ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இரட்டை பிள்ளையார் !!!

View previous topic View next topic Go down

இரட்டை பிள்ளையார் !!!

Post by ChitraGanesan on Wed Oct 14, 2015 6:38 pm

இரட்டை பிள்ளையார் !!!

எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள். அதற்குக் காரணம் வினைகளையும் தடைகளையும் தீர்ப்பவர் வினாயகர் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடங்க உள்ள அல்லது தொடங்கிய காரியங்கள் தொடர்ந்து நடந்தேறவும் அக்காரியத்தில் இயற்கையான தடைகள் ஏற்பட்டு விடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் வினாயகரை வேண்டுகிறோம்.

இந்த நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த வினாயகரே வியாச முனிவர் கூறிய மகாபாரதத்தை எழுதத் துவங்குவதற்கு முன்னால் தன்னைப் போலவே இன்னொரு உருவத்தை தன் அருகில் படைத்து அதை தானே (கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்ப்பது போல) வணங்கியப் பின் மகாபாரதத்தை எழுதத் துவங்கியதாக ஒரு புராணக் கதை உண்டு. அதாவது பிள்ளையாரே தனது பிம்பமான இன்னொரு பிள்ளையாரை தோற்றுவித்து, அதை வணங்கி துதித்தப் பின்னரே தனது காரியத்தை துவக்கியதான ஐதீகம். அதுவே இரட்டை பிள்ளையார் எனும் எண்ணம் துவங்கிய கதை.

முன் காலங்களில் வைதீக பூஜைகளில் முக்கியமாக பண்டிதர்கள் எனப்பட்ட வைதீகக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் பூஜைகளை செய்யும்போது குடும்பத்தின் மூத்தவர் செய்யும் பூஜையில் தம் குடும்பத்திற்காக ஒரு பிள்ளையாரையும், தமது வம்சாவளியினருக்காக இன்னொரு பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்து வைத்து அந்த இரண்டிற்குமே ஒரே நேரத்தில் பூஜைகளை செய்வார்களாம். இது சோழ மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் காலத்தில் அதிகம் இருந்துள்ளது. இது இலங்கை நாட்டிலும் பரவி இருந்துள்ளது. அதனாலோ என்னவோ இலங்கையிலும் சில ஆலயங்களில் இரட்டைப் பிள்ளையார் காட்சி தருகிறார். இரட்டை பிள்ளையாருக்கு பூஜை செய்வதை மிகுந்த புண்ணியம் என்பார்கள். அது குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் என்பதல்ல, அவர்களது வம்சத்தையும் வாழ வைக்கும் என்பார்கள். யாராக இருந்தாலும் பிள்ளையாரை வழிபட்ட பிறகே எந்த காரியத்தையும் துவக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை என்பதினால் வினாயகரின் பூஜையை துவக்கும் முன்னால் கூட வினாயகரின் உருவத்திற்கு முன்னால் மஞ்சளில் பிடித்து வைத்த ஒரு வினாயகரை 'விக்னம் தீர்ப்பாய் வினாயகா'' என வேண்டிக் கொண்டு அதற்குப் பிறகு வினாயகர் பூஜையை ஆரம்பிப்பதாக ஒரு ஐதீகம் இருந்துள்ளது.

வினாயகர் ஒருவர் மட்டுமே வேறு அவதாரம் எடுக்கவில்லை என்பது தனிச் சிறப்பு. முதலில் அவர் அவதரித்தபோது மனிதத் தலைக் கொண்டு அவதரித்தார். ஆனால் கடவுளின் ஒரு குறிப்பிட்ட நாடகத்தில் அவருடைய தாயாருக்காக அவர் தனது தலையை இழக்க நேரிட்டபோது அவருடைய தாயாரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய தந்தையே அவருக்கு இன்னொரு முகத்தை - யானை முகத்தை- தந்து அவரை உயிர்பித்தார். அதனால்தான் முதலில் மனிதத் தலையுடன் இருந்த வினாயகரை வணங்கி உன்னைப் போலவே விக்னம் இல்லாமல் அனைத்தும் இருக்கட்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு பல சக்திகளைப் பெற்று தடைகளை விலக்கும் சக்தியைப் பெற்று இருந்த யானை முகத்தைக் கொண்ட வினாயகரை பூஜையை செய்வதான ஐதீகத்தில் ஏற்பட்டதே இரட்டைப் பிள்ளையார் பூஜைகளும்.

எதற்காக இந்த இரட்டை பிள்ளையார் வழிபாடு துவங்கியது என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. நாம் செய்யும் எந்த பூஜைகளும் தடங்கல் இன்றி நடத்திக் கொடுக்க அந்த வினாயகரே இரண்டு நிலைகளை எடுப்பாராம். முதலில் தன் அடிமையான விக்னேஸ்வரனை அனுப்பி விக்னங்களை கிரகித்துக் கொள்ளுமாறு கூறியபின் தான் வந்து அமர்ந்து பூஜைகளை ஏற்பாராம்.

இதற்கும் ஒரு பின்னணி காரணக் கதை உள்ளது. முன் ஒரு காலத்தில் காலரூபி என்றொரு வடிவமற்ற அசுரன் இருந்தான். அவனுடைய வேலை ஒவ்வொரு காரியத்திலும் எத்தனை தடைகள், விக்னங்கள் மற்றும் இடையூறுகளைத் தர முடியுமோ அத்தனையையும் தருபவனாக இருந்தான். அதனால் அவன் செயலை விக்னத்தை தருபவன் என்பார்கள். அனைத்து ரிஷி முனிவர்களும் காலரூபியினால் அவதிப்பட்டார்கள். அவர்களால் யக்னங்களையும் யாகங்களையும் சரிவரச் செய்ய முடியவில்லை என்பதினால் அவர்கள் வினாயகரிடம் சென்று அவரை தமக்கு உதவுமாறு வேண்டினார்கள்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வினாயகரும் அந்த காலரூபியை போர் புரிந்து அழித்தார். மரணம் அடையும் முன்னால் அவன் வினாயகரின் கால்களில் விழுந்து சரணாகதி அடைந்தான். தனக்கும் அவருடைய காலடியில் ஒரு இடம் தருமாறு கேட்டுக் கொள்ள அவரும் அவனிடம் கூறினார் 'உனக்கு நான் இன்று முதல் விக்னேஸ்வரன் என்று பெயர் தருகிறேன். எனக்கு பூஜை செய்பவர்கள் முதலில் 'விக்னேஸ்வரா, எனக்கு வர உள்ள விக்னங்களை நீயே விலக்குவாய்' என உன் பெயரை உச்சரித்து, உன்னை பூஜை இடத்தில் இருந்து விலக்குமாறு என்னிடம் வேண்டுவார்கள். ஆகவே எனக்கு செய்யப்படும் பூஜையில் உனக்கும் ஒரு சிறு பங்கு இருக்கும். நீயும் வர உள்ள அனைத்து விக்னங்களையும் கிரகித்துக் கொண்டு சென்று விடுவாய். ஆகவே இன்று முதல் நீ என்னுடைய எந்த பக்தர்களுக்கும் உன்னுடைய செயல்களினால் தடைகளையும், துன்பங்களையும் தரக்கூடாது. ஆனால் அதே சமயம் எனக்கு அபசாரம் செய்பவர்களையும், என்னை உதாசீனப்படுத்துபவர்களையும் நீ பல விதமான விக்கினங்களில் சென்று அவர்களுடைய செயல்களுக்கு தடைகளை செய்யலாம். இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார்.


ஆகவேதான் அந்த காலரூபியை விக்னேஸ்வரனாக பிடித்து வைத்து 'விக்னங்களை கிரகித்துக் கொள்வாய்' என வேண்டிக் கொண்டு அடுத்து வினாயகருக்கு பூஜையை துவக்குவார்கள். அதனால்தான் முதலில் இரு உருவங்களை வைத்து வினாயகர் பூஜை செய்யும் பழக்கம் இருந்தது. இப்படியாகவே வினாயகரை விக்னேஸ்வரனாகவும் , வினாயகராகவும் வழிபடப்பட்ட, பல இடங்களில் மட்டுமே நிலவி வந்திருந்த இந்த ஐதீகம் காலபோக்கில் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட தாக்கம் பல ஆலயங்களில் மறைந்து விடாமல் அமைந்தது. பல மன்னர்கள் அமைத்த பல தொன்மை வாய்ந்த ஆலயங்களில் இன்றும் இரட்டை பிள்ளையார் சன்னதிகள் இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் மேலே கூறியவைதான். முக்கியமாக சிவன் கோவில்களில் அது அதிகம் உண்டு என்பதின் காரணம் சிவபெருமானினால் வினாயகர் மனிதத் தலையை இழந்து யானை முகனாகி அபார சக்தி பெற்று இருந்தார் என்பதே ! எனக்குத் தெரிந்தவரை தில தர்பண பூமி (கூத்தனூர்) எனும் ஆலயத்தில் மட்டுமே மனிதத் தலையுடன் வினாயகர் காட்சி அளிக்கிறார். மற்ற ஆலயங்களில் அவர் யானை முகத்தவனாகவே இருக்கிறார்.

இன்னொரு கதையின்படி வினாயகர் இரண்டு உருவங்களில் இருந்தவர் என்பதினால் பூஜைகளில் வர உள்ள அனைத்து தடைகளையும், விக்னங்களையும் மனிதத் தலையுடன் அவர் அவதரித்த முதல் பிள்ளையார் நிலையில் இருந்து கொண்டு கிரகித்துக் கொள்வாராம். அதன் பின் கஜமுக வினாயகர் நிலையை எடுத்துக் கொண்டு வினாயகருக்கு செய்யப்படும் பூஜைகளை ஏற்றுக் கொண்டு பூஜை செய்பவர்களுக்கு அருள் புரிவாராம். ஆக வினாயகரே இரு நிலைகளில் - அதாவது இரட்டை பிள்ளையார் நிலையில் - இருந்து கொண்டு பூஜைகளை ஏற்றுக் கொள்வதான ஐதீகத்தில் பிறந்ததே இரட்டை பிள்ளையார் பூஜை என்று கூறுவார்கள்.
பொதுவாக பூஜிக்கப்படும் மூலக் கடவுட்கள் எனப்படுபவர்கள் நான்குபேர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே முதல் மூன்று கடவுட்களின் அவதாரங்களே. வினாயகரின் துணை அவதாரங்கள் எதுவும் உள்ளதாக புராணக் கதைகளிலும் காணப்படவில்லை. ஆகவே வினாயகர் மட்டுமே தனிக் கடவுள் எனலாம். முதல் மூவரின் அவதாரங்கள் அனைத்துமே இரண்டாம் நிலைக் கடவுட்களே.
சிவபெருமான்- பார்வதி
பிரும்மா- சரஸ்வதி
விஷ்ணு- மகாலஷ்மி
வினாயகர்
முருகன் மூலக் கடவுட்களில் ஒருவரா என்பதும் ஒரு சர்ச்சையாகவே உள்ளது. முருகனை சிவபெருமானின் அல்லது சக்தியின் அவதாரம் என்றே கூறுகிறார்கள். ஆகவே முருகனைக் மூலக் கடவுள் என்று கூறுவது இல்லை.

ஒற்றை அல்லது இரட்டை பிள்ளையார் என எப்படி இருந்தாலும் பிள்ளையார் எனும் மூலக் கடவுளின் தத்துவம் வியப்பானது !! ஒவ்வொரு கடவுளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இயற்கையில் அமைந்த ஒரே ஒரு உருவம் மட்டுமே உண்டு. மற்றவர்கள் அனைவருமே அவர்களுடைய துணை கடவுட்கள் மற்றும் அவதாரங்களே.

அனைத்து கடவுட்களும் அவரவர்களுடைய இயற்கை உருவத்தினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், வணங்கப்படுகிறார்கள். இயற்கை உருவம் என்றால் அதை இப்படியாக அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிவன் என்றால் ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டுமே அவரைக் காண்பார்கள். ஆனால் அவருக்கு பல ரூபங்களும் அவதாரங்களும் உண்டு. துணை அவதாரங்களும் துணை கடவுட்களுமாக அவருடைய உடலில் இருந்து பலர் தோன்றி உள்ளனர். உதாரணமாக ருத்திரன், பைரவர், சிவலிங்கம், நடராஜர் போன்ற பல உருவங்கள் சிவபெருமானுக்கு உண்டு என்றாலும் சிவன் என்றால் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட மூலத் தோற்றம் அவருக்கு உண்டு.

அது போலவே விஷ்ணுவிற்கும் நரசிம்மர், கிருஷ்ணர், ராமர், தசாவதாரம் எனப் பல்வேறு அவதார ரூபங்கள் மற்றும் அவதாரங்கள் உண்டு என்றாலும் அவருக்கும் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட தோற்றம் உண்டு. இப்படியாக ஒவ்வொரு கடவுளுக்கும் அது ஆண் கடவுள் என்றாலும் சரி, பெண்ணினமாக இருந்தாலும் சரி பல்வேறு ரூபங்கள் மற்றும் உருவங்கள் உண்டு என்றாலும், அந்த உருவங்களின் மூலம் அவர்கள் பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில்தான் அவர்களை அடையாளம் காண்பார்கள்.

முக்கடவுட்களின் பொதுவான உருவம்

ஆனால் இதில் விதி விலக்காக உள்ளவர் வினாயகர் மட்டுமே. மூலக் கடவுளான வினாயகரை மட்டுமே யானை முகத்தவனாகவே வழிபடுகிறோம். அவர் ஒரு முக வினாயகராக இருந்தாலும் சரி, பஞ்சமுக வினாயகராக இருந்தாலும் சரி, அவர் வேறு அவதாரத்தில் காட்சி தரவில்லை. யானை முகனாகவே காட்சி தருகிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மனிதத் தலையுடன் காட்சி அளித்தாலும் பிள்ளையார் என்றால் யானை முகத்தவரே. எனக்குத் தெரிந்தவரை இந்த உலகிலேயே மனித உருவுடன் வினாயகர் உள்ளது கூத்தனூரில் உள்ள தில தரப்பான பூமி ஆலயத்தில் மட்டுமே என்பதை அதனால்தான் முதல் பகுதியில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

பக்தி மற்றும் பூஜை என்பவை வேறுபட்டவை. கடவுளிடம் பக்தி செலுத்துபவன் பூஜைகளை செய்பவனாகவே இருக்க வேண்டும் என்பதல்ல தத்துவம். பக்தியை வெளிக் காட்டாமல் வேஷம் போடாமல் உள்ளுக்குள்ளே வைத்திருப்பது என்பது தன் நிலை உணர்தல் எனும் உயரிய தன்மை ஆகும். இப்படிப்பட்டவர்களே அவர்களுக்கு உள்ளேயே குடி இருக்கும் கடவுளைக் காண முடியும். நாம் அனைவருமே பூர்வ ஜென்ம வினைகளினால் மானிடப் பிறவி எடுத்து வந்துள்ளோம். அதில் பல கர்மாக்கள் அடங்கி இருக்கும். அவற்றை எல்லாம் பக்தி எனும் சக்தியைக் கொண்டு அழித்து விட்டுச் செல்ல வேண்டும்.

அதற்கு முதல்படியாகத்தான் நாம் தினமும் மற்றக் கடவுட்களை வழிபடுவதற்கு முன்னால் ஒரு ஷணம் வினாயகரை வணங்கி விட்டே மற்ற பக்தியையும் துவக்க வேண்டும். இல்லை என்றால் காலரூபி எனப்படும் விக்னேஸ்வரன் - விக்னத்தை தருபவன் - நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருப்பான். வினாயகருக்கு முதல் கடவுள் என்ற நாமதேயம் சூட்டி அவருக்கு முதல் மரியாதையைத் தர வேண்டும் என்பதினால்தான் சிவபெருமானே, வினாயகரை தனது மகன் என்றும் கருதாமல் தான் எங்கு சென்றாலும் முதலில் வினாயகரை வணங்கி விட்டு செல்வார் என்பது புராணக் கதை. அப்படிப்பட்ட சிவபெருமானே வினாயகரை முதலில் வணங்கி விட்டே தனது காரியத்தை துவக்குவார் என்பதில் இருந்தே வினாயகரின் சக்தி புரியும். இந்த நிலை ஒற்றைப் பிள்ளையாருக்கே என்றால் ரெட்டைப் பிள்ளையாரைப் பற்றி எப்படிக் கூறுவது என்று எண்ணத் தோன்றும் ?

உண்மையைக் கூறினால் ஓற்றையோ, இரட்டையோ எந்தப் பிள்ளையாரை வணங்கினாலும் அவர் அருள் புரிவார் என்றாலும் ஒரு சில நேரங்களில், ஒரு சில காரியங்களுக்காக ரெட்டை பிள்ளையாரை வணங்கித் துதிப்பது மிக்க நல்ல பலனைத் தரும். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் இரட்டை வினாயகர் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில ஆலயங்களில் மட்டுமே இருக்கிறார்கள். இரட்டைப் பிள்ளையாரை எப்படி வழிபடுவது ? அதற்கு என்ன முறை ??

இரெட்டை பிள்ளையாரை நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும், சந்தனக் காப்புப் போட்டு பூஜை செய்வதின் மூலம் தடைப்பட்ட திருமணங்கள் தடை விலகி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மணப்பேறு, மகப்பேறு கிட்ட, பித்ரு சாபங்கள் தீர, நோய்கள் அகல இரெட்டை பிள்ளையாரை பைரவருடன் சேர்த்து வணங்குவார்கள். இரெட்டை பிள்ளையார் தோஷங்களைக் களைபவர் என்பதினால் குறிப்பாக செய்வாய் தோஷம் உள்ளவர்கள் தேய்பிறை சதுர்த்தியில் அருகம் புல் மாலைப் போட்டு பூஜை செய்தும், சர்ப தோஷம் உள்ளவர்கள் செய்வாய்க் கிழமையில் நெய் விளக்கு ஏற்றியும் சந்திர தோஷம் உள்ளவர்கள் கொழுக்கட்டைப் போட்டு, வெல்ல சாதமும் நெய்வித்தியம் செய்து பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆமாம் இரட்டைப் பிள்ளையார் இல்லாத ஊர்களில் அவரை எப்படி வழிபடுவது? அதற்கு ஏதேனும் உபாயம் உள்ளதா? இவை அடுத்தடுத்தக் கேள்விகள்!!

சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்) தட்டில் பிடித்து வைத்து அதையே பிள்ளையாராக பாவித்தே பல பூஜைகளும் செய்யப்படுகின்றன. ஆகவே ரெட்டைப் பிள்ளையாரை உடனடியாக தரிசனம் செய்ய முடியாதவர்கள் ஒரு செய்வாய் கிழமையில் ஏதாவது ஒரு இடத்தில் உள்ள (ஆலயம் சிறப்பானது) அரச மரத்தின் அடியில் கெட்டியான சந்தனத்தால் அல்லது மஞ்சளினால் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து தமக்குத் தேவையான வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு ரெட்டைப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு அந்த இரு கூம்புகளையும் இரண்டு பிள்ளையார்களாக பாவித்து அதற்கு பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த மரத்துடன் இரண்டு பிள்ளையாரையும் பிரதர்ஷனம் செய்து விட்டு வந்து விட வேண்டும். இப்படியாக ஐந்து செய்வாய் கிழமை பூஜை செய்ய வேண்டும். இடையில் ஏதாவது காரணத்தினால் தடைப்பட்டாலும் அதை தொடரலாம். ஆனால் மொத்தம் ஐந்து செய்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது நியமம்.

அரச மரம் இல்லாத இடத்தில் எப்படி பூஜை செய்வது? அரச மரம் பிள்ளையாருக்கு பிடித்தமான மரம் என்பதால்தான் எளிதில் அங்கு தோன்றி கோரிக்கைகளை ஏற்பார் என்பது ஐதீகம். அரச மரம் இல்லாத ஊர்களில் அங்குள்ள வினாயகரின் சன்னதியில் சந்தனத்தில் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து பூஜை செய்தப் பின் அந்த ஆலயத்தை சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம். பிள்ளையாருக்கு தனி சன்னதி இருந்தால் அதை மட்டும் சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிடித்து வைத்து
பூஜை செய்ய வேண்டிய பிள்ளையார்

அடுத்த கேள்வி அப்படி பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு என்ன மாதிரியான பூஜையை செய்வது? இதுவும் மிக எளிதானது. பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு சந்தன குங்குமம் இட்டு, மலர்கள் தூவி (அருகம் புல் விஷேசம்) உங்கள் கோரிக்கையை மனதார கூறி அவரை வேண்டிக் கொண்டு உங்களுக்கு தெரிந்த வினாயகர் தோத்திரத்தைக் கூறி பூஜிக்க வேண்டும். வினாயகர் மந்திரங்கள் தெரியாதவர்கள் வினாயகர் அகவலை படித்தால் போதும். அதுவே வினாயகரை பூஜிக்கும் சிறந்த ஸ்துதி ஆகும்.

ஐந்து வாரமும் புதியதாக சந்தானம் அல்லது மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தப் பின் அதை அப்படியே அரச மரத்தடியில் அல்லது பிள்ளையார் சன்னதியில் வைத்து விட்டு வந்து விடலாம். தோஷம் எதுவும் இல்லை. அரச மரத்தடியில் பூஜை செய்தப் பின் ஏதாவது ஒரு கோவிலில் உள்ள வினாயகரின் சன்னதிக்குச் சென்று தம்முடையக் கோரிக்கையை அவரிடம் வைத்து அங்கேயே அவரிடம் வேண்டிக் கொண்டு, அது நிறைவேறினால் ரெட்டைப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு வர வேண்டும். ஐந்தாவது வார பூஜை முடிந்ததும் நீங்கள் எந்த ஆலயத்தில் சென்று பிள்ளையாரை வழிபடுகிறீர்களோ அங்கு உள்ள ஏதாவது ஒரு பண்டிதருக்கு வெற்றிலைப், பாக்கு, தேங்காய், பழம் சகிதம் உங்களால் முடிந்த அளவு பணத்தைத் தந்து (இருபத்தி ஒன்று, ஐம்பத்தி ஒன்று அல்லது நூற்றி ஒன்று என்ற கணக்கில்) அவரை நமஸ்கரித்து விட்டு வர வேண்டும். ஐந்து செய்வாய் கிழமைகளிலும் அப்படி செய்யத் தேவை இல்லை. ஐந்தாவது வார இறுதிப் பூஜைக்குப் பிறகே அதை செய்ய வேண்டும். ஐந்து வார பூஜை செய்தப் பின் மீண்டும் அதை செய்ய வேண்டியது இல்லை. பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகத் துவங்கும் என்பது நம்பிக்கை. ஆனால் நிச்சயமாக அதீதிப் பயன் இதில் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

ஐந்து செய்வாய் கிழமைகள் பூஜை முடிந்தப் பிறகு எப்போது முடிகிறதோ இதற்குக் காலக் கெடு கிடையாது , நீங்கள் செல்லும் எந்த ஊரிலாவது உள்ள ரெட்டை பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்று உங்களுடைய அதே கோரிக்கையை அவரிடம் மானசீகமாகக் கூறி அவருக்கு அர்ச்சனை செய்து விட்டு வந்து விடலாம். கூடுமானவரை அதையும் செய்வாய்க் கிழமை அன்று செய்வதில்தான் அதிகப் பலன் உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்து வார பூஜையையும் செய்வாய் கிழமையில்தான் செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் பெயர் சங்கல்ப வினாயகர் என்பது. அவரை ஆதி வினாயகர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தி திதி, திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் விஷேசமான தினங்களாகக் கருதப்படுகிறது. இந்தப் பிள்ளையாருக்கு திருவோண நட்சத்திரத்தில் மாம்பழங்கள் நெய்வித்தியம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு தானம் செய்தால், கணவன்-மனைவி உறவு பலப்படுவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும். திருவாதரை நட்ஷத்திரத்தன்று அதற்கு வில்வ மாலை போட்டு வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும், உடல் ஆரோக்கியம் சீர்படும். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று பலவிதமான பூக்களால் தொடுத்த மாலையைப் போட்டு துதித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்பார்கள் . அது மட்டும் அல்ல பெற்றோர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் இங்கு வந்து சங்கல்பம் செய்து கொண்டு பூஜித்தால் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பதும் உண்டு.

இது போல திருவையாறு ஐயாரப்பன் ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் முன்னால் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் . பொதுவாகவே திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சங்கட ஹர சதுர்த்தியில் வழிபட கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.

திருவண்ணாமலையில் மிக பழமை வாய்ந்த கோயில்களில் இரட்டை பிள்ளையார் ஆலயமும் ஒன்று. கிரி வலம் செல்லும் வழியில் இந்த ஆலயத்தைக் காண முடியும். இந்த ஆலயம் உள்ள சாலையை இரட்டை பிள்ளையார் கோயில் தெரு என அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை .

மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர். அது போலவே திருவான்மியூரில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர் .

கடலூரில் உள்ள புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் ஆலயமும் மகத்துவமானது . அது போலவே திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் சிறப்பானவர் அவர்களை வலம்புரி வினாயகர் மற்றும் பாதிரி வினாயகர் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இவர்களை வணங்கினால் நவக்கிரகங்களினால் ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் வெகு விரைவில் விலகும் என்பது ஐதீகம் .

தஞ்சை மாவட்டத்தில் குடந்தைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ள இருநூறு ஆண்டுக்கும் மேற்பட்ட ஆலயத்தில் காணப்படும் தாமோதர வினாயகர் எனும் பெயரில் உள்ள இரட்டைபிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார் .

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனாராயனர் ஆலயத்தின் பின்புறத்தில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான வேலைப்ப தேசிகர் ஆலயத்திலும் இரட்டைப் பிள்ளையார் சன்னதி உள்ளது. மேலும் சில இடங்களில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயங்கள் வருமாறு:
திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிற்ரூரான திருப்பனதாளில் இருந்து சீர்காழிக்குச் செல்லும் வழியில் உள்ள மரத் துறை எனும் சிறு கிராமத்தில் உள்ளது ஒரு இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ள சிற்றூரான கொத்துக் கோவில் எனப்படும் இடத்தில் உள்ளது சுந்தர மற்றும் ராஜ விநாயகர் என அழைக்கப்படும் இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூர், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வினாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதிகள் உள்ளன.
மதுரை தல்லாக்குளத்தில் உள்ளது இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம்.
சென்னையில் பம்மலில் பசும்பொன் ஆலயத்திலும் உள்ளது இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம்.
திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஆலய தனி சன்னதியிலும் இரட்டைப் பிள்ளையார் உள்ளார்.
திருவான்மியூரில் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதி உள்ளதாகக் கூறுகிறார்கள்.

சென்னையில் மடிப்பாக்கத்தில் உள்ள இன்னொரு இரட்டைப் பிள்ளையார் ஆலயத்தின் கதையும் சுவையானது. சென்னை-மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வினாயகரின் பக்தர் ஒருவர் சுமார் நூறு வருடங்களுக்குமுன் தன் வயலில் கிணறு வெட்டுவதற்காக பூமியை தோண்டிக் கொண்டு இருந்தபோது பூமியின் கீழேயிருந்து ஒரு கல் தெறித்துச் சிதறியதாம். அதன் தோற்றம் கிட்டத்தட்ட பிள்ளையாரைப் போல இருந்ததினால் அதையே சுயம்பு வினாயகராக கருதி, அது பள்ளத்தில் இருந்து கிடைத்ததினால் அதற்கு பாதாள வினாயகர் எனப் பெயரிட்டு ஆலயத்தை அமர்த்தி அதை பிரதிஷ்டை செய்தாராம். ஆனால் முழுமையான விநாயகரின் சிலையாக அது இல்லை என்பதினால் இன்னொரு வினாயகரின் சிலையை வைத்து பக்தர்கள் வணங்கத் துவங்கினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அனைவரும் அதிசயிக்கும் வகையில் முதலில் அமைத்த பாதாள வினாயகரின் வடிவம் மாறி வினாயகரின் முழு உருவைப் பெற்றது என்கிறார்கள். அது முதல் கருவறையில் இரட்டை வினாயகர்கள் அமர்ந்துள்ளார்கள்.


கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை செல்லும் மார்கத்தில் வரும் கயித்தாறு (கட்டபொம்மனை தூக்கில் போட்ட இடம்) அருகில் உள்ளது ஒரு ரெட்டைப் பிள்ளையார் கோவில்.
திருப்பத்தூரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திலும் ரெட்டை வினாயகர் சன்னதி உள்ளது.
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 603
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: இரட்டை பிள்ளையார் !!!

Post by ayyasamy ram on Wed Oct 14, 2015 7:09 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37379
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இரட்டை பிள்ளையார் !!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 14, 2015 8:28 pm

இரட்டை பிள்ளையார் பற்றி பதிவுக்கு நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: இரட்டை பிள்ளையார் !!!

Post by krishnaamma on Wed Oct 14, 2015 11:58 pm

நல்ல பகிர்வு புன்னகை...........
.
.
.
முதல் பதிவை இத்தனை நீளமாக போடாமல், பிரித்துப்போடுங்கள் கணேசன் புன்னகை.............இந்த முதல் பதிவு எல்லா பக்கங்களிலும் load ஆகும் , நெட் ஸ்லொவ் வாக இருப்பவர்களுக்கு பக்கங்கள் load ஆக கஷ்டமாகும்......புன்னகை ஓகே வா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இரட்டை பிள்ளையார் !!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum