ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 ayyasamy ram

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 ayyasamy ram

செய்யத் தகாத 16.
 ayyasamy ram

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 ayyasamy ram

போராட்டம்...
 ayyasamy ram

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புரட்டாசி மாத ராசி பலன் !

View previous topic View next topic Go down

புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:44 am

மேன்மையான எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் ராகுவோடு இணைவதால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன், குருவும் செய்யும் கருணையால் நற்பலன் கிடைக்கும். புதன் அக். 4ல் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். பொருள் வரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதி பெருகும். மகிழ்ச்சியும் சுகமும் கிட்டும். கணவன்-மனைவி இடையே இருந்து வரும்.

பிரச்னை அக். 4க்கு பிறகு மறையும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். எனினும், புதனால் அலைச்சல் அதிகரிக்கும். செப். 30, அக். 1ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மாறும். மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும்.பதவி உயர்வு, புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்கள் சுக்கிர பலத்தால் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து பலன் பெறுவர். மாணவர்களுக்கு குரு பக்க பலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம்.

ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். கேழ்வரகு, பழவகை, காய்கறி பயிர்கள் நல்ல மகசூல் தரும்.

பெண்கள் நகை, புத்தாடை வாங்க வாய்ப்புண்டு. <மாத முற்பகுதியில் வாக்குவாதம் தவிர்க்கவும். தடைபட்டு வந்ததிருமணம் நடைபெறும்.

நல்ல நாள்: செப். 18, 23, 24, 25, 26, 27, 30 அக்.1, 4, 5, 14, 15

கவன நாள்: செப்.19, 20, அக்டோபர் 16,17 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: துர்க்கை வழிபாடும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். சிவன் கோவிலுக்கு சென்று பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:45 am

மனபலம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் கேது,சுக்கிரன் நற்பலன் தருவர். புதன் அக். 4வரை சிம்மத்தில் இருந்து நன்மை தருவார். பின் இடம் மாறி நன்மையை சற்று குறைப்பார். புதனால் பணப்புழக்கம் பெருகும். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப். 29க்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் கணிசமாக இருக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். அக். 2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். அக். 4க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.அக்.4க்கு பிறகு அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம்.

கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர்.

அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காணலாம். பிரதிபலன் பாராது உழைக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகளுக்கு கரும்பு, எள், பயறு வகைகள், காய்கறிகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். அதிக சிரத்தை எடுத்து படிப்பது மேலும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். குடும்பத்தில் குதுõகலம் ஏற்படும். உங்களால் குடும்பம் சிறப்படையும். அக்டோபர் 6,7,8ல் புத்தாடை அணிகலன் வாங்கலாம். சுப நிகழ்ச்சி நடக்கும்.

நல்ல நாள்: செப்.19, 20, 26, 27, 28, 29, அக். 2, 3, 6, 7, 8, 16, 17.

கவன நாள்: செப். 21, 22

அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: தினமும் சூரியனை தரிசனம் செய்யுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். காளி வழிபாடு நடத்துங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:46 am

அடுத்தவர் கருத்தை மதிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், சனி மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். சூரியன் கன்னி ராசியில் இருப்பதால் நன்மை தர முடியாத நிலையில் இருக்கிறார். புதன் செப். 4ல் வக்ர நிவர்த்தியாகி கன்னி ராசிக்கு செல்வதால் நற்பலன் கொடுப்பார். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமுண்டு. குடும்பத்தில் வசதி மேம்படும். செப். 29க்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தினர் இடையே அன்பு மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி விரைவில் கை கூடும். செப்.21ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அக். 4 க்கு பிறகு எதிரி தொல்லை அகலும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். அக். 4,5 தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் உழைப்புக்கேற்ப பலன் கிடைக்கப் பெறுவர். கடந்த காலத்தில் இருந்த
பின்தங்கிய நிலை மாறும். சம்பள உயர்வுக்கு தடை இனி இருக்காது. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர்.

கலைஞர்களுக்கு மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சிறப்பான பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி விரைவில் கிடைக்கும்.

மாணவர்கள் அக்.4 க்கு பிறகு கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்பர்.

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். பிறந்த வீட்டிலிருந்து சீதனம் வர வாய்ப்புண்டு.

நல்ல நாள்: செப்.21, 22, 28, 29, 30, அக்.1, 4, 5, 9, 10

கவன நாள்: செப். 23, 24, 25 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: காலையில் சூரியனை வழிபடுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:47 am

கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட கூடுதல் பலன் காணலாம். காரணம் சூரியன் சிம்மத்தில் இருந்து கன்னிக்கு வந்துள்ளார். குரு, சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். சூரியன் உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார். செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன், குருவால் எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றிக்காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். அதன் பிறகு பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பம் சிறப்பான நிலையில் இருக்கும். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காணலாம். வீண்விரயம் இருக்காது. அக். 6,7,8ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சுக்கிரனால் செப்.29க்கு பிறகு அரசின் சலுகையும், வங்கிக் கடனும் எளிதாக கிடைக்கும்.

பணியாளர்கள் சுமாரான பலனை காணலாம். வேலைப்பளு இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்யவும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களும், நல்ல வசதியும் பெறுவர்.

அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். அக்.4க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு வருவாய்க்கு குறை இருக்காது. கால்நடை செல்வம் பெருகும். வழக்கு, விவகாரங்கள் இழுத்தடிக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமையும் சகோதரிகளால் உதவியும் கிடைக்கும்.

நல்ல நாள்: செப். 23, 24, 25, 30, அக்.1, 2, 3, 6, 7, 8, 11, 12,13.

கவன நாள்: செப். 26, 27 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:48 am

மனதிடத்துடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன் செப். 29 க்கு பிறகு நற்பலன் தரக் காத்திருக்கிறார். குருவின் 5,7,9ம் இடத்துப் பார்வை சாதகமாக உள்ளன. இதனால் குடும்ப மகிழ்ச்சியை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களால் மேன்மை ஏற்படும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் அடைவர்.

தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது அவசியம். புதிய முதலீடு தற்போது தேவையில்லை. புதிய தொழில் தொடங்க உகந்த காலம் அல்ல. பகைவர்களால் அவ்வப்போது இடையூறு ஏற்படலாம். அக். 9,10ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மாத இறுதியில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். செப். 29 க்கு பிறகு சக பெண் ஊழியர்களால் நன்மை காண்பீர்கள்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் கிடைக்காமல் போகலாம். முயற்சியில் இருந்த தடை, மனச் சோர்வு செப். 29க்கு பிறகு மறையும். அதன் பிறகு வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொண்டர்கள் வழியில் செலவு செய்ய நேரிடும்.

மாணவர்கள் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் காண்பர். குருவின் பார்வை வளர்ச்சிக்கு உதவும்.

விவசாயிகள் காய்கறிகள், கீரை வகைகள், மொச்சை போன்ற பயறு வகைகளில் வருமானம் காண்பர். கால்நடை வகையில் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க விடாமுயற்சி தேவைப்படும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். அக். 4 வரை உறவினர், அக்கம் பக்கத்தினர் வகையில் அதிக நெருக்கம்வேண்டாம். விருந்து, விழா என சென்று மகிழ்வர்.

நல்ல நாள்: செப். 18, 26, 27, அக். 2, 3, 4, 5, 9, 10, 14, 15

கவன நாள்: செப். 28, 29 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,5 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: நவக்கிரகத்தை வழிபடுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். மாரியம்மன், நாக தேவதையை வணங்குவது நல்லது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:48 am

நட்புக்கு மதிப்பளிக்கும் கன்னி ராசி அன்பர்களே!

சனீஸ்வரர் மாதம் முழுவதும் நன்மை வழங்குவார். சுக்கிரன் செப். 29 வரை சாதக பலன் கொடுப்பார். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்காமல் போகாது. எண்ணிய எண்ணம் நிறைவேறும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும். சுக்கிரனால் அதிர்ஷ்டவசமாக பண வரவு உண்டாகும். உறவினர் வருகையும், அதனால் கலகலப்பும் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும்.

தொழில், வியாபாரத்தில் தடைகளைச் சந்திக்க நேரிட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமையும் பெறுவீர்கள். எதிரி தொல்லை, அவப் பெயர், போட்டி முதலியன அக். 4க்கு பிறகு மறையும்.

பணியாளர்கள் பணிச்சுமைச் சந்தித்தாலும் அதற்கேற்ப பண பலன் கிடைக்கப் பெறுவர். அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. அக். 4,5 ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். அக். 5 க்கு பிறகு பணியாளர்கள் இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் எளிதில் பெறுவர். செப். 29 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடை குறுக்கிடும்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர்.

மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும். புதனால் கல்வியில் மந்த நிலை ஏற்படலாம். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்றால் முன்னேற்றம் காணலாம்.

விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியதுஇருக்கும். அதிக முதலீடு செய்யாமல் பயிர் செய்வது நல்லது. மிதமான வருமானம் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கியத்துவம் பெறுவர். விருந்து விழா என சென்று மகிழ்வர். சகோதர வகையில் உதவி கிடைக்கப் பெறுவர். மாத இறுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம்.

நல்ல நாள்: செப். 19, 20, 28, 29, அக்.4, 5, 6, 7, 8, 11, 12, 13, 16, 17

கவன நாள்: செப். 30, அக்.1 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 6 நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். செவ்வாயை வழிபட்டுத் துவரை தானம் செய்யுங்கள். கிருஷ்ணர் வழிபாடு நல்வாழ்வுக்கு துணைநிற்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:49 am

துணிச்சலுடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் அக். 4வரை புதனும்,செப். 29க்கு பின் சுக்கிரனும் நன்மை தருவார்கள். குரு, கேது,செவ்வாய் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். இதனால் கூடுதல் பலனை பெற்று மகிழ்ச்சி அடையலாம். செயல்கள் வெற்றி அடையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். செப். 29க்கு பிறகு பண வரவு இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகரிப்பீர்கள். லாபம் கூடும். அக். 4க்கு பிறகு போட்டியாளர்களின் தொல்லை இருக்கும்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். இருப்பினும், வாங்குகிற சம்பளம் சூரியனால் விரயம் ஆகலாம். இடமாற்றம் வரவாய்ப்பு உண்டு. அக். 4க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தால் கோரிக்கை நிறைவேறும். வேலைப்பளு உயரும். ஆனாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.

கலைஞர்கள் மாதத் தொடக்கத்தில் சிரத்தை எடுத்தால் தான் ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். பணவிஷயத்தில் எந்த குறையும் இருக்காது.

அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். விரும்பிய பதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு குரு பக்கபலமாக இருப்பதால் முன்னேற்றம் காணலாம். இந்த காலத்தை வீணாக்காமல் படியுங்கள்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. நெல், சோளம், பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். செப். 29க்கு பிறகு பணவரவு அதிகமாகும். உடல்நலம் சீராக இருக்கும்.

நல்ல நாள்: செப். 18, 21, 22, 30 அக். 1, 6, 7, 8, 9, 10, 14, 15.

கவன நாள்: அக். 2, 3 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:49 am

விண்ணளவு சாதிக்கத் துடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் ராகு, சூரியன், புதன் கிரகங்களும், சுக்கிரன் அக். 29 வரையும் நற்பலனை கொடுப்பார்கள். பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது.உங்கள் முயற்சிகள் வெற்றி அடையலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் பொருள் சேரும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசின் சலுகை மற்றும் வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப். 19,20, அக். 16,17ல் எதிர்பாராத வகையில் பணம் வரலாம்.

பணியாளர்கள் சிறப்பான பலனை அடைவர். மேல் அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். அக்டோபர் 9,10ல் பல நன்மைகள் கிடைக்க பெறலாம். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. எதிரிகள் தொல்லையும், அதிக போட்டியும் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம்.

அரசியல்வாதிகள் நல்ல நிலையில் இருப்பர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனையால் அதிக மதிப்பெண் கிடைக்க வழியுண்டு. சக நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு காய்கறி, பழ வகை பயிர்கள் நல்ல மகசூல் தரும். கால்நடைகள் மூலம் சிறப்பான பலன் கிடைக்கும். புது சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.

பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். கணவர், குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்குவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: செப். 19, 20, 23, 24, 25, அக். 2, 3, 9, 10, 11, 12, 13, 16, 17

கவன நாள்: அக். 4, 5 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: ரோஸ், பச்சை

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:50 am

தன்னம்பிக்கை மிக்க தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். சூரியன், சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். புதன் அக். 4ல் கன்னிக்கு வந்து நன்மை தர உள்ளார். நினைத்த காரியம் நிறைவேறும். பொருளாதார நிலை படிப்படியாக அதிகரிக்கும். முயற்சியில் இருந்து வந்த தடைகள் அகலும். வீட்டிற்கு தேவையான வசதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். செலவுகள் கட்டுப்படும்.

பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். கோரிக்கைகள் நிறைவேறும். அக். 11,12,13ல் எதிர்பாரா வகையில் பணவரவு, சலுகைகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மனதில் வேதனை வரலாம்.

விவசாயத்தில் வருமானம் அதிகரிக்கும். நெல், துவரை மற்றும் கிழங்கு வகைகள் சிறப்பை தரும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. அக். 4க்கு பிறகு இருந்த இடர்பாடுகள் மறைந்து கல்வியில் சிறப்படையலாம். மதிப்பெண் அதிகரிக்கும். ஆசிரியர்களின் அறிவுரை தொடர்ந்து கிடைக்கும். புதன் சாதக நிலையில் இருப்தால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

பெண்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். நகை, புத்தாடை வாங்கலாம். பிள்ளை வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும்.பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். மருத்துவச் செலவு குறையும்.

நல்ல நாள்: செப்.18, 19, 20, 23, 24, 25, 28, 29, 30, அக். 1,14, 15, 16, 17.

கவன நாள்: அக். 6,7,8 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:51 am

அன்பும் பண்பும் கொண்ட மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் உள்ள சனி பகவானும், 3ம் இடத்தில் உள்ள கேதுவும் நற்பலன் தருவர். புதன் அக். 4 வரையும், சுக்கிரன் செப்டம்பர் 29ம் தேதிக்கு பிறகும் சிம்மத்தில் இருந்து நன்மை தருவார்கள். கேதுவின் பலத்தால் இறையருள் கிடைக்கும். செயல்களில் வெற்றி ஏற்படும். பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தில் தம்பதியிடையே ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சீரான வருவாயை காணலாம். லாபம் குறையாது. புதிய வியாபாரம் உழைப்பின் பேரில் கைகொடுக்கும். அரசு வகையில் இருந்த இடையூறு இனி இருக்காது.

பணியாளர்கள் புதனின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு காண்பர். வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும்.சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும்.

பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும்.

மாணவர்கள் சிறப்பான பலனை அனுபவிக்கலாம். அக்.4க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டி வரும். நண்பர்கள் வகையில் கவனம் தேவை.

விவசாயத்தில் அனாவசிய செலவு வரலாம். யாரையும் நம்பி கடனுக்கு விளை பொருளை விற்க வேண்டாம். எந்த வேலையும் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது.

பெண்கள்புத்தாடை, நகை வாங்குவர். கணவரோடு விருந்து விழா என்று சென்று வருவர். அக். 4க்கு பிறகு உறவினர்களால் பிரச்னை வரலாம். பொறுமை காக்கவும். உடல்நிலை நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: செப்.18, 19, 20, 23, 24, 25, 28, 29 அக்.6, 7, 8, 14, 15, 16, 17.

கவன நாள்: அக். 9, 10 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 6 நிறம்: பச்சை, கருப்பு

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். முருகன் கோவிலுக்கு சென்று செவ்வாய்க்கிழமை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:51 am

குன்று மேலிட்ட விளக்கான கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் அக். 4க்கு பிறகு கன்னிக்கு வந்து நன்மை தருவார். குரு மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதுஇருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. குரு பகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு குருவால் பணி உயர்வும், உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அக். 4க்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேடி வரும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த கோரிக்கைகள் நிறைவேறும். செப். 19,20 அக். 16,17 சிறப்பான நாட்களாக இருக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். செப். 29க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், கரும்பு எள் பயிர்களில் நல்ல மகசூல் உண்டு.

பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, நகை வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல்நலம் நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: செப்.19, 20, 21, 22, 26, 27, 30, அக். 1, 9, 10, 16, 17.

கவன நாள்: அக். 11, 12, 13 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்: துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by krishnaamma on Sat Sep 19, 2015 12:52 am

எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய் கிரகம் மாதம் முழுமையும், புதன் அக். 4 வரையிலும், சுக்கிரன் செப். 29 வரையிலும் சிம்மத்தில் நின்று நற்பலன் கொடுப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். அக். 4 வரை புதனாலும் , செப். 29 வரை சுக்கிரனின் பலத்தாலும் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில், வியாபாரம் அனுகூலம் தரும். ஆனால், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். செப். 28,29ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். வருமானத்தில் திருப்தி இருக்கும். சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர். செல்வாக்கு அதிகரிக்கும். செப்டம்பர் 21,22ல் நன்மை நடக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவீர். புகழுக்கு எந்த பங்கமும் வராது.

அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது.

மாணவர்களுக்கு இந்த மாதம் வளர்ச்சியான சூழலே. ஆசிரியர்களின் அறிவுரை கை கொடுக்கும்.

விவசாயிகளுக்கு கிழங்கு காய்கறி, பழவகை நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்க காலம் கனிந்துள்ளது. கால்நடைகள் சிறப்பை தரும். கைவிட்டு போன நிலம் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் அனைவராலும் போற்றபடுவர். உல்லாச பயணம் செல்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, நகை வாங்குவீர்கள்.

நல்ல நாள்: செப். 21, 22, 23, 24, 25, 28, 29 அக். 2, 3, 11,12, 13.

கவன நாள்: செப்.18, அக்.14,15 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள். 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum