உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by SK Today at 12:05 am

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by SK Today at 12:00 am

» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
by SK Yesterday at 11:57 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by SK Yesterday at 11:55 pm

» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
by SK Yesterday at 11:50 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 10:01 pm

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:04 pm

» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:50 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:46 pm

» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 pm

» அருமையான எருமை மாடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:40 pm

» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:33 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by SK Yesterday at 7:29 pm

» MUTHULAKSHMI NOVEL
by SALINI Yesterday at 5:42 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:10 pm

» பொது அறிவு தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.
by velang Yesterday at 2:07 pm

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:34 am

» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:20 am

» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:47 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:44 pm

» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 7:32 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:25 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:23 pm

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by T.N.Balasubramanian Wed Dec 12, 2018 5:18 pm

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:33 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Wed Dec 12, 2018 10:07 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Tue Dec 11, 2018 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 11, 2018 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:15 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

Admins Online

நவராத்திரி விழா - தொடர் பதிவு

மராட்டியத்தில் நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது

Post by ayyasamy ram on Tue Oct 13, 2015 6:23 am

First topic message reminder :


-


மராட்டியத்தில், நவராத்திரி விழா இன்று தொடங்கி
9 நாட்கள் நடக்கிறது.

நவராத்திரி விழா
சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும், அம்பிகைக்கு
9 ராத்திரி நவராத்திரி என்றும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு
வருகிறது. புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல் நாளிலிருந்து
தொடங்கி 9 நாட்கள் வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் விழாவில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய
முப்பெரும்தேவிகளையும் தலா மூன்று நாட்களாக பிரித்து பூஜை
செய்வது வழக்கம்.

கொலு
தமிழகத்தில் கொலு அமைத்து நவராத்திரி விழா கொண்டாடப்
படுகின்றது. இதேபோன்று மும்பை, தானே, புனே, நவிமும்பை உள்ளிட்ட
மராட்டியத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் நவராத்திரி
விழாவினையொட்டி கொலு அமைத்து தேவியை வழிபடுவார்கள்.

மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள்
தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல
நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு
செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நவராத்திரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற
21–ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மும்பை
நகர் மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பை பகுதிகளில்
பிரதான மண்டல்கள், அமைப்புகள் சார்பில் தேவி சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

தாண்டியா நடனம்
இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை
செய்வார்கள். பின்னர் 9 நாட்கள் பூஜைக்குப்பின்னர் தேவி சிலைகளை
பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
நவராத்திரியையொட்டி பெண்கள் தங்கள் வேண்டுதல்கள்
நிறைவேறுவதற்கு 9 நாட்களும் விரதம் இருந்து தேவியை வழிபடுவார்கள்.
தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்படும் 9 நாட்களும் மும்பையில் தினந்
தோறும் இரவு பாரம்பரிய முறைப்படி தாண்டியா நடனம் ஆடுவது வழக்கம்.

இதில் இளைஞர்கள், முதியவர்கள் என வயது பாரபட்சமின்றி பெண்களும்,
ஆண்களும் தாண்டியா நடனம் ஆடுவார்கள்.

மகாலட்சுமி கோவில்
நவராத்திரி திருவிழாவினையொட்டி மும்பையில் பிரசித்தி பெற்ற
மகாலட்சுமி கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது
வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து
மகாலட்சுமியை தரிசனம் செய்து செல்வார்கள்.

இதேபோன்று மும்பாதேவி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி
விழாவினையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கொலு அமைத்து
வழிபாடுகள் நடக்க உள்ளன.

செம்பூர் உள்ள முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது.
இதையொட்டி இன்று துர்காதேவிக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நவசண்டி மகாயாகம்
வளர்க்கப்படுகிறது. இரவு கலாபிஷேகம் செய்யப்படுகிறது.
விழா நாட்களில் நவவரண பூஜை, நவகிரக கலசபூஜை, லலிதா சகஸ்ரநாம
அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

செம்பூர் செட்டா நகரில் உள்ள ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில்
நவராத்திரியையொட்டி இன்று காலை மகாகணபதி ஹோமம், துர்காதேவி
ஹோமம் வளர்க்கப்படுகிறது. பின்னர் தினசரி விக்னேஸ்வர பூஜை,
துர்காதேவி, லெட்சுமி தேவி, வித்யாதேவி ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை
ஆகியவை நடக்கின்றன. காட்கோபர் காமராஜ் நகர் ஸ்ரீதேவி
முத்துமாரியம்மன் கோவில், பாண்டுப் பஜனை சமாஜ், தாராவி
கருமாரியம்மன், சந்தனமாரியம்மன் கோவில், மகமாயி மாரியம்மன் கோவில்,
முத்துமாலை அம்மன் கோவில் உள்பட தமிழர்கள் பகுதிகளில் உள்ள அம்மன்
கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
-
----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down


Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 16, 2015 6:12 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by krishnaamma on Sat Oct 17, 2015 12:20 am

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை....நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 18, 2015 8:35 pm


-
நவராத்திரி பூஜை பலன்கள்:

நவராத்திரியின்போது, வீட்டிற்கு வருவோரை உபசரிக்கும்
பெண்களுக்கு, மாங்கல்ய பலம் கூடுவதுடன், மனதில்
அஞ்ஞான இருள் அகன்று, மெய்ஞான ஒளி பிறக்கும்.

நட்பு, விருந்தோம்பல், கூட்டுறவு, பக்தி, குடும்ப ஒற்றுமை
மற்றும் தேசிய ஒருமைப்பாடு வெளிப்படும்.

——————————————–

வெற்றித் திருநாள் விஜயதசமி:

-
சரஸ்வதி பூஜைக்கு, மறுநாள் கொண்டாடப்படும் விழா விஜயதசமி.
பராசக்தி, பண்டாசுரனுடன், ஒன்பது நாட்கள் போரிட்டாள்.
பத்தாம் நாள் அவனை வதம் செய்தாள். இந்த வெற்றி திருநாளே
விஜயதசமி.

அந்நாளில்தான், சக்தி, சிவனுடன் ஐக்கியமானாள். இந்நாளில்
துவங்கப்படும் நற்காரியங்கள் வெற்றி பெறும். முற்காலத்தில்
அரசர்கள் விஜயதசமியன்று சிம்மாசனம், வெண்கொற்றக்குடை,
படைக்கலன்கள் ஆகியவற்றிற்கு பூஜை நடத்தினர்.

————————————————–

சரஸ்வதியின் வேறு பெயர்கள்:
பாரதி, சாரதாதேவி, ஹம்சவாகினி, ஜகநீ, வாணீஸ்வரி, கவுமாரி,
பிரம்மசாரிணி, புத்திதாத்ரி, வரதாயினி, க் ஷக்ரஹண்டி மற்றும்
புவனேஸ்வரி போன்றவை சரஸ்வதிக்குரிய திருநாமங்கள்.

——————————————-

வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by krishnaamma on Mon Oct 19, 2015 12:17 am

nalla pagirvu annaa புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by சிவா on Thu Oct 11, 2018 9:47 am

நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை: மகிஷாசுரமர்த்தினி..!


முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் உண்டானது. தேவர்களின் பதவிகள் அனைத்தையும் அசுரர்கள் பெற்றுக்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினர். இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனின் ஆலோசனைபடி, சிவன் தேவர்களின் துன்பத்தைப் போக்க எண்ணி, மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதை வரமளித்த பிரம்மனிடம் கேட்டு அறிந்தனர்.

அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்கள் தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக்கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். அந்தச் சக்தியைத் தேவர்களும், கடவுளர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். அப்பெண் சக்திக்கு ஒவ்வொரு கடவுளர்களும் தமது ஆயுதங்களை அளித்தனர்.

மகிஷாசுர மர்தினி: மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள். இவள் நான்கு திசைகளைத் திரும்பி பார்க்கும் போது வெள்ளம் கரைபுரண்டது. பிரபஞ்சம் நடுங்கியது. வானுக்கும் பூமிக்கு இடையே உயர்ந்த வடிவுடையவளாக வீற்றிருந்தாள். பிரளயம் உருவானது போல காட்சியளித்தது.

பூமித்தாய் அந்தப் பெண் சக்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டாள். மர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்சனை செய்தது. மகிசனின் அசுரப் படைகளை தேவி லாவகமாக முறியடித்து அசுரர்களைக் கொய்து, அழித்தாள். அசுரன் மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தான். இறுதியில் எருமைக் கடாவின் உருவத்தில் இருந்த போது தேவி தமது திரிசூலத்தால் அவனது தலையினைத் துண்டித்தாள். மகிஷன் தேவியால் அழிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் கடவுளர்கள் அதனைக் கண்டு ஆனந்தமடைந்து தேவியை வணங்கினர்.வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)

பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.

திதி : துவிதியை

பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.

பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by சிவா on Thu Oct 11, 2018 9:47 am

நவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்.


நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம். நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது.
நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது. இதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தம் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவியை வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி தினங்களில் கன்யா பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.

நவராத்திரி தினங்களில் பகல் பொழுதில் சிவபெருமானை வணங்கி ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெயித்தால் அளவில்லா பலன்கள் கிட்டும். அம்பிகை இசை பிரியை. எனவே தினமும் அம்பிகையை ஒரு பாட்டாவது பாடி வணங்குதல் வேண்டும்.

நவராத்திரி ஒன்பது தினங்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினம். அன்றைய தினம் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுபாவாடை தானம் செய்வது நல்லது. நவராத்திரி நாளில் சப்தமி திதியன்று ஹயகிரிவிரை வணங்குதல் வேண்டும்.

விஜய தசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரத்தடியில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜை செய்வார்கள். அதில் கலந்து கொண்டு வழிபட்டால் கிரக தோஷம் விலகி விடும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: நவராத்திரி விழா - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை