உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

கொடைக்கானல் வரை....!

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 2 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 2 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 2 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........கொடைக்கானல் வரை....! - Page 2 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Sat Nov 14, 2015 12:25 am

அதற்குள் கசவனம் பட்டி பற்றி,

இந்த ஊர், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தனம்பட்டி அருகே இடதுபுறமாய் பிரிகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கசவனம்பட்டி என்ற ஊர்.

கொடைக்கானல் வரை....! - Page 2 DN1f3ZQPTwqaeGGWRaqA+11

கொடைக்கானல் வரை....! - Page 2 QzPVeKfLThecUpeb9Gbe+12

“தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர் இந்த சித்தர் என்றார்கள்.

இந்த சித்தர் பேசி யாரும் பார்த்ததில்லையாம். அதே போல் ஆடை அணிந்தும் இவரை பார்த்ததில்லையாம். அதனாலேயே ஜனங்கள் இவரை ‘மௌன ஜோதி நிர்வாண சுவாமி’ என்றே அழைக்கிறார்கள்.

இவருடைய பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக இவரை பன்னிரண்டு வயது சிறுவனாக தான் கண்டிருக்கிறார்கள்.

மக்கள் போர்வையோ, துணியோ கொடுத்தால் கூட கிழித்து எறிந்துவிடுவாராம். இவர் இப்படி நிர்வாணமாக இருப்பதை கண்ட அவூரார் சிலர் இவரை வண்டி வைத்து கூட்டிச்சென்று திருச்சி அருகே விட்டுவிட்டார்களாம்.

சித்தரை ஊர் கடத்தியவர்கள் தங்கள் ஊருக்கு வருவதற்கு முன்பே சித்தர் வந்துவிட்டாராம்.

கொடைக்கானல் வரை....! - Page 2 3su1s7sySG6Q2ZQ2PpS7+13

சிறிது, சிறிதாக சித்தரின் மகிமைகளை உணர ஆரம்பித்த ஊர் மக்கள் அவரை தவமாக கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அவரது பார்வை தம் மீது விழுந்தாலே தங்கள் துயரம் தீரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள் ஏராளமானோர்.

நோய்கண்டவர்கள் அவர் கையால் அடிவாங்க காத்திருப்பார்களாம். அடிக்கும்போது அவரது திருக்கரத்தினால் ஏற்ப்படும் ஸ்பரிசத்தினாலேயே தங்களை துன்புறுத்தும் விஷயங்கள் விலகி ஓடுவதை கண்டிருக்கிறார்கள்.

எங்கள் காரை ஒட்டிக்கொண்டு வந்த மெக்கானிக் கூட ஒரு முறை சித்தரின் கையால் அடி வாங்கியிருப்பதாக சொன்னார்.

1982 ல் இவர் இந்த ஊரிலேயே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.

இவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த கோவிலின் வலை தளத்திற்கு சென்று பாருங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 2 P2H5ugZSLau7fmdu4yTL+014

கொடைக்கானல் வரை....! - Page 2 P7nepSZmSFyqJXnlXYFc+hqdefault

இவருக்கு மிகவும் விருப்பமான படையல்களில் சிகரெட்டும் ஒன்று. இதில் அதிசயம் என்னவென்றால், வத்தி போல பற்றவைத்து அவர் கையில் வைக்கப்படும் சிகெரெட் புகை நாற்றம் அடிப்பதில்லை. அதே போல அந்த சிகெரெட் எரிந்து முடியும் வரையிலும் அதன் சாம்பலும் கீழே விழுவதில்லை.

அதே போல் நமது வேண்டுதல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதும் அந்த சிகெரெட் எரிந்து முடியும் நேரத்தை வைத்து கணித்து விடலாமாம். அந்த சிகெரெட் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளவும் பக்த்தர்கள் காத்துக்கொண்டு இருப்பார்களாம்.

அதுமட்டுமல்லாமல் சித்தர் மனது வைத்தால் மட்டுமே நாம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வாராம்.

நாங்களும் அவருக்கு விருப்பமான படையலை படைத்து அவரை கண்குளிர தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே எங்களை கொண்டுவந்து விட்டுவிட்டு மெக்கானிக்கும் கிளம்பிவிட்டார்.

இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிலிர்த்தவண்ணம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

கொடைக்கானல் வரை....! - Page 2 WUX6ZDrWTiqBv0dZP9KX+15

அன்று நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. அப்போதே முடிவு செய்தேன் அவசியம் இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும் என்று.

கொடைக்கானல் வரை....! - Page 2 JTpRZ5w6Tpu7ihhCQX5o+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by Hari Prasath on Sat Nov 14, 2015 12:00 pm

உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
Hari Prasath
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1032
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by ayyamperumal on Sat Nov 14, 2015 5:02 pm

@விமந்தனி wrote:

என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1174652

நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Sun Nov 15, 2015 11:24 pm

@Hari Prasath wrote:உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
புன்னகை புன்னகை பரவாயில்லை ஹரி, எது எப்பொழுது தெரியவேண்டும் என்று இருக்கிறது அல்லவா...? கவலை வேண்டாம் , முடிந்தால் கசவனம் சென்று ஒருமுறை சித்தரை தரிசித்து வாங்க..!

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Sun Nov 15, 2015 11:49 pm

@ayyamperumal wrote:
@விமந்தனி wrote:

என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.

நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
உச்சபட்ச பாராட்டுக்கு நன்றி அய்யம்பெருமாள். ஆனால், எளிமை என்பது ஓகே... அந்த மாதிரியான தெய்வ அருள் பொருந்தியவர்களை நினைத்து பார்க்கவே நாம் தவமிருந்திருக்க வேண்டும். இதில் எங்கே சித்தரைப்போல....? அவர்கள் அசாதாரணமானவர்கள் .....

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by M.Jagadeesan on Mon Nov 16, 2015 5:56 am

பயணக் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . தேர்ந்த ஆசிரியர் போல இலகுவான நடை , இடையே நகைச்சுவை , தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவல் எல்லாமே போற்றத்தக்க விஷயங்கள் . தொடர்ந்து பயணக் கட்டுரை எழுதுங்கள் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Thu Nov 19, 2015 11:05 pm

@M.Jagadeesan wrote:பயணக் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . தேர்ந்த ஆசிரியர் போல இலகுவான நடை , இடையே நகைச்சுவை , தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவல்  எல்லாமே போற்றத்தக்க விஷயங்கள் . தொடர்ந்து பயணக் கட்டுரை எழுதுங்கள் !
மிக்க நன்றி ஐயா! நன்றி நன்றி

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Thu Nov 19, 2015 11:06 pm

சரியாக மாலை 5 மணியளவில் பழனி வந்தடைந்தோம்.

கொடைக்கானல் வரை....! - Page 2 9jmHGR3zSLKj4SVzWrs9+16

பழநி தேவஸ்தான விடுதிகளிலேயே ஓர் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். பிறகு அரை மணிநேர இடைவெளியில் கோவிலுக்கு புறப்பட்டோம்.

அதற்குள்,

பழனியை பற்றி ஏற்கனவே தம்பி செந்தில் அழகாக சொல்லிவிட்டபடியால் எனக்கு வேலையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதில் விடுபட்ட விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.

பழநி முருகன் சிலை பற்றிய சிறப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த சிலையினை செய்த போகர் என்ற சித்தர் பெருமானை பற்றியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

கொடைக்கானல் வரை....! - Page 2 Q8AHqP7Sqe1LsGapMwhw+17

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து (சதுரகிரியில் தான் இந்த சிலையை செய்திருக்கிறார்) அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

அந்த நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலை தான் பழநி முருகன். நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

மேலும் பழநி தண்டாயுதபாணியின் பெயர் காரணமாக சொல்லப்படுவது, இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான்.

கொடைக்கானல் வரை....! - Page 2 Kp1XxYXfT7a22znut6Rj+018
படம்: இணையம்

அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான்.

முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.

கொடைக்கானல் வரை....! - Page 2 JXjLgnkFTc6pMFa9Agxg+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Thu Nov 19, 2015 11:45 pm

ஆறு மணியளவில் ரோப் காரில் செல்ல வரிசையில் நின்றோம். படிகளில் ஏறி செல்லத்தான் ஆசை. ஆனா, வயசான காலத்துல முடியுமா...? வேண்டாம் ரிஸ்க் என்று இந்த முடிவு.

ரூ.50/- மற்றும் ரூ.15/- என்று கட்டணம் வசூலிக்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம். போக வர என்று இரண்டு கம்பிவடங்கள் தான் இருக்கின்றது. அப்புறம் எப்படி 15 ரூபாய்க்கு ஒருமாதிரியும், 50 ரூபாய்க்கு ஒருமாதிரியும் கூட்டிச்செல்வார்கள்..? 15 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை மெதுவாகவும், 50 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை வேகமாகவும் கூட்டிச்செல்வார்களா..... இந்த எக்ஸ்பிரஸ் - பாசென்ஜெர் ட்ரைன் போல..... அய்யோ, நான் இல்லை

சரி, எதற்கு வீண் சந்தேகம் என்று அருகே இருக்கும் காவலாளியிடம் கேட்டேன். அதற்க்கு அவர், “50 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை சீக்கிரம், சீக்கிரம் விடுவாங்க... 15 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை மெதுவா விடுவாங்க...” என்றார்.

சரி தான். தர்ம தரிசனம் போல விடுவார்கள் போலிருக்கு.

டிக்கெட் வாங்கி ரோப் காரிலும் ஏறியாச்சு, அந்த ஆண்டவனை தரிசிக்க.

கொடைக்கானல் வரை....! - Page 2 Xg5FOHpLRPiivnFMwARJ+019

கொடைக்கானல் வரை....! - Page 2 OsGH8CiWS3y4Gg8CMzEB+020

கொடைக்கானல் வரை....! - Page 2 OPAs7118RkaY8moE8dOo+021

கொடைக்கானல் வரை....! - Page 2 Kv1KPS8TSj6dQ3rSLN9Q+023

நெரிசல் அவ்வளவாக இல்லை என்றாலும், கூட்டம் கணிசமாய் தான் இருந்தது. VIP வரிசையில் நின்று முருகனை ராஜ அலங்காரத்தில் மிக அருகே தரிசித்தது, இன்னமும் என் கண்களை விட்டு அகலவில்லை.

கொடைக்கானல் வரை....! - Page 2 7Z78QkTBqfZCSHgMjDmQ+01
படம்: இணையம்

முருகனை கண் குளிர தரிசித்துவிட்டு, ஆளுக்கொரு பஞ்சாமிர்த பாட்டிலோடு அதே ரோப் காரில் எட்டரை மணிக்கு கீழிறங்கினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 2 GNSLDFKGRSiSXAkI6leB+022

கொடைக்கானல் வரை....! - Page 2 W4mU9sZQ6ud7X1wMk6yz+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Fri Nov 20, 2015 12:01 am

இங்கே மிக அதிகமாக மலையாள மக்கள் தான் காணப்படுகிறார்கள். தேவஸ்தான அறைகளில் அவர்கள் தான் மிக அதிக அளவில் அக்ரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நம் மக்கள் சபரி மலையை நேசிப்பது போல, அவர்கள் நம் பழனி மலைக்கு வந்து செல்கிறார்கள். பலர் குழந்தைக்கு போடும் முதல் மொட்டையை இங்கே போடுவதற்காகவே வருகிறார்கள்.

இன்னொன்றும் சொல்லவேண்டும். கோவில் மற்றும் அடிவாரம் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது போலும். ஆங்காங்கே இருக்கும் இலவச டாய்லெட்கள் கூட சுத்தமுடன் இருக்கிறது.

அதே போல தேவஸ்தான அறைகளில் கூட ஹவுஸ் கீப்பிங் சூப்பர்!

நாங்கள் இரண்டு நாட்கள் பழநியில் தங்குவதாக திட்டம். அதன் படி மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பழநியில் இருந்து புறப்பட்டோம். கொடைக்கானல் வரை....! - Page 2 MavAv3dgQ7m8Arpytkfy+rally_guys
எங்கே.....?கொடைக்கானலுக்கு..................

கொடைக்கானல் வரை....! - Page 2 Xn7NCbRQySJAi4iMjVPA+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by ayyasamy ram on Fri Nov 20, 2015 6:33 am

கொடைக்கானல் வரை....! - Page 2 103459460 கொடைக்கானல் வரை....! - Page 2 3838410834
-
தொடருங்கள்...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Fri Nov 20, 2015 12:45 pm

@ayyasamy ram wrote:கொடைக்கானல் வரை....! - Page 2 103459460 கொடைக்கானல் வரை....! - Page 2 3838410834
-
தொடருங்கள்...

நன்றி நன்றி

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by K.Senthil kumar on Fri Nov 20, 2015 4:03 pm

பதிவு அருமை மனக்கண்ணில் சுற்றுலா சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.தொடருங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Wed Nov 25, 2015 11:26 pm

@K.Senthil kumar wrote:பதிவு அருமை மனக்கண்ணில் சுற்றுலா சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.தொடருங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738 கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி on Wed Nov 25, 2015 11:40 pm

கொடைக்கானல் வரை....! - Page 2 DOc2PABxSkq9eNpRq2AX+1

கொடைக்கானல் வரை....! - Page 2 S34GZMmKSJiBWrV6IzrB+2

கொடைக்கானல் மலையின் துவக்கத்திலேயே கருப்புசாமியின் தரிசனம். காக்கும் தெய்வமாக எல்லையிலேயே அருள்பாளித்துக்கொண்டிருந்தார். கருப்புசாமியை பார்க்கமுடியாமல் வந்த என் கவலையும் தீர்ந்தது.
இறங்கி, கற்பூரம் ஏற்றி அவரை வணங்கி மறுபடியும் எங்கள் பயணத்தை துவங்கினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 2 E1F083JKTUUhzJBJ1eDP+3

கொடைக்கானல் வரை....! - Page 2 KWMnR6dcSRCh8C7sJULL+3-1

கொடைக்கானல் வரை....! - Page 2 Rjr0bnh3RTaqfvf0ZErb+4

அதிகாலை நேர மலைப்பாதையின் ரம்யமான சூழல் மனதிற்கு மிக இதமாக இருந்தது. வழியெங்கும் ரசனை மிகுந்த காட்சிகள்.... மனம் கவர்ந்த இடங்களில் எல்லாம் நின்று, நின்று முடிந்தவரை மலையின் அழகை எங்கள் காமிராவுக்குள் அடைத்துக்கொண்டு வந்தோம்.  

கொடைக்கானல் வரை....! - Page 2 MiHHutuzTSyocSPuLOYp+5

இதில் ஒரே சங்கடம் என்னவென்றால், ரோடு தான் சமீபத்திய மழையால் ஆங்காங்கே மிக மோசமான நிலையில் இருந்தது. கிளம்பும் போதே சொன்னார்கள் ரோடு கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது பார்த்து செல்லுங்கள் என்றார்கள்.

அப்போதே பீதி கிளம்பி விட்டது எனக்கு. என்ன செய்யறது... என்று கவலைப்பட்டால், ‘பாத்துக்கலாம் வா....’ என்று இவர் கிளம்பி விட்டார்.  அது வேறு அடிக்கடி நினைவில் வந்து வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது. இவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் குதூகலமாய் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார்.

கொடைக்கானல் வரை....! - Page 2 ZO4O50lRMidFRt7smwpZ+6

இன்னும் இப்போது பெய்திருக்கும் மழைக்கு எப்படி இருக்கிறதோ...

கொடைக்கானல் வரை....! - Page 2 YMtxQ22RyhD5MEmoP4rA+7

மேலும் பாதை சீரமைப்பு பணியும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 2 EtcXgVUwRtWmF0MoW6mT+8

கொடைக்கானல் வரை....! - Page 2 FtkQ8WC8Sjak2UediBM1+9

கொடைக்கானல் வரை....! - Page 2 Hi5JUm7NQSyoIfCPq03n+10

சற்று தூரம் சென்றதும் சிறிய உணவு விடுதிகள் கண்ணில் பட ஆரம்பித்தது. எங்கும் காலை உணவு தயாராகி இருக்கவில்லை. குளிரின் தாக்கத்திற்கு தயங்கி அங்குதிக்கும் சூரியனைப்போலவே மக்களும் தாமதமாக தான் உறக்கம் கலைக்கிறார்கள் போலும்.

கொடைக்கானல் வரை....! - Page 2 NTJGi7VFSsW2vyi23Pxj+11

ஒரு வழியாக ஓரிடத்தில் அப்போது தான் தயாராகி இருப்பதாக சொன்னார்கள். அங்கேயே எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டோம்.

சுடச்சுட ஆவி பறக்கும் மிருதுவான இட்டிலிகள் சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டது குளிருக்கு இதமாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 2 CX4gyMmITbSJtgS3M6za+12

சாப்பிட்டதும் அங்கிருந்து கிளம்பினோம். இன்னும் கொடைக்கானலுக்கு 39 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 2 0LWkwZTQqapyQNXxalSG+13

கொண்டை ஊசி வளைவுகளில் ஒருவித த்ரிலிங்கோடு, விமந்தனியின் பயமும் சேர்ந்து கொள்ள எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது.....

கொடைக்கானல் வரை....! - Page 2 KYUxZeKuTZaQwB5dwcum+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 2 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை