ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 ayyasamy ram

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.
 udhayam72

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down


Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 12:57 pm

நவம்பர்-7

நேர்மை

நேர்மை தவறிவிடின் திருவருளுக்கு அன்னியனாய்ப் புல்லியன் ஆய்விடுவேன், அந்தோ!

நேர்மையில் ஒழுகுகிறவன் மறைத்துவைப்பதற்கு ஒன்றுமில்லை.திருட்டுத்தனமாய் அவன் எதையும் செய்வதில்லை. பொருந்தாத ஆசைக்கு அவன் அடிமைப்படுவதில்லையாதலால் அவன் யாருக்கும் அஞ்சுவதில்லை. ஏறுபோல் அவன் நடக்கிறான். நிமிர்ந்திருக்கிறான்., நிமிர்ந்திருக்கிறான்., தெளிவுறப் பேசுகிறான்., நேரே முகத்தைப் பார்க்கிறான். அவனே நேர்மைக்கு விளக்கமாகிறான்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.


--திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 1:00 pm

நவம்பர்-8

அரண்

குழந்தைக்கும், குழந்தை போன்ற சான்றோனுக்கும் அரண் ஆவது பேரன்பு.

வாழ்வுக்கும் உறுதுணையாவது அன்பு. மேலும் அன்பின் வழியது உயிர்நிலை.தடைகளையெல்லாம் தகர்க்கவல்லது அன்பு. வெறுப்பு, பகை,துன்பம் என்னும் எதிரிகளையெல்லாம் உள்ளே வரவொட்டாது தடுக்கும் அரண் ஆக அமைந்திருப்பதும் அன்பு. அதினின்று உலப்பில்லாத பேரானந்தம் பிறக்கிறது.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.


---திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by சசி on Sun Nov 08, 2015 5:02 pm

அருமை ஐயா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian on Sun Nov 08, 2015 6:25 pm

ஆம் அய்யா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22429
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 7:59 pm

@சசி wrote:அருமை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1173591
நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 8:00 pm

@T.N.Balasubramanian wrote:ஆம் அய்யா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1173629
நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 09, 2015 8:16 am

நவம்பர்-9
போதனா முறை
எண்ணிறந்த ஜீவர்களாகத் தோன்றியிருக்கும் ச்சசிதானந்த சிவமே, உனக்குப் பாடம் புகட்டுதல் என்னும் எண்ணம் என் உள்ளத்தினுள் புகுந்துவிடலாகாது.

பரதத்துவத்தைப் பழக்கத்தில் கொண்டு வருவதே நல்ல போதனா முறை. வெறும் பேச்சாளன் போதிக்கவல்லவனாகான். உண்மைக்கு ஒப்ப வாழ்கின்றவனது ஒவ்வொரு செயலும் வலிவு மிகப் படைத்தது., ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தை மாற்றியமைக்க வல்லது. நல்வாழ்வு சர்வகாலமும் பாடம் புகட்டும் போதனா முறையாகிறது.

காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்

பேச்சற் றவரே பிறவார் பராபரமே.


--தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 10, 2015 10:07 am

நவம்பர்-10

தற்போதம்

உலக வாழ்வு என்னும் தூக்கத்தினின்று பாரமார்த்திக வாழ்வு என்னும் விழிப்பு நிலைக்குப் போவேனாக.

தூங்குபவனுடைய தரம் யாது என்று நமக்கு விளங்குவதில்லை. விழித்தான பிறகு அது நன்கு வெளியாகிறது. பாரமார்த்திக உணர்விலே விழித்து எழுந்திருப்பவனுக்குப் பெருவாழ்வு துவங்குகிறது. அவனுடைய செயல்களெல்லாம் அவனை மேன்மையின் கண் எடுத்துச் செல்வனவாகும். தெய்வப் பெற்றியே அவன்பால் பொலிகிறது.

உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்

கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய் நெஞ்சமே.


--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 12, 2015 12:04 pm

நவம்பர்-11

தனித்திரு

தெய்வ சிந்தனையில் ஊறியிருத்தற் பொருட்டு தனித்திருந்து பழகுவேனாக.

மனிதன் உலகுக்குள் வந்தது தனியாக. அவள் உலகைவிட்டு எகுவது தனியாக. உலகில் இருக்கும்பொழுதும் இனையிடையே அவன் தனித்திருந்து பழகவேண்டும். பாரமார்த்திக வாழ்வுக்குப் பக்குவம் ஆகாதவன் தனித்திருக்க முடியாது. பக்குவப்பட்டவனுக்கு அது தெய்வ சான்னித்தியத்துக்கு ஒப்பானது.

தனிமுதலைப் பார்த்துத்

தனித்திருந்து வாழாமல்

அணியாய மாய்ப்பிறந்திங்கு

அலைந்துநின்றேன் பூரணமே---பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 12, 2015 12:07 pm

நவம்பர்-12

பசித்திரு

அருட்பசியெடுத்து அழுவேனாகில் அகிலாண்ட நாயகி அப்பசியைப் போக்கியருள்வாள்.

பசியெடுத்திருப்பவனுக்கு உறக்கம் இல்லை.உணவை அவன் நாடுகிறான். கடவுளை அடையவேண்டும் என்ற பசி யாருக்கு வருகிறதோ அவன் பாக்கியவான். யாரும் புகட்டாது அருள் நாட்டம் தானாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.

விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்

பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே
.

---பட்டினத்தார்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 13, 2015 1:11 pm

நவம்பர்-13

சாக்ஷி

பிரபஞ்சத்தின் நடைமுறை அனைத்துக்கும் பரம்பொருளே, நீ சாக்ஷியாயிருப்பது போன்று எனது உடல் வாழ்க்கைக்கு நான் வெறும் சாக்ஷியாயிருப்பேனாக.

அழகிய படம் ஒன்றை ஒருவன் விலைக்கு விற்கிறான். மற்றொருவன் வாங்குதற்குப் பேரம் பண்ணுகிறான். இருவர் கருத்தும் விலைநிலேயே சென்றுகொண்டிருக்கிறது. வழிப்போக்கன் ஒருவனோ படத்தின் ஓவியத் திறமையை ரசித்துக்கொண்டிருக்கிறான். பிரபஞ்சம் என்னும் படத்தை அதற்கு சாக்ஷியாயிருப்பவனே ரசிக்கிறான். அதில் கட்டுண்டிருப்பவன் ரசிப்பதில்லை.

சொல்லால் மனத்தால் தொடராச் சம்பூரணத்தில்

நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ?


--தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 14, 2015 9:21 pm

நவம்பர்-14
பிண நெஞ்சு

நான் யாண்டும் ஜீவபோதத்தில் மூழ்கியிருப்பதால் உள்ளிருக்கும் சிவம் சவம் போன்று கிடக்கிறது.

அடுப்புக்கரி தன்னளவில் கன்னங்கறேரென்று கிடக்கிறது. ஆனால் அதைத் தீயுடன் சேர்த்தால் அது தேஜோமயமாகத் திகழ்கிறது. மனது அதுபோன்றது. உலக விஷயங்களில் சேர்ந்தால் அது பிண நெஞ்சு.பரம்பொருளைச் சார்ந்தால் அது சித்சொரூபம் ஆகிறது.

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்கு

அன்பிலை என்புருகிப்

பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை

பணிகிலை பாதமலர்

சூடுகின்றிலை சூட்டுகின் றதுமிலை

துணையிலி பிணநெஞ்சே

தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை

செய்வதொன் றறியேனே


--மாணிக்கவாசகர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 15, 2015 9:40 am

நவம்பர்-15
பூனையின் பல்

நன்றுடையானே, தீ தில்லானே, உன்னை வந்தடைந்த பிறகே நான் தீ தில்லாதவன் ஆகிறேன்.

பூனையின் பல் கருணைக்கு இருப்பிடமா, கொடூரத்துக்கு இருப்பிடமா? பூனைக்குட்டி அது கருணைக்கு இருப்பிடம் என்று சொல்லும். ஆனால் எலியோ அது கொடூரத்துக்கு இருப்பிடம் என இயம்பும். உலகம் நல்லதா, கெட்டதா என்னும் கேள்வி எழுகிறது. கடவுள் மயமாய் அதைக் காண்பவனுக்கு அது நல்லது., மற்றவனுக்கு அது கெட்டது.

எண்ணமுந்தான் நின்னைவிட இல்லை

யென்றால் யான்முனமே

பண்ணவினை யேது பகராய் பராபரமே.


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 16, 2015 6:59 pm

நவம்பர்-16

பொறுமை

பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் பண்படுத்தும் பெரிய பொருளே, உன்போன்று நான் பொறுமை படைத்திருப்பேனாக.

அமைதி ஆற்றலுக்கு அறிகுறி. பயிற்சியில் பண்பாடு அடைந்து பொறுமையுடன் இருக்கும் மனதில் ஆற்றல் மிக உண்டு. எப்படி வினையாற்றுவது என்பது பொறுமையாளனுக்குத் தெரியும். அவன் வீண் பேச்சுப் பேசான். அவனுடைய வேலைத்திட்டம் யந்திரம் போன்று ஒழுங்கானது. முன்யோசனை அவனுக்கு மிகவுண்டு. நாடிய கருமத்தை முறையாக அவன் செய்துமுடிப்பான். இதுவே பொறுமையின் விளைவு.

உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்றுசுகங்

கொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ?


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 17, 2015 5:31 pm

நவம்பர்-17

உடலை அலங்கரித்தல்

உடல் ஞாபகம் மறந்துபோகவும் பரபோதம் பேலோங்கவும் இறைவா, எனக்கு நீ அருள்புரிவாயாக.


உடல் பற்று வைத்திருப்பவனே உடலை அலங்கரிக்கிறான். பாபங்கள் அனைத்தும் உடல்பற்றினின்று உதிக்கின்றன. உள்ளம் பரிபக்குவம் அடையுமளவு உடலைப்பற்றிய எண்ணம் மறைந்துபோய்விடுகிறது. உடல் வாழ்க்கை வாழ்ந்திருக்கும்பொழுதும் உடலைப்பற்றி எண்ணாதிருப்பவனே நல்ல ஆத்ம சாதகன்

அநித்தியத்தை நித்தியமென்று ஆதரவா யெண்ணுதே

தனித்திருக்கேன் என்குதே தனுமறக்கேன் என்குதே.


--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian on Tue Nov 17, 2015 6:38 pm

நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22429
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 17, 2015 7:47 pm

@T.N.Balasubramanian wrote:நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1175245
நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 17, 2015 8:02 pm

நாளை மற்றும் அடுத்த நாள் நான் சென்னையில்
இருக்கப் போவதால் இரண்டு நாள் தினசரி தியான
பதிவை என்னால் பதிவு செய்ய முடியாது அதனால்
அடுத்த அடுத்த நாள் பதிவை இன்றே பதிகிறேன்
மன்னிக்கவும்.


நவம்பர்-18

வைகறையில் துயில் எழு

இறைவா, உன்னைப் போற்றுதற்குரிய பிரம்ம முகூர்த்தத்தில் நான் உறங்கிக் கொண்டிருப்பது முறையோ!
சூரியோதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பிரம்ம முகூர்த்தம் உச்சத்துக்கு வந்துவிடுகிறது. அப்பொழுது தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அருள் துறையிலோ பொருள் துறையிலோ முன்னேற்றமில்லை. வைகறையில் விழித்தெழுந்திருப்பவர்க்கு எல்லாவித முன்னேற்றமும் உண்டு.

ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


---மாணிக்கவாசகர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 17, 2015 8:07 pm

நவம்பர்-19

சண்டையிடல்

இறைவணக்கத்துக்கு நேரம் போதவில்லையே என்று ஏங்கியிருப்பனுக்குப் பிறரோடு சண்டையிட நேரமெங்கே!
முற்றிலும் பரிபக்குவம் அடைந்திருப்பவன் மற்றவர்களோடு சண்டையிடுவதில்லை. பிறர் கூறும் கடுஞ்சொல்லை அவன் இன்சொல் கொண்டு எதிரழைக்கிறான். சினத்துக்கு அவன் உள்ளத்தில் இடம்கொடுப்பதில்லை யாதலால் பிறர் சினம் அவன் மின்னிலையில் மாயமாய் மறைந்துபோய்விடுகிறது.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்க்கவர்ந் தற்று.---திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 20, 2015 12:52 pm

நவம்பர்-20

இயற்கையில் நம்பிக்கை

இயற்கையின் செயலும் இறைவன் செயலும் ஒன்றே என்று உணர்ந்து அதை முற்றிலும் நம்பியிருப்பேனாக.
குடியானவன் ஒருவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகிறான்., பூமியைத் திருத்தியமைக்கிறான்., பருவத்தில் விதை விதைக்கிறான். பிறகு அவன் முற்றிலும் இயற்கையை நம்பியிருக்கிறான். மழை, காற்று, வெயில் முதலியன முறையாக அமையவேண்டுமென்று வழுத்துகிறான். இயற்கையில் வைக்கும் நம்பிக்கையும் தெய்வத்திடம் வைக்கும் நம்பிக்கையும் ஒன்றேயாம்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்


---திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 21, 2015 7:38 am

நான் அம்மாவின் வருடந்திர சாமி கும்பிட சொந்த ஊர் செல்லுவதால் 23ந் தேதி வரை தினசரி தியானம் பதிவு செய்ய முடியாது என்ற காரணத்தினால் இன்றே இதை பதிவு செய்கிறேன் இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நவம்பர்-21

தனக்குத் தானே துணை

உயர்நிலையெய்த விரும்பாத என்னை யார் தான் உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்?
தான் உண்ணும் உணவை மனிதன் தானே ஜீரணம் பண்ணியாக வேண்டும். உடல் வளர்ச்சி தன்னையே பொறுத்தது. அறிவு வளர்ச்சியும் தனக்குத் தானே செய்துகொள்வதாகும். வழிகாட்டித் தருவதோடு ஆசிரியர் வேலை நின்று விடுகிறது. அருள் துறையில் முன்னேற்றம் அடைவதற்கும் தானே முயன்றாக வேண்டும். யாண்டும் தனக்குத் தானே சுற்றம்.

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்!


---மாணிக்கவாசகர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 21, 2015 7:44 am

நவம்பர்-22

வேள்வி

பரம்பொருள் என்னும் வேள்வித்தீயில் என்னைப் படைத்துவிடுவேனாக.

உலகினின்று தான் ஏற்பதைவிட யார் உலகுக்கு அதிகமாக வழங்குகிறானோ அவன் வேள்வி வேட்பவன் ஆகிறான். வேள்வியின் மூலமாகவன்றி வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. வேள்வி வேட்காதவன் திருடன். வேள்வி வேட்பவனோ இகம் பரம் ஆகிய இரண்டையும் பெறுகிறான்.

காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே

ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்ப தெக்காலம்?


---பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 21, 2015 7:48 am

நவம்பர்-23

ஐம்பெரு வேள்வி

பல வடிவங்களில் இருக்கும் பரம்பொருளுக்கு என்னைப் பண்புடன் பகுத்துக் கொடுத்து விடுவேனாக.

நித்தம் செய்யும் பரம்பொருள் வழிபாடே தேவ யக்ஞம். பக்தியுடன் பனுவல் படிப்பது ரிஷி யக்ஞம். பெற்றோர்க்குப் பணிவிடை செய்வதும் காலஞ் சென்ற முன்னோர்க்கு நல்லெண்ணம் செலுத்துவதும் பிதிர் யக்ஞம். மக்களுக்குத் தொண்டு புரிவது நர யக்ஞம் பற்ற உயிர்களிடத்து அன்பாயிருப்பது பூத யக்ஞம். இவ்வைந்தும் பெருவேள்விகளாம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

.
---திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8826
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by சசி on Sat Nov 21, 2015 8:31 am

அருமை ஐயா நல்ல பதிவு , நன்றி
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by Hari Prasath on Sat Nov 21, 2015 9:09 am

அருமையான பதிவு ஐயா
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum