உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்.. Empty திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by சிவா on Fri Sep 04, 2015 11:56 pm

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்.. 11890958_1045937072096626_5085763606003381326_n
‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன், விஷால் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் ‘பாயும்பலி’.

மதுரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதாக்கள், அவர்களுக்குப் பின்புலமாக செயல்படும் அரசியல்வாதிகள், அவர்களை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விஷால் – இது தான் கதைக்களம்.

பல காலமாக கேட்டுக் கேட்டு புளித்துப் போன கதையும், பார்த்துப் பார்த்து சலித்துப் போன காட்சிகளுடன் கூடிய கமர்சியல் சினிமா தான் என்றாலும், வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட பல வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடிய படங்களை எடுத்த இயக்குநர் ஆயிற்றே? முதன் முறையாக போலீஸ் கதை ஒன்றை இயக்கியுள்ளார். அதில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

கதைச் சுருக்கம்

மதுரையில் நல்ல கொழுத்த பணக்காரத் தொழிலதிபர்களை எல்லாம் ஒவ்வொருவரையாக கடத்திக் கொண்டு போய் வைத்து பணம் பறிக்கிறது ஒரு கொள்ளைக் கும்பல். அந்த கும்பலை ஒழிக்க அந்த ஊருக்கு புதிய அசிஸ்டண்ட் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் விஷால்.

யாரை வேண்டுமானால் எந்த நேரத்திலும் சுடக்கூடிய அதிகாரத்தை வழங்கி இரகசியமாக அனுப்பி வைக்கிறது காவல்துறைத் தலைமை. பதவி ஏற்பதற்கு 15 நாட்களுக்கு முன்னரே அந்த ஊருக்குப் போய், இரகசியமாக அந்தக் கடத்தல் கும்பலை பட்பட்டுனு குருவியை சுடுவதைப் போல் ஒவ்வொருவரையாக சுட்டுக் கொல்கிறார் விஷால்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில் ஒரு பெரிய திருப்பம் காத்திருக்கிறது. அவர் வீட்டில் ஒருவர் தான் அந்தக் கும்பலுக்கே தலைவன் என்பதை அறியும் விஷால் துடித்துப் போகிறார். சொந்தமா? கடமையா? என்பதை விஷால் தீர்மானிப்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

போலீஸ் அதிகாரி வேடம் விஷாலுக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்றால் அது ‘சத்யம்’ படத்தில் தான். அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடை உடை பாவனை அனைத்திலும் மிடுக்கைக் காட்டியிருப்பார்.

இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் அவருக்கு காக்கிச் சட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரிடம் அந்த மிடுக்கை எதிர்பார்க்க முடியாது.

இந்தப் படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் ஹீரோயினைப் பார்த்து ‘என்னப் பொண்ணுடா’ என்பது போல் அசடு வழிவதைப் போல் காட்சிகளும் உள்ளன.

பகலில் காஜல் பின்னால் சுற்றுவதும் இரவில் தாதாக்கள் பின்னால் துப்பாக்கியுடன் அலைவதுமாக நடித்திருக்கிறார் விஷால். மற்றபடி நடிப்பில் பெரிய வித்தியாசம் என்று சொல்லும்படியான எந்த ஒரு விசயமும் விஷாலிடம் இல்லை.

காஜல் அகர்வால் .. வெள்ளை வெளேரென்று ‘யார் இந்த முயல்குட்டி’ என்று கேட்கும் படி படத்தில் வந்து போகிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட ‘வந்து போகிறார்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம் .. உண்மையில் காஜல் அகர்வாலுக்கு படத்தில் இரண்டு பாட்டு, சில காதல் காட்சிகள் அவ்வளவு தான் வேலை.

படத்தில் நகைச்சுவைக்காக சிரிப்புப் போலீசாக சூரி.. பொண்டாட்டியிடம் அடி வாங்குகிறார், சிறுவனிடம் அடி வாங்குகிறார். ஆனால் அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலின் நண்பனாக கூடவே இருக்கிறார். போலீஸ் உயர் அதிகாரிகளின் இரகசியப் பேச்சு வார்த்தைகளில் கூட சாதாரண கான்ஸ்டபிளான சூரி கூடவே இருக்கிறார்.

என்றாலும், சூரியின் அந்த ‘ஹெல்மட்’ காமெடியும், குரங்கு காமெடியும் மட்டும் நம்மையும் மறந்து குபீரென்று சிரிக்க வைக்கிறது.

அடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமான கதாப்பாத்திரம் செல்வம் தான். செல்வமாக சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் தான் நம்பும் படியாக இல்லை. ஒரே ஒருமுறை அரசியல் தோல்வி ஒரு மனிதனை இந்த அளவிற்கு மிருகமாக மாற்றுமா? அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா?, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா? போன்ற கேள்விகள் படம் முடிந்தும் நம் மனதில் தேங்கி நிற்கிறன.

ஒளிப்பதிவு, இசை

வேல்ராஜ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக இரவில் எடுக்கப்பட்டுள்ள எண்கவுண்டர் காட்சிகள் அந்த சூழலை அப்படியே காட்டுகின்றன. படத்தின் துவக்கத்தில் வரும் அந்த ‘ஏரியல்வியூ’ காட்சி, ‘மதுரக்காரி’, ‘சிலுக்குமரமே’ பாடல் காட்சிகள் அழகு.

இமானின் பின்னணி இசை மனதில் நிற்கிறது. ‘மதுரக்காரி’ பாடலில் அந்தக் குரலும், இசையும் ரசிக்க வைத்தது. ‘பாயும்புலி’, ‘யார் இந்த முயல்குட்டி’ பாடல்கள் கேட்கும் இரகம்.

மொத்தத்தில் ‘பாயும்புலி’ என்ற போலீஸ் கதையில் இயக்குநர் சுசீந்திரன், போலீசையும், வில்லனையும் ஒரே வீட்டில் மோத வைத்திருக்கிறார். அது ஒன்று மட்டுமே, மற்ற போலீஸ் படங்களை ஒப்பிடுகையில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசம்.

மற்றபடி, பாயும் புலி – எதிர்பார்த்ததை விட சீற்றம் சற்று குறைவு தான்..

- ஃபீனிக்ஸ்தாசன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்.. Empty Re: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by ayyasamy ram on Mon Sep 14, 2015 6:50 pm

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்.. 4tRgZWvVSaSC7pqsyPuw+page0004_i2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்.. Empty Re: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by krishnaamma on Tue Sep 15, 2015 2:07 am

//அடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமான கதாப்பாத்திரம் செல்வம் தான். செல்வமாக சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் தான் நம்பும் படியாக இல்லை. ஒரே ஒருமுறை அரசியல் தோல்வி ஒரு மனிதனை இந்த அளவிற்கு மிருகமாக மாற்றுமா? அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா?, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா? போன்ற கேள்விகள் படம் முடிந்தும் நம் மனதில் தேங்கி நிற்கிறன.//

இது தான் கொஞ்சம் நெருடலாய் இருக்கு..........மத்த படி படம் ஓகே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60429
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12268

Back to top Go down

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்.. Empty Re: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை