ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 SK

ஏழாம் சுவர்க்கத்தில்
 SK

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

View previous topic View next topic Go down

ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Post by சிவா on Wed Sep 09, 2015 5:15 amநம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு செல்கிறோம் என்றால் அதற்கு நம் நாட்டின் தரப்பிலிருந்து வழங்கப்படும் அனுமதிதான் பாஸ்போர்ட். ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அவர் அந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதிபடுத்தும்.

இந்த பாஸ்போர்ட் வழங்கும் வேலையை வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் (Ministry of External Affairs) கீழ் தூதரக பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு (Consular, passport and Visa Division), இந்தியாவில் 37-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்களை அமைத்து, பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கி வருகின்றன. இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்களான பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் 81 இருக்கின்றன.

இந்த 81 சேவா கேந்திரங்களிலும் அரசு - தனியார் கூட்டு முயற்சி (Public Private Partnership) அடிப்படையில் வாடிக்கை யாளர் சேவை அளிக்கப்படுகிறது. பாஸ்போர்ட் அலுவலகத்தின் குறிப்பிட்ட சில வேலைகளை டிசிஎஸ் நிறுவனம் செய்யும்; ஆனால், எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தினால் நேரடியாக பாஸ்போர்ட் வழங்க முடியாது. கடந்த 2010 முதல் டிசிஎஸ் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதுவே தற்போது நடைமுறையில் இருக்கிறது. ஒரு விண்ணப்பதாரருக்கு 150 ரூபாய் வீதம் டிசிஎஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. அரசும் தனியார் நிறுவனமும் இணைந்து செயல்படுவதினால், பாஸ்போர்ட் வழங்குவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளன.

இதுபோல வேறு என்ன மாதிரியான மாற்றங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி (Regional Passport Officer) க.பாலமுருகனை சந்தித்தோம். பாஸ்போர்ட் நடைமுறையில் நடந்த மாற்றங் களை எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘பொதுச் சேவை மையங்கள் (Common Service Centre - CSC) என்று அழைக்கப்படும் இரண்டு புதிய சாளரங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த சாளரத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களிடமிருந்து விவரங்கள் வாங்கி ஆன்லைனில் விண்ணப்பித்துத் தரப்படுகிறது. தனியார் ஏஜென்ட்டுகளிடம் ஒரு பாஸ்போர்ட்டுக்கு 2,500 ரூபாய் என்று அதிக கட்டணம் கொடுத்து ஏமாறுவதைவிட இந்த சாளரங்களில் 155 ரூபாய் கட்டணத்துக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதேபோல், சோஷியல் ஆடிட் செல் (Social Audit Cell) என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அவரின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்றாலோ, பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்றாலோ, அவர் இந்த செல்லில் கேட்கலாம்.

எந்த காரணத்துக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது அல்லது பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்பது விண்ணப்பதாரர் கேட்ட சில நிமிடங்களில் கடிதம் மூலம் பதில் தெரிவிக்கப்படும். எந்த காரணத்துக்காக தங்கள் விண்ணப்பம் ரத்து செய்யப் பட்டது என்பதைத் தெரிந்து கொண்டால், மீண்டும் அப்படிப்பட்ட தவறு நடக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த செல் இயங்கி வருவதை தெரியப்படுத்த தினமும் காலை நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுகிறது.

சோஷியல் ஆடிட் செல்லை தொடர்ந்து, எந்த அலுவலர் விண்ணப்பத்தை ரத்து செய்தாரோ, அதே அலுவலர் அந்த விண்ணப்பதாரரின் உதவியோடு விண்ணப்பத்தை சரிசெய்து பாஸ்போர்ட் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று எங்கள் அலுவலகத்தில் ஒரு பழக்கத்தை கொண்டு வந்திருக்கிறோம்.

இதனால் பெருவாரியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்குமுன் நாள் ஒன்றுக்கு 2,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட இடத்தில் தற்போது 2,700 (சாலிகிராமம் - 1500, அமைந்தகரை - 600, தாம்பரம் - 600) விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் அதே எண்ணிக்கை யிலான அதிகாரிகளைக் கொண்டு இதை செய்திருக்கி றோம். இப்படி வருடத்துக்கு இந்தியாவில் உள்ள 81 சேவை கேந்திரங்கள் மூலம் ஒரு கோடி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு பாஸ்போர்ட் வழங்கப் பட்டு வருகின்றன” என்று கூறி முடித்தார்.

என்ன மாதிரியான மாற்றங் கள் வந்திருக்கின்றன என்பதை அமைந்தகரை சேவா கேந்திரத் தில் சென்று பார்த்தோம்.

1 தற்போது பாஸ்போர்ட் ஆன்லைனில் ( https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink ) மட்டுமே விண்ணப்பிக்கக்கூடிய ஒரு ஆவணமாக மாற்றப்பட்டு இருக்கிறது. விண்ணப்பிக்கும் போதே என்ன மாதிரியான ஆவணங்களை இணைக்க வேண்டும் என்கிற விவரங்கள் இந்திய பாஸ்போர்ட் சேவை வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

2 ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போதே நாம் பிரின்ட் அவுட் எடுக்கும் படிவத் தில் எத்தனை மணிக்கு, எந்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திலிருந்து அடுத்த 15 - 30 நிமிடத்துக்குள் நமக்கான அழைப்பு வந்துவிடுகிறது.

3 பாஸ்போர்ட் அலுவலகத்தில் நுழைந்தவுடன் ஒரு சாளரத்தில், பாஸ்போர்ட் அலுவலகம் கேட்டிருந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை மட்டும் சரிபார்த்து டோக்கன் தரப்படுகிறது. இந்த சாளரத்தின் அருகில் மக்களின் வசதிக்காக போட்டோ காப்பி எடுப்பதற்கு சில இயந்திரங்கள் இருக்கின்றன.

4 இந்த டோக்கனுடன் உள்ளே காத்திருப்பு அறையில் காத்திருக்கும்போதே ஒவ்வொரு டோக்கனாக அழைப்பு வருகிறது. டோக்கன் எண்படி முதலில் A சாளரத்துக்கு சென்றால், அங்கு நம் பேப்பர் டாக்குமென்ட்டுகளை ஸ்கேன் செய்துவிடுகின்றனர். இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிறைய டாக்குமென்ட்டுகளை வைத்திருக்கத் தேவையில்லை. அதேபோல் ஒருவரைப் பற்றிய குறிப்புகள் தேவைப்படும்போது தேவையான விவரங்களை உடனே எடுக்க முடியும். அதோடு கைவிரல்களின் ரேகைகள் பயோ - மெட்ரிக் ஸ்கேன்கள் மூலம் எடுக்கப்படுகின்றன. மேலும், டிஜிட்டல் கையொப்பங்களும் இந்த சாளரத்தில் எடுக்கப்படுகின்றன.

5 A சாளரத்தில் ஆவணங்கள் ஸ்கேன் செய்து முடித்தவுடன், B சாளரத்தில் நம் சான்றிதழ்களின் தன்மை சரிபார்க்கப்படும். அதன் உண்மைத்தன்மையில் சந்தேகம் வந்தால் கேள்விகள் கேட்கப்படும்.

6 B சாளரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவுடன், சாளரம் C-க்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த சாளரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படுவதற்கான விவரங்கள் கேட்கப் பட்டு, பாஸ்போர்ட் வழங்குவதற்காக பாஸ்போர்ட் அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

7 பாஸ்போர்ட் வழங்குவதற்கான பரிந்துரை வந்தவுடன், போலீஸ் சரிபார்ப்பு தேவையானவர் களுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்படுகிறது. போலீஸார் சரிபார்த்தபின் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களின் வீட்டுக்கே பாஸ்போர்ட் அனுப்பப்படுகிறது. இந்த மொத்த செயல்பாடுகளும் முடிந்து நாம் பாஸ்போர்ட் விண்ணப்பித்ததி லிருந்து, பாஸ்போர்ட் நம் கைக்கு வரும் வரை சுமாராக 21 - 30 நாட்கள் ஆகின்றன.

8 A, B, C ஆகிய சாளரங்களில் சரிபார்ப்பு நடக்கும்போது நம் படிவத்தில் சரிபார்ப்பதை நமக்கு வைக்கப்பட்டுள்ள மானிட்டர் மூலம் பார்த்துக்கொண்டே வரலாம். இதனால் நம் சான்றிதழ் கள் மற்றும் பாஸ்போர்ட்டில் ஏதேனும் தவறாக குறிப்பிடப் பட்டிருந்தால், அவற்றை திருத்திக் கொள்ளலாம்.

முன்பு பல வாரங்கள் காத்திருந்த பெற்ற பாஸ்போர்ட் இப்போது சில வாரங்களிலேயே கிடைக்கிறது என்றால் அது மிகப் பெரிய வளர்ச்சிதானே!

விகடன்


தள விபரங்கள்: பதிவுகள்: 1168167 | உறுப்பினர்கள்: 32736 | தலைப்புகள்: 132900 |  புதிய உறுப்பினர்: சே.செய்யது அலி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85042
மதிப்பீடுகள் : 10675

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Post by shobana sahas on Thu Sep 10, 2015 12:58 am

நல்ல முயற்சி . அருமை . நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Post by T.N.Balasubramanian on Thu Sep 10, 2015 6:02 pm

இப்போது பாஸ்போர்ட் பெறுவது / புதுப்பிப்பது மிகவும் சுலபமாக நடைபெறுகிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22800
மதிப்பீடுகள் : 8479

View user profile

Back to top Go down

Re: ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Post by krishnaamma on Thu Sep 17, 2015 11:31 pm

நல்ல பகிர்வு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 55769
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Post by ayyasamy ram on Fri Sep 18, 2015 5:20 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39052
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum