ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

சென்னை அருகே நடுக்கடலில் கடற்படை வீரர்கள் சாகசம்; 8 போர்க்கப்பல்கள் பங்கேற்பு

View previous topic View next topic Go down

சென்னை அருகே நடுக்கடலில் கடற்படை வீரர்கள் சாகசம்; 8 போர்க்கப்பல்கள் பங்கேற்பு

Post by ayyasamy ram on Tue Oct 13, 2015 6:33 am


-

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில்,
கராச்சி துறைமுகத்தை இந்திய கடற்படையினர் ஏவுகணை
மூலம் தாக்கினார்.
இதை நினைவு கூறும் வகையில், டிசம்பர் 4-ந்தேதி இந்திய
கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போர்க்கப்பல்களில் கடற்படை
வீரர்களின் சாகச நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு போர்க்கப்பல்
பற்றி தெரிய வேண்டும் என்பதற்காகவும் நடுக்கடலில் 8 போர்க்
கப்பல்களில் கடற்படை வீரர்கள் சாகசம் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இந்த சாகச நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்காக
ஐ.என்.எஸ். சிவாலிக், ரன்விஜய், சக்தி, பெத்வா, கோரா, விபுதி,
நிசாங்க், சிந்துதுவாஜ் ஆகிய போர்க்கப்பல்கள் விசாகப்பட்டினத்தில்
இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு இருந்தன.

நீர்மூழ்கி கப்பல்

சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று காலை பொதுமக்கள்,
இந்திய கடற்படை அதிகாரிகள், ஊழியர்கள், என்.சி.சி. மாணவர்கள்
என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கடற்படைக்கு சொந்தமான
இந்த போர்க்கப்பல்களில், சுமார் 30 கடல் மைல் தூரத்தில் நடுக்
கடலுக்கு அழைத்து சென்றனர்.

நடுக்கடலுக்கு சென்ற பிறகு, ஒவ்வொரு போர்க்கப்பல்களும்
வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
அதன்பின்னர், ஒவ்வொரு கப்பல்களிலும், கடற்படைக்கு சொந்தமான
நீர்மூழ்கி கப்பல் வருகிறது என்ற அறிவிப்பு ஒலித்தது.

உடனே அனைவரும் ஆர்வத்துடன் பார்த்தனர். கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே வரத்தொடங்கிய நீர்மூழ்கி கப்பல், மீண்டும் நீரில் மூழ்கியது.
பத்திரிகை மற்றும் தொலைக் காட்சிகளில் மட்டுமே பார்த்த கப்பலை
நேரடியாக பார்த்ததும் அனைவரும் ஆர்வமுடன் செல்போனில் புகைப்
படம் எடுத்தனர்.

‘சீ கிங்’ ஹெலிகாப்டர்

அதைத் தொடர்ந்து, கடலில் தத்தளித்து கொண்டு இருக்கும் ஒருவரை,
ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பது எப்படி? என்பதை கடற்படைக்கு
சொந்தமான ‘சீ கிங்’ ஹெலிகாப்டர் மூலம் செய்து காண்பித்தனர்.

பின்னர், கடலோர பகுதிகளை நீண்ட தூரம் சென்று ரோந்து பணியில்
ஈடுபடும் பெசோடியன் விமானமும், அதேபோல் குறுகிய தூரம் சென்று
ரோந்து பணியில் ஈடுபடும் ‘டோர்னியர்’ ரக குட்டி விமானமும் வானில்
சீறி பறந்தன. இதை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் கைகளை
தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து, கடற்படைக்கு சொந்தமான விரைவு கப்பல் ஒன்று
கடலில் தண்ணீரை கிழித்து கொண்டு பாய்ந்ததும், சாகச நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட, ‘சீ கிங்’ ஹெலிகாப்டர், கடலில் சென்று கொண்டு
இருந்த ‘பெத்வா’ போர்க்கப்பலில் தரை இறங்குவதும்
பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

போர்க்கப்பல்களின் செயல்பாடுகள்

அமைதியாக சென்று கொண்டு இருந்த சாகச நிகழ்ச்சியில், குறிப்பிட்ட
இலக்கை நோக்கி ‘பட பட’வென்று துப்பாக்கியால் சுடும் ஒரு நிகழ்வு
நடந்தது. இது கப்பல்களில் இருந்த பார்வையாளர்கள் அனைவருடைய
கவனத்தையும் ஈர்த்தது.

நடுக்கடலில் சென்று கொண்டு இருக்கும் போர்க்கப்பல், டீசல் இல்லாமல்
நின்று விட்டால், அந்த கப்பலுக்கு நடுக்கடலில் இருந்தவாறு டீசல்
நிரப்புவது எப்படி? என்பதையும் செய்து காண்பித்தனர். இதில் அதிநவீன
‘சிவாலிக்’ போர்க்கப்பலுக்கு, டீசல் நிரப்பி செல்லும் ‘சக்தி’
போர்க்கப்பலில் இருந்து டீசலை நிரப்பினார்கள்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்களை நேரில் பார்த்த
பார்வையாளர்கள் அனைவரும் கப்பலில் இருந்தவாறு ‘செல்பி’ எடுத்து
கொண்டனர். சாகச நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாது, ஒவ்வொரு போர்க்
கப்பல்களின் செயல்பாடுகள் குறித்தும், கப்பல்களில் பணிபுரியும்
வீரர்களின் கடமைகள் குறித்தும் கப்பலில் இருந்த பார்வையாளர்கள்
கேட்டறிந்தனர்.

கடலோர பாதுகாப்பு

சாகச நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, கிழக்கு பிராந்திய கடற்படை உயர்
அதிகாரி எஸ்.வி.பொகோரே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-

கடற்படை தினத்தை முன்னிட்டு, நடுக்கடலில் போர்க்கப்பல்களில் சாகச
நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மத்தியில் செய்து காண்பித்தது
மகிழ்ச்சியளிக்கிறது. பொதுமக்களுக்கு போர்க்கப்பல்கள் பற்றி நன்கு
தெரிய வேண்டும். அதன் ஒரு பகுதியாக தான் இந்த நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பாதுகாப்பு என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.
இதில் தமிழக கடலோர காவல்படையும், இந்திய கடலோர காவல்படை
மற் றும் கடற்படை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும்
கூட்டு போர் ஒத்திகை நிகழ்ச்சி குறித்து முழு தகவல்களும் கொடுக்க
ப்படும்.

அடுத்த ஆண்டு (2016) பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் நடக்கும்
சர்வதேச கடற்படை கூட்டு ஆய்வுக்கு உலகநாடுகளுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இதில் 27 நாடுகள் பங்கு பெறுவதாக அறிவித்துள்ளது.
வரும் நாட்களில் இன்னும் சில நாடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

—————————————-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum