ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

View previous topic View next topic Go down

உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 12:52 pm


உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார்.
இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன.
மேலும் பாரத நாடு உலகிற்கு வழங்கிய கலைச் செல்வங்களுள் ஒன்று ‘யோகா’
இவ்யோகா மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் வாழ்க்கை
முறையாகவும் திகழ்கிறது.ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று
கூறுவர். அவ் அறுபத்து நான்கு கலைகளுள் யோகக் கலையும்
ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலங்கு
நிலையில் இருந்த மனிதனை இறை நிலைக்கு
உயர்த்தும் வழி முறையே யோக நெறிகளாகும்.
நன்றி-முகநூல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 12:56 pm

யோக நெறி மேன்மைக்கு
இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப்
பெற நினைத்துத் தொழில்களை வளர்த்தான். ஆனால் அவன் தேடிய அமைதியும்
இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தொல்லைகளும் தொடர்ந்தன.
வாழ்வில் அமைதி பெற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச்
சென்று அலைந்தான். அவன் தேடிய அமைதி கிட்டவில்லை.
ஆனால் பற்றுக்களைத் துறந்து உலக நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் சென்று
முனிவர்கள் தவம் இருந்தார்கள். அவ்வாறு தவம் செய்த முனிவர்கள் மன
அமைதியைக் கண்டனர். அம் முனிவர்கள் தாம் மட்டுமன்றி, இவ்வுலக
மக்கள் வாழ்வில் அமைதியும் இன்பமும் காண வேண்டும்
என்று விரும்பினர்.
அதற்காக அம்முனிவர்கள் கண்ட வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றுதான் யோக
வாழ்க்கையாகும். உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் உன்னதமான
கலைகளுள் ஒன்று யோகக் கலை என்று தோன்றியது? அது இந்திய
நாட்டில் தோன்றியதா? அல்லது மேலைநாட்டிலிருந்து வந்ததா?
என்ற பல வினாக்கள் நமது மனதில் எழுகின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 12:59 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகா என்பது இந்திய நாட்டில் தோன்றியது. முன்னோர்கள் நமக்குத் தந்த செல்வமாக
இக்கலை விளங்குகிறது. யோகா என்று தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற
இயலாததாக உள்ளது. வேதகாலத்திற்கும், ஆரியருக்கும் முற்பட்டது இவ்
யோகக் கலை என்பர். சமண, பெளத்த மதங்கள் கொடுத்த
கலைதான் யோகக் கலை என்று பலர் மொழிகின்றனர்.
புத்த மதத்தைத் தோற்றுவித்த கெளதம புத்தர், சமண மதத்தைத் தோற்றுவித்த வர்த்தமான
மகாவீரர் ஆகியோரின் தோற்றம் யோக நிலையில் சித்தரிக்கப்படுகிறது. புத்தரின்
சிலையும் மகா வீரரின் சிலையும் யோகத்தில் அமர்ந்த நிலையில் அனைத்து
இடங்களிலும் காணப்படுவது நோக்கத்தக்கதாகும். இதனை வைத்தே
யோகக் கலையைத் தோற்றுவித்தவர்கள் பெளத்த, சமண மதத்தைச்
சேர்ந்தவர்கள் என்று கூறத் தொடங்கினர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:02 pm

யோக நெறி மேன்மைக்கு
சிந்து சமவெளி நாகரிகத்தில் மோகஞ்சதரோ, ஹரப்பா போன்ற பழைமை வாய்ந்த
நகரங்களின் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பசுபதி கடவுள் சிலை
ஆசன நிலையில் அமைக்கப்பட்டு அக்கால மக்களால் வணங்கப்பட்டு
வந்துள்ளமையை வரலாற்றுச் சான்றுகள் பகிர்கின்றன.
மொகஞ்சதரோ அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்
களிமண்ணால் செய்யப்பட்ட ஆசன நிலையில் அமர்ந்துள்ள சிலைகள் பல
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜோன்மார்சல் என்ற தொல்பொருள்
ஆய்வாளர் கூறுகிறார். மாஸன்ஓரல் என்ற பிரெஞ்சு அறிவியல்
அறிஞர் யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக
அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:04 pm

யோக நெறி மேன்மைக்கு
சிவபெருமானை யோகியாகக் கருதி சைவ சமயத்தவர் வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இது சமய வாழ்க்கையில் யோகாவின் உன்னத நிலையைக் காட்டுகிறது. சிவபெருமானை
யோகீஸ்வரர் என்று வழங்குவதும் நினைத்தற்குரியதாகும். இச்சிவபெருமானே
முனிவர்களுக்கு யோக நெறிகளைக் கற்பித்ததாகவும் கூறுவர்.

சிவன் ஞான குருவாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம்
செய்வது தட்சிணாமூர்த்தி வடிவம் என்று குறிப்பிடப்படுவது குறிப்பிட்டற்குரியது.
சைவ ஆகமங்கள் தவம் செய்வது பற்றி பல்வேறு நெறிகளைப் பகர்கின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:18 pm

யோக நெறி மேன்மைக்கு
இவ்வாகமங்கள் சிவயோகம் என்று குறிப்பிடுகின்றன. சிவன் பத்மாசன நிலையில்
இருப்பதனையே சிவயோகம் என்று தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறைவனை அடையும் நெறிகளுள் யோக நெறியும் ஒன்றாகும். மாணிக்கவாசகர்
இவ்யோக நெறியில் இருந்து இறையருள் பெற்றார் என்பது யாவரும் அறிந்த
செய்தியாகும். சிவவழிபாடு தொன்றுதொடு இருந்துள்ளமையால்,
யோகம் என்பது தொன்றுதொட்டு இருந்திருக்க வேண்டும்
என்பதும் தெளிவாகிறது.
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதை ராஜயோகம், கர்மயோகம்,
எனப் பல்வேறு யோகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆனால்
அப்பகவத்கீதை கூறும் யோகநெறிகள் வாழ்க்கையில் மனிதர்கள்
பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளாக அமைந்துள்ளன
எனலாம்.
யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக விளங்குகிறது. மனிதனின் உடல் மற்றும்
உளத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும்
கட்டுப்பாடுத்தக்கூடிய ஓர் அறிவியலாக யோகா விளங்குகிறது.
யோகாவின் தோற்றத்தை உறுதியாகக் கூற இயலாது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:21 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல யோகா வேதகாலத்திற்கும் (1500–1000 கி.வி)
பிராமனிசத்திற்கும் (800–600 கி.வி) முன்னர் தோன்றியது என்ற ரொபர்ட் வின்சன்
என்ற பிரெஞ்சு தத்துவ மேதை கூறுகின்றார். பி.பி. 300–200 ஆண்டுகளில்
வாழ்ந்த பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என
அழைக்கப்படுகின்றார்.

ஆனால் யோகாவைக் கண்டுபிடித்தவர்கள் எவர் என்று அறுதியிட்டு உரைக்க முடியாது.
பதஞ்சலி முனிவருக்கு முன்பே நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக
யோகாவைப் பயிற்சி செய்திருக்கின்றனர்.
பதஞ்சலி முனிவர் யோகா குறித்த செய்திகளை நூல் வடிவில் தொகுத்தளித்தார்.
தாம் தொகுத்தளித்த அந்நூலுக்கு அவர் யோக சூத்ரா என்று பெயரிட்டு
வழங்கினார். யோகா பற்றிய அனைத்து நூல்களிலும் இதுவே
முதன்மையும் சிறப்பும் பெற்றது என்பர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:24 pm

யோக நெறி மேன்மைக்கு
இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமாதி பதா, சதானா பதா,
விபூதி பதா, கைல்யா பதா என நான்கு பகுதிகளாக இந்நூல்
அமைந்துள்ளது. இது குறித்த கருத்து வேறுபாடுகளும்
நிலவி வருவது நினைத்தற்குரியதாகும்.
பதஞ்சலி முனிவர் காலத்தில் வாழ்ந்த திருமூலர் சிவயோகியாக
வாழ்ந்து யோக நெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும்
நூலை உலகிற்கு அளித்தார். இது பாடல் வடிவில்
எழுந்த யோக நெறிகளை விளக்கும்
நூலாக அமைந்துள்ளது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:31 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகம் சொல்லும் பொருளும்
யோகம் என்பதனை முறையான செயல் என்று குறிப்பிடலாம். இச்செயல்
மூலமாக விலங்கு நிலையில் இருந்த மனிதன் / கடவுள் நிலைக்கு
மாறுகின்றான். இம்முறையில் யோகம் என்பது தனி
மனிதனின் நோக்கங்களை நிறைவு செய்வதுடன்
சமுதாய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:35 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகம் என்பதற்கு, சேர்க்கை, அதிட்டம், நூல், நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி என
ஆறுவிதமான பொருள்களைக் கழகத்தமிழ் அகராதி வழங்குகிறது- யோக
நித்திரையில் உள்ளோரை அறிதுயிலில் உள்ளார் என்று கூறுவர் ‘யூஜ்’
என்ற வடசொல்லில் இருந்து பிறந்ததே ‘யோகா’ என்ற சொல்லாகும்.
வடமொழியில் உள்ள யூஜ் என்ற சொல், ஒன்றாக இணைத்தல்,
சேருதல், கூடுதல், இரண்டறக் கலத்தல் ஆகிய பொருள்களைத்
தருவதாக அமைந்துள்ளது. ஜிவாத்மா பரமாத்வுடன்
ஒன்றிணைவதனை வடநூலார் யோகா
என்கின்றனர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:38 pm

யோக நெறி மேன்மைக்கு
தமிழில் இதனை தவம் என்று குறிப்பிடுவர். ஜிவாத்மா என்பது ‘பசு’ உயிரினைக் குறிக்கும்.
பரதமாத்மா என்பது ‘பதி’ இறைவனைக் குறிக்கும். உயிராகிய பசு, பதியாகிய
இறைவனுடன் ஒன்றாக இணைவதையே தவம் என்று ஆன்மீகத்தில்
ஞானிகள் கூறுகின்றனர். ‘யோகா’ என்ற வடசொல்லிற்கு நேரான
தமிழ்ச் சொல்லாக, ‘தவம்’ என்ற சொல் அமைந்திருப்பது
குறிப்பிடத்தக்கது.

வடமொழியில் வழங்கப்பட்டு வரும் யோகம் என்பது தமிழில் தவம் என்று வழங்கப்பட்டு
வருவது நோக்குதற்குரியதாகும். யோகம், தவம் ஆகிய சொற்கள் மனிதனின்
உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:41 pm

யோக நெறி மேன்மைக்கு
மனிதனின் உடல், உள்ளம், உயிர் (ஆன்மா) ஆகியவை ஒன்றாக இணைந்து சீராகச்
செயல்பட்டால் வாழ்வில் ஒரு முழுமை கிடைக்கின்றது. இவை ஒன்றுடன் ஒன்று
இணையாது நின்று முரண்பாட்டுடன் செயல்படுகின்ற போதுதான் மனிதன்
துன்பங்களுக்கு ஆட்படுகிறான். மனிதன் தமக்குள் தாமே இணைந்த
பின்னர் இறைவனோடு (பரமாத்மாவோடு) இரண்டறக் கலத்தல்
(ஐக்கியமாதல்) வேண்டும். இங்ஙனம் இரண்டறக் கலத்தலை
உயரிய ஆன்மீக நிலை என்று மொழிவர்.

இத்தகைய உன்னத நிலையை அடையும் சாதனமாக, யோகா என்ற தவம்
அமைந்திலங்குகிறது எனலாம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:43 pm

யோக நெறி மேன்மைக்கு
இவ்யோகம் ராஜ யோகம், சேகரி யோகம், அட்டாங்க யோகம், சந்திர யோகம்,
பரியர்க யோகம் எனப் பலவகைப்படும். இவ்யோகங்கள் உடலை
வளமுடன் வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது. நோயின்றி
நலமுடன் வாழ்வதற்கு உறுதுணையாகவும் இவ்யோகம்
விளங்குகிறது. யோகம் உடலுக்கும், உள்ளத்திற்கும்
ஒருங்கே வலிமை தருகிறது. அதனால்
யோகாவை நாம் நம் வாழ்விற்கு
யோகம் தரும் யோகா என
மொழியலாம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum