ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 ayyasamy ram

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)

View previous topic View next topic Go down

ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 26, 2015 6:22 pm

ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)

  ஜி.யு.போப் (George Uglow Pope, 1820 - 1908) , கனடாவில் பிரந்தவர் ; இங்கிலாந்தில் வளர்ந்தவர் ; இங்கிலாந்திலிருந்து கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தவர் ;
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ;நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் . இவர் 1855இல், Tanjore Mission House இல் இருக்கும்போது A Tamil Hand Book என்ற ஆங்கில நூலைத் தமிழ் எடுத்துக்காட்டுகளுடன்  வெளியிட்டார் ; பிறகு இங்கிலாந்து சென்றபோது அங்கு இதே நூலை விரிவுபடுத்தினார் ; விரிவான நூல் 1904இல் ஆக்ஸ்போர்டில் ( இங்கிலாந்து நாட்டின் Oxford நகரம் இலண்டனிலிருந்து 96 கி.மீ. தொலைவில் உள்ளது) வெளிவந்தது; 1904இல் வெளிவந்த இந்த நூலின் மறு அச்சு 1979 , 2006 ஆகிய ஆண்டுகளில் புதுடெல்லியில் வெளிவந்துள்ளது ; 1855க்கும் 1904க்கும் இடையே ஆறு பதிப்புகள் சிற்சில மாற்றங்களுடன் வெளிவந்ததால் , 1904ஆம் ஆண்டுப்பதிப்பு 7ஆம் பதிப்பு எனக் குறிக்கப்படுகிறது; நான் ஆய்ந்த பதிப்பு 2006ஆம் ஆண்டுப் பதிப்பே .  
இதில் ஜி.யு. போப் அவர்கள் ( ‘போப்பையர் ’ எனக் குறிப்பிடப்படுபவரும் இவரே) நூற்றுக்கணக்கான தமிழ்த் தொடர்களைத் தமிழ் எழுத்தில் தந்துள்ளார் ! இவை 19ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் தொடர்கள் ஆகையால் தமிழ் உரைநடை வரலாற்றில் (History of Tamil Prose) சிறப்பிடம் பெறுகின்றன! ’வெளிநாட்டார் பார்வையில் தமிழ்’ என்ற நோக்கிலும் இவை குறிப்பிடத்தக்கன !
  ஜி.யு. போப்பின் இந்தத் தமிழ்த் தொடர்களில் குறிப்பிடத்தக்கவை மட்டும் அவரது வடிவம் மாறாமல் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன ! :-

1. கணக்கனைத் தொட்டான்
2. சின்ன மாடு மரத்தை அழித்தது
3. சின்னப் பையன் எந்தப் புஸ்தகத்தைப் படிக்கிறான்?
4. செம்மையாய் உச்சரிக்க வேண்டும்
5. முனிஷி வருகிறார்
6. இவள் என்னுடைய தாய் அல்ல
7. சின்னப் பையன் சுறுசுறுப்பாய்ப் படிக்கிறானா ?
8. பத்துப் பாரம் இரும்பு எடுக்கிறர்கள்
9. பண்டி கொண்டுவரச் சொல்லு
10. காவற்காரர் அந்தப் பணத்தை அடைவார்கள்
11. நீ அந்த ஆட்டைக் கொல்லவேண்டாம்
12. தாயினுடைய வீடு அப்பொழுது வெந்தது
13. வஸ்திரங்களை உடுக்கிறார்கள்
14. ஊரார் உழவேண்டும்
15. பிள்ளை முழங்காலாலே தவழ்ந்தது
16. என் பாடத்தைச் செம்மையாய் எழுதினேன்
17. தாயிடத்தில் பிள்ளை தூங்குகிறது
18. பிள்ளைகள் வீட்டிலே குளிக்கிறார்களா?
19. எனக்கு அந்த அரிசியைக் காட்டு
20. ஊரார் என்னிடத்தில் பேசுவார்களா எழுதுவார்களா?
21. தீமைக்குத் தீமை செய்ய வேண்டுமோ?
22. நான் இந்த ஊர்க் கணக்கன் என்றான்
23. என் பசுவைக் காட்டிலே கண்டீரோ ?
24. வர்த்தகனிடத்தில் என்ன வாங்கினாய்?
25. அந்தச் செட்டிக்கு என்னத்தைக் கொடுப்பாய்?
26. ஊரில் இருக்கும் வைத்தியன்
27. ஊரார் நட்ட மரங்கள்
28. நான் எழுதின பாடங்களை முனிஷி பார்க்கவேண்டும்
29. நான் சொல்லும்பொழுது உனக்குத் தெரியவரும்
30. நான் அந்தப் பாடத்தைக் கேட்டு வாசித்து எழுதினேன்
31. காவற்காரன் நம்முடைய வேலைக்காரனை வைது அடித்தான்
32. பையன் தேடின புஸ்தகங்களை எடுத்துக்கொண்டுவா
33. ஏன் அவளைக் காட்டிலே விட்டுவந்தாய் ?
34. கணக்கன் பணத்தை எனக்குக் கொடுத்திருந்தான்
35. வேலைக்காரர் கட்டியிருந்த வீடு விழுந்தது
36. அதை அவன் பார்க்கவில்லை ஊராரால் கேட்டிருந்தான்
37. இன்னஞ் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆசை
38. நான் பிள்ளையைத் தேடின பிற்பாடு கணக்கனுடைய வீட்டில் இருக்கிறது என்று காவற்காரன் சொன்னான்
39. அந்த நாயை அடிக்கவேண்டாம் என்று கட்டளை கொடுத்தேன்
40. முன்னே போகச் சொன்னேன் அல்லவா? ஏன் பின்னே வந்தாய்?
41. பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
42. ஆடுகளை மேய்க்கிறவன் மேய்ப்பன்; உரைக் காக்கிறவன் காவற்காரன்
43. நான் வீட்டுக்கு வருவதறிந்து கதவைத் திறக்கவும் மற்ற வேளை மூடிவைக்கவுஞ் சொன்னேன்
44. சம்பாதித்ததைக் காப்பாற்றவேண்டும்; காப்பாற்றினதை விர்த்தி பண்ண வேண்டும்
45. இந்த மேசை தச்சனாலே செய்யப்பட்டது
46. வெட்டியானையும் காவற்காரனையும் கூட்டிவா
47. நான் துரைக்கு ஒரு அர்ஜி எழுதினேன்
48. அந்த மனு சுவாப்நவீஸினாலே வாசிக்கப்பட்டது
49. எழுதுகிறதற்குக் காகிதம் என்னிடத்தில் இல்லை
50. நல்லது, என் மகன் இந்த வழக்கைக் குறித்துச் சரியாகத் தீர்ப்புச் செய்தால்.
----------------------------------------
தொகுத்தவர் குறிப்புகள் :-
5 . Munshi – இது பாரசீகச் சொல் ; மொழிப்புலமை உள்ளவர் என்பது பொருள்.
8 . 1 பாரம் = 245-260 கிலோ எடை.
9 . பண்டி – வண்டி
13 . வஸ்திரங்கள் – ஆடைகள்
22 . கணக்கன் – கிராமத்துக் கணக்குகளை எழுதுபவர் ; Village accountant
24 . வர்த்தகன் – வியாபாரி
46 .வெட்டியான் -  பிணத்தை எரிப்பவர்/சவக்குழி தோண்டுபவர்
47 . அர்ஜி – மனு (petition)
48 . சுவாப்நவீஸ் – அரசு எழுத்தர்
***


Last edited by Dr.S.Soundarapandian on Mon Oct 26, 2015 6:40 pm; edited 1 time in total
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது) (தொடர்ச்சி) ( 2)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 26, 2015 6:28 pm

ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)
(தொடர்ச்சி) ( 2)
51. கரும்பைக் கழுதை முன் போட்டால் கழுதைக்குத் தெரியுமா கரும்பின் ருசி?
52. இங்கே வருவாயே ஆனால் அந்தப் பணத்தை உனக்குத் தருவேன்
53. குருவி பாடியும் அவள் கேட்கவில்லை
54. அந்த ஊரார் மாசூல் அறுத்திருந்தும் கிஸ்திப்பணமில்லை யென்றார்கள்
55. கணக்கன் ஊராரிடத்தில் வரியைக் கேட்கவேண்டும்; ஏனெனில், மாசூல் முன்னமே அறுத்திருக்கிறார்கள்
56. அந்தக் காட்டிலே மரங்களை நட்டிருந்தாலும் ஊரார் உழுது பயிர் செய்யவேண்டும்
57. துரையுடைய சுவாப்நவீஸ் அந்தக் கட்டளையை எழுதி அனுப்பலாமா ?
58. நீ கணக்கனோ காவற்காரனோ? நான் கணக்கன் அல்ல காவற்காரன்தான்
59. குடிகள் தீர்வையைச் செலுத்தினபொழுது மாசூல் அறுக்கலாம்
60. ஊரார்  உன்னை வைதிருந்தாலும் நீ குடிகளை அடித்துப் பிடித்துச் சண்டை செய்யலாமா?
61. இந்தப் பணம் ஊரிலே செல்லாது என்றான்
62. அந்தப் பெரிய குதிரை பண்டியிலே போகுமா? போகாது என்று நினைக்கிறேன்
63. வக்கீல் என்னைக் கூப்பிட்டுக் கேட்கவில்லை
64. அந்தச் சம்பளம் வயிற்றுக்குப் பற்றாது
65. தகாததைச் செய்பவன் படாததைப் படுவான்
66. புத்தியற்ற அஞ்ஞான நூல் படியாதே
67. தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உறையும் இல்லை
68. இவனை அறியாமல் இவன் பின்னே போய்ச் சோதித்து வாருங்கள்
69. இவர்கள் அந்தப் பணத்தைச் செலுத்தாவிட்டால் அவர்கள் காவலில் போடப்படவேண்டும்
70. அந்த வேலை செய்த தச்சருக்கும் கணக்கனுக்கும் சம்பளம் கொடுக்கிறபொழுது கொஞ்சம் சந்தோஷம் கொடுத்தேன்
71. குடும்பக் கவலை எள்ளளவும் இல்லாமையால் இவ்வளவு பெலத்துடன் இருக்கிறான்
72. மனக் கவலையே பலக்குறைவுக்குக் காரணம்
73. தனக்குள்ளது உலகத்துக்கு உண்டு, தனக்கில்லது உலகத்துக்கும் இல்லை என்றான்
74. பத்திரமாகப் புதைத்து வை
75. நாலுபேர் திருடர் ஒரு பட்டணத்தில் ஒரு கிழவியின் வீட்டிலே இறங்கித் தாங்கள் திருடிப், பொதுவில் வைத்திருந்த உடைமைகளையும் பணங்களையும் ஒரு தவலையிலே போட்டு மேலே முத்திரை இட்டு ‘நாங்கள் நாலுபேரும் ஆக வந்து கேட்கும்போது இதைக்கொடு அதுவரைக்கும் பத்திரமாகப் புதைத்துவை ’ என்று கொடுத்துச் சில நாள் அவள் வீட்டிலே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
76. அநியாயபுரம் என்ற பட்டணத்திலே துன்மார்க்கன் என்கிற இராசா துர்ப்புத்தி என்கிற மந்திரியை வைத்துக்கொண்டு இராசரீகம் பண்ணினார்.
77. புத்தி யுள்ளவர்களுக்குச் சித்தியாத தொன்றில்லை .
78. அநேகர் வீணாய்ப் பேசிக்கொண்டிருக்கையில் நீ பேசாமல் இருக்கக் கடவாய்
79. ‘மோர் வாஅங்குதற்கு அந்தக் கிழவி வீட்டிலேபோய்த் தோண்டி எடுத்துக்கொண்டு வா ’ என்று அனுப்பினார்கள்.
80. அவன் மனைவிமார் இரண்டுபேர் மாத்திரம் அங்கே இருந்தார்கள்
81. எட்டியுடன் சேர்ந்த இலவுந் தீப்பட்டது
82. தன் பிள்ளையைச் சக்களத்தி பொறாமையினாலே கொன்றாளென்று பழிபோட்டுக் கூவி அழுதுகொண்டு பிரியாது செய்யப் போனாள்.
83. உங்கள் வாக்குமூலப்படியே நீங்கள் மூன்றுபேர் மாத்திரம் கேட்டால் கொடுக்கக் கூடாது; நாலுபேருமாக வந்து கேட்டால் உங்கள் பொருளை அவள் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புச் செய்வேன்.
84. பஞ்சு மூட்டைகளை எலிகள் கடியாதிருக்கும் பொருட்டு அவர்கள் ஒரு பூனையை வளர்த்தார்கள்.
85. அவனுடைய தகப்பன் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டு மாறுவேஷங் கொண்டு நியாயஸ்தலத்துக்குச் சமீபத்திலே வந்திருந்தான்.
86. அதைக் கேட்டு இராசா சந்தோஷித்து அவனை நியாயாதிபதியாக ஏற்படுத்திச் சகல வெகுமானமுஞ் செய்து தன்னிடத்தில் வைத்துக் கொண்டான்.
87. ஆனை ஒன்று, குதிரை மூன்று , தேர் ஏழு, காலாள் ஒன்பது , ஸ்திரீகள் நாலு ,தங்கம் ஒரு பாரம் இந்தப் பிரகாரம் கொடுக்க வேண்டும்.
88. ஆயிரத்து எண்ணீற்று ஐம்பத்தைந்தாம் வருஷத்திலே அது நடந்தது.
89. ஒன்பதினாயிரம் வராகனை இந்தப் பிள்ளைக்குக் கொடு.
90. தேவிக்குத் தொளாயிரதுத் தொண்ணூற்றொன்பது இராசாக்களின் தலைகளைப் பலி கொடுத்தான்.
91. ஒருகண் குருடன் வரும்போது , அவனைக் கண்ட கூனன் இகழ்ச்சியாக , ‘வாரும் ஐயா ஒருகண் பார்வைக்காரரே !’ என்றான்;குருடன் கூனனுக்குச் சொல்லுகிறான் , ‘மெய்தான் ஐயா முதுகு மூட்டைக் காரரே !’
92. எங்கள் கோவிலுக்கு அநேகம் மருளாளிகள் உண்டு.
93. இவன் பாக்கிய சாலி , அவன் புத்திசாலி.
94. சீவல் கோர்ட்டிலே பிராது பண்ணினான்
95. இண்டாஸ் பண்ணி அனுப்பி இருக்கிறார்.
96. கலேகட்டர் சாயிபு வந்திருக்கிறார்.
97. வந்த தேவரைக் கண்டு அரிச்சந்திரன் மகிழ்ந்தான்.
98. இதோ தங்களிடத்தில் வந்திருக்கிறாரே வித்துவான்.
99. இராசோபசாரங்கள் தனக்கு நடந்து வருகிறதிலும் அவ்விடையனுக்கு நாளுக்கு நாள் அதிகமாக நடந்து வரும்படியாகத் திட்டஞ் செய்தான்.
100. இப்படிப்பட்ட மானக் கேடான காரியத்தைச் செய்யலாமா?

(தொகுத்தவர் குறிப்புகள் :

54 . மாசூல் – மகசூல்; விளைச்சல்;
    கிஸ்திப்பணம் – வரிப்பணம்
82 . பிரியாது – விண்ணப்பம் (Fariyad)
88 . 1855இல் அவர் எழுதிய இலக்கணத்தைக் குறிப்பதைக் காண்க!
89 . 1 வராகன் = 3½ மில்லி கிராம்
     92 . மருளாளி – சாமியாடிக் குறிசொல்லும் பூசாரி
94 . சீவல் கோர்ட் – Civil court
95 . இண்டாஸ் – Endorsement (மேற்குறிப்பு)
96 . கலேகட்டர் சாயிபு – Collector saheb
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது) (தொடர்ச்சி)( 3)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 26, 2015 6:31 pm

ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)
(தொடர்ச்சி)( 3)

101. குழந்தையைக் கொன்றுபோட்டவளை அழைத்து ’நீ ஏன் இப்படிப்பட்ட சிசுவத்தி செய்தாய்?’ என்று கேட்டான் .
102. உன்னுடைய யானை ஆகஸ்மீகமாகச் செத்துப் போச்சுது; அதற்கு விலையானாலும் பதிலாக யானையானாலும் உனக்குக் கொடுக்கிறேன்.
103. நான் இவனிடத்தில் கடன் வாங்கினதும் இல்லை , சீட்டைக் கிழித்ததும் இல்லை .
104. அரிசி உண்டானால் வரிசையும் உண்டு .
105. பத்து வயது முதலாக முப்பது வரைக்கும் தர்க்க சாஸ்திரம் ஒன்றையே கற்றுக்கொண்டான்.
106. ஓயாமற் பொய் சொல்லுகிறவர்களும் , நல்லோரை நிந்திக்கிறவர்களும், பெற்ற தாயாரை வைகிறவர்களும் , ஆயிரஞ் சதிகளைச் செய்பவர்களும், சாஸ்திரங்களை ஆராயாதவர்களும்,பிறருக்கு உபகாரஞ் செய்யாதவர்களும்,தங்களை அண்டினவர்களுக்கு ஒன்றும் கொடாதவர்களும் , இருந்தென்ன போயென்ன ?
107. வண்டில் ஓடுவதேன் ? மச்சான் உறவாடுவதேன்? அக்காளைக் கொண்டு !
108. என் மந்தையிலே ஓர் ஆட்டுக்கு இந்த வலி வந்து கோணக்கோண இழுத்து எதினாலேயும் பிழையாமற் செத்துப் போச்சு !
109. அந்த ஊராரைக் காத்தவன் எவனோ அவனை நாம் அண்டிக்கொள்ள வேண்டும்.
110. சூரியன் தோன்றாததற்கு முன்னே வேலைக்காரர்கள் வந்தார்கள்.
111. பென்னம் பெருத்த புயத்தோடிருக்கிறான்.
112. ஆற்றிலே புருஷன் முன்னும் பெண்சாதி பின்னுமாய்ப் போகிறபொழுது மற்றொருவன் இவர்கள் பின்னாலே இறங்கி வந்தான்.
113. நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போற் காணுமே.
114. அந்த ராசா தன் பிள்ளைகள் படியாமல் மூடர்களாய் இருக்கிறதைக் கண்டு வெகு விசனத்தோடே ஆலோசித்தான்.
115. திகில் எடுத்துப் பட்டணத்திற்குப் புறத்திலே வந்து மூன்று நாள் இருந்தான்.
116. இது நான் காடுவெட்டுங் கோடாலி.
117. என் புருஷனை என்னோடுகூடச் சேர்க்கவேண்டும் ஐயா.
118. மூவரும் வந்து உனகெனக்கென்று வியாச்சியப் பட்டார்கள்.
119. ஒருத்தி ஒரு காசுக்கு மீன் வாங்கி வைத்தாள் .
120. அந்தப் பட்டணத்துக்குக் காதவழி தூரத்திலே இறங்கினார்.
121. அவன் கௌவின திரவியத்தை வித்துவானுக்கு வாங்கிக் கொடுத்துத் திருடனுக்குச் சாஸ்திரப்படி தண்டனையுஞ் செய்தான்.
122. அதற்குத் தகுந்த அபராதம் வாங்கிக் கோழிக்காரிக்குக் கோழி பதிலுக்குக் கொடுக்கும்படி உத்தரவு செய்தான்.
123. நாளைக் காலமே ஊருக்கு அப்புறம் கொல்லை மேட்டிலே இருப்பேன்.
124. இவ்விருவர்களிலே உன் புருஷன் யார் என்று கேட்டான்.
125. மரத்துக்காரன் சந்தடி அறிந்து வீட்டிலிருந்து அதட்டிக்கொண்டே ஓடி வருகையில் திருடன் அதை அறிந்து மரத்தில் இறங்கி வந்தான்.
126. நல்ல மழை பெய்திருக்கையில் எப்படி விதையினின்று முளைகள் புறப்படுமோ அப்படி ராசாவின் கேள்விக்கேற்க என் வாக்கினின்றும் உத்தரவு புறப்படும்.
127. பொன்னின் குடம் உடைந்தாற் பொன்னாகும் ; மண்ணின் குடம் உடைந்தக்கால் என் ஆகும் ?
128. தன் மனையாளைத் தாய்வீட்டுக்கு அனுப்பிப் பின்பு அவளைப் பேணாத பேதை பதர்.
129. தண்ணீர் குடிக்க ஆற்றங் கரைக்குப் போனான்.
130. ஒருவன் பத்துப் பாரம் இரும்பு வாங்கி ஒருவனிடத்திலே வைத்து மற்றொரு தேசத்திற்குப் போய்ச் சில வருஷங்கள் கழிந்த பின்பு வந்து அவனை ‘இரும்பைக் கொடு’ என்று கேட்டான்.
131. மரத்தின் பழம் மரத்தண்டையே விழும்.
132. அபசாரி ஆடுகிறது குலத்துக் கீனம்.
133. அந்தக் கிடாரி கன்று போட்டது .
134. அஜூர் உத்தரவு பிறந்தது .
135. அவளைப் பார்த்துக்கொண்டே செய்தேன் ; அதினாலே குடம் பெரிதாகப் போயிற்று.
136. அம்மையார் நூற்கிற நூல் கிழவனாருடைய அரைஞாணுக்குக் காணாது.
137. என்னைக் கட்டிவைத்து நீ போ.
138. தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.
139. அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நாடும்.
140. அவன் தலை அம்மிக்கல்லிலே பட்டு உடைந்தது.
141. மனையின் வாழ்வென்னும் வலையில் விழுந்து மானைப்போல் பிடிபட்டான்.
142. என் மந்தையிலே ஒரு பசு சதை பிடித்து மேனி இட்டிருக்கிறது.
143. புத்திர சந்தானம் அருள வேண்டும் என்று தவம் பண்ணினான்.
144. இம் மூன்று பேரையும் மொட்டை அடித்துத் துரத்திவிடவேண்டும் .
145. அவன் பிரசங்கிக்கிறதற்கு முன்னே ஒருவரும் தர்க்கம் பண்ணாமல் அடித்துப் போடுவான் .
146. பெரு மழை அடிக்கிறபோது குளிராது; சிறு தூறல் தூறும்போது குளிரும்.
147. ஒரு சால் அடிப்பேன், இரண்டு சால் அடிப்பேன்; சும்மா மடக்கி மடக்கி அடிக்க என்னால் ஆகாது.
148. அவ்வளவு சாதமும் கறியும் இரண்டு வாயிலே பூராவாய் அடித்துப் போட்டான்.
149. ஆன முதலில் அதிகம் செலவாகிறது சரியல்ல.
150. முன்னோர்கள் அப்படிச் சொல்லுவார்கள்.
151. சுவரில் எழுதிய சித்திரம் போலச் சற்றும் அசையாது கல்லுங் கரைந்துருகப்  பாடினாள்.
152. சத்தியம் எவனை விடுதலை ஆக்கினதோ அவனே விடுதலை பெற்றவன்.
153. நல்லவனாய் வாழ்வதைக் குறித்துக் கவலைப்படாமல் , தீர்க்காயுசுள்ளவனாய் வாழவேண்டும் என்று விரும்புவது வீண்.
154. இவ்விரண்டு பேருக்கும் பேர்பாதியாகக் கொடுத்து விடுவோம்.
155. என் உடைமையை இப்படியாக விலை மதிக்கவும் நேரிட்டதா ?
156. புருஷன் இன்னான் என்று குறிப்புக் காணமாட்டாமல் திகைத்தாள்.
157. யாவரும் மேலான காரியத்தையே ஆலோசிக்க வேண்டும்; அது கைகூடாவிட்டாலும் பெருமை வரும்.  
158. அவனுக்கு ஏக்கம் பிடித்து விசனத்துடன் படுத்துக் கொண்டான்.
159. தங்கள் வித்தையினுடைய அருமை பெருமைகளைக் காண்பித்தார்கள்.
160. பார்க்கப் பார்க்க மனோரம்மியமாய் வேடிக்கையாய் இருக்கும்.

(தொகுத்தவர் குறிப்புகள்:-

101 . சிசுவத்தி – குழந்தையைக் கொலை செய்தல்
102 . ஆகஸ்மீகம் – திடீரென்று
105 . தர்க்க சாஸ்திரம் – Logic (அறிவுப்பூர்வ வாக்குவாதம்)
107 . அக்காளை – அக்காள் + ஐ; அக் * காளை;
காளையால் வண்டி ஓடுவது ஒன்று; அக்காளுக்காக மச்சான் உறவாடுவது மற்றொன்று !
108 . வலி – வலிப்பு நோய்
111 . ‘ சின்னஞ் சிறிய’ என்பதற்கு எதிர்மறையாகப்  ‘பென்னம் பெரிய’ என ஆளப்பட்டுள்ளதைக் கவனிக்க !
118 . வியாச்சியப் படுதல் – நியாய வழக்கிடுதல் (Dispute)
119 . 1 காசு = 1 பைசா
120 . 1 காதம் = 6.7 கி.மீ. தூரம்
121 . கௌவின – அபகரித்த
132 . அபசாரி – Prostitute
133 . கிடாரி – ஈனுவதற்கு முந்தைய நிலையிலுள்ள இளம் பசு (Heifer)
134 . அஜூர் – தலைமையிடம்(Uzur)

142 . மேனி இட்டிருக்கிறது – அளவில் பெருத்திருக்கிறது
143 . புத்திர சந்தனம் – ஆண்குழந்தைப் பேறு
145 அடித்துப் போடுதல் – வாய் மூடச் செய்தல்
146 . சால் – உழும்போது ஏற்படு நீள் குழி (Furrow)
148 . வாயிலே அடித்துப் போடுதல் - சாப்பிடுதல்
149 . ஆன முதலில் – உருவான முதலைவிட
153 . தீர்க்காயுசு – நீண்ட ஆயுள்
154 . பேர்பாதி – சரிபாதி
159 . வித்தை – கல்வி
160 . மனோ ரம்மியம் = மன +  ரம்மியம் ; மன நிறைவு)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)

Post by ayyasamy ram on Mon Oct 26, 2015 7:20 pm


-
தகவலுக்கு நன்றி...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37352
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 26, 2015 8:34 pm

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஜி.யு.போப் எழுதிய உரைநடை (இதுவரை தொகுக்கப் படாதது)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum