ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Thu Oct 22, 2015 6:54 am

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
    செயம் செயம் என்றாட     இடை
   சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
    தண்டை கலந்தாட
   கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
    குழைந்து குழைந்தாட     மலர்ப்
   பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
    பந்து பயன்றாளே


குற்றாலக் குறவஞ்சி:திரிகூட ராசப்பக்கவிராயர்,திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

குறவஞ்சி திரைப் படம் . பாடலை பாடியவர் ,சிதம்பரம் ஜெயராமன்

    குறவஞ்சியில் பந்தாடல் நிகழ்ச்சி சிறந்த ஆடல் நிகழ்ச்சியாக அமையும். இதற்குத் தகுந்த நிலையில் பாடலமைதியும், இசையமைதியும் தாள அமைதியோடு அமைக்கப்படும். குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி பந்தடிக்கிறாள். அப்பொழுது அவளுடைய செங்கையில் உள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும் செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இவ்வகை ஒலிநயம் மிக்கப் பாடல்கள் ஆடலை அழகுபடுத்தும்.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by shobana sahas on Fri Oct 23, 2015 7:33 pm

avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Fri Oct 23, 2015 8:52 pm

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Fri Oct 23, 2015 9:08 pm

செங்கையில் வண்டுகளின்.... பாடல் தொடர்ச்சி

இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள் - குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்
அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள் - பிறர்
அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப்
பருவத்தாள்


இதுவும் அப்பாடலில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய வரிகள் ஆகும்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Fri Oct 23, 2015 9:13 pm


செங்கையில் வண்டுகளின்.... பாடல் தொடர்ச்சி

தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே.


வசந்தவல்லி சந்திரனை நிந்தித்துப் பாடும் இப்பாடல் வரிகளை p.லீலா பாடி இருப்பார்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Fri Oct 23, 2015 9:32 pm


செங்கையில் வண்டுகளின்.... பாடல் தொடர்ச்சி

குறத்தி குறிகூறல்

சொல்லக்களோய் குறி சொல்லக் கேளாய்

முல்லைப் பூம் குழலாளே
சொல்லக்களோய் குறி சொல்லக் கேளாய்
நன்னகரின் வாழ் முத்து
மோகனப் பசும் கிளியே சொல்லக் கேளாய்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Fri Oct 23, 2015 9:34 pm

குறவஞ்சி திரைப்படத்தில் மற்றும் ஒரு பாடல் மனத்தைக் கவரும்

குறி சொல்ல வஞ்சி வருகிறாள். குற்றால மலையின் வளம் பாடுகிறாள் வசந்தவல்லிக்கு.

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்,

தேன் அருவி திரை எழும்பி, வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by ராஜா on Sat Oct 24, 2015 1:45 am

அருமையான திரி ஐயா , தொடர்ந்து மனம்கவர்ந்த பழைய பாடல்களை பகிருங்கள் நாங்களும் தெரிந்துகொள்கிறோம் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Sat Oct 24, 2015 6:47 am

@ராஜா wrote:அருமையான திரி ஐயா , தொடர்ந்து மனம்கவர்ந்த பழைய பாடல்களை பகிருங்கள் நாங்களும் தெரிந்துகொள்கிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171054
மிக்க நன்றி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Sat Oct 24, 2015 7:26 am

1960 ம் ஆண்டு  வெளிவந்த குறவஞ்சி  திரைப்படத்தில் வந்த இப்பாடலை  சிதம்பரம் ஜெயராமன், ப. லீலா மற்றும் ஜமுனாராணி  பாடியுள்ளனர் . இசை TR  பாப்பா

காதல் கடல்  கரை யோரமே  என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
நித்தம் உன் காலடியை தேடிவிளையாடி வந்து
முத்தமிடும் அலையாய் நான் மாறிடுவேனே

முத்தமிடும்  அலையால்  நான் முத்தாகவே மாறி
முழுமதிபோலே  ஒளி வீசிடுவேனே

இணையத்தில் இப்பாடலைத்தேடி  கண்டு கேட்டு மகிழலாமே
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Sat Oct 24, 2015 7:45 am

மு.கருணாநிதியின் கதை வசனத்தில் அவரின் சொந்தப்படமான குறவஞ்சியில் மற்றும் ஒருபாடல்
நீ சொல்லாவிடில் ......இதனை சிதம்பரம் ஜெயராமன் பாடி உள்ளார்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

பூச்சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
கண்ணா உனை எந்நாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by ayyasamy ram on Sat Oct 24, 2015 9:46 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Sat Oct 24, 2015 10:10 am

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Sat Oct 24, 2015 10:28 am

@Namasivayam Mu wrote:மு.கருணாநிதியின் கதை வசனத்தில்  அவரின் சொந்தப்படமான  குறவஞ்சியில் மற்றும் ஒருபாடல்  
நீ சொல்லாவிடில் ......இதனை சிதம்பரம் ஜெயராமன் பாடி உள்ளார்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

பூச்சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
கண்ணா உனை எந்நாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

மேற்கோள் செய்த பதிவு: 1171086

பாடிப் படர்திட்ட படர் வனக் குயிலும்
ஆடி நடமிட்ட  அழகான மயிலும்
கூடிக்குலாவிய  குமுத விழிக் கிளியும்
தேடிச் சென்றிட  திறமில்லை  அதனால்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே


பாடலை முழுமைப் படுத்த உதவிய அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by mkrsantharam on Mon Oct 26, 2015 8:12 am

@Namasivayam Mu wrote:1960 ம் ஆண்டு  வெளிவந்த குறவஞ்சி  திரைப்படத்தில் வந்த இப்பாடலை  சிதம்பரம் ஜெயராமன், ப. லீலா மற்றும் ஜமுனாராணி  பாடியுள்ளனர் . இசை TR  பாப்பா

காதல் கடல்  கரை யோரமே  என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
நித்தம் உன் காலடியை தேடிவிளையாடி வந்து
முத்தமிடும் அலையாய் நான் மாறிடுவேனே

முத்தமிடும்  அலையால்  நான் முத்தாகவே மாறி
முழுமதிபோலே  ஒளி வீசிடுவேனே

இணையத்தில் இப்பாடலைத்தேடி  கண்டு கேட்டு மகிழலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1171079ஐயா ,


" காதல் கடல் கரையோரமே , என் கண்ணே ! "


" குற வஞ்சி "mediafire.com listen/8ha9pqqqt14a61t/Kuravanji-1960_-_Kaadal_Kadal_Karai%2CCSJ_PL%2C1960%2CKURAVANJI%2CT.R.Pappa.mp3எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Mon Oct 26, 2015 3:38 pm

தெய்வப் பிறவி திரைப்படப் பாடல்
பாடியவர் சி.எஸ். ஜெயராமன்
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் -

வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் -  - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு

ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Mon Oct 26, 2015 4:07 pm

திரைப்படம்: இரும்புத் திரை
பாடியவர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்


நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Mon Oct 26, 2015 4:26 pm

திரைப்படம்: பாகப்பிரிவினை
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாலூற்றி உழவு செய்வார்

பனிபோல் விதை நடுவார்

மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும்.......

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட
தேரோடும்.......

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
சின்னஞ்சிறுசுகள்......

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
தங்கச் சிலம்புகள்.....
தேரோடும்......
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by mkrsantharam on Mon Oct 26, 2015 5:42 pm

@Namasivayam Mu wrote:தெய்வப் பிறவி திரைப்படப் பாடல்
பாடியவர் சி.எஸ். ஜெயராமன்
      இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்   
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் -

வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் -  - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு

ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
மேற்கோள் செய்த பதிவு: 1171444


" தன்னைத் தாணே நம்பாதது சந்தேகம் "

" தெய்வப்பிறவி " ( 1960 ) பாடலை இயற்றியவர் :

உடுமலை நாராயண கவி .
எம்கே ஆர் சாந்தாராம்


avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by ராஜா on Mon Oct 26, 2015 5:45 pm

@mkrsantharam wrote:  " தன்னைத் தாணே நம்பாதது சந்தேகம் "

" தெய்வப்பிறவி " ( 1960 ) பாடலை இயற்றியவர் :


 

 உடுமலை  நாராயண கவி .  
எம்கே ஆர் சாந்தாராம்


மேற்கோள் செய்த பதிவு: 1171462தகவலுக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Mon Oct 26, 2015 6:16 pm

@ராஜா wrote:
@mkrsantharam wrote:  " தன்னைத் தாணே நம்பாதது சந்தேகம் "

" தெய்வப்பிறவி " ( 1960 ) பாடலை இயற்றியவர் :


  உடுமலை  நாராயண கவி .  
எம்கே ஆர் சாந்தாராம்


மேற்கோள் செய்த பதிவு: 1171462தகவலுக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171463

நன்றி
வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Mon Oct 26, 2015 6:57 pm

திரைப்படம்: கல்யாணிக்கு கல்யாணம்

பாடலாசிரியர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959

உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே

பொன்னை உருக்கிய வார்ப்படமே!
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே -

வட்டக் கருவிழி மங்கையே -ஒளி
கொட்டும் இரவுக்கு தங்கையே! -
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே--இன்பக்
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

உன்னை நினைக்கையிலே
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Tue Oct 27, 2015 9:36 am

திரைப்படம்: தூக்கு தூக்கி
பாடலாசிரியர்: மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்

பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954

ஏறாத மலைதனிலே-- வெகு
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணதோம் தாளம் போடுதையா


கல்லான உங்கள் மனம் கரைஞ்சு நின்னு ஏங்கையிலே
கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம்
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே

செக்கச் செவேலென செம்மரி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து வக்கணையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே

சோலை வனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய்த் தின்னும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியைத் தேடுதடா
போடு தாந்திமிதமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே


நான் பிறந்த ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம். சிறுவயதுமுதல் இப்பாடலை கேட்டு இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தான் தூக்கு தூக்கி திரைப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அகம் மகிழ்ந்தேன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Tue Oct 27, 2015 9:55 am

தூக்குத் தூக்கி யில் மற்றும் ஒரு பாடல்

பாடலாசிரியர்: உடுமலை நாராயண கவி
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954

கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை - நாம்
கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம்

பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே- வீண்
பெருமைகாட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே

மண்கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை - கெட்டு
வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே....

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் - அதன்
உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம் - இதை
மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மேன்மினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம்

கண்டவரோடு கண்ணால் பேசிக்
காமுறும் மாது இந்த பூமியின் மீது - கொண்ட
கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு

சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு
தங்கநகை பகட்டு - வெள்ளித்
தாம்பாளந்தனில் தாம்பூலம் முதல்
தேங்காய் பழக் கொத்து கொண்டு
தெருவில் புறப்பட்டு
பிறர் மதித்திட வருவாள்
தெய்வப் பேரால் எதையும் புரிவாள் - தன்னைப்
பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான்
திருப்பி அனுப்பும் பகட்டுச் சிரிப்பும்

பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Namasivayam Mu on Thu Oct 29, 2015 2:07 pm

திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியவர் : சிதம்பரம் ஜெயராமன்
ஆண்டு -1952தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum