதிப்பீர்கள். ஹார்டுவேர், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். 

உத்யோகத்தில் 
வேலைச்சுமை அதிகமானாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். நேர்மூத்த அதிகாரி உங்களை எதிர்த்தாலும் மேல்மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். 

கலைத்துறையினரே! 
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். 

விவசாயிகளே! மரப்பயிர், தோட்டப் பயிர் மூலமாக லாபமடைவீர்கள். அக்கம்பக்க நிலத்துக்காரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது. 

ராசியான தேதிகள்: நவம்பர் 20, 21,22, 28, 29, 30, டிசம்பர் 1, 8, 9, 10, 11,13,15.

சந்திராஷ்டமம்: 
நவம்பர் 23ந் தேதி காலை 10:15 முதல் 24 மற்றும் 25ந் தேதி மதியம் 1:15 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்: மயிலாடுதுறை-குத்தாலம் பாதையிலுள்ள க்ஷேத்ர பாலகரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள். 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:37 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் நீங்கள், அவ்வப்போது தத்துவமாகவும் பேசுவீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்திலும், கேது 6ம் வீட்டிலும் வலுவாக நிற்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். 29ந் தேதி வரை சுக்கிரன் ராசிக்கு 12ம் வீட்டில் நிற்கும் பாப கிரகங்களுடன் சேர்ந்து நிற்பதால் வீண் குழப்பங்கள், பணத் தட்டுப்பாடு, தொண்டை வலி, கழுத்து வலி, சைனஸ் தொந்தரவுகள் வந்துபோகும். ஆனால், 30ந் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால் ஆரோக்யம் சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வருமென்றாலும் ராசிக்கு 12ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகமாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றங்கள் வரும். 

பழைய கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வந்துபோகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள் நீசமாகி நின்ற சூரியன் இந்த மாதம் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கோபம் குறையும். தடைபட்ட அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். ஆனால், கண் வலி, வீண் செலவுகள் வந்து போகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பாதச் சனி தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். 

மாணவ, மாணவிகளே! 
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். படிப்பில் முன்னேறுவீர்கள். 

கன்னிப் பெண்களே! 
அடி வயிற்றிலிருந்த வலி குறையும். பழைய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 

அரசியல்வாதிகளே! 
எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 

வியாபாரத்தில் 
பற்று வரவு உயரும். வேலையாட்கள் மதிப்பார்கள். கட்டுமானப் பொருட்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள். கடையை விரிவுப்படுத்தி அழகுப்படுத்துவீர்கள். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களால் இருந்த பிரச்னைகள் குறையும். அரசாங்க கெடுபிடிகள் நீங்கும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளால் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். 

உத்யோகத்தில் 
செல்வாக்கு அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடையே நிலவி வந்த அதிருப்தி விலகும். இடமாற்றம் விரும்பியபடி கிடைக்கும். சிலருக்கு வேற்று மாநிலம் தொடர்புள்ள நிறுவனத்தில் புது வாய்ப்புகள் கிடைக்கும். 

விவசாயிகளே! 
விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் வேறு தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். 

கலைத்துறையினரே! தள்ளிப்போன பட வாய்ப்புகள் வரும். பழைய கலைஞர்கள் உங்களை பாராட்டுவார்கள். எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும் மாதமிது.
    
ராசியான தேதிகள்: 
நவம்பர் 18, 21, 22, 23, 30, டிசம்பர் 1, 2, 3, 4, 10, 11,13,15.

சந்திராஷ்டமம்: நவம்பர் 25ந் தேதி மதியம் 1:15 மணி முதல் 26 மற்றும் 27ந் தேதி மாலை 5 மணி வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரரையும், அங்கேயே வீற்றிருக்கும் வாராஹியையும் தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:37 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
யார் தயவிலும் வாழாமல் தன்கையே தனக்குதவி என்று நினைக்கும் நீங்கள், தவறு களை பிறர் சுட்டிக் காட்டினால் தயங்காமல் திருத்திக் கொள்வீர்கள். இந்த மாதம் முழுக்க லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். புதுவேலை அமையும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வார்கள். என்றாலும் ராகுவுடன் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சேர்ந்து நிற்பதால் அலர்ஜி, இன்ஃபெக்‌ஷன், ரத்த அழுத்தம், ஒருவித படபடப்பு வந்து செல்லும். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். 

அதிகநேரம் வேலை பார்க்க வேண்டியது வரும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் உடனுக்குடன் செலுத்தப் பாருங்கள். ஜென்மச்சனியும் நீடிப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். காது, மூக்கு வலி, தலைச்சுற்றல் வரக்கூடும். சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். தன்னை யாரும் மதிக்கவில்லை என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். 5ல் கேது தொடர்வதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்று வீர்கள். பயணங்களால் திருப்பம் உண்டாகும். 

மாணவ,மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். பொறுப்பாகப் படியுங்கள். விளையாடும்போது சிறுசிறு 
காயங்கள் ஏற்படும். 

கன்னிப் பெண்களே! 
பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். 

அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்.  வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வேலையாட்களால் பிரச்னைகள் தலைத்தூக்கும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளப்பாருங்கள். புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். ஷேர், ஸ்பெகுலேஷன், மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் குரு 10ல் இருப்பதால் உத்யோகத்தில் ஒரு நிலைத்தன்மையில்லாமல் எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற ஒரு பயம் இருக்கும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதமாகும். 

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். 

விவசாயிகளே! 
விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.                                    

ராசியான தேதிகள்: நவம்பர் 17,18,19, 23, 24, டிசம்பர் 2, 3, 4, 5, 6, 12, 13, 14, 15. 

சந்திராஷ்டமம்: நவம்பர் 27ந் தேதி மாலை 5 மணி முதல் 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகள் தாமதமாகும்.

பரிகாரம்: கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:38 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
காசு பணத்திற்கு அடிமையாகாத நீங்கள், கொள்கை பிடிப்பு அதிகம் உள்ளவர்கள். அதிகாரம் ஆணவத்தை விட அன்புக்கு கட்டுப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் 12ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். ஏழரைச் சனியும் தொடர்வதால் பழைய கடன் பிரச்னையால் சேர்த்து வைத்திருக்கும் கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் அவ்வப்போது வந்துபோகும். 

கொஞ்சம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து ஆதங்கப்படுவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் அடுத்தடுத்த வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் போகும். தாயாருக்கு கை, கால், மூட்டு வலி, நெஞ்சு வலி வந்து போகும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம்.

மாணவ, மாணவிகளே! வகுப்பாசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்குமென்றாலும் சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மறைமுகப் போட்டிகள் இருக்கும். 

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். 

அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டம், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். 

வியாபாரத்தில் 
ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரத்திற்கேற்ப புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். அடிக்கடி விவாதம் செய்து கொண்டிருக்கும், உங்கள் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் பங்குதாரர்களை நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் உங்களின் கோரிக்கையை ஏற்பார்கள். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். 

உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். என்றாலும் சின்னச் சின்ன இடையூறுகளும் வந்துச் செல்லும்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். திரையிடாமல் தடைபட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளிவரும். 

விவசாயிகளே! மாற்றுப் பயிரிட்டு வருமானத்தை பெருக்குவீர்கள். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளை கடந்து தொலைநோக்குச் சிந்தனையால் ஓரளவு முன்னேற வைக்கும் மாதமிது. 

ராசியான தேதிகள்: நவம்பர் 21, 25, 26, 27, 28, டிசம்பர் 6, 7, 8, 9,15,16.

சந்திராஷ்டமம்: நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2ந் தேதி காலை 7:45 மணி வரை எதிலும் யோசித்து செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: சென்னை-மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மனை தரிசித்து வாருங்கள். சாலை பணியாளர்களுக்கு ஆடைகள் கொடுத்து உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:38 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை வாடி நிற்கும் கொக்கைப்போல் காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள். மெத்த படித்தவர்களை கூட உங்கள் அனுபவ அறிவால் அசத்திடுவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11ம் இடத்திலேயே தொடர்வதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தூரத்து சொந்த பந்தங்கள் வீடுதேடி வருவார்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். 

9ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கேது வலுவாக 3ல் நிற்பதால் மனோபலம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

மாணவ, மாணவிகளே! 
கணிதம், வேதியியல் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 

அரசியல்வாதிகளே! எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு சிலர் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். வேலையாட்கள் உங்களுடைய அருமையை தெரிந்து கொள்வார்கள். பதிப்பகம், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். 

உத்யோகத்தில் 
மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களால் மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். 

கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

விவசாயிகளே! 
தண்ணீர் பற்றாக்குறையை நீக்க புது வழி கிடைக்கும். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 21, 22, 23, 24, 30, டிசம்பர் 1, 8, 10, 11.

சந்திராஷ்டமம்: 
டிசம்பர் 2ம் தேதி காலை 7:45 மணி முதல் 3 மற்றும் 4ந் தேதி மாலை 6:15 மணிவரை மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளியும், செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:39 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
பெரிய பிரச்னைகளை பிரமாதமாக சமாளிக்கும் நீங்கள், சின்ன விஷயங்களில் சிக்குவீர்கள். உழைத்தும் போதிய உயர்வு இல்லையே என புலம்புவீர்கள். இந்த மாதம் முழுக்க உங்களின் சப்தமாதிபதி சூரியனின் ராசிக்கு 10ல் அமர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 10ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இதோ, அதோ என்று இழுத்தடித்தவர்கள் இப்பொழுது திருப்பித் தருவார்கள். என்றாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். செவ்வாயும், ராகுவும் 8ம் வீட்டிலேயே நிற்பதால் அலைச்சல், மன இறுக்கம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நெஞ்சு வலி, காய்ச்சல், இரும்புச்சத்து குறைபாடு வந்து செல்லும். 

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். எந்தக் காரியத்தை செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். சிலர் உங்களை தூண்டிவிட்டு, சீண்டி விட்டு சினம் கொள்ள வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். சொத்து விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் பிரச்னைகளை கண்டு அஞ்சாமல் பதிலடி கொடுக்கும் அளவிற்கு மன தைரியம் பிறக்கும். 2ல் கேது நீடிப்பதால் வீண் செலவுகள், கண்வலி ஏற்படக்கூடும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. இடம், பொருள், ஏவலறிந்து பேசப் பாருங்கள். 

கன்னிப் பெண்களே!
 பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 

அரசியல்வாதிகளே! 
கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும். 

மாணவ, மாணவிகளே! 
பொது அறிவுத் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவார்கள். 

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு என்றாலும் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். சின்னச் சின்ன நஷ்டங்கள் வரும். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை மனங்கோணாமல் நடத்துங்கள். அரிசி, எண்ணெய், இரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உங்களின் உத்யோகஸ்தானாதிபதி செவ்வாய் 8ல் மறைந்து காணப்படுவதால் உத்யோகத்தில் எவ்வளவு உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, பாராட்டுதலோ இல்லாமல் போகும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். 

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். 

விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். வங்கியில் இழுத்தடித்த கடன் தொகை இப்பொழுது கிடைக்கும். கடின உழைப்பாலும், அனுபவ அறிவாலும் கரையேறும் மாதமிது.            

ராசியான தேதிகள்: நவம்பர் 22, 23, 24, 29, 30, டிசம்பர் 1, 2, 10, 11, 12, 13.

சந்திராஷ்டமம்: 
டிசம்பர் 4ம் தேதி மாலை 6:15 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை-திருவல்லிக்கேணியில் அருள்பாலிக்கும் பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by krishnaamma on Tue Dec 08, 2015 11:39 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
தாய் மண்ணின் மீதும், மொழியின் மீதும் தீராத தாகம் கொண்ட நீங்கள், கடல் தாண்டிப் போனாலும் கலாசாரத்தை மீற மாட்டீர்கள். எதையும் உடனே முடிப்பதில் வல்லவர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் போட்டிப் பொறாமைகளையும் தாண்டி முன்னேறத் துடிப்பீர்கள். என்றாலும் 7ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் அவ்வப்போது விவாதங்களும் வந்து செல்லும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, செரிமானக் கோளாறு, பித்தப் பையில் கல் வரக்கூடும். உடன்பிறந்தவர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். சனி சாதகமாக இருப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். 

சூரியன் 9ல் நிற்பதால் தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். தந்தைவழிச் சொத்தை பெறுவதில் தடைகள் வந்து போகும். 6ல் குரு மறைந்து கிடப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டியது வரும். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். ராசிக்குள் கேது இருப்பதால் வேலைச்சுமையால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண் டென்ஷன் அதிகமாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. 

கன்னிப் பெண்களே! 
போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. 

மாணவ, மாணவிகளே! உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். 

அரசியல்வாதிகளே! வெறும் அறிக்கை மட்டும் போதாது, தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். 

வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். வாடகை இடத்தில் கடையை வைத்திருப்பவர்களுக்கு கடை உரிமையாளரால் தொல்லை அதிகரிக்கும். வாடகை அதிகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. கமிஷன், ஸ்டேஷனரி, வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். 

உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சகஊழியர்கள் மத்தியில் மூத்த அதிகாரிகளைப்பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். செய்யாத தவறை உங்கள் மீது சுமத்த முயற்சிப்பார்கள். கவனமாக இருங்கள். 

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை தரப் பாருங்கள். பழைய கலைஞர்கள் உதவுவார்கள். 

விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். வளைந்து கொடுத்துப்போக வேண்டிய மாதமிது.    

ராசியான தேதிகள்: நவம்பர் 17,18, 24, 26,28,29,  டிசம்பர் 2, 3, 4, 13, 14, 15.

சந்திராஷ்டமம்: 
7, 8 மற்றும் 9ந் தேதி மாலை 5 மணி வரை வேலைச்சுமை அதிகமாகும்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள். 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கார்த்திகை மாத ராசி பலன்கள் :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum